அஜித் பிறந்தநாளில் ‘விடாமுயற்சி’ அப்டேட்?

Published:

‘அப்டேட்’ என்ற வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் தற்போது நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படம் பற்றிய அப்டேட் எதுவும் வராமல் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மே 1ம் தேதியன்று அஜித்தின் பிறந்தநாள் வரப் போகிறது. அன்றாவது ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் எதுவும் வருமா என்று அவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

முதல் பார்வை அல்லது முன்னோட்ட வீடியோ என்று ஏதோ ஒன்று வெளிவந்தால் மட்டுமே அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியும். போட்டியாளரான விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தின் முதல் சிங்கிள் கூட வெளிவந்துவிட்டது. ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது ஒன்று வந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் கூட அஜித் ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில் மே 1 அப்டேட் வரவில்லை என்றால் அஜித் ரசிகர்கள் வருத்தப்படுவது உறுதி.

 

Related articles

Recent articles

spot_img