Home Blog Page 41

புஷ்பா 2 படத்தின் டீசர்.. வீடியோ இதோ

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா 1 தி ரைஸ். இப்படத்தில் அல்லு அர்ஜுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார் சமந்தா. இவருடைய நடனம் புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. இதை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கடந்த 5ஆம் தேதி புஷ்பா படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதினால், அவருடைய கதாபாத்திர போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நீயா நானா பிரபலம் இரயில் மோதி மரணம்..

0

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை முதல் எபிசோடில் இருந்து தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு என ஒரு தரப்பினரும், தோசை ஒரு சாதாரண உணவு என்றும் கூறுபவர்கள் மறுபுறமும் விவாதம் செய்து வந்தனர்.

இதில் இளம் பெண் ஒருவர் தனது அன்னான் விதவிதமாக தோசை சாப்பிடுவதை வெறுப்புடன் பேசியிருந்தார். அதற்கு அவரது தான் எதிர்பார்ப்பில் அமர்ந்து தனது மகனுக்கு துணையாக பேச நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றது.

தனது மகன் 20 தோசைக்கும் மேல் சாப்பிடுவான், அதுவும் விதிவிதமாக தான் சாமிடுவான் என பேசியிருந்தார். இதை கேட்டவுடன் யாருப்பா அந்த பையன் எனக்கே பார்க்கணும் போல இருக்கே என ஷாக்குடன் கூறியிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பிரணவ். இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரணவ், இரயில் மோதி மரணமடைந்துள்ளார். குரோம்பேட்டை இரயில் நிலையில், கடந்த வாரம் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த 22 வயதாகும் பிரணவ் இரயில் மோதி உயிரிழந்துள்ளார். போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது தன இப்படி நடந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பிரணவ் மட்டுமின்றி அவருடன் தண்டவாளத்தை கடந்தன முயன்ற சதீஸ் என்பவரும் இரயில் மோதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171 அப்டேட்

0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு தலைவர் 171ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி இப்படத்திற்கான டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது.

லோகேஷ் பாணியில் கண்டிப்பாக இது மாஸான டீசராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாம்.

இந்த நிலையில், தலைவர் 171ல் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஷோபனா தான் ரஜினியின் ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே இருவரும் தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளனர். ஆனால், இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையை உடைத்த நடிகர் சக்தி!

0

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையின் மூலம் மட்டுமே சினிமாவுக்குள் நுழைந்து இன்று தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் அஜித்குமார் ஆவார். இவர் நடிப்பு மட்டும் இன்றி பைக் ரெய்டு , கார் ரேஸ்கல் என பல விடயங்களில் ஆர்வம் காட்ட கூடியவர். இவர் பல அறிமுக நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவ்வாறே நடிகர் சக்திக்கும் சில அறிவுரை வழங்கி உள்ளார்.

90s காலகட்டங்களில் பல பெண்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்தவர் சக்தி ஆவார். இவர் சின்னத்தம்பி , மன்னன் , சந்தூரமுகி என பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசுவின் மகனும் ஆவார். சக்தி பல படங்களில் நடித்திருந்தாலும் ” அரபு  நாடே ” என்ற பாடலின் மூலமே பெரிதும் பேசப்பட்டார்.

இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவிக்கின்றார் எனலாம். அவ்வாறே சமீபத்தில் இவர் கொடுத்த ஒரு இன்டெர்வியுவில் கலந்துரையாடும் போது நடிகர் அஜித் பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறுகையில்” டப்பிங் காக சென்றபோது நான் அஜித் சேரை சந்தித்தேன் அவர் பல விடயங்களை கூறினார் அவ்வாறே நான் வெய்ட் போட்டிருப்பதை பார்த்து விட்டு ஹீரோவாக இருக்க வேண்டும் என்றால் வெய்ட் இருக்க கூடாது என்றார். அதையே நான் போலோவ் செய்கிறேன்” என கூறியுள்ளார் சக்தி.

நயன்தாரா வீட்டின் மொட்டை மாடி

0

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை அவர்தான்.

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு உச்சத்தில் இருந்து வரும் நயன்தாரா சமீபகாலமாக நடிக்கும் வுமன் சென்ட்ரிக் படங்கள் பெரிய வெற்றியை பெற முடியாமல் தான் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது நயன்தாரா ஒரு புது ஆபிஸை கட்டி வருகிறார்.

வீட்டின் மொட்டை மாடியில் ஆபிசுக்கானா கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதன் புகைப்படங்கள் தற்போது நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார்.

 

வயதான ஜாக்கி சான்..

0

நடிகர் ஜாக்கி சான் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்ட நடிகராக இருந்து வருகிறார். அவரது குங்ஃபூ சண்டை காட்சிகள் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஜாக்கி சானுக்கு தற்போது 70 வயதாகிறது. அவர் நேற்று தான் 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சமீபத்தில் ஜாக்கி சான் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அவரது ரசிகர்கள் அதை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகி இருந்தனர்.

அதை பற்றி விளக்கம் கொடுத்த ஜாக்கி சான், “வருத்தப்படாதீங்க, அது என்னுடைய லேட்டஸ்ட் படத்தில் வரும் ஒரு கேரக்டர் தான். அந்த கதாபாத்திரம் வெள்ளை முடி, தாடி வைத்து வயதான தோற்றத்தில் நடிக்க தேவைப்பட்டதனால் நடித்தேன்” என கூறி இருக்கிறார்.

https://www.instagram.com/p/C5cvo9ZyK7o/?utm_source=ig_web_copy_link

 

விக்னேஷ் சிவன் கூறிய ஆச்சரிய தகவல்..!

0

என்னையும் நயன்தாராவின் சேர்த்து வைத்தது தனுஷ் தான் என இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பழக்கம் ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி, திருமணம் குழந்தைகள் என மாறிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க தனுஷ் தான் பரிந்துரை செய்தார் என்றும் அவர் சொன்னதால்தான் நயன்தாரா இந்த படத்தில் நடித்தார். அதன்பின்னர் தான் மற்றவை நடந்தது என்று விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’தனுஷ் தான் நானும் ரவுடிதான் படத்தின் கதையை நயன்தாராவிடம் சொன்னார் என்றும் நயன்தாராவுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததை அடுத்து அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் தெரிவித்தார்.

விஜய் சேதுபதியும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சரியாக வருமா என்று சந்தேகத்துடன் இருந்த நிலையில் நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்த பிறகு அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்றும் இந்த படத்தில் நானும் நயன்தாராவும் இணைந்து பணி புரியவும் பேசவும் பழகவும் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்றும் அவர் நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்த பேட்டியில் நயன்தாரா, ஷாருக்கான் குறித்து கூறிய போது ’பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தேன் என்றும் அந்த வகையில் ’ஜவான்’ படம் சரியாக அமைந்தது என்றும் ஷாருக்கானை பார்த்து தான் நாமெல்லாம் வளர்ந்திருக்கிறோம், அப்படிப்பட்ட நாம் ஷாருக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அதை மிஸ் செய்ய முடியுமா? அவர் நல்ல நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவர் பெண்களை மதிப்பவர்’ என்று நயன்தாரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பழனி அம்மாவின் ஆசை..

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், செழியன் ரூமில் போனை பார்த்துக் கொண்டு இருக்க, போன் பாவிப்பதை குறைக்குமாறு சொல்கிறார் ஜெனி. மேலும் செழியனின் போனை வாங்கி அவர் யார் யாருக்கு சட் பண்ணினார் என விசாரிக்கிறார்.

மறுபக்கம் காலையில் ஈஸ்வரி கால் வலிக்குது என ராமமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு வந்த எழில் அவரின் காலை பிடிக்க செல்ல, அவர் வேணாம் என எழுந்து விடுகிறார். கால் வலிக்குது என சொன்னிங்க நான் பிடிச்சு விடுறேன் எனவும் வேண்டாம் என செல்ல, அமிர்தா எல்லாம் என்னால தானே என எழிலிடம் மன்னிப்பு கேட்கிறார்.

இதையடுத்து பழனிச்சாமியின் பிறந்த நாளை எல்லாருக்கும் சொல்லி செய்ய வேண்டும் என பழனியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, அவரும் உன் விருப்பப்படியே  செய்றேன்  என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து வீட்டில் நானும் சமைக்க கற்றுக் கொள்கிறேன் என ஜெனி சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு செழியன் வேலைக்கு செல்ல கிளம்புகிறார். அவரிடம் எத்தின மணிக்கு வருவீங்க? ஆபிஸ்க்கு தானே போறீங்க? என கேள்வி மேல் கேள்வியாக கேட்க, ஏன் அவன் கிட்ட இப்படி லோயர் போல நடந்து கொள்ளுறா என கோவப்படுகிறார்.

அதன்பின், பழனி வீட்டுக்கு போன பாக்கியா அவரது அம்மாவுக்கு சாப்பாடு செய்து கொண்டு போய் கொடுக்க, அவரிடம் பழனிக்கு பிறந்த நாள் வருது. நீ தான் முன்னுக்கு நின்று செய்யணும், சாப்பாடு ஓடர் எடுத்துக் கொள்ளு என சொல்கிறார்.

அதன்பின் அங்கு வந்த பழனி, பாக்கியாவுடன் பேசிக் கொண்டு இருக்க, டீ போட்டு எடுத்து வருவதாக சென்று, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். பழனிக்கு ஆசை இருக்கு ஆனா கேட்டா இல்லை என்று தான் சொல்வான் என சொல்லிக் கொள்கிறார்.

மழையில் ஆடிய தர்ஷா குப்தா

0

நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் நனையும் கிளுகிளுப்பு நடனம் மற்றும் அந்தரத்தில் நடந்து வரும் சாகசம் ஆகியவற்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள தர்ஷா குப்தா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் அந்தரத்தில் நடந்து வரும் சாகச வீடியோ ஒன்றையும் மழையில் நனைந்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/C5ct7rIxVuH/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/reel/C5aPeRlxv_b/?utm_source=ig_web_copy_link

 

டிடிஎப் வாசன் காதலியா? இளம் மலையாள நடிகை..

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஐந்தாம் சீசனுக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் இன்னும் ஷோ எப்போது தொடங்கும் என்பதை விஜய் டிவி அறிவிக்கவில்லை.

ஏற்கனவே CWC 5 முதல் எபிசோடுக்காண ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டது என்றாலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற தகவலை விஜய் டிவி ரகசியமாகவே வைத்து இருக்கிறது

இந்த சீசனில் போட்டியாளர்களாக விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, VJ பிரியங்கா, யூடியூபர் இர்பான் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருப்பதாக முன்பே தகவல் வெளியானது .

இந்நிலையில் இளம் மலையாள நடிகை ஷாலின் ஸோயா CWC 5ல் குக் ஆக வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஷாலின் ஸோயா தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசனின் காதலி இவர் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.instagram.com/p/C1yUEVXySjF/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again