Home Blog Page 39

சமந்தா உடன் குரங்கு எடுத்துக் கொண்ட செல்பி

0

நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் தான் நடித்து வந்த சிட்டாடல் என்கிற வெப் தொடரையும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.

பொதுவாக படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஆன்மீக சுற்றுலாவோ அல்லது தனது நண்பர்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவது சமந்தாவின் வழக்கம். அதிலும் அவர் தற்போது படப்பிடிப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனது நண்பர்களுடன் பாலி தீவிற்கு உற்சாக சுற்றுலா சென்றுள்ள சமந்தா, விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.

மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது பாலி தீவில் உள்ள உபத் குரங்கு காட்டிற்கு தனது தோழியுடன் விசிட் அடித்ததுடன் அங்குள்ள குரங்கு ஒன்றுடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.

இல்லை இல்லை அங்குள்ள குரங்கு ஒன்று சமந்தாவுடன் செல்பி எடுத்து அவரை மகிழ்வித்துள்ளது. என்று சொல்லலாம் இதுகுறித்து ஸ்பாட் தி மங்கி என்கிற கேப்சனுடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் இயக்கத்தில் நடிப்பதை உறுதிபடுத்திய சந்தீப் கிஷன்

0

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். .ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான வட சென்னை அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீசரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் தியேட்டரில் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து அதனுடன் ‘கேப்டன் மில்லர் டீசரை’ திரையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, “கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் அண்ணா இயக்கி, நடிக்கும் தனுஷ் 50வது படத்திலும் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

டைனோசர்ஸ் – விமர்சனம்

0

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வட சென்னை ரவுடியிசக் கதை. ஏற்கெனவே இம்மாதிரியான படங்களை நிறைய முறை பார்த்துவிட்டதால் புதிதாக ஏதாவது இருந்தால் மட்டுமே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என இயக்குனர் நினைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி புதிதாக எதையும் யோசிக்காமல் ஒரு பழி வாங்கும் கதையையே கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் மாதவன்.

வட சென்னையில் ரிஷி, மாறா இருவரும் நெருங்கிய நண்பர்கள். ரிஷி ஒரு டெய்லர் கடையை நடத்தி வருகிறார். மாறா அடியாளாக இருந்து மாறி திருமணம் செய்து கொண்டு ரவுடியிசத்தை விட்டு இருக்கிறார். பிரபல ரவுடியான கவின் ஜே பாபுவின் மைத்துனர் கொலை வழக்கிற்காக எட்டு பேர் சரண்டர் ஆக வேண்டிய சூழ்நிலையில் நண்பன் மாறாவுக்குப் பதிலாக தனா சரண்டர் ஆகிறார். ஆனால், ஆள் மாறாட்டம் நடந்ததைத் தெரிந்து கொண்ட கவின், பழிக்குப் பழியாக மாறாவைக் கொலை செய்கிறார். அதற்குப் பழி வாங்க மாறாவின் நண்பனான ரிஷியின் தம்பி உதய் கார்த்திக் துடிக்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நட்பு, துரோகம், பழி வாங்கல், காதல், குடும்பம், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த ‘கேங்ஸ்டர்’ படமாக இப்படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகள் சிறப்பாக இருக்கிறதே என பாராட்ட வைக்க, அடுத்த காட்சியே சுமாராக அமைந்து தடுமாற வைத்துவிட்டது. இடைவேளைக்குப் பின் இன்னும் சுவாரசியமான காட்சிகளை அமைத்திருந்தால் வட சென்னை சம்பந்தப்பட்ட படங்களில் இந்தப் படமும் முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

படத்தின் ஆரம்பத்தில் மூன்று கதாநாயகர்கள் என்பது போல ஆரம்பித்தாலும் போகப் போக உதய் கார்த்திக் மட்டும்தான் படத்தின் கதாநாயகன் என அவரை மையப்படுத்தியே திரைக்கதை நகர்கிறது. அடிதடி சண்டையே வேண்டாமென ஒதுங்கி நிற்பவர் உதய் கார்த்திக். தனது அண்ணனின் நண்பனுக்காக ஏரியா ரவுடிகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். மண்ணு என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் போகப் போக கதாபாத்திரத்திற்குள் புதைந்துவிடுகிறார் உதய் கார்த்திக்.

நெருங்கிய நண்பர்களாக ரிஷி, மாறா. புதிதாகத் திருமணமான நண்பனுக்காக சிறைக்குச் செல்லவும் தயங்காத நண்பர் ரிஷி. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நண்பர்கள் இருப்பார்களா என யோசிக்க வைக்கிறார். இடைவேளைக்குப் பின் இவரும் சிறையிலிருந்து வெளியில் வந்து நண்பனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே. கொஞ்ச நேரமே வந்தாலும் மாறாவின் மரணம் கலங்க வைத்துவிடுகிறது.

வட சென்னையின் இரண்டு முக்கிய ரவுடிகளாக மானேக்ஷா, கவின் ஜே பாபு. இருவரைப் பார்த்தாலுமே ரவுடி என நம்ப முடிகிறது. தோற்றத்தில் இருப்பதை நடிப்பிலும் வெளிப்படுத்தி மிரட்டுகிறார்கள். படத்தில் யாருக்காவது ஜோடி வைத்தாக வேண்டும் என கதாநாயகிகள் கதாபாத்திரத்தை திணித்திருக்கிறார்கள். மாறாவின் புது மனைவியாக யாமினி சந்தர், உதய் கார்த்திக்கின் காதலியாக சாய் பிரியா தேவா நடித்திருக்கிறார்கள்.

போபோ சசி வட சென்னைக்குரிய பின்னணி இசையை தனித்து கொடுத்திருக்கிறார். கதைக்களத்தை தன் ஒளிப்பதிவில் இயல்பாய் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி ஆனந்த். காட்சிகளின் நீளத்தை எடிட்டர் கலைவாணன் குறைத்திருக்கலாம்.

ஆங்காங்கே வசனங்கள் நச்சென்று அமைந்துள்ளன. கதாபாத்திரங்களும், சில பரபரப்பான காட்சிகளும் தான் படத்தைக் காப்பாற்றுகிறது. ஒரு காட்சி வந்தால் சீக்கிரம் முடியாமல், நீண்டு கொண்டே போகிறது. இடைவேளைக்குப் பின் என்ன மாதிரியான காட்சிகளை வைப்பது என இயக்குனர் தடுமாறியிருக்கிறார். இவற்றையெல்லாம் சரி செய்திருந்தால் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கும்.

டைனோசர்ஸ் – கொஞ்சம் ‘நோ’, கொஞ்சம் ‘சரி’

லவ் – விமர்சனம்

0

‘லவ்’ எனப் பெயரை வைத்துவிட்டு ‘லவ்வே’ இல்லாமல் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அழகான ஒரு காதல் கதைக்கு வைக்க வேண்டிய பெயரை ‘கள்ளக் காதல்கள்’ கொண்ட ஒரு படத்திற்கு வைத்து வீணடித்திருக்கிறார்கள்.

2021ல் மலையாளத்தில் வெளிவந்த ‘லவ்’ என்ற திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.

‘புலி முருகன், குரூப்’ உள்ளிட்ட மலையாள டப்பிங் படங்களுக்கு தமிழில் வசனம் எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். முழு படமும் ஒரு அபார்ட்மென்ட் வீட்டுக்குள்ளேயே நகர்கிறது. ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுதான் வருகிறதே தவிர, படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படவில்லை.

பணக்கார வீட்டுப் பெண் வாணி போஜன். அவரது அப்பா ராதாரவி சொல்லி பரத்தை சந்தித்து திருமணம் பற்றி பேச வருகிறார். பிசினஸ் ஆரம்பித்து தோற்றுப் போனவர் பரத். அப்பா திடீரென வேண்டாமென்று சொல்லியும் பரத்தைத் திருமணம் செய்து கொள்கிறார் வாணி. ஆனால், இருவரது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இல்லை.

தாய்மை அடைந்த செய்தியை மருத்துவமனையில் உறுதி செய்துவிட்டு வீட்டிற்க வரும் வாணியிடம் சண்டை போட்டு அவரைக் கொன்றும் விடுகிறார் பரத். திடீரென காலிங் பெல் அடிக்க, வாணியின் உடலை பாத்ரூமில் மறைத்து வைக்கிறார்.

பரத்தின் நெருங்கிய நண்பர் விவேக் பிரசன்னா வீட்டிற்குள் வர, மனைவியைக் கொன்ற நிலையில் அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறார் பரத். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் பரத். பிசினஸில் தோல்வியடைந்த, வேறு எதையும் சரியாக முயற்சிக்காத பொறுப்பில்லாத ஒரு கணவர்.

படத்தில் அவர் நடித்ததை விட குடித்ததுதான் அதிகமாக இருக்கும். அந்த ‘சரக்கு’ பாட்டில் குடிக்கக் குடிக்கக் குறையாமல் இருக்கிறது. அப்படி ஒரு ‘சரக்கு’ கிடைத்தால் குடிமகன்களுக்கு செலவு குறையும்.

வாணி போஜனுக்கு ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகள், அதோடு கிளைமாக்சில் மட்டும். மற்ற நேரங்களில் பாத்ரூமில் பிணமாக சுருண்டு கிடக்கிறார். பரத்தின் நெருங்கிய நண்பராக விவேக் பிரசன்னா.

அவரது மனைவியை அவரது நண்பன் ஒருவரே கள்ளக் காதல் புரிகிறார் என பரத் வீட்டில் வந்து புலம்பிக் கொண்டு கூட சேர்ந்து குடிக்கிறார். வேறொருவரின் மனைவியான தனது முன்னாள் காதலியை அழைத்துக் கொண்டு பரத் வீட்டிற்கு வருகிறார் டேனி அனி போப். ஒரு கட்டத்தில் அது வீடா இல்லை ‘லோக்கல்’ லாட்ஜா என யோசிக்க வைக்கிறது.

ஒரே வீட்டை எப்படியாவது விதவிதமான கோணங்களில் காட்ட வேண்டும் என நிறையவே முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் முத்தையா. ரோனி ரபேல் பின்னணி இசையும் படத்தைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

ஒரு படம் என்றால் அதில் ஏதாவது ஒரு விஷயமாவது ரசிக்கும்படி இருந்தால் ரசிகர்களால் கொஞ்சமாவது ரசிக்கப்படும். அப்படி எவ்வளவு தேடினாலும் இந்தப் படத்தில் எதுவும் கிடைக்கவில்லை.

‘காதல்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடித்த பரத்தின் 50வது படம் இந்த ‘லவ்’. அப்போது வந்த ‘காதல்’ கவர்ந்தது, இப்போது வந்த இந்த ‘லவ்’ கசக்கிறது.

லவ் – அவ்வ்வ்வ்வ்வ்…

எல்ஜிஎம் – விமர்சனம்

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்எஸ் தோனி, திரைப்படத் தயாரிப்புத் துறையில் இறங்கி தனது முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழில்தான் தனது முதல் தயாரிப்பு இருக்க வேண்டும் என்று நினைத்த தோனிக்கு ஒரு தரமான படத்தைக் கொடுத்து முத்திரை பதித்திருக்கலாம் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. இந்தக் கதை போல எல்லாம் படமாகத் தயாரிக்கலாம் என தோனி அண்ட் கோ நினைத்தால் அவர்கள் உடனடியாக தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பவர் ஹரிஷ் கல்யாண். அவருடன் வேலை பார்க்கும் இவானாவைக் காதலிக்கிறார். இரண்டு வருடங்கள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், தனது வருங்கால மாமியாரான நதியாவுடன் பழகிப் பார்த்த பின்புதான் திருமணம் என ஒரு ‘ஐடியா’ கொடுக்கிறார் இவானா. அதனால் ஒரு ‘ட்ரிப்’ போக ஆசைப்படுகிறார்கள்.

அம்மா நதியாவிடம் பொய் சொல்லி ட்ரிப்புக்கு அழைத்துப் போகிறார் ஹரிஷ். இவானா குடும்பத்தினர், தோழி, ஹரிஷ் குடும்பத்து தோழி வினோதினி குடும்பத்தினர், ஹரிஷ் நண்பர் ஆர்ஜே விஜய் ஆகியோரும் ட்ரிப்பில் கலந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் நதியாவுக்கு உண்மை தெரிய வர கூர்க் வரை சென்ற பின் ட்ரிப்பை கேன்சல் செய்கிறார்கள். ஆனாலும், நதியா, இவானா திடீரென தனியாகச் செல்கிறோம் என பிரிந்து போகிறார்கள். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

இம்மாதிரியான கதைகளை உளவியல் ரீதியான, கலகலப்பான, சென்டிமென்ட் படமாகக் கொடுத்திருந்தால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும். ஆனால், எதிலுமே ஒரு முழுமை இல்லாமல் திரைக்கதை அதன் போக்கில் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. ட்ரிப் போகும் சாலைகளிலாவது திருப்பங்கள் அடிக்கடி வரும். இந்தப் படத்தில் இடைவேளையின் போது வரும் ஒரே ஒரு திருப்பம் தவிர மேடு, பள்ளங்களில் மட்டுமே திரைக்கதை பயணிக்கிறது.

ஹரிஷ் கல்யாண் படம் முழுவதும் எதையோ பறிகொடுத்தவர் போல உம்மென்றே இருக்கிறார். அம்மா நதியா ஒரு பக்கம், காதலி இவானா ஒரு பக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக் கொள்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஹரிஷ் கல்யாண் இப்படி ஒரு பக்கம் ‘உம்’மென்று இருக்க, இன்னொரு பக்கம் இவானா ‘அய்யே’ என அடிக்கடி அலுத்துக் கொள்கிறார். உங்களுக்கு என்னதான்பா பிரச்சனை என சத்தம் போட்டு கேட்கத் தோன்றுகிறது.

நதியா முகத்தில் அவ்வளவு களைப்பு ஏன் என்று தெரியவில்லை. கண்களுக்குக் கீழே தூக்கமில்லாததால் வரும் சுருக்கம் அவரது தோற்றத்தையே கெடுத்துவிடுகிறது. இடைவேளை வரை அம்மா நதியாவாக இருப்பவர், இடைவேளைக்குப் பின் 80களின் நதியாவாக மாறிவிடுகிறார், ஆடைகளில் மட்டுமே அந்த மாற்றம்.

படத்தில் நடித்தேயாக வேண்டும் என யோகிபாபுவிடம் கேட்டதால் வந்து நடித்துக் கொடுத்திருப்பாரோ ?. திடீரென வந்து திடீரென காணாமல் போய் மீண்டும் திடீரென வந்து போகிறார், சிரிக்க வைக்காமல்… . ஹரிஷ் கல்யாணின் நண்பனாக ஆர்ஜே விஜய். ஒரு சில வசனங்களில் மட்டும் கலகலப்பூட்டுகிறார்.

படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். காட்சிகளில் ஒரு அழுத்தம் இருந்தால்தானே இசையிலும் எதிரொலிக்கும். விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் முழுவதுமே ‘ப்ளீச்’ ஆகி வெளிறிப் போயிருக்கிறது. அவரது ஒளிப்பதிவில் குற்றமா, அல்லது அதை கிரேடிங் செய்தவரது குற்றமா ?.

இடைவேளை வரை ஓரளவிற்குத் தாக்குப் பிடித்து ரசிக்க முடிகிறது. அதற்குப் பின்னால் ”என்னென்ன கதை சொல்றாங்க பாருங்க,” என களைப்படைய வைத்துவிடுகிறது.

எல்ஜிஎம் – எல்கேஜி

டிடி ரிட்டன்ஸ் – விமர்சனம்

0

பேய் படம் என்றால் பயமுறுத்த வேண்டாம், சிரிக்க வைக்கலாம் என ‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் சொல்லி வெற்றியும் பெற்றவர் சந்தானம். அந்த பார்முலாவை இந்த மூன்றாம் பாகத்திலும் பாலோ செய்து ரசிக்க வைத்திருக்கிறார். ‘டிடி ரிட்டன்ஸ்’ அதன் மூன்றாம் பாகம்தான் என படத்திலேயே சொல்லிவிட்டார் சந்தானம்.

முந்தைய படங்களில் வழக்கமான சந்தானத்தைப் பார்க்க முடியாமல் போக இந்தப் படத்தில் அவரை மீண்டு(ம்) அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். எந்த அவதூறும் இன்றி தான் மட்டும் நகைச்சுவை செய்யாமல் மற்றவர்களையும் சுவை குன்றாமல் செய்ய வைத்திருக்கிறார் சந்தானம்.

புதுச்சேரியில் ஒயின் ஷாப்களின் ஓனராக இருப்பவர் பெப்ஸி விஜயன். அவரது வீட்டில் பிபின் தலைமையிலான கூட்டம் ஒன்று கொள்ளையடிக்க திட்டமிடுகிறது. அவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றொரு கூட்டமான மொட்டை ராஜேந்திரனிடம் கைமாறி பின்னர் சந்தானத்திடம் வந்து சேர்கிறது. அந்தப் பணத்தை ஊருக்கு வெளியே ஒரு காட்டு பங்களாவில் மறைத்து வைக்கிறார்கள் சந்தானத்தின் நண்பர்கள்.

அது பற்றி தெரிய வந்த விஜயன், சந்தானத்தின் காதலி சுரபியைக் கடத்தி வைத்து அவரது பணத்தைக் கொண்டு வந்து தரச் சொல்கிறார்கள். அந்த காட்டு பங்களாவிற்குள் செல்லும் சந்தானமும், அவரது நண்பர்களும் அங்குள்ள பேய்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு சூதாட்ட கேமில் வெற்றி பெற்றால் மட்டுமே வெளியே போக முடியும் என பேய்க் குடும்பத்துத் தலைவன் பிரதீப் ராவத் சொல்ல, சந்தானம் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே காமெடிக்கும், கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது என புரிய வைத்துவிடுகிறார்கள். அதை கடைசியில் கிளைமாக்ஸ் வரை திரைக்கதையில் காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். பணத்தைக் கொள்ளையடிப்பதும், அது ஒருவர் மாறி மற்றொருவரிடம் சென்று பேய் பங்களா வரை போவதையும் லாஜிக்காகவே யோசித்திருக்கிறார்கள். அதன்பின் பேய்களின் ஆட்டம் என்பதால் நோ லாஜிக், ஒன்லி காமெடி மேஜிக் தான்.

தோற்றத்திலும், நகைச்சுவையிலும் பழைய பார்முக்கு நன்றாகவே ரிட்டர்ன் ஆகிவிட்டார் சந்தானம். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது. அப்படி நடந்து கொண்டால் டிடி ஆகவோ அல்லது பணமாகவோ அவருக்கு வந்து சேரும் என்பது உறுதி. ஹீரோ என்றால் எப்படியும் கடைசியில் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரிந்தாலும் பேய் பங்களாவில் அவர் ஆடும் அந்த ‘கேம் ஷோ’ தான் படத்தின் ‘ஷோ ஸ்டாப்பர்’.

சந்தானத்திற்கு ஒரு ஜோடி இருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகியாக சுரபி. சந்தானம்தான் கதாநாயகன் என்றாலும் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே முக்கியத்துவம் வரும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக மாறன், சேது. இந்தப் படத்திலும் மாறனின் டைமிங் வசனங்கள், டிரெண்டிங் வசனங்களாக அமைந்து ரசிக்க வைக்கிறது.

பிபின் தலைமையில் முனிஷ்காந்த் உள்ளிட்டவர்களின் கொள்ளை கூட்டம், மொட்ட ராஜேந்திரன் தலைமையில் தங்கதுரை உள்ளிட்டவர்களின் மற்றுமொரு கொள்ளை கூட்டம். வில்லன் பெப்ஸி விஜயனின் மகனான ரெடின் கிங்ஸ்லி, அடியாளாக தீனா. இவர்களும் ஆரம்பத்திலிருந்தே ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி, பேய் பங்களாவிற்குள் ஓடியோடி நம்மையும் சிரிக்க வைக்கிறார்கள்.

பேய் பங்களாவில் சூதாட்ட கேம் ஷோ நடத்தும் பிரதீப் ராவத், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மசூம் சங்கர், மானஸ்வி ஆகியோரும் பேய்களாக மிரட்டியுள்ளார்கள்.

புதுச்சேரியின் தெருக்கள், அந்த பேய் பங்களா என ஒளிப்பதிவாளர் தீப் குமார் பதி கதாபாத்திரங்களுடன் ஓடியாடி ஒளிப்திவு செய்திருக்கிறார். ஆப்ரோ இசையில் பின்னணி இசை பக்கபலமாய் அமைந்துள்ளது.

பேய் பங்களாவின் விஎப்எக்ஸ் காட்சிகளை இன்னும் தரமாக அமைத்திருக்கலாம். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளின் நீளத்தைச் சிறிது குறைத்திருக்கலாம். மற்றபடி நேரம் கடந்து போவதே தெரியவில்லை.

டிடி ரிட்டன்ஸ் – திருப்பித் தரும்… துட்டு.. துட்டு..

திவாலான ஆபீஸ்… தெருவுக்கு வந்த கோபி… பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து இதுதான் நடக்குமா?

0

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சினிமாவில் வில்லன்களும், சின்னத்திரையில் வில்லிகளும் ஆக்கிரமித்து வருவது வழக்கமான ஒன்று. இதில் சின்னத்திரையில் வில்லன்கள் முக்கியமாக இருப்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வு.

அந்த வகையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி இருந்தாலும் பிரபதான வில்லனாக கோபி கேரக்டர் அதகளம் செய்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். காமெடி வில்லனாவும் சீரியஸ் வில்லனாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கோபி இல்லை என்றால் பாக்கிலட்சுமி சீரியல் இல்லை என்று கூறி வருகின்றனர்.

சீரியலில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் வேறு ஒரு கேரக்டராக இருக்கும் நடிகர் சதீஷ், அவ்வப்போது பாக்கியலட்சுமி சீரியல் குறித்து ஹின்ட் கொடுத்து வருகிறார். மேலும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில் கோபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், தெருவை துப்புரவு செய்யும் வேலையை பார்த்தபடி இருக்கும் கோபி, என்னுடைய ஆபீஸ் திவாலாகி விட்டது. அதனால் நான் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் ” பட்டது போதும் பெண்ணாலே இதை பட்டினத்தாரும் சொன்னாரே. அவ சுட்டது போதும் சிவ சிவனே, சுட்டது போதும் சொல்லாலே நான் சுகப்படவில்லை அவளாலே. காசிக்கு போறேன் ஆளை விடு. என்னை இனிமேலாவது வாழ விடு. சுட்டது போதும் சொல்லாலே..” என்று பழைய பாடலை கேப்ஷன் ஆக கொடுத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் இரண்டு பொண்டாட்டி கட்டினால் நிலைமை இதுதான் என்று அவர் கருத்தும் சொல்லி இருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கம்பெனி திவாலாகிவிடுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CvGpxxDMh2t/

 

இறந்து போய் விடுவேனோ என பயந்தேன் – ஷெர்லின் சோப்ரா

0

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா. தமிழில் ‘யுனிவர்சிட்டி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். சமூகவலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்குவார். இந்நிலையில் தான் சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛2021ல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இறந்து போய்விடுவேனோ என பயந்தேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். வாரம் மூன்று டயாலிசிஸ் செய்ய சொன்னார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் எனக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன்வரவில்லை. இருப்பினும் 3 மாதம் தொடர் சிகிச்சையால் அந்த நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தேன்” என்றார்.

மேலும் கடந்த காலங்கள் சினிமா வாய்ப்பு பெற சென்றபோது சில சினிமா இயக்குனர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். ஆபாசமாக பேசனார்கள். சிலர் எல்லை மீறி நடந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. ஜெயிலர் படக்குழு

0

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி “ஜுஜுபி” என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவித்து, மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தி எக்ஸ்ட்ரானடிரி மேன் ஆக மாறிய நிதின்

0

தெலுங்கில் வக்கான்தம் வம்சி இயக்கத்தில் தற்போது நடிகர் நிதின் தனது 32வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ஸ்ரீசத் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளத. அதன்படி, இந்த படத்திற்கு ‘ தி எக்ஸ்ட்ரானடிரி மேன்’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். மேலும், வருகின்ற டிசம்பர் 23ம் தேதி உலகமெங்கும் இந்தபடம் வெளியாகிறது.