Home Blog Page 15

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் ‘ராபர்’ .

0

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன். சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன. மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது . நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறான். ‘உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே’ என்றார் புத்தர். நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களை பாதிக்கின்றன’ என்கிறது தம்மபதம். நாயகனின் ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம்.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான். நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே ‘ராபர்’ படத்தின் கதை.

‘ராபர்’ படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து தயாரிப்பாளர் கவிதா கூறியபோது, ‘உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகள் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும். ‘ராபர்’ படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.

இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன். நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாக குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.

’ராபர்’ திரைப்படம் படத்தின்’ டைட்டில் பர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மே மாதத்தின் இறுதியில் ராபர் படம் வெளியாகவுள்ளது.

ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?.

0

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் தனுஷ்.

கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.

தற்போது தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது ராயன் படத்தின் ஷூட்டிங் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது ஆனால் தேர்தல் நடைபெறுவதால் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது.

ஜூன் மாதத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருப்பதால் படத்தை மீண்டும் ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

கசிந்தது படங்கள் ராமாயணத் படபிடிப்பிலிருந்து

0

டங்கல் இயக்குனர் நித்தேஷ் திவாரி தற்போது மதிப்புமிக்க ராமாயணத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் முறையே ராமர், சீதை மற்றும் ராவணன் வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் இப்படம் மும்முனை படமாக உருவாகி வருகிறது.

செட்டில் இருந்து ரன்பீர் மற்றும் சாய் பல்லவியின் படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன, மேலும் அவை சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளன. ராமர் மற்றும் சீதையாக ரன்பீரும் சாய் பல்லவியும் அசத்தியுள்ளனர். சஞ்சு நடிகர் வேட்டி அணிந்து நீண்ட கூந்தலுடன் காணப்பட்டார். ராமாவின் கேரக்டருக்கு சரியான தோற்றத்தை பெற நடிகர் நிறைய கிலோவை குறைத்துள்ளார். மறுபுறம், சாய் பல்லவி, புடவையில் நகைகளை ஏற்றி அசத்தினார்.

படப்பிடிப்பில் இருந்து கசிந்தது இது முதல் அல்ல, இதனால் ரசிகர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். மேலும் கசிவுகளைத் தடுக்க தயாரிப்பாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள், ஏனெனில் இது உற்சாகத்தைக் கொல்லும். இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

குறிப்பு: கசிந்த படங்களைப் பகிர்வது நெறிமுறை அல்ல என்பதால், அவற்றை எங்கள் இணையதளத்தில் பகிர்வதைத் தவிர்க்கிறோம்.

வயது அதிகமான நடிகையுடன் இணையும் கவின்..

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஸ்டார் படம் வருகிற மே 10ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், கவின் கைவசம் இன்னும் இரு திரைப்படங்கள் உள்ளன. அதில் கவின் 5வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். மேலும் கவின் 6வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மீதமுள்ளது என அவரே கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், அடுத்ததாக கவின் நடிக்கப்போகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் என்பவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் தான் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

மேலும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதன்மூலம் கவின் – ஆண்ட்ரியா முதல் முறையாக இணைகிறார்கள்.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.

ராஜூ முருகனின் அடுத்த ஹீரோ இவர்தான்..!

0

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் படுதோல்வி அடைந்தது ராஜூ முருகனை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டதாகவும் இனிமேல் பெரிய பட்ஜெட்டும் வேண்டாம் பெரிய நடிகரும் வேண்டாம் என்று தனது அடுத்த படத்திற்கு சசிகுமாரை நாயகனாக தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ராஜூ முருகன் ‘குக்கூ’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு ’ஜோக்கர்’ ’ஜிப்சி’ ஆகிய படங்களை இயக்கினார். கடந்தாண்டு அவர் கார்த்தி நடிப்பில் உருவான ’ஜப்பான்’ படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் படம் ரிலீஸ் ஆனவுடன்  வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வி அடைந்ததோடு விமர்சன ரீதியிலும் படுமோசமாக விமர்சனம் செய்யப்பட்டது. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்த ராஜூ முருகன் இனிமேல் பெரிய நடிகரும் வேண்டாம், பெரிய பட்ஜெட்டும் வேண்டாம் என்று முடிவு செய்து சூப்பர் கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம்.

இந்த கதையை சமீபத்தில் சசிக்குமாரிடம் ராஜூ முருகன் கூறிய போது அவருக்கு அந்த கதை பிடித்து விட்டதை அடுத்து அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சசிகுமார் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் அந்த படங்களை ஒத்தி வைத்துவிட்டு ராஜூ முருகன் படத்தில் முதலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘கோட்’ அப்டேட் இதுதான்.. ரசிகர்கள் உற்சாகம்..!

0

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்ப்போம்.

இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அன்றைய தினம் ‘கோட்’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வரும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து தகவல் கசிந்துள்ளது.

விஜய்யின் பிறந்தநாளில் ‘கோட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாகவும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ‘கோட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் யூடியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் இரண்டாவது பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் செகண்ட் சிங்கிள் ரிலீசான வின்னர் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து வரும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

கர்ப்பம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு…

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பாக்கியா வீட்டிற்கு மையூ வர அவரை இருக்க வைத்து ஸ்னேக்ஸ் கொடுக்கிறார் பாக்கியா.  இதன் போது மையூ அம்மாக்கு சாப்பாடு கொடுத்து  விட்டாங்க. எனக்கு ரொம்ப ஜொலியா இருக்கு. நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொன்னேன் என்று அந்த விஷயத்தை சொல்ல வர ராதிகா ஓடி வந்து தடுத்து விடுகிறார்.

மேலும் ஏன் அம்மா ஒரே புளிப்பா சாப்பிடுறீங்க, எனக்கும் உங்களுக்கு சமைச்ச சாப்பாடு தான் தராங்க எனக்கு பிடிக்கவே இல்லை என்று சொல்ல, பாட்டி புளிப்பு கொஞ்சம் கூட போட்டு சமைச்சு இருப்பாங்க என்று சொல்லி  சமாளிக்கிறார்.

இதை அடுத்து எழில் பங்க்ஷன் ஒன்றுக்கு போக கிளம்ப ஈஸ்வரியையும் அழைக்கிறார். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார். அந்த நேரத்தில் நிலா வந்து பாட்டி என் டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்க, உனக்கு என்ன நல்லா தான் இருக்கு என்று ஈஸ்வரி சொல்வதை பார்த்த அமிர்தா சந்தோஷம் அடைகிறார்.

மீண்டும் எழில் ஈஸ்வரியை அழைக்க, நான் தான் உன் கூட பேசறது இல்ல தானே. நீ நிலாவ படிக்க வைத்து நன்றாக பார்த்துக் கொள்ளு. ஆனால் நிலா வளர்ந்த பிறகு அவளுக்கு உண்மை தெரிஞ்சா நாளைக்கு அவ கூட உன்ன அப்பான்னு கூப்பிட மாட்டா  என்று காயப்படுத்தி பேசுகிறார்.

மறுபக்கம் மையூ கிட்ட ஏன் சாப்பிட கொடுத்து விட்டீங்க? அவ எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்ல பார்த்தா என ராதிகா தனது அம்மாவுக்கு போன் பண்ணி பேச,  இன்னும் விஷயத்தை சொல்லலையா? என்று அவரின் அம்மா கேட்கிறார்.

அதன் பிறகு கோபியை அழைத்து நானும் வாரேன் உங்க வீட்டுல விஷயத்தை சொல்லுவோம் என்று சொல்ல, வேண்டாம் அத்தை நானே சொல்லிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்கிறார் கோபி.

இதை தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்து ராதிகா பேசிக் கொண்டிருக்க, அங்கு துணி காயப்போட வந்த பாக்கியா பட்டும்  படாமல் கேட்டு விடுகிறார். இதைத் தொடர்ந்து தலைசுற்றி ராதிகா கீழே விழப்போக பாக்கியா பிடித்துக் கொள்கிறார்.

மேலும் உங்களுக்கு என்ன நடந்தது? இப்படி எல்லாம் ஏன் நடந்துக்கிறீங்க என்று பாக்கியா ராதிகாவிடம் கேட்க, ராதிகா ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார்.

ஆனாலும் நீங்கள் நடந்து கொள்வதெல்லாம் பார்த்தா கர்ப்பமாக இருக்கிற மாதிரியே இருக்கு. உண்மைய சொல்லுங்க என்று கேட்க, டேட் தள்ளி போச்சு. டாக்டர் கிட்ட செக் பண்ணினேன் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க என்று ராதிகா சொல்லியதோடு, நாங்க ரெண்டு பேருமே இத எதிர்பார்க்கல என்று சொல்ல, நல்ல விஷயம் தானே என்று பாக்கியா சொல்லி தடுமாறுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

 

‘குக் வித் கோமாளி’ சீசன் 5 ஆரம்பம்..

0

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை ஹாட்ஸ்டாரில் வெளியானதை அடுத்து பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கும் நிலையில் முதல் கட்டமாக புகழ், குரேஷி, சரத் மற்றும் சுனிதா ஆகிய நான்கு கோமாளிகள் என்ட்ரி ஆகிறார்கள். அதன் பின்னர் புதிய கோமாளிகள் ராமர், கேபிஒய் வினோத், நாஞ்சில் விஜயன், அன்ஷிதா, வைஷாலி உள்ளிட்டோர் அறிமுகமாகின்றனர்.

இதனை அடுத்து நடுவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் அட்டகாசமாக அறிமுகமாக முதல் நாள் எபிசோடு சூப்பராக தொடங்கியது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் குக்குகள் வரிசையாக ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள்.

முதலில் திவ்யா துரைசாமி, அதனை அடுத்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் சூப்பர் சிங்கர் பூஜா ஆகியோர் அட்டகாசமாக அறிமுகமாகும் காட்சி உள்ளது. அதன் பின்னர் யூடியூபர் இர்பான், பாண்டியன் ஸ்டோர் நடிகர் வசந்த் வெற்றி ஆகியோர் அறிமுகம் ஆகின்றனர்.

இதனை அடுத்து அடுத்த குக்காக விஜய் டிவி பிரியங்கா, நடிகர் வி டிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஆகியோர் அறிமுகமாகும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் இன்றைய எபிசோடில் குக்குகள் மற்றும் கோமாளிகள் அறிமுகம் மட்டுமே நடந்துள்ள நிலையில் நாளை முதல் சமையல் போட்டி கலகலப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் பட டிரெலர் அவுட்

தமிழ் திரையுலகில் வளரும் இளம் நடிகராக திகழ்கிறார் கவின். தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிசியாக நடிகராக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்திற்காக கவின் போட்டுள்ள புதிய கெட்டப் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் கவின். இந்த தொடர் மூலமாக கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து சினிமாவில் தலைக்காட்ட ஆரம்பித்தார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் டைட்டில் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேறி விட்டார். இந்நிகழ்ச்சி மூலமாக கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் இருந்து கவினுக்கு வாய்ப்புகள் குவிய துவங்கின.

இதனையடுத்து கடந்தாண்டு கவினின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பியார் பிரேம காதல்’ பட பிரபலம் இளனின் இரண்டாவது படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

‘ஸ்டார்’ படத்தின் ஷுட்டிங் எல்லாம் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெலோடி’ பாடலில் கவின் பெண் வேடம் போட்டு டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவின்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் ‘ரெமோ’ படத்தில் பெண் கெட்டப்பில் வந்த எஸ்கேவுக்கு தற்போது கவின் டப் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கவின் லேடி கெட்டப்பில் செம்ம க்யூட்டாக இருப்பதாகவும் இணையத்தில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர். ‘ஸ்டார்’ படத்தில் கவினுடன், அதிதி பொலங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெலர்  காலை 11.11 க்கு பட குழு வெளியிட்டுள்ளது.

https://x.com/Kavin_m_0431/status/1784095603867496798

கவின் பட டிரெலர் நாளை

0

தமிழ் திரையுலகில் வளரும் இளம் நடிகராக திகழ்கிறார் கவின். தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிசியாக நடிகராக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்திற்காக கவின் போட்டுள்ள புதிய கெட்டப் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் கவின். இந்த தொடர் மூலமாக கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து சினிமாவில் தலைக்காட்ட ஆரம்பித்தார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் டைட்டில் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேறி விட்டார். இந்நிகழ்ச்சி மூலமாக கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் இருந்து கவினுக்கு வாய்ப்புகள் குவிய துவங்கின.

இதனையடுத்து கடந்தாண்டு கவினின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பியார் பிரேம காதல்’ பட பிரபலம் இளனின் இரண்டாவது படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

‘ஸ்டார்’ படத்தின் ஷுட்டிங் எல்லாம் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெலோடி’ பாடலில் கவின் பெண் வேடம் போட்டு டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவின்.

இதனை பார்த்த ரசிகர்கள் ‘ரெமோ’ படத்தில் பெண் கெட்டப்பில் வந்த எஸ்கேவுக்கு தற்போது கவின் டப் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கவின் லேடி கெட்டப்பில் செம்ம க்யூட்டாக இருப்பதாகவும் இணையத்தில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர். ‘ஸ்டார்’ படத்தில் கவினுடன், அதிதி பொலங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெலர் நாளை காலை 11.11 க்கு வெளியிடப்படும் என பட குழு அறிவித்துள்ளது.

https://x.com/SonyMusicSouth/status/1783892029132660788