Home Blog Page 38

லியோ படத்தின் புதிய அப்டேட்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இவருடைய கதாபாத்திரமான ஹரோல்ட் தாஸின் தொடர்பாக அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ளதாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.

 

தனுஷூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0

கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவித்தனர்.

சமீபத்தில் தனுஷ் 51வது படமாக சேகர் கம்முலா இயக்கும் படம் உருவாகிறது, இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ராஷ்மிகா தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததைத் தொடர்ந்து இப்போது தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.

பத்ரிநாத் கோவிலில் ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள்

0

ஜெயிலர் படம் வெளியான நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஜினி ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.

சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து நேற்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார். குளிருக்காக கையுரை மற்றும் மப்ளர் அணிந்த படி கோவிலுக்கு சென்றார். ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சிவாஜி படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0

கடந்த 2007ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘சிவாஜி தி பாஸ்’. ஸ்ரேயா, ரகுவரன், விவேக், சுமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர் மற்றும் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஏ.வி.எம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ரூ.100 கோடி உலகளவில் வசூலித்த முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சிவாஜி தி பாஸ் படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

200 கோடி வசூலில் போட்டி போடும் ரஜினிகாந்த், விஜய்

0

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூலைப் பெறுவதென்பதுதான் ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அதன் பிறகு அது 500 கோடிக்குச் சென்று இப்போது 1000 கோடி என்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் ‘டங்கல் (2016)’, ‘பாகுபலி 2 (2017)’, ‘ஆர்ஆர்ஆர் (2022)’, ‘கேஜிஎப் 2 (2022)’, ‘பதான் (2023)’ ஆகிய திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளன.

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் 500 கோடி வசூலைக் கடந்த படங்களாக ‘2.0 மற்றும் பொன்னியின் செல்வன் 1’, 400 கோடி வசூலைக் கடந்த படமாக ‘விக்ரம்’, 300 கோடி வசூலைக் கடந்த படமாக ‘பொன்னியின் செல்வன் 2′ ஆகிய படங்கள் உள்ளன.

200 கோடி வசூலைக் கடந்த படங்களாக விஜய் நடித்து வெளிவந்த ‛மெர்சல் (2017), சர்க்கார் (2018), பிகில் (2019), மாஸ்டர் (2021), பீஸ்ட் (2022), வாரிசு (2023)’ ஆகிய 6 படங்கள் உள்ளன. ரஜினியின் 200 கோடி படங்களாக ‛எந்திரன் (2010), கபாலி (2016), 2,0 (2018), பேட்ட (2019), தர்பார் (2020), ஜெயிலர் (2023)’ ஆகிய 6 படங்கள் உள்ளன. 200 கோடி வசூலைப் பொறுத்தவரை இருவரும் தற்போது சம நிலையில் உள்ளனர்.

ஆனால், விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள ‘லியோ’ படமும் 200 கோடி வசூலை நிச்சயம் கடக்கும் என இப்போதே பாலிவுட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இருப்பினும் அதிக வசூலில் 500 கோடி வசூலைக் கடந்த சாதனையை முதலில் படைத்தவர் என்பதில் ரஜினிகாந்த் உச்சத்தில் இருக்கிறார். அந்த வசூலை விஜய் படங்கள் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஜெயிலர் – விமர்சனம்

0

ரஜினிகாந்த் ஜெயிலர் படம் எப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அப்படி ஒரு படத்தைக் கொடுத்து ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினிகாந்த் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய ஸ்டைலிஷ் ஆன ஆக்ஷன் கொடுத்து அசத்தியிருக்கிறார். நெல்சன் இதற்கு முன் இயக்கிய அவரது படங்களில் அவருக்கென ஒரு திரைக்கதை அமைப்பை உருவாக்கி இருந்தார். அந்த அமைப்பிலேயே ரஜினி கதாபாத்திரத்தையும் உருவாக்கி அதில் என்னவெல்லாம் விஷயங்களை சேர்க்க வேண்டுமோ அதை சரியாகச் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர். அவருடைய மகன் வசந்த் ரவி, உதவி கமிஷனர். சிலை கடத்தல் வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்து அதில் தீவிரமாக இறங்குகிறார் வசந்த் ரவி. சிலை கடத்தலை செய்யும் விநாயகம் ஆளான சரவணனை கைது செய்து விசாரிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் விநாயகம் வசந்த் ரவியை கடத்தி விடுகிறார்.

ஆனால் வசந்த் ரவி கொலை செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ரஜினியின் குடும்பத்தினரையும் கொல்ல வில்லன் விநாயகம் முயற்சிக்கிறார். தன் மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்கி தனது குடும்பத்தினரை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் ரஜினிகாந்த். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். நெல்சன் எண்ணங்களுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை காட்சிக்கு காட்சி அலப்பறை செய்ய வைக்கிறார் ரஜினிகாந்த். கடந்த சில படங்களாக ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவிற்கு அவரது படங்கள் அமையவில்லை.

ஆனால் இந்தப் படத்தில் அந்தக் குறை எதுவும் இல்லை. இத்தனை வயதிலும் தன்னுடைய நடிப்பிலும், ஸ்டைலிலும் ரஜினி அப்படியே இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. ஆரம்பத்தில் அப்பாவியான மனிதராக, பேரனுக்கு பயந்தவராக இருக்கிறார். மகனைக் காணவில்லை என்றதும் களத்தில் இறங்குகிறார். பிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்ச நேரமே வந்தாலும் இளமையான ரஜினிகாந்த் அதிரடி காட்டுகிறார். ரஜினியின் வயதுக்குரிய கதாபாத்திரம் அமைத்திருப்பது சிறப்பு.

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் வந்தாலும் ரஜினியின் நண்பர்களாக சரியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இடைவேளை வரை படத்தை கலகலப்பாக கொண்டு செல்பவர் யோகிபாபு. அவருக்கும் ரஜினிக்குமான காட்சிகள் எல்லாம் நெல்சன் ஸ்டைல் காமெடி. இடைவேளைக்கு பின் தெலுங்கு நடிகர் சுனில் காட்சிகள் படத்திற்கு வேகத்தடை. அந்த தொய்வை கிளைமாக்ஸில் சரி செய்து விட்டார் நெல்சன்.

படத்தில் கதாநாயகி என்று யாரும் கிடையாது. ஒரே ஒரு பாடலுக்கும் ஒரு சில காட்சிகளுக்கும் மட்டும் வந்து போகிறார் தமன்னா. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, மாஸ்டர் ரித்விக் ஆகியோர் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகின்றனர்.

மலையாள நடிகர் விநாயகம் படத்தின் மெயின் வில்லன். கொலைகளை செய்வதில் கொடூரமாகவும் வில்லத்தனத்தில் மாறுபட்டும் தெரிகிறார்.

அனிருத் இசையில் காவாலா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் சிச்சுவேஷன் பாடல்களாக இருந்தாலும் ஈர்க்கவில்லை. பின்னணி இசை ஓகே. ரஜினியின் ஹீரோயிச வசனத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

இடைவேளை வரை கலகலப்பாகவும் சென்டிமெண்ட் ஆகவும் நகர்கிறது படம். இடைவேளைக்குப்பின் ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது. போதைப்பொருள் கடத்தலில் இருந்து சிலை கடத்தலுக்கு மாறி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். கிளைமாக்ஸில் ரஜினிகாந்த் சுருட்டு பிடிக்கும் காட்சிகள் அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

‛தர்பார், அண்ணாத்த’ படங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஜெயிலர் ரசிகர்களை திருப்திப்படுத்தலாம்.

‛ஜெயிலர்’ – ‛டைகர் கா ஹூக்கும்’

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் FDFS- முதல் பாதி எப்படி உள்ளது

0

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். தமிழகத்தில் 9 மணிக்கு தான் முதல் ஷோ, எனவே நடிகரின் ரசிகர்கள் பலரும் பெங்களூர் சென்றுவிட்டனர்.

அங்கு காலை 6 மணிக்கே முதல் ஷோ, அதேபோல் சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் ஜெயிலர் FDFS தொடங்கிவிட்டது.

படத்தை காண ஆரம்பித்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

காதலியை கரம்பிடிக்கிறார் கவின்

0

சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பயணிக்க தொடங்கிய அவருக்கு ‛லிப்ட், டாடா’ படங்கள் வெற்றியை தந்தன. தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அதை கவின் தரப்பிலேயே அறிவித்துள்ளனர்.

தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இடம் தெரிவிக்கப்படவில்லை. கவினின் சொந்த ஊரில் நடக்கலாம் என தெரிகிறது.

முன்னதாக 2019ல் நடைபெற்ற ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதில் மற்றுமொரு போட்டியாளராகக் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியாவைக் காதலிப்பதாக பரபரப்பு எழுந்தது. ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பின் இருவரும் அவரவர் சினிமாவில் பயணிக்க தொடங்கி விட்டனர்.

‘ கதாநாயகி ‘யை தேர்வு செய்யும் ராதிகா, கே.எஸ்.ரவிகுமார்

0

விஜய் டிவி தொடர்ந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‘ கதாநாயகி ‘ என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இது திரைப்படத்திற்கு கதாநாகியை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாகும். இதற்காக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முதல்கட்ட தேர்வு நடந்தது. நடிக்க ஆர்முள்ள பெண்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் இருந்து 8 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.

அவர்களுக்கு பாடும் திறன், ஆடும் திறன், நடிப்பு திறன் வெளிப்படுத்தும் வகையிலான சுற்றுகள் நடத்தப்பட்டு அதற்கு மதிப்பெண் வழங்கப்படும். இதன் முடிவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகிறவர்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்படுவார்கள். அவரை கே.எஸ்.ரவிகுமார் தனது படத்தில் அறிமுகப்படுத்துவார். வேறு இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் நடுவர்களாக இருந்து நடத்துகிறார்கள். கலக்கப்போவது யார் புகழ் குரேஷி தொகுத்து வழங்குகிறார். கடந்த 29ம் திகதி தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

‘சர்தார் 2’ படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை

0

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் ‘சர்தார்’. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளது என அப்போதே படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.

கார்த்தி தற்போது நடித்து வரும் ‛ஜப்பான்’ படம், நலன் இயக்கத்தில் நடிக்கும் ஒரு படம், பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் ஆகியவற்றிற்குப் பிறகு ‘சர்தார் 2’ படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. ‘ஜப்பான்’ மற்றும் நலன் இயக்கும் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பிரேம்குமார் இயக்க உள்ள படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கப் போகிறார்.

‘சர்தார்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் ‘சர்தார் 2’ படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். பிஎஸ் மித்ரன் இயக்கிய ‘இரும்புத் திரை, ஹீரோ’ படங்களுக்குப் பிறகு மித்ரன், யுவன் கூட்டணி ‘சர்தார் 2’ படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு யுவன், கார்த்தி கூட்டணி, “பையா, பிரியாணி, நான் மகான் அல்ல, விருமன்” ஆகிய படங்களில் இணைந்தது.