ரஜினிக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி

Published:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர நடிகராக முக்கிய கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தந்தையை போலவே அவரது மகள் வரலட்சுமியும் நடிகையாக தனது பயணத்தை துவங்கி தனக்கென ஒரு தனிப்பாதையை தேர்ந்தெடுத்து வித்தியாசமான படங்களில், கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்டநாள் நண்பரான நிக்கோலஸ் சச்தேவிற்கும் வரும் ஜூலை இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தற்போது வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் திரையுலகை சேர்ந்த நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு வரலட்சுமி தனது தாய் சாயா தேவி, தந்தை சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ள வரலட்சுமி சரத்குமார், “தலைவரை நேரில் சந்தித்து அவரையும் லதா ஆன்ட்டியையும் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். எப்போதும் போல அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய ரஜினி சாருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img