Home Blog Page 12

புராணக் கதையில் இணைந்த டெக்னாலஜி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில்  உருவாகி இருக்கும் கல்கி 28 98 ஏடி திரைப்படம், இன்றைய தினம் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன் கமல், அமிர்தாப், தீபிகா படுகோன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது கல்கி 28 98 ஏடி படத்தின் திரைவிமர்சனம் பற்றி விரிவாக பார்ப்போம்.

அதன்படி இந்த படத்தில் ஆரம்பத்திலேயே மகாபாரதப் போர் நடந்து முடிகிறது. இதில் துரோணாச்சார்யா மகன்(அமிதாப் பச்சன்)  பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்க, இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் ‘உனக்கு மரணமே இல்லை, உடல் முழுவதும் ரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும் அப்போதுதான் உன் சாபம் தீரும்’ என சொல்லுகிறார்.

இதைத்தொடர்ந்து 6000 வருடங்கள் ஓடி  800 வருடமாக உயிரோடு இருக்கும் யாஷ்கின்(கமல்) உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு ஊரை உருவாக்கி வைத்துள்ளார். அங்கு ஒரு வுண்டி ஹண்டராக பிரபாஸ் வருகின்றார்.

இவ்வாறு வந்த பிரபாஸ் ஒன் மில்லியன் யூனிட் இருந்தால் கமல் இருக்கும் காம்ப்ளஸ்க்குள் வரலாம் என்று ஒரு விதி. இதற்காக பிரபாஸும் போராட, அதே நேரத்தில் கமல் பல பெண்களின் கருவில் இருந்து ஒரு சீரோம் எடுக்க முயற்சிக்கின்றார்.

இதன் போது அங்குள்ள தீபிகா படுகோன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாக, அதில் சீரோம் எடுக்கும் போது அது கிருஷ்ணன் தான் என்பது தெரிய வருகின்றது. இதனால் அமிர்தாப் பல வருட தவிப்பிற்கு பலனாக தீபிகாவை தேடி வருகின்றார். இதற்கு பிரபாஸ் எந்த விதத்தில் உதவுகின்றார்? அதோடு கமல் நினைத்தது அடைந்தாரா? என்றது தான் இந்த படத்தின் கதை கரு.

இந்த படத்தை பொருத்தவரையில் பலம் என்னவென்றால் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகள் தான். பிரபாஸ் நடித்த ஆதி பிரிருஷ் படத்தின் கிராபிக் காட்சிகள் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதிக பணச்செலவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரம் குறித்த பல கேள்விகள் இருந்ததன. அந்த கேள்விகளுக்கு எல்லாம்  கல்கி படம் பதில் சொல்லும் படியாக அமைந்துள்ளது.

மேலும் இதிகாச கதையை சயின்ஸ் பிக்சன் வகையோடு இணைத்து நம்பகத் தன்மையான ஒரு கதையாக மாற்றி இருக்கின்றார்கள். ஹாலிவுட் படங்களான மேட்மேக்ஸ், டியூன், ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களின் சாயலை இந்த படத்தில்  பார்க்க முடியும். ஆனாலும் அதிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் கேரக்டர்கள், இன்னொரு பக்கம் புராணக் கதைகளில் வரும் அசாத்திய சக்திகள் கொண்ட கேரக்டங்கள் என அறிவியல் கற்பனையும் இணைத்து கல்கி படம் உருவாகியுள்ளது.

அத்துடன் பிரபாஸ் பயணிக்கும் புஜ்ஜி காருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். மேலும் மிருணாள் தாகூர், துல்கா சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமவுலி ஆகியோர் சின்ன சின்ன அம்சங்களில் சேர்ந்திருக்கின்றமையும் இதற்கு தனிச்சிறப்பாக காணப்படுகின்றது.

முதல் பாகத்தில் அமிதாபச்சனின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதியும்படி காணப்படுகின்றது. எட்டு அடி உயரத்திற்கு கிரேக்க கடவுளை போல் இருக்கும் அவரது தோற்றம் உணர்வுபூர்வமாக பார்வையாளர்களை அசத்தியுள்ளது.

பிரபாஸும் ஆக்சன் காட்சிகளில் அசர வைத்துள்ளார். ஆனால் அவரது கேரக்டர் கொஞ்சம் நகைச்சுவை தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. சில நேரங்களில் காமெடிகளின் டைமிங் மிஸ் ஆகின்றது. ஆனால் இவரது கேரக்டரில் மிகப்பெரிய டுவிஸ்ட்  உள்ளது. இது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.

அத்துடன் ரெண்டே காட்சிகளில் தான் கமலஹாசனை காணலாம். அதில் கமலஹாசனின் கண்களை மிரட்டலாக காணப்படுகின்றது. கமலின் யாஸ்கின் கேரக்டர் முதன்மையாக இருக்கின்றது. இரண்டாம் பாகத்தில் கமலின் காட்சிகள் அதிரடியாக மிரள வைத்துள்ளது.

இந்த படத்தின் மொத்த உணர்ச்சியையும் தாங்கிச் செல்லக்கூடிய கேரக்டர் என்றால் அதை தீபிகா படுகோன் நடித்த சுமதி கேரக்டர். இதை தவிர ஷோபனா, பசுபதி, அனா பென் ஆகியவர்கள் தங்கள் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இறுதியாக இந்த படம் தொழில்நுட்பம் ரீதியாக பல பாராட்டுகளை பெற்றாலும், பொதுவாக ஹாலிவுட் படங்களின் கதை  வடிவத்தையே இந்த படம் பின்பற்றி உள்ளது. எத்தனை விதமான நடிகர்கள் நடித்திருந்த போதும் இன்னும் நுணுக்கமான வழியில் இந்த பிரம்மாண்ட கதையை வழிநடத்தி இருக்கலாம். இந்த படத்தில் உள்ள கேரக்டர்களில் உணர்வு  பூர்வமான தொடர்பு இல்லாதது இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. வசனங்களும் பெரும்பாலும் நேரடித் தன்மையுடன் காணப்படுகின்றது.

இந்த படத்தில் பெரும்பாலான நேரத்தை ஆக்சன் காட்சிகளை எடுத்துக் கொள்கின்றன. ஆக்சன் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கேரக்டர்களின் உணர்ச்சியை பலப்படுத்துவதில் கொடுத்திருக்கலாம்.

மூணு மாசத்துல இந்திரஜா சொன்ன குட் நியூஸ்..

0

காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இவரது திருமணத்தில் தமிழ் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் பங்கு பற்றி மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜிதா விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அதில் பாண்டியம்மா என்ற இவரது கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது. அதற்குப் பிறகு படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திரஜிதாவுக்கும் அவரது தாய் மாமனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது திருமணம் ஆகி மூன்று மாதங்களைக் கடந்த இந்த ஜோடி, குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அதாவது விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாக உள்ள மிஸ்டர் அண்ட் மிசிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இந்திரஜிதா – கார்த்திக் ஜோடி கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/C8rgSH5vgeB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

 

ஜெயம் ரவி மனைவி வதந்தி உண்மைதானா?

0

ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடுடன் இருப்பதாகவும் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செய்திகளுக்கு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் எந்த விளக்கமும் கொடுக்காததை அடுத்து இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்த விவாகரத்து வதந்தி உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் இவர்களில் ஆரவ் என்பவர் ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில ஆண்டுகளில் தனுஷ் – ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி , இமான் – மோனிகா உட்பட சில திரையுலக பிரபலங்கள் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்ஜே பாலாஜி தேர்வு செய்த நடிகை..!

0

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடித்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த திரைப்படமான ’மாசாணி அம்மன்’ திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் த்ரிஷாவையும் தற்போது கழட்டி விட்டு ஆர்ஜே பாலாஜி இன்னொரு நடிகை உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ’மாசாணி அம்மன்’ என்ற திரைப்படத்தை உருவாக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டதாகவும் இந்த படத்திலும் நயன்தாராவை அவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து நயன்தாராவுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் த்ரிஷா தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருவதால் ஆர்ஜே பாலாஜி கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அடுத்த கட்டமாக ’மாசாணி அம்மன்’ படத்தில் நடித்த சமந்தாவிடம் ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ஒப்புக் கொண்டால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா இதுவரை அம்மன் வேடத்தில் நடித்ததில்லை என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஷூட்டிங் எப்போது என ஆறிவித்த லோகேஷ் கனகராஜ்

0

சூப்பர்ஸ்டார் ரஜினி வேட்டையன் படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் டீஸர் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.

தற்போது கூலி படத்திற்காக மாஸ் லுக்கில் ரஜினிக்கு லுக் டெஸ்ட் நடத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் இணையத்தில் அது ட்ரெண்ட் ஆகி வருகிறது.  மேலும் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.

https://x.com/Dir_Lokesh/status/1805945422424494110

சூர்யா 44 யிலும் டபுள் ஆக்சனா ?

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களை கொடுக்காமல் இருப்பவர்கள் ஏராளம் ஆகும். அவ்வாறு இருக்கும் சூர்யாவின் அடுத்த படம் தொடர்பாக அப்டேட் கிடைத்துள்ளது.

ஜிகுரு தாண்டா , மகான் ,பேட்ட போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடிக்கும்  திரைப்படம் சூர்யா 44 ஆகும். குறித்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கின்றார்.

இந்த நிலையிலேயே குறித்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிக மாக உள்ள நிலையில் படம் தொடர்பாக அப்டேட் கிடைத்துள்ளது. குறித்த படத்தில் சூர்யா டபுள் ஆக்சனில் நடிப்பதுடன் , குறித்த அப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது மற்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் குறைப்படுகின்றது.

 

திடீரென சட்டை பட்டனை கழட்டி தொகுப்பாளினி அஞ்சனா

தமிழ் சின்னத்திரையின் தொகுப்பாளினிகள் என்றாலே சிலரது முகம் நமக்கு நியாபகம் வரும். முதலில் டிடி தான் நியாபகம் வருவார். அதன்பின் பாவனா, ரம்யா, அர்ச்சனா என பலர் நினைவுக்கு வருவார்கள்.

இப்படி இவர்கள் ராஜ்ஜியம் செய்துவந்த காலத்தில் பாடல் தொலைக்காட்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அஞ்சனா.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர், அவ்வப்போது மகனுடன் எடுக்கும் போட்டோக்களை அஞ்சனா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தனது இன்ஸ்டாவில் திடீரென ஒரு நடன வீடியோ வெளியிட்டுள்ளார். தனது சட்டை பட்டனை கழற்றி செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட், சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ பாருங்கள்,

https://www.instagram.com/reel/C8q6wTkyqtN/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

ரஜினிக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர நடிகராக முக்கிய கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தந்தையை போலவே அவரது மகள் வரலட்சுமியும் நடிகையாக தனது பயணத்தை துவங்கி தனக்கென ஒரு தனிப்பாதையை தேர்ந்தெடுத்து வித்தியாசமான படங்களில், கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்டநாள் நண்பரான நிக்கோலஸ் சச்தேவிற்கும் வரும் ஜூலை இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தற்போது வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் திரையுலகை சேர்ந்த நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு வரலட்சுமி தனது தாய் சாயா தேவி, தந்தை சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ள வரலட்சுமி சரத்குமார், “தலைவரை நேரில் சந்தித்து அவரையும் லதா ஆன்ட்டியையும் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். எப்போதும் போல அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய ரஜினி சாருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

14 பாடலுடன் வெளியாகி உள்ள சர்வானந்த் – கிர்த்தி ஷெட்டியின் ‘மனமே’

0

தெலுங்கில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வலம் வரும் சர்வானந்த், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மனமே என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இருவரும் கணவன், மனைவியாகவும் சிறுவயது குழந்தை ஒன்றுக்கு பெற்றோராகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார்.

ஆச்சரியமாக இந்த படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது பற்றி படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா கூறும்போது, “இந்த 14 பாடல்களும் படத்தின் வேகத்திற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது. அதே சமயம் கதையை எளிதாக நகர்த்திச் செல்லவே உதவி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக மலையாளத்தில் ஹேஷம் அப்துல் வகாப் அறிமுகமான ஹிருதயம் படத்திலும் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வெற்றியின் பகலாரியான் டிரெய்லர்

முருகன் ராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் தமிழ் திரில்லர் திரைப்படம் “பகலரியான்”. வெற்றி மற்றும் அக்‌ஷயா கந்தமுதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் சரோ இசையமைத்துள்ளார், மேலும் ரிஷிகேஷ் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் முருகன் ராஜ் தயாரிப்பை மேற்பார்வையிட்டார். மே 24, 2024 அன்று திரையரங்குகளில் “பகலரியன்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

வெற்றியின் சமீபத்திய முயற்சியான “பகலரியான்” மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடப்பட்டுள்ளது.  ரசிகர்கள் ஆவலுடன் ஆடியோ டிராக்குகளை வெளியிடுவதற்கும், “பகலரியான்” படத்தின் பரபரப்பான உலகத்தைப் பார்ப்பதற்கும் ஆவலுடன் காத்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அக்ஷயா கந்தமுதன், சாய் தீனா மற்றும் முருகன் ராஜ் ஆகியோருடன் வெற்றி முன்னணி நடிகர்களுடன், படம் ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. “பகலரியான்” படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லரை வெளியிடுவதற்கான உற்சாகம் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் வெற்றி, அக்‌ஷயா கந்தமுதன், சாய் தீனா, முருகன் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர் சாப்ளின் பாலு “பகலரியான்” படத்தில் நடித்துள்ளார்.
முருகன் ராஜ் “பகலரியான்” படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பணியாற்றுகிறார், மேலும் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு விவேக் சரோ இசையமைத்துள்ளார், அபிலாஷ் பிஎம்ஒய் ஒளிப்பதிவு செய்துள்ளார், குரு பிரதீப் படத்தொகுப்பைக் கையாண்டார்.

https://x.com/K_cinemaclub/status/1791115522203091400

இதோ இப்படத்தின் டிரெலர் உங்களுக்காக.