Home Blog Page 36

சன் டிவியில் முடிவுக்கு சில சீரியல்கள்…..

0

சன் டிவியில் ’அன்பே வா’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சீரியல்கள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதில் ஒரு சீரியலின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ’அன்பே வா’ என்ற சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் சரிகம நிறுவனம் தயாரிக்கும் இரண்டு சீரியல்கள் புதிதாக ஆரம்பமாக இருப்பதாகவும் அதில் ஒன்று ’மாலினி’ என்றும் இன்னொன்று  டெல்னா டேவிஸ்  நடிக்கும் சீரியல் என்றும் கூறப்படுகிறது.

இதில்  டெல்னா டேவிஸ் நடிக்கும் புதிய சீரியலின் பூஜை ஒரு மாதத்திற்கு முன்பே போடப்பட்ட நிலையில் நேற்று முதல் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியலில்  டெல்னா டேவிஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் அவரது புதிய லுக் மற்றும் சேலை கட்டிய புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த சீரியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் பிரபல சீரியல்

0

தமிழும் சரஸ்வதியும் ஒரு இந்திய தமிழ் மொழி சோப் ஓபரா ஆகும். இதில் தீபக் தினகர் மற்றும் நக்ஷத்ரா நாகேஷ் நடித்துள்ளனர்.இது ஜூலை 12, 2021 அன்று ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டது. S. குமரன் இந்த தொடரின் இயக்குனர் மற்றும் ராதிகா சீனிவாசன் மற்றும் B. சீனிவாசன் விகடன் டெலிவிஸ்டாஸ் அதன் தயாரிப்பாளர்கள்.சரஸ்வதி நன்றாகப் படிக்கவில்லை என்று தன் தந்தையின் தொடர்ச்சியான விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக சரஸ்வதியை திருமணம் செய்து கொள்வதைக் கதை பேசுகிறது. அவள் அறியாத பெண்ணாக இருந்தாலும், வருங்கால மாப்பிள்ளைகள் அவளை திருமணம் செய்ய அதிக பணம் கேட்கிறார்கள். ஆயினும்கூட, உயர் தொழில் மதிப்புள்ள ஒரு படிக்காத நபரான தமிழை அவள் சந்திக்கிறாள். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தமிழ் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, ஏனெனில் அவர்கள் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பட்டம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

இக்கதை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பல திடுக்கிடும் திருப்பங்களுடன் முடிவுக்கு வரவுள்ளாதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ் எனும் தீபக்கின் இன்ஸ்டரகம் பக்கத்தில் கதையின் இறுதி நாள் படபிடிப்பு என பதிவிட்டு அங்கு இருக்கும் அனைவரையும் அறிமுகபடுதிள்ளார். 717 அத்தியாத்துடன் முடிவுக்கு வந்ததாக கூறிபிட்டுள்ளார்

https://www.instagram.com/p/C5lcsQ7iWMM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://www.instagram.com/reel/C5laHhLCGlT/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை..

0

மிஸ்டர் மனைவி என்பது 2023 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடராகும், இது 6 மார்ச் 2023 அன்று திங்கள் முதல் ஞாயிறு வரை சன் டிவியில் திரையிடப்பட்டது. இந்தத் தொடரில் ஷபானா ஷாஜஹான் மற்றும் பவன் ரவீந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கதை பற்றியது இதுவாகும். சமூகத்தில் சமத்துவத்தை எதிர்பார்க்கும் வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்ணான அஞ்சலி, தனது வாழ்க்கையைத் தானே நிர்வகிக்கிறார், அதே நேரத்தில் மிஸ்டர் ஹோம்மேக்கராக (திரு மனைவி) ஆசைப்படும் விக்கி சிக்குகிறார். முக்கிய கதைக்களம் இதுதான்.

இக் கதையின் ஷபானாவை ரசிகரக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.இந் நலையில் அவர் தான் இந்த கதையில் இருந்து விலகுவதாக தனது இனடஸ்டராகம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது மிஸ்டர் மனைவி குடும்பத்திற்க்கு

”எனது கதாபாத்திரத்தை விட்டு விழகுவது கடினமான முடிவாக எனக்கு உள்ளது.ஆனாலும் அது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.என்னை அஞ்சலியாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மிக நன்றி உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த பலமாக அமைந்திருந்தது..நான் ஒரு புதிய பிராஜகட் , புதிய கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கின்றேன். எல்லோருக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/C5li_dsyyED/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

யுவன் சங்கர் ராஜா அப்டேட்

0

யுவன் சங்கர் ராஜா தனது அடுத்த இசை நிகழ்ச்சிகள் இடம் பெற போகும் இடங்கள் தொடர்பாக அறிவித்துள்ளார்.

இவரின்  முதல் லோங் டிரைவ் இலங்கையிலிருந்து ஆரம்பமானது.

அதற்கமைய,

22/06/2024 –ஹைதராபாத்

29/06/2024 கோயம்புத்தூர் 

27/07/2024 – சென்னை

ஆகிய இடங்களில் தமது இசைநிகழ்சிகளை நடாத்த போவதை அழகிய வீடியோ ஒனடறின் முலம் தெரியப்படுத்தி உள்ளார். இதற்கான டிக்கட்டுகள் நாளை வெளியிடப்படும்.

https://www.instagram.com/reel/C5ldK2DP59a/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 8 போட்டியாளர்கள் லிஸ்ட்

0

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 5. வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் இந்த நிகழ்ச்சி இந்த வருடம் சற்று தள்ளிப்போனது.

செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர் உள்ளிட்டோர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுவும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் எதற்காக வெளியேறினார் என காரணம் தெரியவில்லை.

குக் வித் கோமாளி சீசன் 5 படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அங்கிருந்து எடுக்கப்பட்ட குக் வித் கோமாளி செட் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொண்டிருக்கும் 8 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, Youtuber இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என உறுதியாக கூறப்படுகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் புதிய படைப்பு

0

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் புதிய படைப்பபு பற்றி அறிவுத்துள்ளது. இப்படத்தை ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வந் மாரிமுத்து எழுதியுள்ளார். இதில் பிரதீப் ரங்கனாதன் நடிக்கினறார்.

 

‘தளபதி 69’ தயாரிப்பாளர் யார்?

0

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும், இதனை அடுத்து இந்த படத்தை தயாரிக்கும் புதிய நிறுவனம் எது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’தளபதி 69’ திரைப்படத்தை ’பாகுபலி’ ’ஆர்ஆர்ஆர்’ உள்பட பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து தளபதி விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை தயாரிக்க மூன்று நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, சன் பிக்சர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் புரடொக்சன்ஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே விஜய் படங்களை தயாரித்துள்ள நிலையில் மீண்டும் விஜய் படத்தை தயாரிக்க எந்த நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி..

0

விஜய் டிவியின் சீரியல்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சன் டிவி தொடர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் முக்கிய தொடராக இருந்து வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என கடந்த வாரமே செய்தி வெளியானது.

இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நடித்து வரும் கிழக்கி வாசல் என்ற தொடரையும் விஜய் டிவி முடிவுக்கு கொண்டு வர இருக்கிறதாம்.

விரைவில் இதன் கிளைமாக்ஸ் வர இருக்கிறது என வந்திருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த சீரியல் தொடங்கி இன்னும் 200 எபிசோடுகள் கூட ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் வெட்கம் அறியாதுன்னு நிரூபித்த சூரி.

0

இப்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார். விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதாவது எதிரி போல் சண்டை போட்ட விஷ்ணு விஷால் உடன் இவர் பழம் விட்டுள்ளார்.

நிலம் வாங்குவது தொடர்பாக சூரிக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக மீடியாக்களில் தெரிவித்த சூரி அதை நீதிமன்றம் வரை கொண்டு சென்றார்.

பதிலுக்கு விஷ்ணு விஷாலும் காட்டமாக பதிலளித்ததோடு எதிர்காலத்தில் இனி அவருடன் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக அவரே தெரிவித்தார்.

அப்போதே இதை நாலு பேர் நாலு விதமாக பேசி வந்தனர். இந்நிலையில் விஷ்ணு விஷால் தன் அப்பா மற்றும் சூரி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காலம் ஒன்றே அனைத்திற்கும் பதில் சொல்லும், நல்லதே நடக்கட்டும் சூரி அண்ணா என தெரிவித்துள்ளார். அதற்கு சூரியும் நன்றி கூறியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பணம் வெட்கமறியாது என நிரூபித்து விட்டார்கள். ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் என்ன உருட்டு உருட்டினார்கள்.

ஆனால் இப்போது ஒன்றுமே நடக்காதது மாதிரி சேர்ந்து விட்டார்கள். ஆக மொத்தம் பணத்துக்கு தான் மதிப்பு என கண்டபடி விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலர் இவர்கள் இணைந்ததற்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் எடுத்த முட்டாள்தனமான முடிவு..!

தமிழ் திரை உலகை பொருத்தவரை சொந்த படம் எடுத்து நஷ்டம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கோடி கணக்கில் கஷ்டப்பட்டு பல வருடங்கள் சேர்த்த பணத்தை ஒரே ஒரு சொந்த பணம் எடுத்து நஷ்டம் அடைந்த நடிகர் நடிகைகள் ஏராளம் என்பது தெரிந்தது.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் சொந்த படம் எடுத்து பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் தற்போது தான் அவர் படிப்படியாக தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை பார்த்து சிவகார்த்திகேயன் என்ன லூஸா? என திரை உலகினர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் ’சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி சில படங்கள் தயாரித்தார் என்பதும் சில படங்களை விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆர்டி ராஜா என்பவருடன் இணைந்து சில படங்கள் தயாரித்த நிலையில் அந்த படங்கள் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை கொடுத்தது என்பதும் இதனால் சிவகார்த்திகேயனுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது சினிமாவில் நடித்ததால் கிடைத்த பணத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் நாளை முழுதாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தான் சிவகார்த்திகேயன் என்ன லூஸா? நன்றாகத்தானே அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது? அப்படி இருக்கும்போது எதற்காக திடீரென மீண்டும் சொந்த படம் எடுக்கிறார்? என்ற கேள்விகளை அவரது ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.