போஸ்டர் வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு

Published:

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் – 2’ படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் சித்தார்த் பிறந்தநாளை ஒட்டி இன்று அவரது சிறப்பு போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.

https://x.com/LycaProductions/status/1780484138577146193

Related articles

Recent articles

spot_img