Home Blog Page 35

‘பொன் ஒன்று கண்டேன்’ டிரெயிலர்

விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார். தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடித்துள்ளார்.அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

 

விஜய்க்கு என அட்வைஸ் இதுதான்: நடிகர் கார்த்திக்…..

நடிகர் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு எனது அட்வைஸ் இது தான் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி பயணம் செய்யப் போவதாக கூறியுள்ளார் என்பதை ஏற்கனவே அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஏற்கனவே பல திரை உலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது நவரச நாயகன் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு மிகவும் சந்தோசம், அவரை நான் வரவேற்கிறேன், தம்பி விஜய் தாராளமாக வரட்டும், அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது, அதுவும் திரையுலகில் பீக்கில் இருக்கும் போது அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் ஒரு அண்ணனாக நான் அவருக்கு கூறும் அட்வைஸ் என்னவென்றால் அரசியலுக்கு வந்தாலும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவில் நடிப்பதை நிறுத்தக்கூடாது. ஏனெனில் திரையில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை சுலபமாக சென்றடையும். அதனால் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறுகிறேன்’ என்றார்.

கார்த்திக் அட்வைஸை ஏற்று கொண்டு விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது தனது முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜிம் பாய்ஸ் பவுன்சர்களையே மிரள விட்ட டாடா

0

பொதுவாக ஒருவருக்கு கொஞ்சம் பேரும் புகழும் வந்துவிட்டால் அதனுடன் சேர்ந்து திமிரும் தெனாவட்டும் வந்துவிடும் போல. அப்படித்தான் நடிகர் கவின் நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானதும், வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவர் அலப்பறையை காட்டி வருகிறார்.

அத்துடன் தற்போது இவரைப் பற்றி வரும் விஷயங்கள் அனைத்தும் படப்பிடிப்புக்கு ஒழுங்காக போவதில்லை. போனாலும் லேட்டாக போய்விட்டு சீக்கிரத்திலேயே வீட்டுக்கு கிளம்பி விடுகிறாராம். இதுல வேற அதிக சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி டீல் பேசி வரும் அளவிற்கு அதம்பல் பண்ணிக்கிட்டு வருவதாக பல விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இதோடு சேர்த்து தற்போது இன்னொரு விஷயமும் கசிந்திருக்கிறது. அதாவது தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த சூழலில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கவின் கிட்டத்தட்ட ஐந்து பவுன்சர்களுடன் போயிருக்கிறார். போன இடத்தில் ரசிகர்கள் கவினை பார்த்துடன் செல்பி எடுக்க அலை மோதி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பவுன்சர்கள் எதுவும் சொல்லாமல் போட்டோ எடுக்க அனுமதி கொடுத்து விட்டார்கள்.

 

 

இதனை பார்த்த கவின் அந்த பவுன்சர்கள் அனைவரையும் கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட் கொடுத்து திட்டி இருக்கிறார். இதோடு போகாமல் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடமும் சண்டை போட்டிருக்கிறார். பொதுவாக எல்லா ஹீரோக்களும் ஸ்டண்ட் மாஸ்டர் என்றால் அவர்களின் கால்களில் விழுந்து தொட்டு வணங்குவார்கள்.

ஆனால் கவின், ஸ்டண்ட் மாஸ்டரிடம் சண்டை போட்டு சூட்டிங் போன இடத்தில் ஏழரை இழுத்திருக்கிறார். இப்படி போன இடத்தில் எல்லாம் பிரச்சனை பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி இவரால் தொடர்ந்து பட வாய்ப்பை பெற முடியும் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் தான் ஆட்டம் போட்டு வருகிறார்.

இப்படித்தான் சில ஹீரோக்கள் ஓவராக ஆட்டம் போட்டதால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். இந்த லிஸ்டில் கவினும் இடம்பெறாமல் இருந்தால் சந்தோசம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் இவரை பற்றி தாறுமாறான கருத்துக்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

ஸ்ருதிஹாசன்!! லேட்டஸ்ட் தகவல்

0

தமிழ், தெலுங்கு, இந்தியில், என்ன படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

இவர் ஏற்கனவே தி .ஐ ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நிலையில், சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவும் தேர்வாகி இருந்தார்.

பிலிப் ஜான் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக விவேக் கல்ரா நடிக்க இருப்பதாவும் கூறப்பட்டது. இதற்கு முன் சென்னை ஸ்டோரி படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யப்பட்டது . ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் சென்னை ஸ்டோரி படத்தில் இருந்து விலகி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை.

ரோமியோ திரைவிமர்சனம்

விஜய் ஆண்டனி படம் என்றாலே கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரோமியோ.

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய்ஆண்டனி யுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்.

சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்னாலினி ரவியை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், மிர்னாலினி ரவிக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இதன்பின் தனது மனைவிக்கு தன் மேல் காதல் இல்லை, விருப்பம் இல்லை என விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அவர் என்ன செய்தார்? கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது. குறிப்பாக எமோஷனல் காட்சிகள் மற்றும் மனைவியிடம் சகித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருந்தார் விஜய் ஆண்டனி.

கதாநாயகி மிர்னாலினி நடிப்பில் குறை எதுவும் இல்லை. முழு கதையும் அவரை சுற்றியே நகர்கிறது. தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும் கச்சிதமாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்த நடித்த நடிகர், நடிகைகளும் திரைக்கதையோடு ஒன்றி போகிறார்கள்.

மனதை தொடும் கதைக்களத்தை, அழகாக எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு, இன்னும் கூட படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

மற்றபடி படத்தில் குறை என்று பார்த்தால் சில பாடல்களை தவிர்த்து இருக்கலாம் என்பது தான். பாடல்களை வைத்து காட்சி அமைத்தது என்பது அருமை. ஆனால் அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாகவும் அமைந்துவிட்டது. பின்னணி இசை வேற லெவல். படத்திற்கு பலம் சேர்க்கிறது. ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள் அருமையாக இருந்தது.

பிளஸ் பாயிண்ட்

விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி நடிப்பு

கதை

ப்ரீ கிளைமாக்ஸ்

மைனஸ் பாயிண்ட்

திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு

மொத்தத்தில் ரோமியோ ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டான்..

 

சமந்தாவின் லெட்டஷ்ட் ஆட் பொட்டோ ஷுட்

சமந்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவரது பக்கத்திற்கு 34 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் அணிந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

https://www.instagram.com/p/C5nH_93rq-s/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் படத்தின் டைட்டில்

0

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற திரைப்படத்தை தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் சல்மான்கான் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் சல்மான் கானுடன் இணையும் திரைப்படத்திற்கு ’சிக்கந்தர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் ஏஆர் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சல்மான் கான் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு மிக விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/C5nF1yop-Qe/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

வெயிட்டிங் வீணா போகல, மாஸ் அப்டேட் கொடுத்த VP..

0

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று அசால்டாக அப்டேட் கொடுத்து விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. GOAT படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து மெர்சல் ஆகி இருக்கின்றனர்.

ரம்ஜான் அதுவுமா எந்த முஸ்லிம் பிரண்ட்ஸ் கிடைப்பாங்க, பிரியாணி ட்ரீட் கேட்கலாம்னு எல்லாரும் சுத்திக்கிட்டு இருக்கும்போது, ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வேற லெவல் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார் வெங்கட் பிரபு.

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் என ஏதாவது வெளியிடுவார்களோ என்று தான் முதலில் எல்லோருக்கும் தோணுச்சு. ஆனால் நேரம் போகப் போக அட இவர் ரிலீஸ் தேதியை தான் சொல்லப் போகிறார் என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது.

அடிடா மேளம், போடுடா வெடி என்று விஜய் ரசிகர்களும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 2,3 மணி நேரமா ட்விட்டரில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் நேரம் வீண் போகவில்லை.

GOAT படத்தின் மூலம் தளபதி விஜய் தரிசனத்தை வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பார்ப்பதற்கு எல்லாரும் ரெடியாக வேண்டி தான். லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில், தளபதியின் அடுத்த படமான GOAT இந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை குறிவைத்து இந்த ரிலீஸ் தேதியை லாக் செய்து இருக்கிறார்கள் பட குழுவினர். கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பது இந்த படத்தின் பெரிய பாசிட்டிவான விஷயம்.

பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மைக் மோகன் என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளங்களை திரையில் பார்ப்பதற்கு சினிமா ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே விஜய் நடிப்பில் GOAT படம் ரிலீஸ் ஆகிறது.

சினிமாவில் அந்த மாதிரி விஷயம் இருக்கு..

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அபிராமி.

இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமா துறையில் நடிகைகள் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அபிராமி கூறும்போது, “உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள்”.

“அதே போல என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள். சிறுவயதில் தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம்” என்று அபிராமி கூறியுள்ளார்.

பழனிக்கு வீடு தேடி வந்த சர்ப்ரைஸ்! தரமான சம்பவம்…

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி, பாக்கியா, அமிர்தா, எழில் ஆகியோர் கிச்சனிலிருந்து பேசிக் கொண்டிருக்க, அங்கு செழியன் வருவதை பார்த்த பாக்கியா, என்ன கண்ணு எல்லாம் சிவந்து போய் இருக்கு. நைட் தூங்கலையா என கேட்க, இல்லமா நைட் முழுக்க பாப்பா கத்திக்கிட்டே இருந்தா. இப்பதான் தூங்க வச்சிட்டு வாரேன் என பொய் சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி குழந்தையை தூக்கிட்டு வா நான் பாத்துக்குறேன் என சொல்ல, இல்லை இப்போ தான் தூங்க வச்சிட்டு வந்தேன் என சமாளிக்கிறார்.

இதை அடுத்து எழிலுடன் மேலே exercise செய்வதற்கு சென்று விட்டு எழிலிடம், ஜெனி இப்போ நிறைய சந்தேகப்படுறா என்று நைட் நடந்த விஷயத்தை பற்றி சொல்லுகிறார். அதற்கு எழில், இப்பதான் நீங்க சேர்ந்து இருக்கீங்க உங்களுக்கு இடையில் நிறைய விரிசல் இருக்கு போகப் போக சரியாகும். இப்போ போய் கொஞ்சம் தூங்கு என அட்வைஸ் பண்ணி அனுப்புகிறார்.

மறுபக்கம் பழனிச்சாமியும் அம்மாவும் சாமி கும்பிட்டு விட்டு இருக்க, வீட்டில் காலிங் பெல் சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் யாரும் இல்லை. ஆனால் அவரது வீட்டுக்கு அவரது அக்காவும் தங்கச்சியும் வந்து சப்ரைஸ் கொடுக்கிறார்கள். அவர்களை கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த காலிங் பெல் சத்தம் கேட்க, யார் என பார்த்தால் பாக்கியாவின் குடும்பம் வந்திருக்கிறது.

அவர்களையும் உள்ளே அழைத்து தனது அக்கா தங்கைக்கு அறிமுகம் பண்ணி வச்சு, எல்லாரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் போது பழனிச்சாமியின் அம்மா உள்ளே செல்ல, அவரது அக்காவும் தங்கையும் சென்று பழனிக்கு பொண்ணு பார்த்தேன் என்று சொன்னீர்களே யார் அவங்க எனக் கேட்க, அது பாக்கியா தான் என ஷாக் கொடுக்கிறார்.

அதற்கு அவரது தங்கச்சி அவங்களுக்கு கல்யாணம் ஆகி பையனுக்கு பிள்ளையும் இருக்குது. அவங்களை எப்படி அண்ணாக்கு கல்யாணம் கட்டி வைப்பிங்க என்று அவருக்கு விருப்பம் இல்லாத மாதிரி பேச, அந்த இடத்திற்கு வந்த பாக்கியா  அவர்களுக்கு ஸ்வீட் கொடுக்கிறார். ஆனால் பழனிச்சாமியின்  அம்மாவுக்கும்  அக்காவுக்கும் சுகர் இருக்கு என சொல்லி கொடுக்க மறுக்கிறார்.

இதை தொடர்ந்து பார்த்தியா அவளுக்கு எங்க வீட்ட பத்தி எல்லாமே தெரியும். அவ தான் சரியான ஆள் என சொல்ல, பழனிச்சாமியின் அக்கா எனக்கு சம்மதம் என சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

இதேவேளை, தற்போது பழனிச்சாமிக்கு பாக்கியாவை கல்யாணம் செய்து வைக்க அவரது அம்மா, அக்கா சம்மதம் சொன்ன நிலையில், இது பாக்கியா காதுக்கு போனால் என்ன நடக்கும் என பொறுத்து இருந்து பார்ப்போம்.