Home Blog Page 43

2 படங்களையும் முடித்துவிட்ட கார்த்தி..

0

டிகர் கார்த்தி தற்போது தான் நடித்துக் கொண்டிருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ’மெய்யழகன்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. ‘வா வாத்தியாரே’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தான் நடித்த மூன்று திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகம்,’ தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் எச் வினோத் ஆகிய இருவரும் வேறு படங்களில் உள்ளதால் கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ’சர்தார் 2’ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தியின் திரை உலக பயணத்தில் ’சர்தார்’ ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

‘கங்குவா’ படத்திற்கு இவ்வளவு கம்மியா சம்பளம் வாங்கிய சூர்யா!

0

நடிகர் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தான் ‘கங்குவா’. இப்படமானது பெரும் பொருட் செலவில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், இன்னொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் குறிப்பாக 13 கதாபாத்திரங்களில் கங்குவா அரசனாக சூர்யா நடிப்பதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக சூர்யா குறைவான சம்பளம் வாங்கி உள்ளார் எனவும், அதற்காக காரணம் தொடர்பிலும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சுமார் 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி அக்ஷன் படமாக உருவாகும்  ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்கு 28 கோடி ரூபா தான் சம்பளமாக கோரி உள்ளாராம் சூர்யா.

அதற்கு காரணம், சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான 24 படம் வசூல் ரீதியில் தோல்வி அடைந்தது. இதனால் இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடு செய்யவே தற்போது சூர்யா மிக குறைவான சம்பளத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது

சாய் தன்ஷிகாவின் ‘தி புரூப்’ படத்தின் ‘டிரெய்லர்’

0

2006 – ம் ஆண்டு வெளியான ‘திருடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார்.

மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 -ம் ஆண்டு வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். அதன் பின் துல்கர் சல்மானுடன் ‘சோலோ’ என்ற படத்தில் நடித்தார்

இந்நிலையில் தற்போது தன்ஷிகா ‘தி புரூப்’ படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோ சார்பில் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்தை ராஷிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று மதியம் டிரெயிலர் வெளியானது . இதனை பிரபல நடிகர் சசிகுமார் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

 

விஜய்சேதுபதியின் 50வது படம்

0

விஜய்சேதுபதியின் 50வது படமான ’மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளதாகவும் இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50வது படமான ’மகாராஜா’ திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விதார்த் நடித்த ’குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியவர் என்பது தெரிந்தது

இந்த நிலையில் ’மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் மே 16ஆம் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’

0

பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.அஜித்தின் 62 – வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் , நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்டபல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் சண்டை காட்சியில் ‘டூப்’ இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் அஜித்தின் ஒரு துணிச்சலான கார் ‘ஸ்டண்ட்’ இணைய தளத்தில் வைரலாக பரவியது. அஜித்தின் அர்ப்பணிப்பு மிக்க இந்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினர்.அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ பட தயாரிப்புக்குழு வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதிஇப்படத்தை ‘ரிலீஸ்’ செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

 

 

‘தலைவர் 171’ திரைப்படத்தில் 5 பிரபலங்களா?

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தில் 5 பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் 5 பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அதில் ஒருவர் 90 களின் பிரபல நாயகனும் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தில் நடித்து வருபவருமான மைக் மோகன், ’தலைவர் 171’ நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டர் மீண்டும் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஷாருக்கானும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் ’தலைவர் 171’ படத்தில் ’தளபதி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஷோபனா நாயகியாக நடிப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அதே ’தளபதி’ படத்தில் நடித்த மம்முட்டியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் மைக் மோகன், விஜய் சேதுபதி, ஷாருக்கான், ஷோபனா, மம்முட்டி ஆகிய ஐந்து பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் ரன்வீர் சிங் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மொத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள பிரபல நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் ’தலைவர் 171’ படத்தில் இணைவதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜீ தமிழ் சீரியலில் இருந்து விலகிய நடிகை…

0

ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ என்ற சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகி விட்டதை அடுத்து அவர் நடித்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் என்பதும் இதில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘அண்ணா’ சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்பத்துடன் ஒளிபரப்பாகி வரும் இதில் மிர்ச்சி செந்திலில் நான்கு தங்கைகளின் ஒருவராக வீரா என்ற கேரக்டரில் நடித்த தர்ஷு என்பவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எதிர்பாராத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் ‘அண்ணா’ குழுவை நான் மிகவும் மிஸ் பண்ணுவேன், எனது வீரா கேரக்டரில் புதிதாக நடிக்க உள்ள நடிகைக்கு எனக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரா கேரக்டரில் நடிப்பதற்கான நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/C5f-BlQvI9E/?utm_source=ig_web_copy_link

 

பாக்கியலட்சுமி சீரியலில் புதிய காதல் அத்தியாயம் ஆரம்பம்

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பாக்கியாவின் குடும்பம் மற்றும் பழனிச்சாமியின் உறவினர்கள் வந்துள்ள நிலையில், மாமா எப்பதான் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க? என பழனிச் சாமியிடம் ஒருவர் வினாவ, நீயும் கேட்க ஆரம்பிச்சிட்டியா என பழனி சொல்கிறார்.

அந்த நேரத்தில் உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும் என எழில் கேட்க, எனக்கு என்ன விருப்பம் என்று நான் சொல்லாமலே அவங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என பழனி சொல்ல, அங்கு வந்த பாக்கியா வித்தியாசமான டேஸ்ட்ல உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பண்ணி இருக்கேன் என சொல்லி ஸ்வீட் கொடுக்கிறார். அதை வாங்கி சாப்பிடும்போது அவர் சொன்னதை நினைவுப்படுத்தி பார்க்கிறார் பழனி.

மேலும் சொல்லுமாறு ராமமூர்த்தி கேட்க, எங்க அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்ல, பாக்கியா அவரது அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார வைக்கிறதை கவனிக்கிறார். என் அக்கா தங்கச்சிகளை அவங்களோட சகோதரி மாதிரி பார்த்துக்கொள்ளணும் என  சொல்ல பழனிச்சாமியின் சகோதரி சாரியில் ஏதோ கரைப்பட்டு விட்டதால் அதை தட்டி துடைக்கிறார் பாக்கியா அதையும் கவனிக்கிறார் பழனி.

இறுதியாக அவங்கள பார்க்கும் போதே மண்டைக்குள்ள லைட் எரியனும் என சொல்ல, பாக்கியா நிற்கிற  இடத்தில் உள்ள லைட்டுகள் எல்லாம் பளீச் என்று எரிய, பழனிச்சாமியின் ஹார்ட்டில் காதல் அம்பு விட்டது போல காட்டுகிறார்கள்.

இதை தொடர்ந்து பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் ஏற்பட்டு அவரை கவனிக்க ஆரம்பிக்கிறார் பழனிச்சாமி. இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மீது பழனிச்சாமி காதல் கொள்கிறார். புதிதாக தொடங்கிய இந்த அத்தியாயம் எங்கு போய் முடியும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னது மகாலட்சுமிக்கு மீண்டும் விவாகரத்தா..??

0

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகை மகாலட்சுமி. வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை என முக்கியமான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவருக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டு இருவரும் மறுமணம் செய்துகொண்டார்கள்.

இவர்கள் இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். புது கார் வாங்குவது, ஓட்டலுக்கு செல்வது என, ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருவதை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்கள்

இவ்வாறு  இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நேரத்தில் தான் ரவீந்தர் மீது ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனால் கைதான ரவீந்தர் பல போராட்டங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில், என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்துள்ளதோடு, தனது பழைய புகைப்படத்தையும் போஸ்ட் பண்ணியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், என்னாச்சு விவாகரத்து ஆனதா என கேட்க, அதற்கு ரவீந்தர் எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது, அது சாத்தியமற்றது என பதில் பதிவு போட்டுள்ளார்.

இதேவேளை, நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C5iGLfZSW3b/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

ஸ்லீவ் லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டும் காவியா அறிவுமணி

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் காவியா அறிவு மணி.

வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியா பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்‌. இதை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட் எங்கமா அவசரத்துக்கு போட மறநதுட்டீங்களா? என கலாய்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/C5dR0BWyfzO/