Home Blog Page 16

வயது அதிகமான நடிகையுடன் இணையும் கவின்..

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஸ்டார் படம் வருகிற மே 10ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், கவின் கைவசம் இன்னும் இரு திரைப்படங்கள் உள்ளன. அதில் கவின் 5வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். மேலும் கவின் 6வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மீதமுள்ளது என அவரே கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், அடுத்ததாக கவின் நடிக்கப்போகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் என்பவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் தான் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

மேலும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதன்மூலம் கவின் – ஆண்ட்ரியா முதல் முறையாக இணைகிறார்கள்.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.

ராஜூ முருகனின் அடுத்த ஹீரோ இவர்தான்..!

0

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் படுதோல்வி அடைந்தது ராஜூ முருகனை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டதாகவும் இனிமேல் பெரிய பட்ஜெட்டும் வேண்டாம் பெரிய நடிகரும் வேண்டாம் என்று தனது அடுத்த படத்திற்கு சசிகுமாரை நாயகனாக தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ராஜூ முருகன் ‘குக்கூ’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு ’ஜோக்கர்’ ’ஜிப்சி’ ஆகிய படங்களை இயக்கினார். கடந்தாண்டு அவர் கார்த்தி நடிப்பில் உருவான ’ஜப்பான்’ படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் படம் ரிலீஸ் ஆனவுடன்  வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வி அடைந்ததோடு விமர்சன ரீதியிலும் படுமோசமாக விமர்சனம் செய்யப்பட்டது. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்த ராஜூ முருகன் இனிமேல் பெரிய நடிகரும் வேண்டாம், பெரிய பட்ஜெட்டும் வேண்டாம் என்று முடிவு செய்து சூப்பர் கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம்.

இந்த கதையை சமீபத்தில் சசிக்குமாரிடம் ராஜூ முருகன் கூறிய போது அவருக்கு அந்த கதை பிடித்து விட்டதை அடுத்து அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சசிகுமார் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் அந்த படங்களை ஒத்தி வைத்துவிட்டு ராஜூ முருகன் படத்தில் முதலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘கோட்’ அப்டேட் இதுதான்.. ரசிகர்கள் உற்சாகம்..!

0

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்ப்போம்.

இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அன்றைய தினம் ‘கோட்’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வரும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து தகவல் கசிந்துள்ளது.

விஜய்யின் பிறந்தநாளில் ‘கோட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாகவும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ‘கோட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் யூடியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் இரண்டாவது பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் செகண்ட் சிங்கிள் ரிலீசான வின்னர் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து வரும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

கர்ப்பம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு…

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பாக்கியா வீட்டிற்கு மையூ வர அவரை இருக்க வைத்து ஸ்னேக்ஸ் கொடுக்கிறார் பாக்கியா.  இதன் போது மையூ அம்மாக்கு சாப்பாடு கொடுத்து  விட்டாங்க. எனக்கு ரொம்ப ஜொலியா இருக்கு. நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொன்னேன் என்று அந்த விஷயத்தை சொல்ல வர ராதிகா ஓடி வந்து தடுத்து விடுகிறார்.

மேலும் ஏன் அம்மா ஒரே புளிப்பா சாப்பிடுறீங்க, எனக்கும் உங்களுக்கு சமைச்ச சாப்பாடு தான் தராங்க எனக்கு பிடிக்கவே இல்லை என்று சொல்ல, பாட்டி புளிப்பு கொஞ்சம் கூட போட்டு சமைச்சு இருப்பாங்க என்று சொல்லி  சமாளிக்கிறார்.

இதை அடுத்து எழில் பங்க்ஷன் ஒன்றுக்கு போக கிளம்ப ஈஸ்வரியையும் அழைக்கிறார். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார். அந்த நேரத்தில் நிலா வந்து பாட்டி என் டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்க, உனக்கு என்ன நல்லா தான் இருக்கு என்று ஈஸ்வரி சொல்வதை பார்த்த அமிர்தா சந்தோஷம் அடைகிறார்.

மீண்டும் எழில் ஈஸ்வரியை அழைக்க, நான் தான் உன் கூட பேசறது இல்ல தானே. நீ நிலாவ படிக்க வைத்து நன்றாக பார்த்துக் கொள்ளு. ஆனால் நிலா வளர்ந்த பிறகு அவளுக்கு உண்மை தெரிஞ்சா நாளைக்கு அவ கூட உன்ன அப்பான்னு கூப்பிட மாட்டா  என்று காயப்படுத்தி பேசுகிறார்.

மறுபக்கம் மையூ கிட்ட ஏன் சாப்பிட கொடுத்து விட்டீங்க? அவ எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்ல பார்த்தா என ராதிகா தனது அம்மாவுக்கு போன் பண்ணி பேச,  இன்னும் விஷயத்தை சொல்லலையா? என்று அவரின் அம்மா கேட்கிறார்.

அதன் பிறகு கோபியை அழைத்து நானும் வாரேன் உங்க வீட்டுல விஷயத்தை சொல்லுவோம் என்று சொல்ல, வேண்டாம் அத்தை நானே சொல்லிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்கிறார் கோபி.

இதை தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்து ராதிகா பேசிக் கொண்டிருக்க, அங்கு துணி காயப்போட வந்த பாக்கியா பட்டும்  படாமல் கேட்டு விடுகிறார். இதைத் தொடர்ந்து தலைசுற்றி ராதிகா கீழே விழப்போக பாக்கியா பிடித்துக் கொள்கிறார்.

மேலும் உங்களுக்கு என்ன நடந்தது? இப்படி எல்லாம் ஏன் நடந்துக்கிறீங்க என்று பாக்கியா ராதிகாவிடம் கேட்க, ராதிகா ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார்.

ஆனாலும் நீங்கள் நடந்து கொள்வதெல்லாம் பார்த்தா கர்ப்பமாக இருக்கிற மாதிரியே இருக்கு. உண்மைய சொல்லுங்க என்று கேட்க, டேட் தள்ளி போச்சு. டாக்டர் கிட்ட செக் பண்ணினேன் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க என்று ராதிகா சொல்லியதோடு, நாங்க ரெண்டு பேருமே இத எதிர்பார்க்கல என்று சொல்ல, நல்ல விஷயம் தானே என்று பாக்கியா சொல்லி தடுமாறுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

 

‘குக் வித் கோமாளி’ சீசன் 5 ஆரம்பம்..

0

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை ஹாட்ஸ்டாரில் வெளியானதை அடுத்து பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கும் நிலையில் முதல் கட்டமாக புகழ், குரேஷி, சரத் மற்றும் சுனிதா ஆகிய நான்கு கோமாளிகள் என்ட்ரி ஆகிறார்கள். அதன் பின்னர் புதிய கோமாளிகள் ராமர், கேபிஒய் வினோத், நாஞ்சில் விஜயன், அன்ஷிதா, வைஷாலி உள்ளிட்டோர் அறிமுகமாகின்றனர்.

இதனை அடுத்து நடுவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் அட்டகாசமாக அறிமுகமாக முதல் நாள் எபிசோடு சூப்பராக தொடங்கியது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் குக்குகள் வரிசையாக ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள்.

முதலில் திவ்யா துரைசாமி, அதனை அடுத்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் சூப்பர் சிங்கர் பூஜா ஆகியோர் அட்டகாசமாக அறிமுகமாகும் காட்சி உள்ளது. அதன் பின்னர் யூடியூபர் இர்பான், பாண்டியன் ஸ்டோர் நடிகர் வசந்த் வெற்றி ஆகியோர் அறிமுகம் ஆகின்றனர்.

இதனை அடுத்து அடுத்த குக்காக விஜய் டிவி பிரியங்கா, நடிகர் வி டிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஆகியோர் அறிமுகமாகும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் இன்றைய எபிசோடில் குக்குகள் மற்றும் கோமாளிகள் அறிமுகம் மட்டுமே நடந்துள்ள நிலையில் நாளை முதல் சமையல் போட்டி கலகலப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் பட டிரெலர் அவுட்

தமிழ் திரையுலகில் வளரும் இளம் நடிகராக திகழ்கிறார் கவின். தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிசியாக நடிகராக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்திற்காக கவின் போட்டுள்ள புதிய கெட்டப் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் கவின். இந்த தொடர் மூலமாக கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து சினிமாவில் தலைக்காட்ட ஆரம்பித்தார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் டைட்டில் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேறி விட்டார். இந்நிகழ்ச்சி மூலமாக கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் இருந்து கவினுக்கு வாய்ப்புகள் குவிய துவங்கின.

இதனையடுத்து கடந்தாண்டு கவினின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பியார் பிரேம காதல்’ பட பிரபலம் இளனின் இரண்டாவது படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

‘ஸ்டார்’ படத்தின் ஷுட்டிங் எல்லாம் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெலோடி’ பாடலில் கவின் பெண் வேடம் போட்டு டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவின்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் ‘ரெமோ’ படத்தில் பெண் கெட்டப்பில் வந்த எஸ்கேவுக்கு தற்போது கவின் டப் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கவின் லேடி கெட்டப்பில் செம்ம க்யூட்டாக இருப்பதாகவும் இணையத்தில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர். ‘ஸ்டார்’ படத்தில் கவினுடன், அதிதி பொலங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெலர்  காலை 11.11 க்கு பட குழு வெளியிட்டுள்ளது.

https://x.com/Kavin_m_0431/status/1784095603867496798

கவின் பட டிரெலர் நாளை

0

தமிழ் திரையுலகில் வளரும் இளம் நடிகராக திகழ்கிறார் கவின். தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிசியாக நடிகராக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்திற்காக கவின் போட்டுள்ள புதிய கெட்டப் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் கவின். இந்த தொடர் மூலமாக கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து சினிமாவில் தலைக்காட்ட ஆரம்பித்தார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் டைட்டில் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேறி விட்டார். இந்நிகழ்ச்சி மூலமாக கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் இருந்து கவினுக்கு வாய்ப்புகள் குவிய துவங்கின.

இதனையடுத்து கடந்தாண்டு கவினின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பியார் பிரேம காதல்’ பட பிரபலம் இளனின் இரண்டாவது படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

‘ஸ்டார்’ படத்தின் ஷுட்டிங் எல்லாம் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெலோடி’ பாடலில் கவின் பெண் வேடம் போட்டு டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவின்.

இதனை பார்த்த ரசிகர்கள் ‘ரெமோ’ படத்தில் பெண் கெட்டப்பில் வந்த எஸ்கேவுக்கு தற்போது கவின் டப் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கவின் லேடி கெட்டப்பில் செம்ம க்யூட்டாக இருப்பதாகவும் இணையத்தில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர். ‘ஸ்டார்’ படத்தில் கவினுடன், அதிதி பொலங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெலர் நாளை காலை 11.11 க்கு வெளியிடப்படும் என பட குழு அறிவித்துள்ளது.

https://x.com/SonyMusicSouth/status/1783892029132660788

 

ஒரே படத்தில் சூர்யா-கார்த்தி..

0

சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது நிறைவேறும் காலம் கனிந்து விட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் எந்த சினிமா விழாவில் கலந்து கொண்டாலும் ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி ’நீங்கள் இருவரும் எப்போது இணைந்து நடிக்க போகிறீர்கள்’ என்பது தான். அதற்கு இருவரது பதிலும் சரியான கதையை அமையும் போதும், காலம் வரும்போது நடிப்போம்’ என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும்  விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா ’கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்துள்ள நிலையில் அதில் சூர்யாவுடன் முக்கிய கேரக்டரில் கார்த்தி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது தான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரசிகர்கள் நாங்கள் நீண்ட வருடமாக எதிர்பார்த்தது நடக்கப் போகிறது என்று மகிழ்ச்சியுடன் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

’கங்குவா’ திரைப்படம் ஏற்கனவே சூர்யாவுக்கு திருப்புமுனையை கொடுக்கும் படம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தியும் நடித்தால் அந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

’கங்குவா’ படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆன பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் அந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

 

கல்கி 2898 ad பிக் அப்டேட் நாளை

0

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கல்கி 2898 AD இன் தயாரிப்பாளர்கள் அமிதாப் பச்சனின் கதாபாத்திரக் காட்சியை வெளியிட்டனர், அது இணையத்தில் புயலை கிளப்பியது. அந்தப் பார்வையில் இருந்து, பிரபாஸ் நடிக்கும் இந்தப் படம் புராணங்கள் மற்றும் அறிவியல் புனைகதைகளின் கலவையாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது. நாக் அஸ்வின் இயக்குகிறார்.


சிறிது நேரத்திற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய புதுப்பிப்பு நாளை மாலை 05:00 மணிக்கு வெளிவரும் என்று அறிவித்தனர். இந்த அப்டேட் ரிலீஸ் தேதி அறிவிப்பா அல்லது பிரபாஸின் கேரக்டர் பார்வையா என்று பிரபாஸ் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

என்பதை அறிய நாளை மாலை வரை காத்திருக்க வேண்டும். தீபிகா படுகோன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வனி தத் கல்கி 2898 கி.பி.யை பயங்கரமான அளவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

https://x.com/VyjayanthiFilms/status/1783855505221226557

‘தி 100’ டீசர் அப்டேட்

0

மொகலி ரெகுலு என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக புகழ்பெற்ற ஆர்.கே.சாகர், ராகவ் ஓம்கார் சசிதர் எழுதி இயக்கிய ‘தி 100’ படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர தயாராகிவிட்டார்.

இன்று, இந்த படத்தின் டீசரை மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அம்மா அஞ்சனா தேவி வெளியிட்டார். IPS அதிகாரி விக்ராந்த், நகரின் புறநகர்ப் பகுதியில் பிரபல குற்றவாளிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் படுகொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையை எதிர்கொள்ளும் காட்சியுடன், டீஸர் ஒரு அழுத்தமான தொனியை அமைக்கிறது. ஊடக ஆய்வு அல்லது அதிகாரத்துவ அழுத்தத்தால் கவரப்படாத கதாநாயகன், விளைவுகளைப் பொருட்படுத்தாமல் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தனது வழக்கத்திற்கு மாறான முறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்.

ஆர்.கே.சாகரால் அழுத்தமான தீவிரத்துடன் சித்தரிக்கப்பட்ட கொள்கை ரீதியான ஐபிஎஸ் அதிகாரியின் துணிச்சலான நடத்தையை டீஸர் சுருக்கமாக படம்பிடிக்கிறது. ராகவ் ஓம்கார் சசிதரின் இயக்கம் கதாப்பாத்திரத்தின் உறுதியை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அட்ரினலின் எரிபொருளைக் கொண்ட கதையை உறுதியளிக்கும் வகையில், ‘தி 100’ ஆக்ஷன் காட்சிகளை வழங்க தயாராக உள்ளது.

மிஷா நரங் பெண் நாயகியாகத் தலைப்புச் செய்திகளில் வருகிறார், அவருக்குத் துணையாக தன்யா பாலகிருஷ்ணா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷியாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அமர் ரெட்டி குடுமுலா கையாளுகிறார், தயாரிப்பு வடிவமைப்பாளராக சின்னா பங்களிப்பு செய்கிறார். KRIA Film Corp மற்றும் Dhamma Productions ஆகியவற்றின் கீழ் ரமேஷ் கருதூரி, வெங்கி புஷாடபு மற்றும் ஜே தாராக் ராம் இணைந்து தயாரித்துள்ள 100 விரைவில் திரையரங்குகளில் அறிமுகமாகவுள்ளது.