சூப்பர்ஸ்டார் ரஜினி வேட்டையன் படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் டீஸர் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.
தற்போது கூலி படத்திற்காக மாஸ் லுக்கில் ரஜினிக்கு லுக் டெஸ்ட் நடத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் இணையத்தில் அது ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களை கொடுக்காமல் இருப்பவர்கள் ஏராளம் ஆகும். அவ்வாறு இருக்கும் சூர்யாவின் அடுத்த படம் தொடர்பாக அப்டேட் கிடைத்துள்ளது.
ஜிகுரு தாண்டா , மகான் ,பேட்ட போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடிக்கும் திரைப்படம் சூர்யா 44 ஆகும். குறித்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கின்றார்.
இந்த நிலையிலேயே குறித்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிக மாக உள்ள நிலையில் படம் தொடர்பாக அப்டேட் கிடைத்துள்ளது. குறித்த படத்தில் சூர்யா டபுள் ஆக்சனில் நடிப்பதுடன் , குறித்த அப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது மற்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் குறைப்படுகின்றது.
தமிழ் சின்னத்திரையின் தொகுப்பாளினிகள் என்றாலே சிலரது முகம் நமக்கு நியாபகம் வரும். முதலில் டிடி தான் நியாபகம் வருவார். அதன்பின் பாவனா, ரம்யா, அர்ச்சனா என பலர் நினைவுக்கு வருவார்கள்.
இப்படி இவர்கள் ராஜ்ஜியம் செய்துவந்த காலத்தில் பாடல் தொலைக்காட்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அஞ்சனா.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர், அவ்வப்போது மகனுடன் எடுக்கும் போட்டோக்களை அஞ்சனா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.
இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தனது இன்ஸ்டாவில் திடீரென ஒரு நடன வீடியோ வெளியிட்டுள்ளார். தனது சட்டை பட்டனை கழற்றி செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட், சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர நடிகராக முக்கிய கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தந்தையை போலவே அவரது மகள் வரலட்சுமியும் நடிகையாக தனது பயணத்தை துவங்கி தனக்கென ஒரு தனிப்பாதையை தேர்ந்தெடுத்து வித்தியாசமான படங்களில், கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்டநாள் நண்பரான நிக்கோலஸ் சச்தேவிற்கும் வரும் ஜூலை இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தற்போது வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் திரையுலகை சேர்ந்த நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு வரலட்சுமி தனது தாய் சாயா தேவி, தந்தை சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ள வரலட்சுமி சரத்குமார், “தலைவரை நேரில் சந்தித்து அவரையும் லதா ஆன்ட்டியையும் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். எப்போதும் போல அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய ரஜினி சாருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வலம் வரும் சர்வானந்த், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மனமே என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இருவரும் கணவன், மனைவியாகவும் சிறுவயது குழந்தை ஒன்றுக்கு பெற்றோராகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார்.
ஆச்சரியமாக இந்த படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது பற்றி படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா கூறும்போது, “இந்த 14 பாடல்களும் படத்தின் வேகத்திற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது. அதே சமயம் கதையை எளிதாக நகர்த்திச் செல்லவே உதவி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக மலையாளத்தில் ஹேஷம் அப்துல் வகாப் அறிமுகமான ஹிருதயம் படத்திலும் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முருகன் ராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் தமிழ் திரில்லர் திரைப்படம் “பகலரியான்”. வெற்றி மற்றும் அக்ஷயா கந்தமுதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் சரோ இசையமைத்துள்ளார், மேலும் ரிஷிகேஷ் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் முருகன் ராஜ் தயாரிப்பை மேற்பார்வையிட்டார். மே 24, 2024 அன்று திரையரங்குகளில் “பகலரியன்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றியின் சமீபத்திய முயற்சியான “பகலரியான்” மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் ஆடியோ டிராக்குகளை வெளியிடுவதற்கும், “பகலரியான்” படத்தின் பரபரப்பான உலகத்தைப் பார்ப்பதற்கும் ஆவலுடன் காத்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அக்ஷயா கந்தமுதன், சாய் தீனா மற்றும் முருகன் ராஜ் ஆகியோருடன் வெற்றி முன்னணி நடிகர்களுடன், படம் ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. “பகலரியான்” படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லரை வெளியிடுவதற்கான உற்சாகம் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாய் தீனா, முருகன் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர் சாப்ளின் பாலு “பகலரியான்” படத்தில் நடித்துள்ளார்.
முருகன் ராஜ் “பகலரியான்” படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பணியாற்றுகிறார், மேலும் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு விவேக் சரோ இசையமைத்துள்ளார், அபிலாஷ் பிஎம்ஒய் ஒளிப்பதிவு செய்துள்ளார், குரு பிரதீப் படத்தொகுப்பைக் கையாண்டார்.
மோகன்லால், மீனா நடித்த ’த்ரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் வெளியிடும் படத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு டெலிவரி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த போதிலும் அவர் பிருத்விராஜ் உடன் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற படத்தின் புரமோஷனில் கலந்து கொண்டார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் அமலாபால் நடித்த இன்னொரு திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடித்த ’லெவல் கிராசிங்’ என்ற திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்பாஸ் அயுப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சைதாலி என்ற கேரக்டரில் அமலாபால் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை ரமேஷ் பிள்ளை தயாரித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ’த்ரிஷ்யம்’ ஜித்து ஜோசப் தான் வெளியிடுகிறார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
அனிருத் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பல ஹிட் பாடல்கள் கொடுத்த அவர் ஹிந்தியில் ஜவான் படம் மூலமாக அறிமுகம் ஆனார்.
1000 கோடிக்கும் மேல் வசூலித்த அந்த படத்தின் பாடல்களும் பெரிய ஹிட் தான்.
மீண்டும் ஷாருக் – அனிருத் கூட்டணி
இந்நிலையில் அனிருத்துக்கு மீண்டும் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
ஷாருக் கான் அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடிக்க இருக்கும் கிங் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் முதற்கட்ட பணிகளை அனிருத் ஏற்கனவே தொடங்கிவிட்டாராம்.
படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வீடியோஉடன் வெளிவர இருக்கிறது. அதற்காக தீம் மியூஸிக் இசையமைக்கும் பணிகளில் அனிருத் இறங்கி இருக்கிறாராம்.
மீண்டும் பாலிவுட்டில் அனிருத்.. டாப் ஹீரோ உடன் பிரம்மாண்ட கூட்டணி | Anirudh Teams Up With Shahrukh Again For King
‘மீசைய முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்த நிலையில், ஹிப் ஹாப் பாடல்களின் மூலம் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்திற்கும் இசையமைத்துள்ள இவர், பல்வேறு ஹிட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அத்துடன் நட்பே துணை, நான் சிரித்தால், வீரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பி.டி சார் படத்தின் டிரைலர் வைரல் ஆகி உள்ளது. இந்த படத்தில் விளையாட்டு துறை ஆசிரியராக காணப்படும் ஆதி, அவரது வாழ்வில் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு காணப்படுகிறது. அத்துடன் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாகவும் காணப்படுகிறது.
இந்த திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி, பாக்கியராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகை சமந்தா கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஓரளவு குணமாகி இருந்தாலும், இன்னும் சிகிச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
டவலுடன் சமந்தா வெளியிட்ட போட்டோ… இது புதுவித சிகிச்சை | Samantha Far Infrared Sauna In Towel
புது வித சிகிச்சை
சமந்தா தற்போது Far Infrared Sauna என்ற சிகிச்சை எடுத்துகொண்டிருக்கிறார். வெறும் டவல் மட்டும் அணிந்து Infrared கதிர்கள் அவர் உடல் முழுவதும் படும் வகையில் சிகிச்சை நடந்திருக்கிறது. போட்டோ இதோ