Home Blog Page 3

‘திரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த மோகன்லால்

0

மலையாளத்தில் கடந்த 2013 இல் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘திரிஷ்யம்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021 இல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதே சமயம் முதல் பாகத்திற்கு இணையான அதற்கு குறைவில்லாத வரவேற்பை இந்த இரண்டாம் பாகமும் பெற்றது. மலையாளத்தை தாண்டி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் இந்த படத்திற்கான ரசிகர் வட்டம் உருவானது. இந்த இரண்டு பாகங்களும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ‘திரிஷ்யம் 3’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நிறைவு பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய இயக்குனர் ஜீத்து ஜோசப் கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் படத்தின் கதாநாயகன் மோகன்லால் இந்த படம் வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேபோல ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் திரிஷ்யம் 3 படம் வரும் அக்டோபர் இரண்டாம் திகதி வெளியாகும் என இதற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

திரிஷ்யம் 3
திரிஷ்யம் 3


,

உங்கள் திறமைக்கு பரிசளிக்க Golden Creation நடத்தும் casting Call..!

0

திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக Golden Creation நிறுவனம் தயாரிக்கும் புதிய குறும்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்வது குறித்த தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீங்கள் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களா, சினிமா துறைக்கு புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களுக்கு இந்த குறும்படம் ஒரு சிறந்த களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த குறும்படத்திற்காக கீழ்காணும் பிரிவுகளில் கலைஞர்கள் தேடப்படுகிறார்கள்:

ஆண்கள் & பெண்கள்: வயது 20 முதல் 35 வரை (முக்கிய கதாபாத்திரங்களுக்கு).
சிறுமி (Female Kids): வயது 4 முதல் 6 வரை.

விண்ணப்பிக்கும் முறை:
நடிப்பின் மீது ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள், உங்களது சமீபத்திய புகைப்படங்கள் (Latest Photographs), வீடியோக்கள் (Performance Videos) மற்றும் ஏற்கனவே ஏதேனும் படங்களில் நடித்திருந்தால் அதன் விவரங்களை கீழே உள்ள WhatsApp எண்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

📲 தொடர்புக்கு:
0771961155,0767373068

கூடுதல் விபரங்களுக்கு பேஸ்புக்கில் ‘goldencreation’ பக்கத்தை பார்வையிடலாம் அல்லது மேற்கண்ட தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ளலாம்.

தனுஷ் 54 படத்தின் தலைப்பு வெளியீடு!

0

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேரே இஷ்க் மே. ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘கர’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தலைவர் தம்பி தலைமையில் – திரை விமர்சனம்

0

மலையாள இயக்குநர் இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் இன்று வெளியாகியுள்ளது.

ஒரு அரசியல் குடும்பத்தில் “தலைவரின் தம்பி” என்ற அடையாளத்துடன் வாழும் நாயகன் ஜீவா, அதிகாரம், அரசியல் சூழ்ச்சி மற்றும் குடும்ப அரசியலுக்குள் சிக்கிக்கொள்கிறார். தலைவரின் பெயரும் புகழும் நிழலாக இருக்கும் போது, தம்பியாக இருப்பவரின் அடையாளம் என்ன? அவர் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்துள்ள ஜீவா, அமைதியான நடிப்பை தேர்வு செய்து கதாபாத்திரத்திற்கு தேவையான அளவிலேயே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல், அரசியல் அழுத்தங்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் ஒருவரின் மனநிலையை இயல்பாக காட்டுகிறார். சில இடங்களில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான காமெடி பாணியை விட, இந்த படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். குடும்பம், அரசியல், அதிகாரம் ஆகியவற்றின் இடையில் சிக்கிய ஒரு மனிதனின் குழப்பத்தை அவர் நன்றாக பிரதிபலித்துள்ளார். படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.

இயக்கம்

குடும்ப அரசியலையும் அதிகார அரசியலையும் மிகைப்படுத்தாமல், ஒரு நடுத்தர பார்வையில் எடுத்துச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் நிதிஷ் சகாதேவ். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படத்தின் கருத்து தெளிவாக பார்வையாளர்களிடம் சென்றடைகிறது. அரசியல் சூழலை சுற்றி நடக்கும் சம்பவங்கள் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. கதைக்கு தேவையான அளவிலேயே திருப்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர் தம்பி தலைமையில் குடும்ப அரசியல், அதிகாரத்தின் நிழல் மற்றும் அடையாள தேடல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்த அரசியல் காமெடி படமாக உருவாகியுள்ளது.

இசை

விஷ்ணு விஜயின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

ஒளிப்பதிவு

பப்லு அஜுவின் ஒளிப்பதிவு படத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

ரேட்டிங்: 3/5

மீண்டும் தொடங்கும் மர்மம்… “மரகத நாணயம் 2′ படத்தின் அதிரடி புரோமோ வெளியீடு!

0

தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு, படக்குழு சிறப்பு புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுத பாண்டியன்!

0

Pandian Stores 2 Serial This Week Promo Video

தங்களது கடையில் வேலை பார்த்து கோமதியை திருமணம் செய்ததால் பாண்டியனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எதிரியாகவே முத்துவேல் பிரதர்ஸ் நினைத்து வந்தனர். எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று பல வழிகளில் எல்லாம் பாண்டியனுக்கு குடஞ்சல் கொடுத்தனர்.

அப்படியே இருவீட்டாரும் சென்ற நிலையில் தான் அரசியை வைத்து பாண்டியனை பழி வாங்க திட்டம் போட்டு கடைசியில் அந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது. இதில் அரசி மட்டும் அன்று கூண்டில் குமரவேலுவிற்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தால், இந்த நேரம் குமரவேல் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், தன்னை காப்பாற்றிய அரசி காலில் விழுந்து குமரவேல் மன்னிப்பு கேட்டார். இந்த சூழலில் தான் இன்று பாண்டியனை காப்பாற்றிய முத்துவேல் கையை பிடித்து பாண்டியன் கதறி அழுதுள்ளார். அது ஏன் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாக்கியம் மற்றும் தங்கமயில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர், ராஜீ மற்றும் அரசி ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் ச்தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையிலும் முத்துவேல் பிரதர்ஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ராஜீ மற்றும் அரசி மட்டும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், மற்ற அனைவரது மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு கோமதி ஒரு ஜெயிலிலும், பாண்டியன், செந்தில், கதிர், சரவணன் ஆகியோர் ஒரு ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தான் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கான புரோமோ வீடியோவில் கோர்ட் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில், முதலில் பாக்கியத்திம் நீதிபதி விசாரணை நடத்துகிறார். அதற்கு பாண்டியன் பதிலளிக்கும் காட்சியும், பின்னர் முத்துவேல் பிரதர்ஸ் சாட்சி சொல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

முதலில் பேசிய முத்துவேல் கூறுகையில், இதில், வீட்டிற்கு வந்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு என்னுடைய தங்கச்சி குடும்பம் அப்படி ஒன்றும் மோசமான குடும்பம் இல்லை என்று கூறினார்.இவரைத் தொடர்ந்து சக்திவேல் பேசுவதற்கு கூண்டில் ஏறுகிறார்.

அவரைப் பார்த்ததும் பாக்கியத்திற்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால், அவர் தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சொன்னார். அவரது பேச்சைக் கேட்டு பாக்கியமும் போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதை கேட்டு பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரது சாட்சிகளின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் சிறையிலிருந்து வெளியில் வருகின்றனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் கையெழுத்து போட்ட பிறகு ஸ்டேஷனை விட்டு வெளியில் வரும் போது முத்துவேல் கையை பிடித்து கொண்டு பாண்டியன் கதறி அழுதார்.

இதே போன்று இக்கட்டான சூழ்நிலையில் என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுனீங்களே எனக்கு இது போதும் அண்ணே என்று கூறி அவரது மார்பில் சாய்ந்து அழுகிறார்.அதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது. இனிமேல் மயில் இனி அந்த வீட்டில் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தங்கமயிலின் வாழ்க்கை கேள்விக்குறியானது தான் மிச்சம். இனிமேல் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? பாண்டியன் குடும்பத்தினர் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் தங்கமயில் மற்றும் பாக்கியம் என்ன செய்ய போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

I’M COMING..!- வெளியானது “ஜனநாயகன்” டிரெயிலர்

0

‘ஜனநாயகன்’ நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படம் மற்றும் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் இதுவரை வெளியான 4 பாடல்களும் செம்ம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று (ஜனவரி 2) வெளியான “ராவண மகண்டா” பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைபோல், டிரெய்லரில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Season 9: சான்ட்ராவை கீழே தள்ளிவிட்ட பாரு, கம்ருதீனுக்கு ரெட் கார்டு?

0

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பார்வதி – கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

இந்த நடவடிக்கைக்காக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வார வீக்கெண்ட் எபிசோடில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதாக நம்மதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்டு பிக்பாஸ் ரசிகர்கள் சந்தாஷமாகியுள்ளனர்.

அனலி- திரைவிமர்சனம்

0

நாயகி சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதேசமயம் சக்தி வாசு சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்கிறார். சிந்தியா குழந்தையுடன், சக்திவாசு வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு உங்களிடம் சிக்கிக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் கண்டெய்னர் குடோனில் இருந்து வெளியேறும் சிந்தியா, தனது குழந்தையையும் ஒரு பையையும் அங்கு தொலைத்து விடுகிறார்.

இறுதியில் குழந்தையும் பையையும் சிந்தியா மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே, குழந்தை பாசம், ஆக்சன் என நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் சக்தி வாசு தேவன் நடிப்பு. வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். கபீர் சிங், இனியா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இயக்கம்

கடத்தல் கும்பலிடம் சிக்கி அவர்களை போலீசிடம் சிக்க வைக்கும் பெண்ணை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் தீனா. பழைய கதையை தூசி தட்டி எடுத்து இருக்கிறார் இயக்குனர். அதிக லாஜிக் மீறல்கள், காட்சிகளின் தொடர்ச்சி இல்லை. திரைக்கதை வலுவில்லை. காட்சிகளின் சுவாரசியம் இல்லை. இவை அனைத்தையும் சரி செய்து இருக்கலாம்.

இசை

தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கவரவில்லை.

ரேட்டிங்-1.5/5

ராவண மவன்டா..! இன்று இரவு வெளியாகும் ஜனநாயகனின் 4வது பாடல்

0

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜன நாயகன்’ தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

ஜன நாயகன் ரிலீஸ் திகதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது.

அதன்படி, ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் திகதி (நாளை) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் ‘ராவண மவன்டா’ பாடல் இன்று இரவு 7.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஜன நாயகன் படத்தில் இருந்து தளபதி கசசேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று நான்காவது பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.