Home Blog Page 44

‘குட் பேட் அக்லி’ படத்தில் கமிட்டான ரஜினியின் ஜெயிலர் பட நடிகர்….

0

அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருந்து வருகின்றது. அஜர்பைஜானில் விறுவிறுப்பாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென படக்குழு சென்னைக்கு திரும்பியது. அதற்கு காரணம் அஜர்பைஜானில் நிலவி வந்த அதிகப்படியான பனிப்பொழிவு தான் என சொல்லப்பட்டது.

ஆனால் அதன் பிறகு விடாமுயற்சி பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. படத்தை பற்றி பல வதந்திகள் இணையத்தில் வெளியாகிக்கொண்டே இருந்தன. இது அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில் தற்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிவடைந்த பிறகு துவங்கும் என தெரிகின்றது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அஜித் மறுபக்கம் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. கடந்த சில மாதங்களாகவே அஜித் மற்றும் ஆதிக் இணைய இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அஜித்தின் அதி தீவிர ரசிகரான ஆதிக் மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதித்த ஆதிக் அதன் பிறகு அஜித்தை இயக்கும் வாய்ப்பினையும் பெற்றார். ஆதிக்குடன் அஜித் இணைந்துள்ளது பலரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கண்டிப்பாக இப்படம் மார்க் ஆண்டனி போல ஒரு வித்யாசமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், இப்படம் ஒரு காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அஜித் முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நடித்ததே இல்லை என்பதால் இப்படத்தை எதிர்நோக்கி அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர். அதே சமயத்தில் அஜித்திற்கு காமெடி திரைப்படம் செட் ஆகுமா என்ற சந்தேகமும் சிலரிடம் இருந்து தான் வருகின்றது.

இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் சுனில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. தெலுங்கில் பிரபலமான நடிகரான சுனில் புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். மாவீரன், ஜெயிலர், ஜப்பான், மார்க் ஆண்டனி என தமிழில் பல படங்களில் நடித்து தமிழிலும் பிஸியான நடிகராக உருவெடுத்துவிட்டார் சுனில்.

ஜப்பான் படத்தை தவிர இவர் நடித்துள்ள தமிழ் படங்கள் அனைத்துமே வெற்றிபெற்றுள்ளது. எனவே தமிழில் ராசியான நடிகராக கருதப்படும் சுனில் தற்போது அஜித்தின் குட் பேட் அகிலி படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது

.

ஜீ.வி.பிரகாஷின் “டியர்”பட டிரெலர்..

அன்பே வரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டியர் படத்தில் நடித்த மற்ற பிரபல நடிகர்கள் இளவரசு மற்றும் தலைவாசல் விஜய்.

கதை சுருக்கம்.

ஒரு புதுமணத் தம்பதி ஒரு சவாலை எதிர்கொள்கிறார்கள்.மனைவியின் குறட்டை கணவனை இரவில் தூங்க விடுவதில்லை. இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மகிழ்ச்சியான திருமணத்திற்குத் தேவையான தியாகங்களைக் காட்டுகிறது.

ரொமான்ஸ் நிறைந்த இத் திரைப்படம் எதிர் வரும் 12ம் திகதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

 

 

”விஜய்69” படத்துக்கு ஜோடியாக 4 நடிகைகளிடம் பேச்சுவார்தை.

0

பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராிா இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது.

வருகிற 14 – ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது. மேலும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு GOAT படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.அதை தொடர்ந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளார்.

‘தளபதி – 69’ படத்திற்கு பிறகு சினிமா நடிப்பில் இருந்து விலகுவதாகவும் விஜய் தெரிவித்தார். இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜயை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்தது. அவரின் ஸ்கிரிப்ட்டை விஜய் அங்கீகரித்தார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.வருகிற ‘மே’ மாதம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி – 69 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது. மேலும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் விஜய்யுடன் இதுவரை நடிக்காத ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 4 கதாநாயகிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரபல நடிகை மிருனால் தாக்கூர், பாலிவுட் நாயகி அலியா பட், மற்றும் திரிஷா, சமந்தா ஆகியோர் பெயர் இடம் பெற்று உள்ளது. இதில் மிருனால் தாக்கூர், அலியாபட் ஆகியோரில் ஒருவருக்கு தளபதி 69 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும் இயக்குனர் எச்.வினோத், நடிகர் விஜய் இருவரும் இணைந்து விரைவில் கதாநாயகியை முடிவு செய்ய உள்ளனர்.

 

 

 

 

சரஸ்வதி மற்றும் குழந்தையின் உயிர் ஆபத்தில்……….. ராகினி காப்பாற்றுவாளா????

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

சரஸ்வதிக்கு பிரசவலி ஏற்பட்டு ஆஸ்பிடுலுக்கு அழைத்து செல்லப்படுகிறாள். அங்கு டாக்டர் நா நினைச்சத விட  கன்டிஷன் கிரிடிக்கலா இருக்கு இரண்டு உயிருக்கும் ஆபத்து என்கிறார்.குடும்பத்தில் எல்லோரும் கவலையடைகின்றனர்.

ராகினியை பிரசவம் பார்க்க அழைகின்றனர். ராகினியிடம் தமிழ் குடும்பத்தை பலி தீர்பதற்க்கு சரியான சந்தர்ப்ம் என கூறுகின்றனர். மேலும் தமிழுக்கும் சரஸ்வதிக்கும் குழந்தை பிறக்க வேண்டுமா என தீரமானிக்கும் இடத்தில் நீ இருப்பதாக கூறுகின்றனர்.

இறுதியில் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது. பெண் குழந்தை பிறந்துள்ளது  தாயயும் குழந்தையும் நல்லாயிருக்காங்க எந்ந பிரச்சனையும் இல்ல என்கிறார்கள்.

இச் சீரியலில் ராகினி அந்த குடும்பத்தின் உண்மை முகத்தை எப்போது புரிந்து கொள்வாள் என்பது எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 

‘கோட்’ பற்றி வெளியான புதிய அப்டேட்

0

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பெரும் பட்டாளமே இணைந்து நடித்துள்ள ‘கோட்’ படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரெட்டை வேடத்தில் நடித்து வரும் விஜய், அண்மையில் கேரளாவில் தனது படப்பிடிப்புக்களை விறுவிறுப்பாக முடித்து இருந்தார்.

கேரளாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருப்பதாக பட குழுவினர் தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து நேற்றைய தினம் துபாய்க்கு சென்று இருந்தார் தளபதி விஜய்.

இந்த நிலையில், கோட் படத்தின் அடுத்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் இந்த மாதம் நடைபெற்று முடிந்ததும், படத்தை ஏப்ரல் 14ம் திகதி வெளியிட திட்டம் இட்டுள்ளார்களாம். இதற்கான இறுதி அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/iammoviebuff007/status/1776810267785273477/photo/2

 

அடிதடியில் இறங்கிய முத்து.

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில், ஸ்ருதி தனியாக வரும் போது நபரொருவர் அவரை வழிமறித்து தகராறு செய்ய, அங்கு வந்த முத்து அவரை அடித்து ஸ்ருதியை காப்பாற்றுகிறார்.

மேலும், என் மேல எவ்வளவு என்டாலும் கோபபட்டுக்கோ, ஆனா என் தம்பிய தண்டிக்காத. அவன் பாவம். நீ வந்தா தான் வீட்டுக்கு வருவன் என இருக்கான் என ஸ்ருதியிடம் சொல்கிறார்.

இதைக் கேட்டு அமைதியாக இருந்த ஸ்ருதி, வீட்டுக்கு வந்து முத்து இல்லாட்டி விச்சு என்ன எதாவது பண்ணி இருப்பான் என சொல்ல, அதுவும் முத்து வேலையா தான் இருக்கும் என வாசுதேவன் சொல்கிறார்.

அதற்கு ஸ்டாபிட் அச்சா. அன்னைக்கு நீங்க தான் மீனாவ தேவ இல்லாம பேசி இருக்கீங்க. அந்த வீட்டுல எல்லாரும் என்ன எப்படி பாக்குறாங்க தெரியுமா? என் தப்பு தான் இங்க வந்து இருக்க கூடாது. நான் கிளம்புறேன் என சொல்கிறார். இதைக் கேட்டு ஸ்ருதியின் பெற்றோர் ஷாக் ஆகி நிற்கிறார்கள்.

சிறகடிக்க ஆசையில் எப்போது ஸ்ருதியும் முத்துவும் சேருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதற்கான கதைக்களம் உருவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமலா பால் -பேபி ஷவர் கொண்டாட்டம்

0

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

https://www.instagram.com/p/C5Xy1ZyNxIQ/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

 

‛இந்தியன் 2′ ஜூனில் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0

‛இந்தியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் கமல்ஹாசன் – இயக்குனர் ஷங்கர் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்த படம் ‛இந்தியன் 2′. கமல் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பல பிரச்னைகள், தடைகள் கடந்து இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்தியன் 2 மட்டுமல்ல இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பும் சேர்ந்தே முடிந்துள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்தியன் 2 படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூனில் திரைக்கு வருவதாக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை. பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் கமல் நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும், இந்தியன் படத்தின் தொடர்ச்சி என்பதாலும் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

 

கார்டியன் – விமர்சனம்

0

பேய்ப் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது ‘என்ட் கார்டு’ போடுவார்கள் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதே வழக்கமான பழி வாங்கல் கதைகளை மட்டுமே பேய்ப் படங்களில் வைக்க முடியும் என்பதை சின்ன குழந்தைகளைக் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு பேய்ப் படம்தான் இந்த ‘கார்டியன்’.

இன்டீரியர் டிசைனிங் வேலைக்காக சென்னைக்கு வருகிறார் ஹன்சிகா. சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர். இன்டர்வியூவில் சரியாக பதில் சொல்லவில்லை என்றாலும் வேலை கிடைக்கிறது, அடுத்தடுத்து அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறது. இது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதன்பின் தனக்குள் இருக்கும் ஒரு பெண்ணின் ஆவிதான் இதற்கெல்லாம் காரணம் எனத் தெரிகிறது. அந்த ஆவி சிலரைப் பழி வாங்க வேண்டும் எனக் கூற அதற்கு ஹன்சிகாவும் சம்மதிக்க அடுத்து என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முதன்மைக் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ள படம். அழகான ஹன்சிகாவை இடைவேளை வரை காட்டிவிட்டு, இடைவேளைக்குப் பின் ஆக்ரோஷ ஹன்சிகாவைக் காட்டியுள்ளார்கள் இயக்குனர்கள். அதிர்ஷ்டமில்லாத தன்னைப் பற்றி கவலைப்படுபவருக்கு, திடீரென நினைத்ததெல்லாம் நடப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. அதற்கான காரணம் தெரிய வந்ததும் பெருந்தன்மையாக ஆவியை தனக்குள் இருக்க சம்மதிக்கிறார். அந்த ஆவியின் நிறைவேறாத முக்கிய ஆசை ஒன்றையும் நிறைவேற்றுகிறார்.

படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடியாக ஒருவர் இருக்க வேண்டும் என அவருடைய காதலராக பிரதீப் ராயன் நடித்திருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார்.

90ஸ் காலத்து வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத் நடித்திருக்கிறார்கள். ஹன்சிகா உடலுக்குள் புகுந்த ஆவி இவர்களைத்தான் பழி வாங்கத் துடிக்கிறது. அதற்குக் காரணம் ஒரு பிளாஷ்பேக்.

நகைச்சுவை என்ற பெயரில் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என்னமோ செய்கிறார்கள், ஆனால், சிரிப்புதான் வரவேயில்லை.

சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வழக்கம் போல சில காட்சிகளில் பொருத்தமாகவும், சில காட்சிகளில் சத்தமாகவும் உள்ளது.

படத்தின் இடைவேளை வரை ஹன்சிகாவின் அதிர்ஷ்டம் பற்றிய காட்சிகளாக அப்படியே கடந்து போகிறது. இடைவேளைக்குப் பின்தான் கதைக்குள்ளேயே வருகிறார்கள். மிரள வைக்கும் பேய்ப் படமாக இல்லாமல் மிதமான பேய்ப் படமாகக் கடந்து போகிறது ‘கார்டியன்’.

கார்டியன் – பேய் காப்பாற்றுமா ?

சியான் 62-ல் இணைந்த பிரபல மலையாள நடிகர்

0

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் சியான் 62. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் சியான் 62-ஐ இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடிகர் விக்ரமின் 62வது படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடிக்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எச்.ஆர்.பிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.