லியோ படத்தில் விஜய் 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி

Published:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியான செய்தி தற்போது உறுதியாகி இருக்கிறது.

அதாவது இந்த படத்தில் விஜய்- திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் நிலையில், அவர்களின் 15 வயது மகளாக பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி நடிக்கிறார்.

இது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. காஷ்மீரை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போது விஜய்-திரிஷாவுடன் இணைந்து ஜனனி நடிக்க இருக்கிறார்.

 

Related articles

Recent articles

spot_img