Pandian Stores 2 Serial This Week Promo Video
தங்களது கடையில் வேலை பார்த்து கோமதியை திருமணம் செய்ததால் பாண்டியனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எதிரியாகவே முத்துவேல் பிரதர்ஸ் நினைத்து வந்தனர். எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று பல வழிகளில் எல்லாம் பாண்டியனுக்கு குடஞ்சல் கொடுத்தனர்.
அப்படியே இருவீட்டாரும் சென்ற நிலையில் தான் அரசியை வைத்து பாண்டியனை பழி வாங்க திட்டம் போட்டு கடைசியில் அந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது. இதில் அரசி மட்டும் அன்று கூண்டில் குமரவேலுவிற்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தால், இந்த நேரம் குமரவேல் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், தன்னை காப்பாற்றிய அரசி காலில் விழுந்து குமரவேல் மன்னிப்பு கேட்டார். இந்த சூழலில் தான் இன்று பாண்டியனை காப்பாற்றிய முத்துவேல் கையை பிடித்து பாண்டியன் கதறி அழுதுள்ளார். அது ஏன் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாக்கியம் மற்றும் தங்கமயில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர், ராஜீ மற்றும் அரசி ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் ச்தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையிலும் முத்துவேல் பிரதர்ஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ராஜீ மற்றும் அரசி மட்டும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், மற்ற அனைவரது மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு கோமதி ஒரு ஜெயிலிலும், பாண்டியன், செந்தில், கதிர், சரவணன் ஆகியோர் ஒரு ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கான புரோமோ வீடியோவில் கோர்ட் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில், முதலில் பாக்கியத்திம் நீதிபதி விசாரணை நடத்துகிறார். அதற்கு பாண்டியன் பதிலளிக்கும் காட்சியும், பின்னர் முத்துவேல் பிரதர்ஸ் சாட்சி சொல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.
முதலில் பேசிய முத்துவேல் கூறுகையில், இதில், வீட்டிற்கு வந்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு என்னுடைய தங்கச்சி குடும்பம் அப்படி ஒன்றும் மோசமான குடும்பம் இல்லை என்று கூறினார்.இவரைத் தொடர்ந்து சக்திவேல் பேசுவதற்கு கூண்டில் ஏறுகிறார்.
அவரைப் பார்த்ததும் பாக்கியத்திற்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால், அவர் தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சொன்னார். அவரது பேச்சைக் கேட்டு பாக்கியமும் போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதை கேட்டு பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரது சாட்சிகளின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் சிறையிலிருந்து வெளியில் வருகின்றனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் கையெழுத்து போட்ட பிறகு ஸ்டேஷனை விட்டு வெளியில் வரும் போது முத்துவேல் கையை பிடித்து கொண்டு பாண்டியன் கதறி அழுதார்.
இதே போன்று இக்கட்டான சூழ்நிலையில் என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுனீங்களே எனக்கு இது போதும் அண்ணே என்று கூறி அவரது மார்பில் சாய்ந்து அழுகிறார்.அதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது. இனிமேல் மயில் இனி அந்த வீட்டில் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தங்கமயிலின் வாழ்க்கை கேள்விக்குறியானது தான் மிச்சம். இனிமேல் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? பாண்டியன் குடும்பத்தினர் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் தங்கமயில் மற்றும் பாக்கியம் என்ன செய்ய போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
