Home Blog Page 42

போர் – விமர்சனம்

0

ஒரு பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர் ஒருவருக்கும், ஜுனியர் மாணவர் ஒருவருக்கும் இடையே நடக்கும் ‘ஈகோ’ மோதல்தான் படத்தின் மையக் கதை. கூடவே, வாரிசு அரசியல், சாதி, காதல், நட்பு என கலந்துகட்டி அடித்திருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

புதுச்சேரியில் இருக்கும் செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தின் சீனியர் மாணவர் அர்ஜுன்தாஸ். அந்த பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டில் வந்து சேர்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவரும் சிறு வயதில் ஒரு போர்டிங் பள்ளியில் படிக்கும் போது நண்பர்களாக இருக்கிறார்கள். அப்போது காளிதாஸுக்கு சீனியர் மாணவர்களால் வெறுப்பான ஒரு சம்பவம் நடக்கிறது. அதை மறக்காத காளிதாஸ், பல்கலைக்கழகத்தில் அர்ஜுன்தாஸை பழி வாங்க நினைக்கிறார். இருவருக்குமிடையே நடக்கும் சிறு சிறு சண்டைகள் பின்னர் எப்படி ‘போர்’ ஆக மாறுகிறது என்பதுதான் மீதிக் கதை.

அந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதை மட்டும் படத்தில் காட்டவில்லை. அவர்கள் போதைப் பொருள் விற்பது, அதைப் பயன்படுத்துவது, சீனியர், ஜுனியர் சண்டை போட்டுக் கொள்வது என மற்ற விஷயங்களைத்தான் அதிகம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வெறும் கல்லூரி மட்டும் இருந்தால் சரியாக வருமா என்ற சந்தேகத்தில் ஒரு அரசியல்வாதி, கல்லூரி தேர்தலில் நிற்கும் அவரது மகள், அந்த மகளுக்கு எதிராக களமிறக்கப்படும் ஒடுக்கப்பட்ட மாணவி என கூடுதல் இணைப்பாக சேர்த்திருக்கிறார்கள். புதுச்சேரி பக்கத்து மாநிலமாக இருந்தாலும் வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருக்கும் கல்லூரி போலவே படம் முழுவதும் தெரிகிறது. இப்படி ஒரு கல்லூரியில் படித்தால் மாணவர்களின் எதிர்காலம் ஆஹா, ஓஹோதான்.

அர்ஜுன் தாஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்கிறார்கள். அவரை மாணவர் கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொள்ள கொஞ்ச நேரம் ஆகிறது. சீனியர் என்ற கெத்துடன் சுற்றி வருகிறார். அவருக்குப் பின்னால் ஒரு கூட்டமே திரள்கிறது. என்னவோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் கடைசியில் ஜுனியர் மாணவர்களுடன் போய் கைகலப்பில் ஈடுபடுகிறார். ஒரு நிறைவில்லாத கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். காளிதாஸ் கதாபாத்திரத்துடன் ஒப்பிடும் போது இவரது முக்கியத்துவம் படத்தில் சற்றே குறைந்து போய் இருக்கிறது.

காளிதாஸ் ஜெயராம் கதாபாத்திரத்தை அழுத்தமாகவும், நிறைவாகவும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதில் காளிதாஸ் பொருத்தமாக நடித்திருக்கிறார். அவரைக் கல்லூரி மாணவர் என முதல் காட்சியிலேயே ஏற்றுக் கொள்ள முடிகிறது. சிறு வயதில் அர்ஜுனால் தனக்கு ஏற்பட்ட அந்த வெறுப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர். அந்த கோபத்துடனேயே படம் முழுவதும் இருக்கிறார். அர்ஜுனைச் சுற்றியிருப்பவர்களை தன் வசப்படுத்த முயன்று வெற்றியும் பெறுகிறார். சீனியராக இருந்தாலும் சஞ்சனா நடராஜனை தன் காதல் வலையில் வீழ்த்துகிறார்.

போதைப் பொருளை கல்லூரி மாணவர்களுக்கு விற்கும் டாக்டர் மாணவியாக சஞ்சனா நடராஜன். அடிக்கடி ஊசி போடுகிறார், அதனால் டாக்டராகத்தான் இருக்க வேண்டும். ஜுனியராக இருந்தாலும் காளிதாஸைப் பிடித்துப் போய் அவருடன் ஊர் சுற்றி படுக்கையறை வரை போகிறார். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு இவரது கதாபாத்திரம் பகீரென இருக்கும். பல்கலைக்கழகம் என்றால் தேர்தல், அரசியல் இல்லாமலா. மாணவ, மாணவிகளுக்காக குரல் கொடுப்பவராக டிஜே பானு. முன்னாள் மாணவி, இந்நாள் போராளியாக வலம் வருகிறார்.

ஹரிஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் காட்கிண்டி ஆகியோரது பின்னணி இசை பரவாயில்லை. சில இடங்களில் பொருத்தமாகவும், சில இடங்களில் துருத்திக் கொண்டும் நிற்கிறது. இரவு நேரக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர்கள் ஜிம்ஷி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிசௌசா ஆகியோருக்கு அதிக வேலை. கூடவே, எடிட்டர் பிரியங் பிரேம் குமாரை இயக்குனர் பிழிந்தெடுத்திருப்பார் எனத் தெரிகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள், என்ன படிப்பு படிக்கிறார்கள் என்பதை தெளிவாகவே காட்டவில்லை. நாமாக அவர்களை டாக்டருக்குப் படிக்கிறார், இஞ்சினியரிங் படிக்கிறார் என யூகித்துக் கொள்ள வேண்டும். மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளர் பிஜாய் நம்பியார். தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் வந்த ‘அக்னி நட்சத்திரம்’ அவருக்குப் பிடித்த படம் போலிருக்கிறது. அந்த பிரபு, கார்த்திக் கதாபாத்திரங்களை உல்டா செய்து அர்ஜுன் தாஸ், காளிதாஸ் கதாபாத்திரங்களாக மாற்றி, கதைக்களத்தை பல்கலைக்கழகமாக வைத்துக் கொண்டுள்ளார்.

எங்கெங்கோ சுற்றி என்னென்னமோ சொல்லி இரண்டரை மணி நேரத்தை ஓட்டுகிறார்கள். பொறுமை மிக அவசியம். கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்ததும் இதற்கா இவ்வளவு பில்டப் என கேட்க வைக்கிறது.

போர் – சின்னப் பசங்க சண்டை…

திருடு போன பணத்துடன் வீட்டுக்கு வந்த முத்து.. ரோகினிக்கு வந்த சந்தேகம், விஜயாவுக்கு ஷாக் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

0

திருடு போன பணத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சத்தியா பணத்தை எடுத்து வந்து கொடுத்து இது உங்க அம்மா கிட்ட இருந்து அடிச்ச பணம் திருப்பி கொடுத்தாச்சு. இனிமே அக்காவை வீட்டுக்கு அனுப்பி அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்று முத்துவிற்கு வார்னிங் கொடுக்கிறார்.

முத்து அந்த பணத்தை எடுக்காமல் இருக்க சத்யா பணம் வேணாம்னா சொல்லுங்க திருப்பி எடுத்துக்கிறேன் என்று சொல்லி பணத்தை எடுக்க போக முத்து இது எங்க அப்பாவோட காசு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இது அவருக்கு தான் சேரனும் என்று எடுத்துக் கொள்கிறார்.

பிறகு சத்யா இனிமே உங்களால நேரடியா பேச முடியவில்லை என்று என் அக்கா அனுப்பி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. இன்னும் பணம் என்ன கேளுங்க என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து இந்த ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி என எடுத்துக் கொடுக்க முத்து நீ சொன்ன பிச்சை காசு அதை நீயே வச்சுக்க என்று முகத்தில் தூக்கி எறிகிறார்.

அதைத் தொடர்ந்து இங்கே மீனா சமைத்துக் கொண்டிருக்க விஜயா சாப்பாடு ஆயிடுச்சா என்று கேட்க இன்னைக்கு நேரத்துக்கு சாப்பிட்ட மாதிரி தான் என்று கோபப்பட நீங்க டைமுக்கு கரெக்டா சாப்பிடணும்னா ஜெயிலுக்கு தான் போகணும் அங்க தான் மணி அடிச்சா சோறு கிடைக்கும் என்று சொல்லுவாங்க என்று விஜயாவுக்கு பதில் அளிக்கிறார். அதன் பிறகு பூ ஆர்டர் கொடுத்த ஒருவர் வீட்டுக்கு வந்து மீனா இல்லையா? கொஞ்சம் மீனாவை கூப்பிடுங்க என்று சொல்ல விஜயா நான் அவளை கூப்பிடனுமா என்று கோபப்பட மீனா வந்து பூவை கொடுத்து 600 ரூபாய் என்று கூறுகிறார்.

நீ எதுக்கு பூவை எல்லாம் பிரிட்ஜ்ல வைக்கிற எல்லாத்துலயும் ஒரே மல்லி பூ வாசனையா இருக்கு என்று மீனாவை திட்டி எடுக்க அண்ணாமலை இட்லி மல்லிப்பூ மாதிரி வேணும்னு கேக்குறேல அப்போ மல்லி பூ வாசம் வந்தா என்ன என கவுண்ட்டர் அடிக்கிறார். ரோகினாலும் என் பெயரில் பார்லர் வச்சிருக்கா மாச மாசம் எனக்கு பாக்கெட் மணி தரா இவ என்ன வாடகையா தரா என்று கேட்க உங்க அப்பன் வீட்டு ரோடா? பிளாட்பார்ம்ல தானே கடை வச்சிருக்க அதுக்கு எதுக்கு வாடகை தரவேண்டும் என்று கேட்கிறார்.

இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் முத்து வீட்டுக்கு மேல ரெண்டு பிளைட் பறந்துச்சு அவங்களாம் வாடகை கொடுத்தாங்களா? ஏன்னா அம்மா வீட்டுக்கு மேல பறந்துச்சு அதான் கேட்கிறேன் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு முத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து அண்ணாமலையிடம் கொடுக்க என்னடா இது என்று கேட்க உன் பணம் தான் பா என்று சொல்லும்போது பணம் என்ற வார்த்தையை கேட்டு ரூமுக்குள் இருந்த மனோஜ் வாயை பிளந்து கொண்டு வெளியே ஓடி வருகிறார்.

இந்த பொண்ணோட அப்பா உன்னை அலைய விட்டதுக்காக கோர்ட் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த அந்த பணத்தை கூட நீ அம்மாகிட்ட கொடுத்து காணாமல் போயிடுச்சுல, அந்த பணம் தான் இது, திருடனை புடிச்சிட்டாங்களாம் என்று பணத்தை கொடுக்க ரோகினி அது எப்படி மொத்த பணமும் வரும் என்று கேள்வி கேட்கிறார். சிலர் திருடினா தான் வராது சிலர் திருடுனா வரும் என கூறுகிறார்.

ஸ்ருதி நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா ஆன்ட்டி என்று கேட்க அன்னைக்கு இருந்த நிலைமையில் அதெல்லாம் கொடுக்க முடியல என்று சொல்ல கம்ப்ளைன்ட் கொடுக்காமல் எப்படி பணம் திரும்பி வரும் என்று ஸ்ருதி கேட்க முத்து அன்னைக்கு நான் எனக்கு தெரிஞ்ச போலீஸ்கிட்ட சொல்லி வச்சிருந்தேன் என்று சமாளிக்கிறார். அவனை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்து அவனை செருப்பால் அடித்தால் தான் என் மனசு ஆறும் என்று விஜயா சொல்ல அப்படின்னா நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ரூமுக்குள் ரோகிணி மனோஜிடம் இதனை ஏதோ தப்பா இருக்கு, திருடு போன பணம் முழுசா கிடைக்க வாய்ப்பே கிடையாது. ஒன்னு திருடனுக்கும் முத்துவுக்கும் ஏதாவது கனெக்சன் இருக்கணும் இல்ல இந்த திருட்டுக்கு முத்துக்கும் ஏதாச்சும் கனெக்சன் இருக்கணும் என்று சொல்ல மனோஜ் முத்து கோவமா பேசுவான், குடிப்பான். ஆனா பணத்தை எல்லாம் திருட மாட்டான் என்று கூறுகிறார்.

அப்படின்னா இதை திருடனுக்கு முத்து இருக்கும் ஏதோ லிங்க் இருக்கு அவர் சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்ல என்று ரோகிணி கூறுகிறார். இதையெல்லாம் மீனா கேட்டு விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 

வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் விஜய் டிவி சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ

0

வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் நிஹாரிகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவின் அண்ணியாக நடித்திருந்தார்.

அது மட்டும் இன்றி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் நிகழ்ச்சிகளை 10 பிரபலங்களில் ஒருவராக பங்கேற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வைக்கும் குழந்தை வைத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிஹாரிக்கா மற்றும் ஸ்ரீநிதி என இருவரும் இந்த ரீல்ஸ் வீடியோவில் இடம் பெற்றுள்ளனர்.

வாய் விட்டு மாட்டிய கோபி, உண்மையை உடைத்த ராதிகா, பாக்கியா கொடுத்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

0

வாய்விட்டு கோபி சிக்கிக்கொள்ள உண்மையை உடைத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியும் ராதிகாவும் சண்டை போட்டுக் கொண்டே வீட்டுக்கு வர ராமமூர்த்தி என்னம்மா பிரச்சனை என்று கேட்க ராதிகா ஒன்றுமில்லை என்று சொல்லி மேலே சென்று விடுகிறார்.

அதைக் தொடர்ந்து ஈஸ்வரி கோபியை பிடித்து ஏன் பா இப்படி கத்துக்கிட்டே வரா என்று கேட்க ஒரு சின்ன பிரச்சனைதான்மா அதுக்கு கார்ல ஏறுனதில் இருந்து சண்டை போட்டுக்கிட்டே வரா, தினமும் இப்படித்தான் கத்திக்கிட்டே இருக்கா என்று சொல்ல ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட்டு அவனுக்கு ஹார்ட் அட்டாக் வர நீ தான் காரணம் இப்ப எதுக்கு தினமும் அவனிடம் சண்டை போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.

உங்க பையன் ரொம்ப ஒழுங்கா என்று கேட்க ஈஸ்வரி ஆமா என் பையன் மாதிரி யாரையும் பார்க்க முடியாது ரொம்ப பொறுப்பான அமைதியான பையன். எப்பயும் உண்மையை மட்டும் தான் பேசுவான் என்று கோபியை பற்றி ஒரே பில்டப் ஆக பேச ஒரு கட்டத்தில் ராதிகா அப்படியா அப்போ உங்க பையன் ஆபீஸை இழுத்து மூடின விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

ராதிகா சொன்னதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைய ஈஸ்வரி கோபியிடம் இவ என்னப்பா சொல்றா என்று கேட்க கோபி ஆமாம்மா ராதிகா சொல்றது உண்மைதான் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதை ஏன்டா என்கிட்ட சொல்லல என்று கேட்க இந்த பிசினஸ் வச்சு தான் எல்லாத்தையும் சாதித்தேன் அப்படி இருக்கும் போது இப்போ ஆபீஸை இழுத்து மூடிட்டினேனு எப்படி சொல்றது என்று கேட்கிறார்.

இப்ப சொல்றேன் எல்லாரும் கேட்டுக்கோங்க இந்த கோபிநாத் பிசினஸ் இழுத்து மூடிட்டேன் என்று சொல்லி சோபாவில் உட்கார்ந்து கண்கலங்குகிறார். அடுத்ததாக ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து முன்னாடியே கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டணும்னு 2, 3 தடவை வீட்டுக்கு வந்துட்டு போனாங்க. சரி எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணிடுவானு நினைச்சேன் ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை என்று அழ ராமமூர்த்தி செழியன் ஆகியோர் இதெல்லாம் எதுக்குப்பா எங்க கிட்ட சொல்லல என்று கேட்கின்றனர்.

எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்வியே இதையும் சொல்ல வேண்டியது தானே என்று ராமமூர்த்தி கேட்கிறார். அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரும்ப பாக்யா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க இப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே நீ வேகவேகமா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டு போற, நான் ஒன்னும் இல்லாம நிக்கிறேன் ரொம்ப சந்தோஷப்படு என்று பாக்யாவை வம்பு இழுக்க அவர் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார்.

அதன் பிறகு கோபி கூடிய சீக்கிரம் புதிய பிசினஸ் தொடங்கப் போறேன் அது கண்டிப்பா வெற்றியா அமையும் நான் பழையபடி திரும்பவும் மாறுவேன் என்று அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து கோபி தண்ணீர் எடுப்பதற்கு கிச்சனுக்கு வரும்போது ஃபோனில் யாரிடமோ வேலை கேட்டுக்கொண்டே வருகிறார்.

பாக்கியா அங்கிருக்க போனை வைத்து கோபி நான் பேசுவதெல்லாம் கேட்டு இருப்பியே ரொம்ப சந்தோஷமா இருக்குமே குளுகுளுன்னு இருக்குமே என்று கேட்க யார் கஷ்டப்படுறதையும் பார்த்து சந்தோஷப்படுற புத்தி எனக்கு இல்ல என்று கூறுகிறார். நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என நாங்க புதுசா ஆரம்பிக்க போற ரெஸ்டாரண்டுக்கு நிறைய ஆளுங்களை எடுக்க போறோம். நீங்க வேணா அங்க மேனேஜரா வந்து சேர்ந்திடுங்க நான் உங்களுக்கு வேலை தருகிறேன் என்று சொன்ன கோபி அதிர்ந்து போகிறார்.

இந்த நேரம் பார்த்து ராதிகாவும் அங்கு வந்துவிட கோபி என்னது நான் உன்னோட ரெஸ்டாரன்ட்ல வேலை செய்யுணுமா? நீ எனக்கு சம்பளம் தருவியா? பாரு ராதிகா இதை நீயே கேளு நான் ஒன்னும் அந்த அளவுக்கு அதள பாதாளத்துக்கு போகல என்று பாக்கியாவிடம் கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

தர்ஷினியை வைத்து புது ப்ளான் போடும் குணசேகரன்.. நந்தினியால் உடைந்து போன ஞானம் – எதிர்நீச்சல் இன்றைய எபிசோட் அப்டேட்

0

தர்ஷினியை வைத்து குணசேகரன் புதிய பிளான் போட நந்தினியால் உடைந்து போய் உள்ளார் ஞானம்‌.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் கரிகாலன் மற்றும் ஜான்சிராணி சந்தித்து நான் சொல்லும் போது என்னை ஏதுன்னு கேட்காம கிளம்பி வந்துடனும் உங்களுக்கு செய்ய வேண்டியது நான் செய்கிறேன் என்று கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து இங்கே ஞானம் மனது உடைந்து போய் உட்கார்ந்து இருக்க கதிர் நந்தினி சொன்னதுக்கா இப்படி இருக்க என்று கேட்க நந்தினி சத்தியமாக நான் தப்பான எண்ணத்தில் சொல்ல வரல என்று சொல்ல கதிர் வாயை மூடுடி என்று அடக்குகிறார்.

பிறகு குணசேகரன் தர்ஷினி அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு போன் செய்து நான் வர வரைக்கும் என் பொண்ணை நல்லபடியா பாத்துக்க என்று கூறுகிறார்.

 

சீரியலில் இருந்து வெளியேறிய மகாநதி லட்சுமி பிரியா.. இனி அவருக்கு பதில் சன் டிவி நடிகை – வெளியான ஷாக் தகவல்

0

மலையாள சீரியல் இருந்து வெளியேறியுள்ளார் மகாநதி லட்சுமி பிரியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியலில் காவிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லட்சுமி பிரியா.

இந்த சீரியல் மட்டும் இன்றி இவர் மலையாளத்தில் சந்திரகாதம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அப்படியான நிலையில் தற்போது திடீரென இந்த மலையாள சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார். இனி அவருக்கு பதிலாக அந்த சீரியலில் புதிய நந்தாவாக மான்ஸி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மான்ஸி சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயன் படத்தில் அடுத்தடுத்து இணையும் முக்கிய பிரபலங்கள்.. அடுத்தது யார் தெரியுமா?

0

தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரவணனின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

காதலரை மணக்கிறார் டாப்சி.. திருமணம் எப்போ தெரியுமா?

0

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக் கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இருவரின் திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும், இதில் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரின் திருணம் சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

வணங்கான் டீஸர் வெளியீடு

0

இயக்குனர் பாலா சிறு இடைவெளிக்கு பின் இயக்கி உள்ள படம் ‛வணங்கான்’. இதில் முதலில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில் கதை பிரச்னையால் இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். பின்னர் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை ஆரம்பித்தார் பாலா. ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இதன் டீஸர் நேற்று(பிப்., 19) மாலை 5 மணியளவில் வெளியானது. 1:05 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீஸரில் வசனமே இல்லை. பின்னணி இசையும், அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

 

தனுஷின் 50வது பட தலைப்பு ‛ராயன்’

0

‛கேப்டன் மில்லர்’ படத்திற்கு பின் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வந்தார். இது அவரின் 50வது படமாகும். இந்த படத்திற்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தனுஷ் மொட்டை போட்டு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது இந்த படத்திற்கு ‛ராயன்’ என பெயரிட்டு படத்தின் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் தள்ளுவண்டி கடை மாதிரியான ஒரு வாகனத்தில் சந்தீப் மற்றும் காளிதாஸ் கையில் கத்தியுடன் இருக்க, தனுஷூம் கையில் ஆயுதம் ஒன்றுடன் ரத்தக்கறை படிந்திருக்க உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு கோடை விடுமுறையில் அதாவது மே மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.