Home Blog Page 14

சற்றுமுன் வெளியான ‘ஒன் 2 ஒன்’ டிரெய்லர்

சுந்தர்.சி நடிப்பில் இயக்குனர் கே திருஞானம் இயக்கியுள்ள ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

‘ஒன் 2 ஒன்’  திரைப்படத்தை 24 ஹவர்ஸ் ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதோடு, இந்த படத்தில் சுந்தர்.சியுடன் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள், சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் போன்ற படங்களுக்கு பிறகு தற்போது சுந்தர்.சி நடிப்பில் தயாராகும் ‘ஒன் 2 ஒன்’ படத்திலும் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்திரா ஆகியோர் முக்கிய கேரக்டர்களிலும் ராகினி திவேதி, பேபி மானஸ்தி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், ‘ஒன் 2 ஒன்’  படத்தின் டிரைலர் படக்குழுவினரால் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படமும் விரைவில் திரையரங்குக்கு வெளியாக உள்ளது.

https://x.com/24hrsproductio4/status/1807021827908329786

இதேவேளை குறித்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படத்திலும் அனுராக் தனது நடிப்பில் மிரட்டி இருப்பார் என்றும், சுந்தர். சி எமோஷனலான ஒரு கேரக்டரில் நடித்து இருப்பது போலவும் தெரிகிறது. இதோ படத்தின் ட்ரெய்லர்,

‘மழை பிடிக்காத மனிதன்’ டிரைலர் ரிலீஸ்..

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இன்றைய தினம் நடைபெற்ற மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், விஜய் ஆண்டனி முகத்தில் கரி பூசியவாறு  வந்திருந்தார். அதற்கு காரணம் அவர் போட்ட மேக்கப் எடுக்க  நிறைய நேரம் ஆகும் என்பதால் அப்படியே வந்து விட்டதாக கூறியுள்ளார்.

https://x.com/vijayantony/status/1807071965590479082

இந்த நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி உள்ளது. இந்தப் திரைப்படம் கிரைம் தில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் எதிர்வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் ஆண்டனி..

0

விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் ரிலீஸ் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வருகிறது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய அவதாரங்களில் ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் டிரைலர் ஜூன் 29ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

 

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இன்னொரு திரைப்படம் ’ஹிட்லர்’. இந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில், டானா இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில் உருவாகிய இந்த படம் விஜய் ஆண்டனியின் வெற்றி படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://x.com/ChendurFilm/status/1806309368344010786

அஜித்தின் மாஸ் செகண்ட் லுக் போஸ்டர்..!

0

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை திடீரென அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் என்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகினர்.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டது போலவே சற்றுமுன் இந்த படத்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மாஸ் போஸில் இருக்கும் நிலையில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் போஸ்டரில் ’God Bless You மாமே’ என்ற வாசகம் இருப்பதை அடுத்து இதுதான் அந்த பாடலின் முதல் வரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு  தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பதால் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது லுக் போஸ்டரிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://x.com/MythriOfficial/status/1806314049858343176

‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர்

0

கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.அதில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சுதீப் கிஷன் மற்றும் துஷரா மாவு மில்லில் மிகவும் கோபத்துடன் முறைத்துக்கொண்டு இருப்பது போல் இருக்கின்றனர்.இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தற்பொழுது தொடங்கியுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

https://x.com/sunpictures/status/1806198303035699662

 

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோ வைரல்

0

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

அதன்பிறகு காலா, விசுவாசம், டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தார். துணை நடிகையாக இருந்து,தற்போது கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் வளர்ந்து வளர்ந்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் “கெஸ்ட்” மற்றும் “தி நைட்” என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவிவில் வெளியாக உள்ளது.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட சாக்ஷி அகர்வால், இதே போன்று செய்து என்னை டேக் செய்யுங்கள் என தலைப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

https://www.instagram.com/reel/C8tWnK9x5xJ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

 

 

 

 

 

 

அட்லீ அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி..

0

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியளவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் அட்லீ.

தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யுடன் மூன்று வெற்றி படங்களுக்கு பின் ஷாருக்கான் உடன் ஜவான் திரைப்படத்தில் கைகோர்த்தார். இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

 

அட்லீ அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Director Atlee Next Movie Release Date

அடுத்ததாக சல்மான் கானுடன் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனராக மட்டுமின்றி அட்லீ தயாரிப்பாளராகவும் திரையுலகில் பயணித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பேபி ஜான். தமிழில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த பேபி ஜான்.

அட்லீ அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Director Atlee Next Movie Release Date

 

இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி உள்ளிட்ட கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கிருத்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/Atlee_dir/status/1806213942789755340

https://x.com/Atlee_dir/status/1805882856767385892

 

ஜெய் உடன் இணையும் இமான்!

0

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மாத்திரம் இன்றி இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என் பலரும் முன்னணியாக இருந்து சமீபத்தில் படவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவராக இருப்பவர் இசையமைப்பாளர் இமான் ஆவார்.

டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.

இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதனை தந்து x தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “எனது “பேபி அண்ட் பேபி” படத்திற்காக மீனாட்சி இளையராஜாவுடன் ஒரு அழகான டூயட் பாடலை பதிவு செய்தேன். உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் குரல் உள்ள ஒரு கலைஞருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சகோதரர்கள்  ஜோகிபாபு , ஜெய் நடித்துள்ளனர் மற்றும் இமான்  இசை ! இயக்குனர் – பிரதாப் என குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/immancomposer/status/1806254765741162649 

 

பாபநாசம் கமல் மகளா இப்படி..

0

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் அவரது மகள் ரோலில் நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். கேரளாவை சேர்ந்த அவர் அதற்கு பிறகு அதிகம் தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை, மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

எஸ்தர் அணில் 22 வயதாகும் நிலையில் அடுத்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதற்காக தொடர்ந்து கிளாமராக போட்டோஷூட் எடுத்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

தற்போது எஸ்தர் அணில் மால்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு நீச்சல் உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ

https://x.com/_estheranil/status/1806275254102434238

புராணக் கதையில் இணைந்த டெக்னாலஜி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில்  உருவாகி இருக்கும் கல்கி 28 98 ஏடி திரைப்படம், இன்றைய தினம் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன் கமல், அமிர்தாப், தீபிகா படுகோன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது கல்கி 28 98 ஏடி படத்தின் திரைவிமர்சனம் பற்றி விரிவாக பார்ப்போம்.

அதன்படி இந்த படத்தில் ஆரம்பத்திலேயே மகாபாரதப் போர் நடந்து முடிகிறது. இதில் துரோணாச்சார்யா மகன்(அமிதாப் பச்சன்)  பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்க, இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் ‘உனக்கு மரணமே இல்லை, உடல் முழுவதும் ரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும் அப்போதுதான் உன் சாபம் தீரும்’ என சொல்லுகிறார்.

இதைத்தொடர்ந்து 6000 வருடங்கள் ஓடி  800 வருடமாக உயிரோடு இருக்கும் யாஷ்கின்(கமல்) உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு ஊரை உருவாக்கி வைத்துள்ளார். அங்கு ஒரு வுண்டி ஹண்டராக பிரபாஸ் வருகின்றார்.

இவ்வாறு வந்த பிரபாஸ் ஒன் மில்லியன் யூனிட் இருந்தால் கமல் இருக்கும் காம்ப்ளஸ்க்குள் வரலாம் என்று ஒரு விதி. இதற்காக பிரபாஸும் போராட, அதே நேரத்தில் கமல் பல பெண்களின் கருவில் இருந்து ஒரு சீரோம் எடுக்க முயற்சிக்கின்றார்.

இதன் போது அங்குள்ள தீபிகா படுகோன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாக, அதில் சீரோம் எடுக்கும் போது அது கிருஷ்ணன் தான் என்பது தெரிய வருகின்றது. இதனால் அமிர்தாப் பல வருட தவிப்பிற்கு பலனாக தீபிகாவை தேடி வருகின்றார். இதற்கு பிரபாஸ் எந்த விதத்தில் உதவுகின்றார்? அதோடு கமல் நினைத்தது அடைந்தாரா? என்றது தான் இந்த படத்தின் கதை கரு.

இந்த படத்தை பொருத்தவரையில் பலம் என்னவென்றால் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகள் தான். பிரபாஸ் நடித்த ஆதி பிரிருஷ் படத்தின் கிராபிக் காட்சிகள் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதிக பணச்செலவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரம் குறித்த பல கேள்விகள் இருந்ததன. அந்த கேள்விகளுக்கு எல்லாம்  கல்கி படம் பதில் சொல்லும் படியாக அமைந்துள்ளது.

மேலும் இதிகாச கதையை சயின்ஸ் பிக்சன் வகையோடு இணைத்து நம்பகத் தன்மையான ஒரு கதையாக மாற்றி இருக்கின்றார்கள். ஹாலிவுட் படங்களான மேட்மேக்ஸ், டியூன், ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களின் சாயலை இந்த படத்தில்  பார்க்க முடியும். ஆனாலும் அதிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் கேரக்டர்கள், இன்னொரு பக்கம் புராணக் கதைகளில் வரும் அசாத்திய சக்திகள் கொண்ட கேரக்டங்கள் என அறிவியல் கற்பனையும் இணைத்து கல்கி படம் உருவாகியுள்ளது.

அத்துடன் பிரபாஸ் பயணிக்கும் புஜ்ஜி காருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். மேலும் மிருணாள் தாகூர், துல்கா சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமவுலி ஆகியோர் சின்ன சின்ன அம்சங்களில் சேர்ந்திருக்கின்றமையும் இதற்கு தனிச்சிறப்பாக காணப்படுகின்றது.

முதல் பாகத்தில் அமிதாபச்சனின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதியும்படி காணப்படுகின்றது. எட்டு அடி உயரத்திற்கு கிரேக்க கடவுளை போல் இருக்கும் அவரது தோற்றம் உணர்வுபூர்வமாக பார்வையாளர்களை அசத்தியுள்ளது.

பிரபாஸும் ஆக்சன் காட்சிகளில் அசர வைத்துள்ளார். ஆனால் அவரது கேரக்டர் கொஞ்சம் நகைச்சுவை தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. சில நேரங்களில் காமெடிகளின் டைமிங் மிஸ் ஆகின்றது. ஆனால் இவரது கேரக்டரில் மிகப்பெரிய டுவிஸ்ட்  உள்ளது. இது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.

அத்துடன் ரெண்டே காட்சிகளில் தான் கமலஹாசனை காணலாம். அதில் கமலஹாசனின் கண்களை மிரட்டலாக காணப்படுகின்றது. கமலின் யாஸ்கின் கேரக்டர் முதன்மையாக இருக்கின்றது. இரண்டாம் பாகத்தில் கமலின் காட்சிகள் அதிரடியாக மிரள வைத்துள்ளது.

இந்த படத்தின் மொத்த உணர்ச்சியையும் தாங்கிச் செல்லக்கூடிய கேரக்டர் என்றால் அதை தீபிகா படுகோன் நடித்த சுமதி கேரக்டர். இதை தவிர ஷோபனா, பசுபதி, அனா பென் ஆகியவர்கள் தங்கள் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இறுதியாக இந்த படம் தொழில்நுட்பம் ரீதியாக பல பாராட்டுகளை பெற்றாலும், பொதுவாக ஹாலிவுட் படங்களின் கதை  வடிவத்தையே இந்த படம் பின்பற்றி உள்ளது. எத்தனை விதமான நடிகர்கள் நடித்திருந்த போதும் இன்னும் நுணுக்கமான வழியில் இந்த பிரம்மாண்ட கதையை வழிநடத்தி இருக்கலாம். இந்த படத்தில் உள்ள கேரக்டர்களில் உணர்வு  பூர்வமான தொடர்பு இல்லாதது இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. வசனங்களும் பெரும்பாலும் நேரடித் தன்மையுடன் காணப்படுகின்றது.

இந்த படத்தில் பெரும்பாலான நேரத்தை ஆக்சன் காட்சிகளை எடுத்துக் கொள்கின்றன. ஆக்சன் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கேரக்டர்களின் உணர்ச்சியை பலப்படுத்துவதில் கொடுத்திருக்கலாம்.