விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்றிய சாக்ஷி அகர்வால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் சின்ன ரோலில் நடித்து வந்த சாக்ஷி, தன்னை பிரபலமாக்கிக் கொள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என கணக்கு போட்டு வந்த சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி பவுசருடன் வலம் வந்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதுமட்டுமில்லாமல் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
எனினும் எதிர்பார்த்ததை போன்று திரைப்பட வாய்ப்புக்கள் அவருக்கு கிடைக்கவில்லை.இருப்பினும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்கள் இடையே தனது பெயரை பதித்து வந்தார்.
இந்நிலையில் இவ்வருட ஆரம்பத்திலேயே தமது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் தனது சிறுவயது நண்பரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் பலரும் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என சாக்ஷி அகர்வால் இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.