Home Blog Page 37

விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க போவது யார் தெரியுமா..

0

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 படத்தின் பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை ஹெச். வினோத் தான் இயக்க போகிறார் என உறுதியாக சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment தான் இப்படத்தை தயாரிக்கும் என தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது DVV Entertainment நிறுவனம் தளபதி 69 படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களாம். இதனால் தளபதி 69 படத்தை யார் தயாரிக்க போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 69 படத்தை நடிகர் விஜய் தனது சொந்த தயாரிப்பில் எடுக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. தேர்தல் முடிந்தபின் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவேசம் திரை விமர்சனம்

பகத் பாசில் படம் என்றாலே நம்பி தியேட்டருக்கு போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் ரோமன்சம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ஜிது மாதவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஆவேசம் படம் எப்படி என்பதை பார்ப்போம்.

கேரளாவிலிருந்து பெங்களூர் பொறியியல் கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு கேங் அமைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால், இவர்கள் சந்தோஷத்தில் அந்த கல்லூரி சீனியர் ஒரு இடைஞ்சலாக வர, அதில் ஒரு சீனியரை 3 மாணவர்கள் திமிராக பேசுகின்றனர்.

பிறகு அந்த 3 பேரையும் சீனியர்கள் ஒரு ரூமில் அடைத்து வைத்து அடி அடி என்று அடித்து எச்சரித்து அனுப்புகின்றனர். இதில் அந்த 3 மாணவர்களும் தாங்களும் லோக்கல் சப்போர்ட் சேர்த்துக்கொண்டு அந்த சீனியர்களை அடிக்க வேண்டும் என கங்கனம் கட்டுகின்றனர்.

அப்போது தான் அந்த ஏரியாவின் டான் பகத் பாசில் நட்பு கிடைக்க, ஒரு கட்டத்தில் சீனியர்களை பகத் ஆட்களை வைத்து அடிக்கவும் செய்கின்றனர். ஆனால், அந்த மாணவர்களுக்கு பிரச்சனையே பகத் வடிவில் வர, பிறகு என்ன ஆனது என்பதன் அதகளம் தான் இந்த ஆவேசம்.

படத்தின் ஹீரோ பகத் பாசில் என்றாலும் அந்த கல்லூரி மாணவர்களாக வரும் 3 பேரும் நடிப்பில் அசத்தியுள்ளனர். அதிலும் பகத்-வுடன் அவர்கள் நட்பு ஏற்பட்டு பயந்து பயந்து பழகி, பிறகு கெத் ஆக கல்லூரிக்கு செல்வது ஒரு கட்டத்தில் பகத்திடம் இருந்து வந்தால் போதும் என அவர்கள் முழிப்பது என முதல் படம் இவர்களுக்கு என்றால் நம்ப முடியாத நடிப்பு.

பகத் கதாபாத்திரம் மனுஷனுக்கு கிடா வெட்டி விருந்து வச்சது போல் ஒரு ரோல், பின்னி பெடல், அதிலும் அம்மாக்கு செய்த சத்தியத்திற்காக யாரையும் அடிக்காமல் தன் ஆட்களை வைத்து அடிக்கும் காட்சியில் அவர் கொடுக்கும் ரியாக்ஸன் தூள்.

ஒரு கட்டத்தில் அந்த மாணவர்களை தன் தம்பி போல் பார்க்க ஆரம்பிக்க, அவர்களுக்காக கல்லூரி சென்று சீனியர்களை அடிக்கும் காட்சி பட்டாசு, சண்டை முடிந்து மலையாளம், கன்னடம் மொழியில் மிரட்டி, ஹிந்தியில் மிரட்ட ஆரம்பிக்கும் போது, ஹிந்தி வேண்டாம்ப்பா என்று சொல்லும் இடமெல்லா விசில் பறக்கிறது.

படம் முழுவதுமே காமெடி காட்சிகள் நிறைந்தே காணப்படுகிறது. பகத்தின் நம்பிக்கைக்கு உரிய அடியாளாக வரும் அம்பன் பகத் பற்றி சொல்லும் கதையெல்லாம் செம காமெடியாக ஆரம்பித்து, பிறகு அதெல்லாம் உண்மை என்று தெரியும் இடத்தில் சுவாரஸ்யம் கூடுகிறது.

படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் பயணிக்க, இரண்டாம் பாதி கொஞ்சம் தள்ளாட பிறகு பகத்தே கிளைமேக்ஸ் வரை படத்தை தாங்கி செல்கிறார், அதிலும் கிளைமேக்ஸ் பகத்தின் அடாவடியான நடிப்பு அவர் திரைப்பயணத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். மேலும் அடிதடி சத்யராஜ் கேரக்டரையும் கொஞ்சம் நியாபகப்படுத்துகிறது இந்த ரங்கா கேரக்டர்.

படத்தில் வரும் பேச முடியாத கார் ட்ரைவர், கல்லூரி முதல்வராக வரும் ஆசிஷ் வித்தியார்த், சீனியர் குட்டி ஏட்டன் மன்சூர் அலிகான் என அனைவருமெர் தங்கள் பங்கிற்கு ரகளை செய்துள்ளனர்.

ஆனால், சமீபத்தில் ஜெயமோகன் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் மலையாள இளைஞர்கள் குடித்துக்கொண்டே இருப்பார்கள் என்பது போல் சர்ச்சையாக பேசினார். இந்த படத்தை பார்த்தால் என்ன சொல்வாரோ, ஏனெனில் கல்லூரி மாணவர்கள் என்று காட்டினாலும், போதை பொருள் எல்லாம் எதோ காலை இட்லீ சாப்பிடுவது போல் மிகவும் நார்மலைஸ் செய்துள்ளது என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ..

படத்தின் மிகப்பெரிய பலம் சுசின் ஷியாம் இசை தான், பாடல்கள், பின்னணி என அந்த ஊர் அனிருத் போல் அதகளம் செய்துள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் நடிகர், நடிகைகளின் நடிப்பு, அதிலும் பகத்தின் அரக்கத்தனமான நடிப்பு.

படத்தில் வரும் ஒன் லைனர் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஸ்டெண்ட் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது.

படம் முழுவதும் நிறைந்திருக்கும் போதை காட்சிகள்.

மொத்தத்தில் ஆவேசம் இளைஞர்களுக்கு திரையரங்கில் ஒரு திருவிழா தான். 

‘ஈரம்’ ஆதி

0

நடிகர் ஆதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

ஈரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அய்யனார், அரவான், கோச்சடையான், வல்லினம், ரங்கஸ்தலம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, நடிகை நிக்கி கல்ரானியை 2022 ஆம் ஆண்டு மணமுடித்தார்.

தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் ‘சப்தம்’ படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சப்தம் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய், தக்குபாடி வெங்கடேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.

https://www.instagram.com/p/C5lNIysReWI/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==


 

 

கங்குவா படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற சூர்யா

0

நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் கங்குவா.

சிவா அவர்களின் இயக்கத்தில் சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

இதில் சூர்யா நாயகனாக நடிக்க திஷா படானி, பாபி தியோல், நட்ராஜன், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை, அதோடு படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா 6 கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா ரூ. 28 கோடி வரை குறைவான சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

காரணம் 24 படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக போதிய கலெக்ஷன் பெறவில்லை. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

அப்பட நஷ்டத்தை ஈடுசெய்ய கங்குவா படத்திற்காக சூர்யா குறைவான சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கதறி அழுதும் கருணை காட்டாத கொடூரர்கள்..!

0

நடிகை தீபா சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு படுமோசமாக ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கதறி அழுதும் கொடூரர்கள் அவர் மீது கருணை காட்ட வில்லை என்றும் கூறப்படுகிறது.

திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதன் மூலம் பிரபலமான தீபா, குக் வித் கோமாளி சீசன் 2 ,மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உட்பட சில விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ளார்.

மேலும் மெட்டி ஒலி, மலர்கள், கோலங்கள், கார்த்திகை பெண்கள், வாணி ராணி, சரவணன் மீனாட்சி, செந்தூரப்பூவே உள்பட பல சீரியல்களில் நடித்த அவர்  தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியலில் நடித்து வருகிறார்.

அதேபோல் திரைப்படங்களைப் பொறுத்தவரை அவர் ’மாயாண்டி குடும்பத்தார்’ ’கடைக்குட்டி சிங்க’ம் ’டாக்டர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் ’இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை சிலர் அணுகியதாகவும் முதன் முதலாக வெளிநாட்டு பயணம் என்பதால் தீபா சம்மதம் தெரிவித்து ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளம் பேசப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் துபாய் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்த நிலையில் அவருக்கு பேசிய தொகையை விட பாதி மட்டுமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை கேட்டு அவர் கிட்டத்தட்ட கதறி அழுதும் கூட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொடூரர்கள் கருணை காட்டவில்லை என்றும் அந்த பணத்தை தன்னால் வாங்கவே முடியவில்லை என்றும் தீபா தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

ஒருவழியாக ரிலீஸ் ஆகிறது ‘அண்டாவ காணோம்’..

0

விஷால் நடித்த ’திமிரு’ பிரகாஷ்ராஜ் நடித்த ’காஞ்சிவரம்’ தங்கர் பச்சான் இயக்கிய ’பள்ளிக்கூடம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’.

இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின் தள்ளி வைக்கப்பட்டது என்பதும் அதன் பின் திடீரென ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததாகவும் அதன் பின் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் நீங்கி ரிலீசுக்கு ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் முன்னா மற்றும் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை வேல்மதி என்பவர் இயக்கி உள்ளார். நீண்ட கால தாமதத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://x.com/CineTimee/status/1778360107971056032 

 

 

 

 

 

 

‘துப்பறிவாளன் 2’..அப்டேட்

0

விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ’துப்பறிவாளன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணியை சமீபத்தில் முடித்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் செய்யும் வேலையை விஷால் நேரடியாக செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

’துப்பறிவாளன்’ திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த விஷால் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் இரண்டாம் பாகத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக சமீபத்தில் லொகேஷன் பார்க்கும் பணிக்காக விஷால் லண்டன் சென்று இருந்தார் என்பதும் அதனை அடுத்து அஜர்பைஜான், மால்டா உள்ளிட்ட பகுதிகளில் அவர் லொகேஷன் பார்த்து விட்டு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால், பிரசன்னா தவிர மேலும் சில நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களை விஷாலே ஆடிஷன் வைத்து தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் ஆடிஷன் செய்து அதன் பிறகு தான் தேர்வு செய்யப்பட்டவர்களை இயக்குனரிடம் அறிமுகப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் விஷால் நேரடியாக ஆடிஷனில் கலந்து கொண்டு இந்த படத்தின் சில கேரக்டர்களுக்காக அவரே நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

கொஞ்சம் உற்று பார்த்தால் தலையே சுற்றிடும்……

0

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் பறிபோனது.

இதன் காரணமாக ரசனையே இன்றி உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

இவர் அணியும் ஆடைகளை பார்ப்பதற்கு என்றே சமூக வலைத்தளங்களில் இவருக்கென ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்றே கூறலாம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் ஆடைக்கு பதிலாக f பேனை தனது மேலாடையை சுற்ற வைத்த காட்சிகள் ரசிகர்களை நிலைகுலைய வைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது அங்கங்கே கிழித்து போட்ட ஏதோ ஒரு வடிவிலான ஆடையை உடுத்தியுள்ளார் உர்ஃபி ஜாவேத்.

இது என்ன டிசைன் என்றே தெரியாமல் ரசிகர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். ஆனாலும் இவரது ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, இவரது போட்டோக்களை கொஞ்சம்  உற்று பார்த்தால் தலையே சுற்றிடும் என கலாய்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C5nF7eJLh7Q/?utm_source=ig_web_copy_link

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அறிவிப்பு.

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் ஏற்கனவே சூரி நடித்து வரும் ’கொட்டுக்காளி’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் தற்போது ’குரங்கு பெடல்’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த படம் குறித்த டைட்டில் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவின்படி இந்த படத்தை இயக்குபவர் கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்றும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தரமான சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/reel/C5no6H1RfRu/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

‘ஒரு நொடி’ டீசர்..

0

‘ஒரு நொடி’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ’ஆகி வரும் நிலையில் இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருப்பதாக தெரிகிறது.

இந்த டீசரில் ஒரு பெண் காவல் நிலையத்தில் ‘என் புருஷனை காணும்’ என்று புகார் கொடுக்கும் நிலையில் டீசரின் பின்னணியில் உள்ள வசனத்தில் ’ஒரு நேர்மையான போலீஸ்காரனுக்கு எப்பவாவது ஒரு சவாலான கேஸ் வரும், எல்லா மனிதர்களுக்குள்ளேயும் ஒரு மிருகம் இருக்கும், சில சமயம் ஒரு நொடியில் நாம் எடுக்கிற முடிவு தான், நாம் மனுஷனா இல்ல மனித மிருகமான்னு காட்டிக் கொடுக்கும். அந்த ஒரு நொடி நம்ம வாழ்க்கையே புரட்டி போட்டு விடும், அப்படித்தான் இந்த கேசும்’ என்ற பின்னணியில் இருக்கும் காட்சிகள் உண்மையாகவே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி உள்ளது.

இந்த படத்தில் தமன் குமார், எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மணிவர்மன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

ரதிஷ் ஒளிப்பதிவில் குரு சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.