தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படத்தின் அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்..
தளபதி விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடையும் எனவும், வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி கட்சி பிரமுகர்களும் அரசியல் சார்ந்து எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தின் ‘டைட்டில்’ மக்கள் நலன் பேசும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் இப்படம், அரசியல் ஜானரில் உருவாகி வருவதால், அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிட உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். அதற்கு சில மாதங்கள் முன்னதாக, ‘தளபதி 69’ படம் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படம் பிரசாரத்துக்கும் துணைபுரியும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.