Home Blog Page 34

மல்லி தொடரில் கம்பேக் கொடுக்கும் நிகிதா!

0

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடர் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனையடுத்து மல்லி என்கிற புதிய தொடரின் புரோமோ அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த தொடரில் ஹீரோயினாக நிகிதா நடிக்கிறார். இவர் ஏற்கனவே அருந்ததி தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான சூரியவம்சம் தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் இந்த தொடரில் ரோஜா தொடரில் வில்லியாக நடித்த வீஜே அக்ஷயா மற்றும் பேரன்பு தொடரில் நடித்த விஜய் வெங்கடேசன் ஆகியோர் முக்கிய ரோலில் கமிட்டாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதன்காரணமாக ரசிகர்களிடத்திலும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் – வித்யா பாலன்

0

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும வித்யாபாலன். தற்போது ‛தோ அவுர் தோ பியார்’ என்ற காதல் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். அவருடன் பிரதீக் காந்தி, இலியானா ஆகியோரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக உள்ள வித்யாபாலன் அளித்த பேட்டி :

* இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தது ஏன்?
படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து ஆக்ஷன் வகைப் படங்களில் நடித்து அலுத்துப் போனதால் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த கதை ரொமான்டிக் காமெடி கலந்தது. இதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

* படத்தில் பிரதீக் காந்தி மற்றும் இலியானா உடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பிரதீக் காந்தி ஒரு அற்புதமான நடிகர், அவருடன் பணிபுரிந்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. நான் அவரது ஸ்கேம் 1992 தொடரைப் பார்த்தேன், அந்தத் தொடரில் அவரது நடிப்பு நன்றாக இருந்தது. இலியானாவுடன் எனக்கு அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் அவருடன் இணைந்து பணியாற்றியது நன்றாக இருந்தது. தற்போது தாயாகி தனது தாய்மையை அனுபவித்து வருகிறார்.

* சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் இமேஜை மாற்றிய பெருமை உங்களுக்கு உண்டு. இதுபற்றி?
மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு நன்றாக உள்ளது. ஆனால் அதற்கான கிரெடிட் எனக்கு மட்டும் தரக்கூடாது. ஏனென்றால் நான் நடித்த படங்களில் யாரோ கதை எழுதி அந்த படங்களையும் யாரோ தயாரித்திருக்கிறார்கள். நான் ‛‛இஷ்கியான், பா, டர்ட்டி பிக்சர், கஹானி மற்றும் நோ ஒன் கில்ட் ஜெசிகா” போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. சரியான நேரத்தில் சரியானதைச் செய்துள்ளேன் என்று தான் சொல்வேன்.

* என்ன மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
காமெடி படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதற்கு முன் பல படங்களில் காமெடி செய்துள்ளேன். கோல்மால் போன்ற நகைச்சுவை படங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை இருக்கும். அதுபோன்று நடிக்க வேண்டும்.

கோட் படத்தில் விஜயகாந்த் : பிரேமலதா தந்த அப்டேட்

0

கடந்த டிசம்பர் இறுதியில் நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் தனது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த சகாப்தம் என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்தார்.

அதன்பிறகு இயக்குனர் விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்கி வந்த மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தில் விஜயகாந்த்தை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போவதாக அறிவித்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக கடைசி வரை அவரால் தான் நினைத்ததை செய்ய முடியாமலேயே போனது. அது குறித்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக மீண்டும் விஜயகாந்த்தை திரையில் கொண்டு வர இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

விஜய்யை வைத்து தற்போது கோட் என்கிற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு ஏற்கனவே அதில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என விஜய்யுடன் ஒரு வித்தியாசமான நட்சத்திர கூட்டணியை இணைத்து உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில் தான் விஜயகாந்த்தையும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்ற வைக்க இருக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பலமுறை எங்களது வீட்டிற்கு வந்து சண்முக பாண்டியனை சந்தித்து விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைப்பது குறித்து பேச வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

பிரச்சாரத்திற்கு இடையே ஒருநாள் சென்னை வந்தபோது அவர் என்னை சந்தித்து முழு விவரங்களையும் சொன்னார். விஜய், வெங்கட் பிரபு இருவரையுமே சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன்.

விஜயகாந்த் இருந்தால் எப்போதுமே விஜய்க்கு நோ சொல்ல மாட்டார். தேர்தல் முடிந்ததும் விஜய்யும் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா… : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால்

0

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலும், முன்னாள் நடிகரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். சமீபத்தில் கூட நடிகர் சங்க கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இந்த நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் எனது படமான ‘மார்க் ஆண்டனி’யை வெளிவரவிடாமல் தடுத்தது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் விஷால்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கும் தமிழ் சினிமா சொந்தம் கிடையாது. சினிமா என் கையில்தான் இருக்கிறது என்று சொன்னவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. வட்டிக்கு வாங்கி, வியர்வை சிந்தி ஒரு படம் எடுத்தால், அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழ் சினிமாவை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று ரெட் ஜெயன்ட்டில் இருக்கும் ஒரு நபரிடம் கேட்டேன்.

காரணம் ‘மார்க் ஆண்டனி’ படத்துக்காக என்னுடைய தயாரிப்பாளர் 65 கோடி செலவு செய்திருக்கிறார். ஒன்றரை மாதமாக படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும்போது அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்லும்போது எனக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் மட்டும்தான் உங்கள் படத்தை ரிலீஸ் செய்து நீங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று ஏதவாது ரூல்ஸ் இருக்கிறதா? நான் அவர்களையும் மீறி குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ததால்தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல வெற்றி கிடைத்தது. நான் அன்று சும்மா இருந்திருந்தால் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.

‘ரத்னம்’ படத்துக்குக் கூட பிரச்சினை வரும். வேண்டுமென்றே வேட்டு வைப்பார்கள். இங்கே யாருக்கும் தைரியம் கிடையாது. நட்புக்கும், வியாபாரத்துக்கும் இடையே நான் ஒரு கோடு வரைந்திருக்கிறேன். வியாபாரம் என்பது என்னுடைய உழைப்பு. யாரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள விடமாட்டேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில் விஷால் அளித்துள்ள இந்த பேட்டி சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

‘மருதநாயகம்’ படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை

0

கமல்ஹாசனின் கனவு படம் ‘மருதநாயகம்’. இந்த படத்தை பிரிட்டிஷ் மகாராணி தொடங்கி வைத்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக 30 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனது. ஆனாலும் மருதநாயகத்தை எப்படியாவது கொண்டு வருவேன் என்று கமல் அடிக்கடி கூறிவந்தார். தற்போது சினிமாவில் மொழி எல்லைகள் விரிந்து ஆயிரம் கோடியை தாண்டிய பட்ஜெட்டில் படங்கள் உருவாக தொடங்கி உள்ளது. இதனால் கமலும் தனது மருதநாயகத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறார்.

படத்தை ஹாலிவுட்டில் தயாரித்தால் உலக அளவிலான மார்கெட்டிங் சாத்தியம் என்பதை உணர்ந்த கமல் இதுகுறித்து தற்போது இந்தியா வந்துள்ள மெக்சிகோ இயக்குனர் அல்போன்சா குயூரனை தனது அலுவலத்திற்கு அழைத்து வந்து இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அல்போன்சா புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர். தனது கிராவிட்டி, ரோமா படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர். இந்த சந்திப்பின் போது மருதநாயகம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், மேக்கிங் வீடியோவை அல்போன்சாவுக்கு காட்டி உள்ளார் கமல். இந்த சந்திப்பின் போது இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சித்தார்த், நடிகை அதிதிராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள கமல், “நாங்கள் சினிமா பற்றி மட்டுமே பல மணி நேரம் பேசினோம். நான் மதிய உணவின் போது மாம்பழங்களை அவருக்கு அளித்தேன். அப்போது சித்தார்த், ‘அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கிடைத்திருக்கிறது’ என்று கிண்டல் செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ

0

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளன.

இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி வைத்து தனது ஒட்டுமொத்த கெட்டப்பையே மாற்றி நடித்திருக்கிறார் விக்ரம். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன.

இந்நிலையில் இன்று விக்ரமின் பிறந்தநாள் என்பதால் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிகவும் ரிஸ்க் எடுத்து விக்ரம் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.

 

கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி

0

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, லால் சலாம் படத்தை அடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தற்போது இறங்கி இருக்கிறார்.

சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி சென்று வரும் ஐஸ்வர்யா ரஜினி, வெறித்தனமான ஒர்க் அவுட்டிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.

ஜிம்மில் தான் வொர்க் அவுட் செய்யும் பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி இருவரும் விவாகரத்து சம்பந்தமாக குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சமீபத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல்

0

தனது 50 வது படமான ராயனை இயக்கி, நடித்துள்ள தனுஷ், அதையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் சேகர் கம்முலா இயக்கும் குபேரா என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மும்பையில் உள்ள தாராவியில் நடக்கும் கதையில் இப்படம் உருவாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தெலுங்கு தயாரிப்பாளர் நரேந்திரா என்பவர் தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையில் குபேரா என்ற டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இந்த குபேரா டைட்டிலை மாற்றாவிட்டால் தனுஷ் – சேகர் கம்முலா படக்குழு மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

4 தமிழ் இயக்குநர்களை தூக்கிட்டு வரச்சொன்ன பாலகிருஷ்ணா..

0

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 4 தமிழ் இயக்குநர்களை தூக்கி வரச் சொல்லி கதை கேட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக தெலுங்கு இயக்குநர்கள் படங்களில் நடித்து சலித்து போய்விட்ட நிலையில் இனி அடுத்தடுத்து தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழில் வெற்றி படங்கள் கொடுத்த 4 இயக்குநர்களை சந்தித்து பாலகிருஷ்ணா கதை கேட்டுள்ளதாகவும் இந்த நான்கு கதைகளில் ஒரு கதையை அவர் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா படம் என்றாலே ஓவர் ஹைப் இருக்கும் என்பதும் பில்டப் பயங்கரமாக இருக்கும் என்பதும் தெரிந்தது. அவர் கேட்டபடி கதை தயார் செய்து தமிழ் இயக்குநர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கும் நிலையில் இந்த 4 இயக்குநர்களில் ஒருவர் ஹரி என்ற தகவல் தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவில் 10 படங்கள் இயக்கினால் கூட கிடைக்காத சம்பளத்தை ஒரே படத்தில் தருவதற்கு பாலகிருஷ்ணா ஒப்பு கொண்டிருப்பதால், பாலகிருஷ்ணா படத்தை இயக்குவதற்கு தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருவதாக புறப்படுகிறது.

எனவே பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தை இயக்குவது தமிழ் இயக்குநர் தான் என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக இயக்குனர் ஹரியிடம் கதை கேட்டு சில திருத்தங்களை பாலகிருஷ்ணா சொல்லி இருப்பதாகவும் அந்த திருத்தங்கள் பாலகிருஷ்ணாவிற்கு பிடித்து விட்டால் அவர்தான் அடுத்த படத்தின் இயக்குநர் என்றும் கூறப்படுகிறது.

நொந்து நூலாகி போன விஜய் தேவரகொண்டா.!

0

அடுத்தடுத்து மூன்று தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஜய் தேவரகொண்டா தனது தோல்விக்கு சமந்தா மற்றும் ராஷ்மிகா தான் காரணம் என்று முடிவு செய்து இனிமேல் சமந்தாவும் வேண்டாம் ராஷ்மிகாவும் வேண்டாம் என்று அதிரடி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வந்து கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா ’கீதா கோவிந்தம்’ ’நோட்டா’ ’டாக்சி வாலா’ ’டியர் காம்ரேட் ’உள்ளிட்ட தொடர் ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ’லைகர்’ ’குஷி தி’ ’தி ஃபேமிலி ஸ்டார்’ ஆகிய மூன்று படங்கள் சமீபத்தில் வெளியாகி மூன்றுமே படுதோல்வி அடைந்ததை அடுத்து விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடைசியாக வெளிவந்த ’குஷி’ மற்றும் ’தி ஃபேமிலி ஸ்டார்’ படங்களின் தோல்விக்கு காரணம் அந்த படங்களின்  கதை, திரைக்கதை சரியில்லை என்பதை உணராத விஜய் தேவரகொண்டா, தன்னுடன் நடித்த சமந்தா மற்றும் ராஷ்மிகாவுடன் ஆன காதல் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. எனவே இனிமேல் சமந்தாவுடன் படம் நடிப்பதில்லை என்றும் ராஷ்மிகாவுடன் ஆன காதலையும் பிரேக் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

இனி முழுக்க முழுக்க தீவிரமாக கதையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் குறிப்பாக ரொமான்ஸ் படங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா இனி அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதை அம்சத்துடன் புதிய இயக்குனர்களுடன் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.