அரண்மனை 4 ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

Published:

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார்.

இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது.

இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

Related articles

Recent articles

spot_img