மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். ஆனால், கடந்த சில தினங்களாக இப்படத்தின் வெளியீடு குறித்து சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். படம் பொங்கலுக்கு வெளிவராது, இன்னும் வேலைகள் முடியவில்லை, ஹாலிவுட் பட ரீமேக் உரிமையில் சர்ச்சை ஆகியவைதான் காரணம் என்று சொல்லி வருகிறார்கள்.
ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். படத்திற்கு சென்சார் செய்வதற்குக் கூட விண்ணப்பித்துவிட்டார்களாம். ‘விடாமுயற்சி’ படம் திட்டமிட்டபடி வெளியாகாது என வதந்தியை யார் பரப்பி வருகிறார்கள் என்பது குறித்து திரையுலகில் விசாரித்தோம். பொங்கலுக்கு வெளியாக உள்ள மற்ற சில படங்களின் தரப்பில் இருந்துதான் அப்படியான வதந்தி பரப்பப்படுகிறதாம்.
‘விடாமுயற்சி’ படம் வெளிவந்தால் தமிழகத்தில் உள்ள மொத்த தியேட்டர்களையும் எடுத்துக் கொள்வார்கள். அதனால் மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காது என்பதுதான் காரணமாம். போட்டிக்கு வெளியாகும் இரண்டு படங்களில் ஒரு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம், இன்னொரு படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டவில்லையாம். எல்லோரது பார்வையும் ‘விடாமுயற்சி’ குறித்தே இருப்பதால் இப்படியான வதந்தி பரப்பும் வேலையை ஆரம்பித்துள்ளார்கள்.
இன்னும் சில தினங்களில் ‘விடாமுயற்சி’ வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
‘விடாமுயற்சி’ வெளியீடு பற்றி வதந்தி பரப்புவது யார் ?
ராதிகா வீட்டிற்குச் சென்ற கோபி, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் போக வேண்டாம் என்று சொல்லியும் ராதிகா முடிவில் உறுதியாக இருக்க சரி எந்த இடத்திலாவது இருக்கப் போற என்று சொல்லு என்று கேட்க ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறோம் என்று சொல்லி அட்ரஸ் கேட்கிறார் பிறகு ராதிகா அதையும் கொடுக்க கொஞ்ச நேரத்தில் கேப் வர ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி நான் போய் கோபியை பார்க்க போறேன் என்று கிளம்ப கோபி எதிரில் வந்து நிற்கிறார் எதுவும் பேசாமல் அமைதியாக வர என்னாச்சு கோபி திருப்பியும் சண்டை போட்டாலும் உனக்கு நெஞ்சு வலிக்குதா அதெல்லாம் ஒரு பொம்பளையா பொறுமையே கிடையாது என்றெல்லாம் பேச கோபி அவ பக்கமும் நியாயம் இருக்குதும்மா அவ பேசினும்போது ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சிலே ஈட்டி வச்சு கிழிச்ச மாதிரி இருந்தது. அதற்கு ஈஸ்வரி அவர் சின்ன பொண்ணு வச்சிருக்கா வேலைக்கு போற உன்னை எப்படி பார்த்துக்க முடியும் 24 மணி நேரமும் கூட ஒரு ஆளு இருக்கணும் அதனால தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார்.
அதுமட்டுமில்லாமல் அவ போனா போகட்டும் விடு என்று சொல்ல இனியா நாங்கல்லாம் உங்களுக்கு இருக்கும் டாடி நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்லுகிறார். உடனே பாக்யா அவங்க போறேன்னு சொன்ன உடனே போகட்டும்னு விட்டுட்டீங்களா? அவங்க மனசு உடைஞ்சி இருக்காங்க இந்த நேரத்துல நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருக்கணும் இங்க வந்திருக்கக் கூடாது என்று சொல்ல ஈஸ்வரி உன்னால சும்மா இருக்க முடியாதா என்று கோபப்படுகிறார். உடனே கோபியை எழுப்பி ரூமுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். கோபியும் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து செல்ல பாக்யா இது மாதிரி உங்க பசங்க பண்ணா உங்களால பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா என்று கேட்கிறார். செழியன் ஜெனியையும் எழில் அமிர்தாவையும் சரியா பாத்துக்கலனா உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறார் இது மட்டும் இல்லாமல் இனியாவ கல்யாணம் பண்ணிக்க போறவன் இது மாதிரி பண்ணா பார்த்துகிட்டு சும்மா இருப்பீங்களா என்று கேட்க கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார்.
ஈஸ்வரி அவ எதாவது பேசிகிட்டு இருப்பா நீ உள்ள வாக்கு என்று அழைக்க,உடனே கோபி ஈஸ்வரியிடம் நான் ராதிகாவை பார்க்க போறோமா என்று சொல்லுகிறார். அதெல்லாம் ஒன்னும் வேணாம் கோபி என்று ஈஸ்வரி போயிட்டு வந்துரமா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இனியா ஈஸ்வரிஇடம் திரும்ப வந்துருவாருள்ள பாட்டி என்று கேட்க எனக்கு எப்படி தெரியும் அனுப்பி வச்சாலே அவளை கேளு என்று சொல்லுகிறார்.
பாக்கியா இனியாவை படிக்க சொல்லி அனுப்பி விட, அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு கூட உனக்கு பரிதாபம் இல்ல இல்ல என்று கேட்க அதெல்லாம் பார்க்க வேண்டிய நேரத்துல பார்த்தாச்சு போதும் என்று சொல்லுகிறார். நீ நல்லவன்னு நெனச்ச ஆனா சமயம் பார்த்து பழி வாங்குற இல்ல என்று கேட்க நாளா பழிவாங்கல பழி வாங்க ஆரம்பிச்சா நீங்க தாங்க மாட்டீங்க என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் ராதிகாவும் மயூவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வருகிறார்.மயூ என்ன சொல்லுகிறார்?கோபியின் பதில் என்ன?ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
புத்தாண்டுக்கு இத்தனை புதுப் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகிறதா? முழு லிஸ்ட் இதோ
2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டன்று பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடும் மக்களை மகிழ்விக்கும் விதமாக தொலைக்காட்சிகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் வருகிற புத்தாண்டுக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாக உள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவி
விஜய் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக இரண்டு புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதில் ஒன்று ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் தான். இப்படம் புத்தாண்டன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா புத்தாண்டன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டு ஸ்பெஷலாக 3 படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படமும், காலை 11.30 மணிக்கு அயலி திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் மதியம் 3 மணிக்கு ஜெயம் ரவியின் தீபாவளி ரிலீஸ் திரைப்படமான பிரதர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞர் டிவி
கலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு தினத்தை ஒட்டி மூன்று புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதன்படி டிசம்பர் 31ந் தேதி இரவு 10 மணிக்கு விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் புத்தாண்டன்று காலை 10 மணிக்கு ஹிப்ஹாப் ஆதியின் பிடி சார் திரைப்படமும், அன்று பிற்பகல் 1.30 மணிக்கு சூர்யாவின் ஜெய் பீம் படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
சன் டிவி
சன் டிவியில் மட்டும் புத்தாண்டுக்கு புதுப்படங்கள் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை. அதற்கு பதிலாக நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த சர்க்கார் திரைப்படம் வருகிற ஜனவரி 1ந் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த பேட்ட திரைப்படம் புத்தாண்டன்று மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்பாராத ட்விஸ்ட்; சற்று முன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ் சீசன் 8 ‘ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறி உள்ள போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த ஆண்டு பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் ஒன்று தான் அதிரடியாக தொகுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 7 சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமல் ஹாசன், தன்னுடைய சொந்த பணி காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எனவே தற்போது அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில்… இன்னும் 3 வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நெருங்கி வருவதால், இந்த வாரம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்சை உற்சாகப்படுத்தும் விதமாக, ப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ். அதே போல் சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலியான அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட நேற்று ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.
இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகையை அணைத்து போட்டியாளர்களும் கொண்டாடினர். போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவர்களுக்கு மற்ற போட்டியாளர் மீது ஐயூர்ந்த முரண்பாடுகளை கூறியபோதும் அதை போட்டியாளர்கள் ஏற்று கொண்டனர். இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக சென்றபோதும், எலிமினேஷன் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. அதன்படி இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து சற்று முன் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து, 12 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில், மீதம் 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ளனர். இந்த 12 போட்டியாளர்களில் இருந்து இந்த வாரம் விஜய் டிவி ‘செல்லம்மா’ சீரியல் மூலம் பிரபலமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அன்ஷிதா அஞ்சி தான் வெளியேறியுள்ளர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்… இந்த வாரம் டபிள் எவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை டபிள் எவிக்ஷன் என்றால் பிக்பாஸ் வீட்டை விட்டு, வெளியேறும் மற்றொரு போட்டியாளர் யாராக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்… பிக்பாஸ் ரசிகர்களே?
கங்குவா படத்தின் `மன்னிப்பு’ பாடல் வெளியானது
ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
பாபி தியோல் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு தற்பொழுது ஐதரபாத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துள்ளனர்.
படத்தின் பாடலான மன்னிப்பு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். ரகு திக்ஸித் இப்பாடலை பாடியுள்ளார்.
விடாமுயற்சி டீஸர் வெளியாகும் தேதி.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. ஹைதராபாத்தில் முக்கிய பகுதிகள் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் பெரும்பகுதி படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுவதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விடாமுயற்சி படத்தின் டீஸர் வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகி இருக்கிறது என்பது தான்.
அதனால் அஜித் ரசிகர்கள் டீசரை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
மீண்டும் என்ட்ரி கொடுத்த சாச்சனா, மகிழ்ச்சியில் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
24 மணி நேர எவிக்ஷனில் சாச்சனா தேர்வாகி முதல் போட்டியாளராக பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் சாச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களிடம் பேசுகிறார். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.
View this post on Instagram
விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து விடுதலை 2 படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், கென் கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் 20:12:2024 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக பதிவை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்’ எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது.
‘கனா காணும் காலங்கள்’ முதலில் தனியார் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த சீரியல் பார்வையாளர்கள் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் புரிந்துகொண்ட டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏப்ரல் 22, 2022 அன்று அதன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், பிரபலமான டிவி சீரியலை மீண்டும் ஒரு சீரிஸாக வழங்கியது.
இந்த சீரிஸின் முதல் சீசனுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மற்றும் அதிக எபிசோட்களை வேண்டிய ரசிகர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, சூப்பர்ஹிட் சீரிஸின் இரண்டாவது சீசனை வெளியிட்டது.
இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும் இந்த சீரிஸின், மூன்றாவது சீசனை வெளியிடுவதாக அறிவித்தது.
முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த மூன்றாவது சீசன், ரசிகர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், இன்றைய மாணவர்களின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு அருமையான கதையுடன், அவர்களின் வாழ்வை படம்பிடித்து காட்டவுள்ளது.
இதனால் கனா காலங்கள் சிரீஸின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.