Home Blog Page 9

அஜித் ரசிகர்களுக்கு இது செம்ம ட்ரீட்.. குட் பேட் அக்லி பற்றி அப்டேட் கொடுத்த கல்யாண் மாஸ்டர்..!

0

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் கல்யாண் மாஸ்டர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி படம் குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார்.

அதில் இந்த படத்தில் உள்ள பாடலில் செம்மையாக ஆட்டம் போட்டுள்ளார்.அவரது நடனத்தை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.. இந்தப் பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நேசிப்பாயா பட பாடல் தொகுப்பு

0

நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான `தொலஞ்ச மனசு’ என்ற பாடல் யுவன் ஷங்கர் ராஜா குரலில் கடந்த மாதம் வெளியானது. இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரபு, ராஜா, கல்கி, ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் ஆக்ஷன் மற்றும் காதல் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று இடம் பெற்ற நிலையில் இப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கும் நிலையில் அப் பாடல்க்ளின் தொகுப்பை ஒரு அல்பமாக வெளியிட்டுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷ்ணு வரதன் இயக்கிய நெசிப்பய முழு ஆல்பம் ஆடியோ ஜூக்பாக்ஸை வழங்குகிறோம்.

`என்னை நீங்காதே நீ’ வீடியோ பாடல் வெளியானது

0

‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

https://twitter.com/kishendas/status/1875549555464532451

இந்நிலையில் படத்தின் பாடலான என்னை நீங்காதே நீ பாடலின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை மதன் கார்கி வரிகளில் கபில் கபிலன் மற்றும் பவித்ரா சாரி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

காதலிக்க நேரமில்லை சோ Its Breakup da

0

காதலிக்க நேரமில்லை என்பது கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கிய வரவிருக்கும் தமிழ் மொழி காதல் நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். இதை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கன் மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரவியின் முன்னணி நடிகராக இது 33 வது படம் என்பதால், இந்த திட்டம் JR33 என்று குறிப்பிடப்பட்டது. அதிகாரப்பூர்வ தலைப்புக்கு கூடுதலாக நவம்பர் 2023 இல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுத்தல் அதே மாதத்தில் தொடங்கியது. இது முக்கியமாக சென்னையில் படமாக்கப்பட்டது மற்றும் மே 2024 இன் பிற்பகுதியில் மூடப்பட்டது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார், கேவெமிக் யு. ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பைக் கையாண்டுள்ளார்.

https://twitter.com/arrahman/status/1875526131471790324

இந் நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி’ &’லாவண்டர் நேரமே சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான Its Breakup da என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஸ்ருதிஹாசன் மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை சினேகன் எழுதியுள்ளார்.

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.

0

பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

8வது சீசனில் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார், அதோடு பிக்பாஸ் ஆட்டமும் புதியதாக இருக்கிறது.

ஜனவரி மாதம் தொடங்கிவிட்டது, பிக்பாஸ் 8 சீசனும் முடிவுக்கு வரப்போகிறது, ஆனால் வெற்றியாளராக யார் வருவார் என்று கணிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளர் பெஸ்ட்டாக தெரிகிறார்.

பிக்பாஸ் 8வது சீசன் முடிவை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ராணவ் வெளியேறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு போட்டியாளர் மஞ்சரியும் வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

குபேரா படத்திற்காக நடிகர் தனுஷின் முயற்சி..!

0

தனுஷ்,நாகார்ஜுனா,ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகின்றது.இப் படத்தினை தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மிகவும் ஒரு பிஸியான ஒரு நடிகர்,இயக்குநர்,பாடகர் என பல முகங்களில் வளம் வரும் தனுஷ் தற்போது இட்லி கடை,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கி நடித்து வருகின்றார்.மற்றும் இவர் குபேரா திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

தனுஷ் பாடி வெளியாகிய அனைத்து பாடல்களும் அனைவராலும் மிகவும் விருப்பட்டு ஹிட் ஆகிய பாடல்கள் தான் அது மட்டுமல்லாமல் இவர் தனது neek படத்திலும் “காதல் தோல்வி “எனும் பாடல் பாடி இருந்தார்.சமீபத்தில் அதுவும் மிக வைரலாகி இருந்தது.

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..? 

0

அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதற்கு தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனாலும் அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இடியாய் வந்த தகவல் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்று..

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றார்கள்.

இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதும்,  இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும் குட் பேட் அக்லி திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பான அதிகார்வ பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாவிட்டாலும் தை மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது  பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் ரிலீஸாகும்  என கூறப்பட்டது. 

இவ்வாறான நிலையிலே தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவசக்தி பாடலின் புரோமோ விடியோ!

0

நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படத்தின் 2ஆவது பாடலான ஓம் நமோ நமச்சிவாய புரோமோ வெளியானது.

நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ளார்.  நாக சைதன்யாவின் 23வது படமாக இந்த ‘தண்டேல்’ படம் உருவாகியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா  முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் பிப்.7ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது.

சமீபத்தில் தமிழில் வெளியான அமரன் படத்திலும் சாய் பல்லவி சிறப்பாக நடித்ததாக பலரும் பாராட்டை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிவ சக்தி பாடலின் முழுமையான லிரிக்கல் விடியோ நாளை (ஜன.4) மாலை 5.04 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பட போஸ்டர்!

0

நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் முதல் பார்வை போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் டீஜே அருணாச்சலம் தனது சிறப்பான நடிப்புக்காக வரவேற்பைப் பெற்றார்.

தற்போது, அறிமுக இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கியுள்ள் உசுரே படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணா புரடகஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஜனனி நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோகேஷ் தற்போது கூலி படத்தினை இயக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தினை இயக்க உள்ளதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Dir_Lokesh/status/1874795314441593138

ஜீவா மற்றும் பா விஜய்யின் அகத்தியா டீஸர்

0

‘அகத்தியா’ என்ற தமிழ்ப் படம் தயாராகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம். ஜீவா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாக அகத்தியாவின் தயாரிப்பாளர்கள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

பாடலாசிரியர் பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ஹாரர் பேண்டஸி படமான அகத்தியாவின் டீசர் வெளியிடப்பட்டது. ஜனவரி 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தில் நடிகர்கள் அர்ஜுன் சர்ஜா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் உட்பட ஒரு குழும நட்சத்திர நடிகர்கள் உள்ளனர்.

1940 ஆம் ஆண்டு ஒரு பங்களாவில் மர்மமான சூழ்நிலையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் குரல்வழியுடன் டீஸர் தொடங்குகிறது. ஒரு பெண் சொல்வதைப் போல, தங்களுக்கு அதில் தொடர்பு இல்லை என்று, ஆண் உண்மையில் இருக்கிறது என்று கூறுகிறார். கதாபாத்திரங்கள் காலம் மற்றும் நிகழ்காலப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுவதால், பல கற்பனைகள் நிறைந்த காட்சிகள் நமக்குக் காட்டப்படுகின்றன. ‘ஏஞ்சல்ஸ் VS டெவில்’ என்ற டேக்லைனுடன், தீய சக்திகளுக்கும் நல்லவர்களுக்கும் இடையேயான போராக அகத்தியா இருக்கும். திகில் ஃபேண்டஸி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. பா.விஜய் இப்படத்தையும் எழுதியுள்ளார்.

இப்படத்தை டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் அனீஷ் அர்ஜுன் தேவ் ஆகியோர் தயாரித்துள்ளனர். அகத்தியாவின் தொழில்நுட்பக் குழுவினர் ஒளிப்பதிவாளராக தீபக் குமார் பதியும், எடிட்டிங்கை சான் லோகேஷ் கையாள்கின்றனர். கலை இயக்குனர் பி சண்முகன். படத்தை இயக்குவது மட்டுமின்றி பாடலாசிரியராகவும் பா விஜய் பணியாற்றியுள்ளார்.