அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா எனப் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது விடா முயற்சி படத்தின் thirid look வெளியாகி இருக்கிறது.
இந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி பற்றி தகவல் கிடைத்துள்ளது.
விஜய் ஆண்டனி இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் ஆகும்.தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவ்வாறான இவர் சமீபத்தில் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே இவரது அடுத்த இசை நிகழ்ச்சி செப்டம்பர் 7 ஆம் திகதி இலங்கையில் நடைபெற உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனை இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகை டாப்ஸி பண்ணு தமிழில் ஆடுகளம், ஆரம்பம் போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சமீபகாலமாக அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடந்த பல வருடங்களாக அவர் மத்தியாஸ் போ என்ற ரஷ்ய நாட்டு பாட்மின்டன் வீரரை காதலித்து வந்த நிலையில் இந்த வருடம் மார்ச் 23ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் டாப்ஸி தாராள கிளாமரில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
தற்போது நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி டாப்ஸி போஸ் கொடுதிருகும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..
பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.
தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ‘வாஸ்கோடகாமா’ படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுந்தர்.சி நடிப்பில் இயக்குனர் கே திருஞானம் இயக்கியுள்ள ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தை 24 ஹவர்ஸ் ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதோடு, இந்த படத்தில் சுந்தர்.சியுடன் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள், சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் போன்ற படங்களுக்கு பிறகு தற்போது சுந்தர்.சி நடிப்பில் தயாராகும் ‘ஒன் 2 ஒன்’ படத்திலும் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்திரா ஆகியோர் முக்கிய கேரக்டர்களிலும் ராகினி திவேதி, பேபி மானஸ்தி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், ‘ஒன் 2 ஒன்’ படத்தின் டிரைலர் படக்குழுவினரால் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படமும் விரைவில் திரையரங்குக்கு வெளியாக உள்ளது.
இதேவேளை குறித்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படத்திலும் அனுராக் தனது நடிப்பில் மிரட்டி இருப்பார் என்றும், சுந்தர். சி எமோஷனலான ஒரு கேரக்டரில் நடித்து இருப்பது போலவும் தெரிகிறது. இதோ படத்தின் ட்ரெய்லர்,
விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இன்றைய தினம் நடைபெற்ற மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், விஜய் ஆண்டனி முகத்தில் கரி பூசியவாறு வந்திருந்தார். அதற்கு காரணம் அவர் போட்ட மேக்கப் எடுக்க நிறைய நேரம் ஆகும் என்பதால் அப்படியே வந்து விட்டதாக கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் ரிலீஸ் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய அவதாரங்களில் ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் டிரைலர் ஜூன் 29ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இன்னொரு திரைப்படம் ’ஹிட்லர்’. இந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில், டானா இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில் உருவாகிய இந்த படம் விஜய் ஆண்டனியின் வெற்றி படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை திடீரென அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் என்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகினர்.
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டது போலவே சற்றுமுன் இந்த படத்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மாஸ் போஸில் இருக்கும் நிலையில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தின் போஸ்டரில் ’God Bless You மாமே’ என்ற வாசகம் இருப்பதை அடுத்து இதுதான் அந்த பாடலின் முதல் வரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பதால் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது லுக் போஸ்டரிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.அதில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சுதீப் கிஷன் மற்றும் துஷரா மாவு மில்லில் மிகவும் கோபத்துடன் முறைத்துக்கொண்டு இருப்பது போல் இருக்கின்றனர்.இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தற்பொழுது தொடங்கியுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
அதன்பிறகு காலா, விசுவாசம், டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தார். துணை நடிகையாக இருந்து,தற்போது கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் வளர்ந்து வளர்ந்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் “கெஸ்ட்” மற்றும் “தி நைட்” என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவிவில் வெளியாக உள்ளது.
இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட சாக்ஷி அகர்வால், இதே போன்று செய்து என்னை டேக் செய்யுங்கள் என தலைப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.