Home Blog Page 40

நயன்தாரா வீட்டின் மொட்டை மாடி

0

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை அவர்தான்.

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு உச்சத்தில் இருந்து வரும் நயன்தாரா சமீபகாலமாக நடிக்கும் வுமன் சென்ட்ரிக் படங்கள் பெரிய வெற்றியை பெற முடியாமல் தான் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது நயன்தாரா ஒரு புது ஆபிஸை கட்டி வருகிறார்.

வீட்டின் மொட்டை மாடியில் ஆபிசுக்கானா கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதன் புகைப்படங்கள் தற்போது நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார்.

 

வயதான ஜாக்கி சான்..

0

நடிகர் ஜாக்கி சான் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்ட நடிகராக இருந்து வருகிறார். அவரது குங்ஃபூ சண்டை காட்சிகள் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஜாக்கி சானுக்கு தற்போது 70 வயதாகிறது. அவர் நேற்று தான் 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சமீபத்தில் ஜாக்கி சான் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அவரது ரசிகர்கள் அதை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகி இருந்தனர்.

அதை பற்றி விளக்கம் கொடுத்த ஜாக்கி சான், “வருத்தப்படாதீங்க, அது என்னுடைய லேட்டஸ்ட் படத்தில் வரும் ஒரு கேரக்டர் தான். அந்த கதாபாத்திரம் வெள்ளை முடி, தாடி வைத்து வயதான தோற்றத்தில் நடிக்க தேவைப்பட்டதனால் நடித்தேன்” என கூறி இருக்கிறார்.

https://www.instagram.com/p/C5cvo9ZyK7o/?utm_source=ig_web_copy_link

 

விக்னேஷ் சிவன் கூறிய ஆச்சரிய தகவல்..!

0

என்னையும் நயன்தாராவின் சேர்த்து வைத்தது தனுஷ் தான் என இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பழக்கம் ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி, திருமணம் குழந்தைகள் என மாறிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க தனுஷ் தான் பரிந்துரை செய்தார் என்றும் அவர் சொன்னதால்தான் நயன்தாரா இந்த படத்தில் நடித்தார். அதன்பின்னர் தான் மற்றவை நடந்தது என்று விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’தனுஷ் தான் நானும் ரவுடிதான் படத்தின் கதையை நயன்தாராவிடம் சொன்னார் என்றும் நயன்தாராவுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததை அடுத்து அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் தெரிவித்தார்.

விஜய் சேதுபதியும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சரியாக வருமா என்று சந்தேகத்துடன் இருந்த நிலையில் நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்த பிறகு அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்றும் இந்த படத்தில் நானும் நயன்தாராவும் இணைந்து பணி புரியவும் பேசவும் பழகவும் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்றும் அவர் நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்த பேட்டியில் நயன்தாரா, ஷாருக்கான் குறித்து கூறிய போது ’பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தேன் என்றும் அந்த வகையில் ’ஜவான்’ படம் சரியாக அமைந்தது என்றும் ஷாருக்கானை பார்த்து தான் நாமெல்லாம் வளர்ந்திருக்கிறோம், அப்படிப்பட்ட நாம் ஷாருக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அதை மிஸ் செய்ய முடியுமா? அவர் நல்ல நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவர் பெண்களை மதிப்பவர்’ என்று நயன்தாரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பழனி அம்மாவின் ஆசை..

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், செழியன் ரூமில் போனை பார்த்துக் கொண்டு இருக்க, போன் பாவிப்பதை குறைக்குமாறு சொல்கிறார் ஜெனி. மேலும் செழியனின் போனை வாங்கி அவர் யார் யாருக்கு சட் பண்ணினார் என விசாரிக்கிறார்.

மறுபக்கம் காலையில் ஈஸ்வரி கால் வலிக்குது என ராமமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு வந்த எழில் அவரின் காலை பிடிக்க செல்ல, அவர் வேணாம் என எழுந்து விடுகிறார். கால் வலிக்குது என சொன்னிங்க நான் பிடிச்சு விடுறேன் எனவும் வேண்டாம் என செல்ல, அமிர்தா எல்லாம் என்னால தானே என எழிலிடம் மன்னிப்பு கேட்கிறார்.

இதையடுத்து பழனிச்சாமியின் பிறந்த நாளை எல்லாருக்கும் சொல்லி செய்ய வேண்டும் என பழனியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, அவரும் உன் விருப்பப்படியே  செய்றேன்  என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து வீட்டில் நானும் சமைக்க கற்றுக் கொள்கிறேன் என ஜெனி சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு செழியன் வேலைக்கு செல்ல கிளம்புகிறார். அவரிடம் எத்தின மணிக்கு வருவீங்க? ஆபிஸ்க்கு தானே போறீங்க? என கேள்வி மேல் கேள்வியாக கேட்க, ஏன் அவன் கிட்ட இப்படி லோயர் போல நடந்து கொள்ளுறா என கோவப்படுகிறார்.

அதன்பின், பழனி வீட்டுக்கு போன பாக்கியா அவரது அம்மாவுக்கு சாப்பாடு செய்து கொண்டு போய் கொடுக்க, அவரிடம் பழனிக்கு பிறந்த நாள் வருது. நீ தான் முன்னுக்கு நின்று செய்யணும், சாப்பாடு ஓடர் எடுத்துக் கொள்ளு என சொல்கிறார்.

அதன்பின் அங்கு வந்த பழனி, பாக்கியாவுடன் பேசிக் கொண்டு இருக்க, டீ போட்டு எடுத்து வருவதாக சென்று, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். பழனிக்கு ஆசை இருக்கு ஆனா கேட்டா இல்லை என்று தான் சொல்வான் என சொல்லிக் கொள்கிறார்.

மழையில் ஆடிய தர்ஷா குப்தா

0

நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் நனையும் கிளுகிளுப்பு நடனம் மற்றும் அந்தரத்தில் நடந்து வரும் சாகசம் ஆகியவற்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள தர்ஷா குப்தா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் அந்தரத்தில் நடந்து வரும் சாகச வீடியோ ஒன்றையும் மழையில் நனைந்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/C5ct7rIxVuH/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/reel/C5aPeRlxv_b/?utm_source=ig_web_copy_link

 

டிடிஎப் வாசன் காதலியா? இளம் மலையாள நடிகை..

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஐந்தாம் சீசனுக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் இன்னும் ஷோ எப்போது தொடங்கும் என்பதை விஜய் டிவி அறிவிக்கவில்லை.

ஏற்கனவே CWC 5 முதல் எபிசோடுக்காண ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டது என்றாலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற தகவலை விஜய் டிவி ரகசியமாகவே வைத்து இருக்கிறது

இந்த சீசனில் போட்டியாளர்களாக விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, VJ பிரியங்கா, யூடியூபர் இர்பான் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருப்பதாக முன்பே தகவல் வெளியானது .

இந்நிலையில் இளம் மலையாள நடிகை ஷாலின் ஸோயா CWC 5ல் குக் ஆக வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஷாலின் ஸோயா தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசனின் காதலி இவர் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.instagram.com/p/C1yUEVXySjF/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 

 

“இன்று நேற்று நாளை 2” அப்டேட்

0

விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடித்து வெளியான படம் “இன்று நேற்று நாளை”. இத்திரைப்படத்தை ரவிகுமார் இயக்கினார். இத்திரைப்படம் சை ஃபை காமெடி படமாக அமைந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை
திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.
அந்த வரிசையில் இந்நிறுவனம் “பிட்சா 4 – ஹோம் அலோன்” திரைப்படத்தையும் “இன்று நேற்று நாளை” இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த விழா தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட “இன்று நேற்று நாளை” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மாயாவுக்கு அடித்த ஜாக்பாட்….

0

பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்டு, 2ண்ட் அப் ரன்னர் ஆக வந்தவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயா, அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், அவற்றை பற்றி சிந்திக்காமல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கில் உருவாகி வரும் பைட்டர் ராஜா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக மாயா நடித்துள்ளார். இப்படத்தில்  ஹீரோவாக ராம்ஸ் என்பவர் நடிக்கிறார். இதனை கிருஷ்ணா பிரசாத் என்பவர் இயக்குகிறார்.

 

சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ர்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படத்திற்கு பைட்டர் ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் போது மாயா கூறுகையில், இந்த படத்தில் எனது கேரக்டர்  நகைச்சுவையானதாகவும், வேடிக்கையானதாகவும், மர்மமானதாகவும் இருக்கிறது. இதில் மிகவும் வித்தியாசமான நகைச்சுவை உணர்வு உள்ளது .

நான் பாண்டிச்சேரி  தியேட்டரில் கொஞ்ச நாட்கள் இருந்தேன். இந்த படத்தின் இயக்குனர் ஒரு தியேட்டர் பயிற்சியாளர். அவருக்கு என்னை பற்றி தெரியும். எனது நடிப்பில் நம்பிக்கை  கொண்டுள்ளார்

https://www.instagram.com/p/C4dqQARSviW/

 

 

 

’ஆரம்பிக்கலாமா’ வெங்கடேஷ் பட்யின் போஸ்ட்டை கண்டு குழம்பித் தள்ளும் ரசிகர்கள்

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

மேலும் இவர் சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அது மட்டுமின்றி கிட்சன் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

குக் வித் கோமாளி சீசன் 5 இல் இவரும் பங்கு பற்றுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் திடீரென விலகினார். இவரை தொடர்ந்து தயாரிப்பாளர், இயக்குனர் என அடுத்தடுத்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த நிலையில்,  தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆரம்பிக்கலாமா’ என்று கேப்ஷன் போட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் வெங்கடேஷ் பட்.

மேலும் அவர் புதிய கேட்டரிங் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ  ரசிகர்களுக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், அவர் பகிர்ந்த பதிவில் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C5a-k7yCZpI/?utm_source=ig_embed&utm_campaign=loading

 

தோனியின் இரண்டாவது படம் கன்னடத்தில்

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனி படங்கள் தயாரிப்பதில் கடந்த வருடம் இணைந்துக் கொண்டார். தனது முதல் படத்தை தமிழிலே தயாரித்து வெளியிட்டார்.

ஹரிஷ் கல்யாண்,இவானா,நதியா நடிப்பில் வெளிவந்த எல் ஜி எம் ( லெட்ஸ் கெட் மெரிட்) எனும் படம் தோனி தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் ஆகும். அப்படத்தின் தோல்வியையடுத்து ஒரு வருட கால இடைடவளிக்கு பிறகு தோனியின் இரண்டாவது படம் தொடர்பாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.இதனை கன்னட திரை உலகில் ஆரம்பித்துள்ளார்.இதற்கமைய படத்திற்கான இயக்குனர், நட்ச்சத்திரங்களை தேடும் வேட்டையை ஆரம்பித்துள்ளார என கூறப்படுகிறது.