Home Blog Page 6

அரைகுறை உடையில் கடற்கரையில் கவர்ச்சி! தர்ஷா

0

நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தற்போது மீண்டும் போட்டோ சூட் நடத்தி வருகிறார். தற்போது அரைகுறை ஆடையில் கடற்கரை ஓரமாய் இவர் நடந்து போகும் வீடியோ டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

நடிகை தர்ஷா குப்தா மொட்டைமாடி புகைப்படங்கள் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து விஜய் டிவி தொகுத்து வழங்கிய குக் வித் கோமாளி ஷோவிற்கு வந்த இவரின் புகழ் மேலும் வளர்ந்தது. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் பின்னர் சில வாரங்களில் வெளியேறி விட்டார். அதனை அடுத்து மீண்டும் புகைப்படங்கள் எடுக்க கிளம்பிவிட்டார். 

இவர் போடும் புகைப்படங்கள் கிளெமர் காட்டுவதால் இதனை ரசிகர்கள் ரசித்தாலும்  பலவாறு கமெண்ட்  போடுவார்கள். தற்போது “என்னை இழுக்குதடி” பாடலுக்கு அரைகுறை ஆடையில் கடற்கரை ஓரமாக நடந்து திரிவதுபோல வீடியோ  போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Identity பட திரை விமர்சனம்

0

மலையாள சினிமாவில் தொடர்ந்து மிக தரமான படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் கிரைம் திரில்லர் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல், அந்த வகையில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ஐடென்டிட்டி எப்படியுள்ளது பார்ப்போம்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான்.

அப்படி ஒரு பெண்ணை மிரட்டும் போது, ஒருவன் அவன் இருக்குமிடம் தேடி சென்று அனைத்தையும் அழித்து அவனையும் கொன்று அந்த இடத்தையே எரித்து விடுகிறான்.

இந்த கொலையை இதே கேஸை பாலோ செய்து வரும் திரிஷா நேரில் பார்க்கிறார். அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது இந்த கேஸை வினய் விசாரிக்க, டொவினோ நன்றாக படம் வரைபவர், அவர் உதவியுடன் திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மட்டும் நியாபகமிருக்க, அதை டொவினோ வரைகிறார்.

ஆனால், திரிஷா சொன்ன அத்தனை அடையாளமும் டொவினோ தாமஸுடன் ஒன்றி போக, அட இது என்னடா டுவிஸ்ட் என்று வினய் பார்வை டொவினோ மீது போக, அவரும் அப் நார்மலாக செயல்பட, சந்தேகம் வலுவாகிறது, இந்த நேரத்தில் நான் தான் அந்த கொலை செய்தேன் என்று ஒருவர் ஆஜராக, அட யார் தான்பா அந்த கொலை செய்தது என்ற சுவாரஸ்யமே இந்த Identity.

மலையாள படம் என்றாலே கிரைம் திரில்லர் எடுப்பதில் வல்லவர்கள், அப்படி ஒரு கிரைம் திரில்லரை ஆண்டின் இரண்டாம் நாளே இறக்கியுள்ளது மலையாள சினிமா.

படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த கொலையை செய்தது யார் என்ற பதட்டம் தொடங்க, இரண்டாம் பாதி அப்படியே மாறி எதோ போக்கிரி படம் பார்ப்பது போல் மாறுகிறது. டொவினோ தாமஸ் யார் என்ற கொஞ்சம் ஓவர் என்றாலும் படத்தின் கதைக்கு தேவை, அவரும் ஆ ஊ என்று அலட்டாமல் மௌனமாகவே தன் மேனரிசம் மூலமாவே கலக்கியுள்ளார்.

திரிஷாவும் ஒரு பேஸ் ப்ளைண்ட் பெண்ணாக படம் முழுவதும் ஒரு குழப்பத்துடனே வந்து கடைசியில் அவரும் அந்த கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்று கண்டுப்பிடிகும் இடம் சூப்பர்.

வினய் இந்த கதாபாத்திரம் பார்த்தவுடனே இவர் இந்த வேலையை செய்து இருப்பார் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை, அவரும் வழக்கம் போல் கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

படத்தின் முதல் பாதி சீட் எஜ்-ல் உட்கார வைத்தாலும், இரண்டாம் பாதி களமே மாறி அதிரடி ஆக்‌ஷன் படம் பார்ப்பது போல் உள்ளது, லாஜிக் மீறலும் கொஞ்சம் வருகிறது,

ப்ளைட்டில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் லெவல் தான். ஜாக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம், ஒளிப்பதிவு அட்டகாசம்.

படத்தின் முதல் பாதி நடிகர், நடிகைகள் பங்களிப்பு படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்

இரண்டாம் பாதி முதல் பாதி விறுவிறுப்பை கொஞ்சம் பாதிக்கிறது. இன்னுமே சில காட்சிகள் புரியும்படி சொல்லியிருக்கலாம்.

வீட்டுக்கு வீடு வாசல் படி பிரபலம் வீட்டில் விசேஷம்

0

விஜய் டிவியில் பிரபலமான சீரியலான வீட்டுக்கு வீடு வாசல் படி பிரபலம் வீட்டில் நடந்துள்ள விசேஷத்தினால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அவினாஷ். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.

தில்லானா தில்லானா நிகழ்ச்சிக்கு பிறகு ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் அதன் பின் நடன கலைஞராக பல ரியாலிட்டி ஷோகளில் தனது திறமையை வெளிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து அவினாஷிக்கு அழகு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் தலைவாசல் விஜய் – ரேவதிக்கு மகனாக நடித்திருந்தார். இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது.

அதன் பின்பு அம்மன், சாக்லேட், கயல் போன்ற சீரியல்களில் எல்லாம் நடித்தார். எனினும் கயல் சீரியலில் இருந்து திடீரென விலகி இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது 13 வருட காதலியான தெரேசா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவினாஷ், தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.

இதன் போது மனைவியின் ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் குழந்தையின் ஸ்கேன் போட்டோவை வைத்து போட்டோ சூட் எடுத்துள்ளார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/DERguUkSPcS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
https://www.instagram.com/p/DEUBC3Yp8EH/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ஒரே படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ்

0

2024-ம் ஆண்டில் மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேசம் ஆகிய படங்கள் மலையாளம் மற்றும் தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை டைரக்டர் சிதம்பரமும் ஆவேசம் படத்தை டைரக்டர் ஜித்து மாதவனும் இயக்கினர்.

இதில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது.இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதேபோல ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.இந்த படமும் பெரும் அளவில் இளைஞர்களை கவர்ந்த படமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டைரக்டர் சிதம்பரம் மற்றும் ஜித்து மாதவன் இணைந்து புதிய மலையாள படம் ஒன்றை இயக்க உள்ளனர்.ஜித்து மாதவன் கதையில் இந்த படத்தை சிதம்பரம் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம், எடிட்டராக விவேக் ஹர்சன், ஒளிப்பதிவாளராக ஷைஜு காலித் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 2 வெற்றி இயக்குனரும் இணைந்து செயல்படுவதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

சூடுபிடித்தது பிக்பாஸ்…..

0

பிக்பாஸ் சீசன் 8 இன்றையோடு 88 வது நாளில் களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்..

அதில் மஞ்சரிக்கும் பவித்ராக்கும் இடையே வாக்குவாதம் நடக்கின்றது. பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் படி போட்டியாளர்கள் தமக்குரிய ஜானரில் விளையாடுகிறார்கள்.

இதன்போது மஞ்சரி வேண்டும் என்றே தனது ஆட்டத்தை கெடுப்பதாக பவித்ரா கத்துகிறார். அத்துடன் மஞ்சரி பேசி வைத்து தான் இவ்வாறு செய்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.

பவித்ராவின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மஞ்சரி ஒரு கட்டத்தில் நீங்க பேசுறது டென்ஷன் ஆகுது என சொல்லுகிறார். மஞ்சரியும், பவித்ராவும் பேசியதை கேட்டு விஷால் கொடுத்த ரியாக்ஷனை  ரசிகர்கள் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

இந்த சீசனில் பவித்ராவுக்கு மஞ்சரிக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், மஞ்சரி தனது பேச்சினால் எல்லாவற்றையும் வென்று விடலாம் என நினைப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் பேசும் விஜய்யின் கடைசிப் படம்; தேர்தல் பிரசாரத்திற்கு துணைபுரியுமா?

0

தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படத்தின் அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்..

தளபதி விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடையும் எனவும், வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி கட்சி பிரமுகர்களும் அரசியல் சார்ந்து எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தின் ‘டைட்டில்’ மக்கள் நலன் பேசும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் இப்படம், அரசியல் ஜானரில் உருவாகி வருவதால், அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிட உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். அதற்கு சில மாதங்கள் முன்னதாக, ‘தளபதி 69’ படம் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படம் பிரசாரத்துக்கும் துணைபுரியும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…

0

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் VJ சங்கீதா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன் காதலுடன் ரீல்ஸ் எடுத்து,அதை வீடியோவாக பதிவிட்டு காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் “கனா காணும் காலங்கள்” வெப் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பின்பு அதிலிருந்து விலகினார்.அதன்பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடரில் வசுவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இவர் தன்னுடன் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் ஒன்றாக நடித்த நடிகர் அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக தற்போது அறிவித்துள்ளார்.

இவருடைய பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் அரவித் சேஜுவ் தற்போது சினிமா மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவனின் சம்பவம் லோடிங்

0

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் செல்வராகவன். இந்த படத்தில் அவருடைய தம்பியான தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு இன்றளவில் மட்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாகவும் காணப்படுகிறது.

இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வாலின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகம் தொடர்பிலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்று முன் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

இதேவேளை ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பிலான அப்டேட்களையும் ரசிகர்கள் செல்வராகவனிடம் கேட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘ரெட்ட தல’

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் `ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரெட்ட தல படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

https://twitter.com/BTGUniversal/status/1874350505885131188/photo/1

கேர்ள்ஸை இப்படியா இன்சல்ட் பண்றது?

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றையோடு 87 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே முடிவுக்கு வரவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால்  பிக்பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள 10 போட்டியாளர்கள் மத்தியிலும் கடும் போட்டி நிலவி வருகின்றது. 

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ  வெளியாகி உள்ளது. அதில் முத்துவுக்கும் மஞ்சரிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நீளுகின்றது.

குறித்த ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் பேசிக் கொண்டு இருக்க, முத்துவுக்கும் மஞ்சரிக்கும் இடையே வாக்குவாதம் தொடர்கின்றது. 

இதன்போது தனியா விளையாடுவதற்கும் தைரியம் வேண்டும், சகுனி வேலையை பார்த்துவிட்டு போய்விட்டா மஞ்சரி என முத்து சத்தம் போடுகின்றார்.

மேலும் ஏன் முடிஞ்ச பிரச்சனையை மீண்டும் கிளப்பி விடுகின்றா? என்று மஞ்சரியிடம் கேள்வி எழுப்புகின்றார் முத்து. இதன்போது இடையில் குறுக்கிட்ட ஜாக்குலின் நீயும் மத்தவங்களை புரிந்து கொள்ளு என்று முத்துவுக்கு சொல்லுகின்றார்.

அத்துடன் ரொம்ப இன்சல்ட்டா பேசுறீங்க முத்து என ஜாக்குலின் சொல்ல, நீங்களும் அதைத்தான் பண்ணுறீங்க என்று முத்து சொல்லி செல்கின்றார்.