Home Blog Page 45

விஜய் சினிமாவிலும் ஹீரோ.. நிஜத்திலும் ஹீரோ.. மிஷ்கின் புகழாரம்

0

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ. 540 கோடி வசூலித்து இருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்-விளையாடு அரங்கில் நடைபெற்று வருகிறது.

லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், “எனக்கு இரண்டு லெஜன்ட் தெரியும். ஒன்று மைக்கேல் ஜாக்சன், மற்றொன்று புருஸ்லீ. நான் கண்ணில் கண்ட முதல் லெஜன்ட் விஜய். அவர் சினிமாவிலும் ஹீரோ, நிஜத்திலும் ஹீரோ. ஒவ்வோரு துளியிலும் அவரது உழைப்பு இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்,” என்று தெரிவித்தார்.

வெற்றிமாறனை நடிக்க வைக்க ஆசை – லோகேஷ் கனகராஜ்

0

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “பல இயக்குனர்கள் என் படத்தில் நடிக்கிறார்கள். அவர்கள் என்னை அணுகும் முறை மற்றும் வேலை செய்ய சுதந்திரம் கொடுக்கிறார்கள். என் படத்தில் வெற்றிமாறனை நடிக்க ஆசை பட்டேன். இதுவரை நடக்க வில்லை. மூன்று படத்தில் நடிக்க கேட்டுவிட்டேன். அவர் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. கண்டிப்பாக நடிக்க வைத்து விடுவேன்,” என்றார்.

ரசிகர்களுக்கு என் தோலை செருப்பா தச்சி தருவேன்.. விஜய் பேச்சு

0

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி படக்குழு சார்பில் லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பேசினர். அதன்பிறகு வெற்றி விழா நிறைவில் மேடை ஏறிய நடிகர் விஜய், லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் ‘நா ரெடி’ பாடலை பாடி, நடனமும் ஆடி மகிழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், “உங்களுக்காக என் தோலை செருப்பா தச்சா கூட உங்க அன்புக்கு ஈடு ஆகாது, என்னைக்குமே உங்களுக்கு உண்மையா இருப்பேன். எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும், அதுக்கு நம்ம பசங்க தான் காரணமா இருக்கனும்.” என்று தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான் – விஜய் பரபரப்பு பேச்சு

0

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.

லியோ வெற்றி விழாவில் மேடை ஏறிய நடிகர் விஜய் பாட்டு பாடி, நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறகு பேசத் தொடங்கிய அவர் வழக்கம் போல குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் விளக்கம் அளித்தார். இத்துடன் தனது அரசியல் வருகை குறித்தும் சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார்.

அப்படியாக, ” புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான், நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான், புரட்சி கலைஞர்-னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலகநாயகன்-னா ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார்-னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான்,” என்று தெரிவித்தார்.

மேலும் தளபதி குறித்து பேசிய விஜய், “என்னை பொருத்தவரை தளபதி என்பவர், மன்னர்கள் சொல்வதை செய்து முடிப்பவர். எனக்கு மன்னர்கள் மக்களாகிய நீங்கள் தான். நீங்கள் சொல்லுங்கள், நான் செய்து முடிக்கிறேன்,” என்று கூறினார்.

பசி வந்தால் கீழே வந்துதான் ஆகனும்.. லியோ வெற்றி விழாவில் ரத்ன குமார் பேச்சு

0

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

லியோ படத்தில் நடிகர் அர்ஜூன் உள்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ரத்ன குமார், “எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசித்தால் உணவுக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்,” என்று தெரிவித்தார். இவரது பேச்சுக்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

கப்பு முக்கியம் பிகிலு.. விஜய் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

0

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.

வெற்றி விழாவில் அனைவரும் எதிர்பார்த்த நடிகர் விஜயின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருந்ததோடு, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தனது திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது பாட்டு பாடி, நடனம் ஆடுவது உள்ளிட்டவைகளை செய்யும் விஜய் இன்றும் அதை குறையில்லாமல் செய்தார்.

பிறகு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், விழாவில் தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்கே உரித்தான பானியில் பதில் அளித்தார். அதன்படி தொகுப்பாளர்கள் 2026 பற்றிய கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த விஜய், “அந்த ஆண்டில் கால்பந்து போட்டி நடைபெற இருக்கிறது. கப்பு முக்கியம் பிகிலு,” என்று தெரிவித்தார்.

இவரது இந்த கருத்தின் மூலம் 2026-ம் ஆண்டு நடிகர் விஜய் தமிழ்நாடு அரசியலில் களமிறங்குவார் என்று அவர்களது ரசிகர்கள் விழா நடைபெற்ற அரங்கில் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளிப்படுத்தினர். இதன் காரணமாக விழா அரங்கமே அதிர்ந்தது.

லியோ – விமர்சனம்

0

தயாரிப்பு – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
நடிப்பு – விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்
வெளியான தேதி – 19 அக்டோபர் 2023
நேரம் – 2 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் – 3/5

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அவர்களது நிஜ வயதுக்குரிய கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க மாட்டார்கள். ஐம்பது வயதைக் கடந்த ஹீரோவாக இருந்தாலும் கல்லூரிக்குப் போகும் ஹீரோயினைக் காதலித்த பல படங்களைப் பார்த்திருக்கிறோம். முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த சில படங்களாக அவருடைய வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதைத் தற்போது விஜய்யும் தொடர்வது பாராட்டுக்குரியது. ஒரு டூயட் பாடல் இல்லாமல், ஒரு ஹீரோ அறிமுகப் பாடல் இல்லாமல் விஜய் படத்தைப் பார்ப்பது நிச்சயமாக வித்தியாசமாக உள்ளது. இதை, இனி வரும் காலங்களிலும் விஜய் தொடர்ந்தால் அவருக்கும் நல்லது.

தனது முந்தைய படங்களில் போதைப் பொருட்களை மையப்படுத்திய கதையாகக் கொடுப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வழக்கமாக இருந்தது. இந்தப் படத்திலும் அப்படித்தான் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்த்தால் அதை ஒரே ஒரு காட்சியுடன் நிறுத்திவிட்டார். ஒரு பேமிலி சென்டிமென்ட் தான் முழு படமும், இப்படிப்பட்ட ஒரு படத்தின் டிரைலரில் அப்படியான ஒரு ‘கெட்ட’ வார்த்தையை எதற்காக வைத்தார் என படம் பார்க்கும் போது யோசிக்க வைக்கிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் தியோக் என்ற இடத்தில் ஒரு காபி ஷாப் நடத்தி வருகிறார் விஜய். மனைவி த்ரிஷா, மகன் மேத்யு தாமஸ், ஒரு மகள் என அன்பான குடும்பம். அவருடைய ஷாப்பிற்கு வந்து தகராறு செய்யும் சிலரைக் கொல்கிறார். சீக்கிரமே விடுதலையாகி வரும் விஜய்யைத் அவரைத் தேடி சிலர் வந்து மீண்டும் பிரச்சினை செய்கிறார்கள். சஞ்சய் தத்தும் விஜய்யைத் தேடி வந்து அவரைத் தன் மகன் ‘லியோ’ என்கிறார். ஆனால், விஜய் தன்னுடைய பெயர் பார்த்திபன் என அமைதியாகப் பேசி அனுப்புகிறார். கணவர் விஜய் மீது சந்தேகப்படும் த்ரிஷாவும் அவர் யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். பார்த்திபன் யார், லியோ யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வித்தியாசமான ஹேர்ஸ்டைல், கொஞ்சம் நரைத்த தாடி, மீசை என நடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்தில் விஜய். அப்படியிருந்தால் அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியாது என்பதற்காக பிளாஷ்பேக்கில் ஒரு இளமையான அதிரடியான வில்லத்தனமான விஜய்யைக் காட்டி சரி செய்திருக்கிறார்கள். விஜய் படம் என்றாலே ஆக்ஷனுக்குக் குறைவிருக்காது, இந்தப் படத்திலும் அப்படியே. அதோடு சென்டிமென்ட் காட்சிகளிலும் அசத்துகிறார். தன்னை ஏன் லியோ, லியோ எனத் தேடி வருகிறார்கள் என த்ரிஷாவிடம் அழும் காட்சியில் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

இப்படி ஒரு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா சம்மதித்திருப்பது ஆச்சரியம்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி என்பதனால் நடிக்க சம்மதித்திருப்பார் போலிருக்கிறது. இருந்தாலும் அந்த முத்தக் காட்சிகள் எல்லாம் ஓவர்.

படத்தின் இரண்டு முக்கிய வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன். இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் அவர்களது கதாபாத்திரம் வருகிறது. இருப்பினும் அர்ஜுனை விட சஞ்சய் தத் அழுத்தமாக நடித்திருக்கிறார். மிஷ்கின், சாண்டி கதாபாத்திரங்கள் படத்தின் ஆரம்பத்திலேயே வரும் தேவையற்ற கதாபாத்திரங்கள். விஜய்யின் குடும்ப நண்பராக பாரஸ்ட் ஆபீசராக கவுதம் மேனன், அவரது மனைவியாக பிரியா ஆனந்த்.

அனிருத் இசையில் ‘நா ரெடிதான்’ பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தில் விஜய்க்குப் பிறகு வேறு யாருக்காவது அதிக சம்பளம் தர வேண்டும் என்றால் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவுக்குக் கொடுக்கலாம். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும் படத்திற்குப் பலம்.

படத்தின் ஆரம்ப பத்து நிமிடங்களைத் தவறாமல் பாருங்கள் என்றார் இயக்குனர் லோகேஷ். அந்த பத்து நிமிடங்கள் மட்டுமல்ல முதல் அரை மணி நேரக் கதையைத் தூக்கிவிட்டால் கூட படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அந்த ‘ஹைனா’வைப் பிடிக்கும் காட்சி, மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் வழக்கமான தமிழ் சினிமா ‘டெம்ப்ளேட்’தான். ஆனால், மூடநம்பிக்கைக்காக தனது மகளையே கொலை செய்யத் துடிக்கும் அப்பா கதாபாத்திரத்தை என்னவென்று சொல்வது ?. இடைவேளைக்குப் பின் இருக்கும் திரைக்கதைதான் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘விக்ரம்’ படத்துடன் ஒப்பிடும் போது இதில் ‘ஸ்கிரிப்ட்’ன் வேகம், அழுத்தம் குறைவே.

லியோ – கொஞ்சம் யோ யோ, கொஞ்சம் யோவ்…

லியோ வெற்றிக்காக திருப்பதி சென்ற படக்குழு

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ‘லியோ’ படம் வெற்றி பெறுவதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பாத யாத்திரையாக திருப்பதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், படம் நன்றாக வந்துள்ளதாகவும் ‘லியோ’ படம் வெளியான பிறகே ரஜினியின் 170-வது படத்திற்கு ஸ்கிரிப்ட்களை தயார் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.

விஜய் பேசிய அந்த வார்த்தை.. சர்ச்சைக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன அதிரடி பதில்

0

லியோ படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

அதே நேரத்தில் விஜய் பேசிய ஒரு வார்த்தை சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சரியா தவறா என விவாதமும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில் இது பற்றி பேசி இருக்கிறார். விஜய்யை தான் கட்டாயப்படுத்தி தான் அந்த வார்த்தையை பேச வைத்ததாக கூறி இருக்கிறார்.

கெட்ட வார்த்தை பேசியது விஜய் அல்ல. அது படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். விஜய்யை கட்டாயபடுத்தி தான் பேச வைத்தேன், அதனால் இதற்கு நான் தான் முழு பொறுப்பு என்றும் லோகேஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.

மார்க் ஆண்டனி திரைவிமர்சனம்

0

வினோத் குமார் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தின் First லுக் போஸ்டரில் இருந்து பாடல்கள் வரை அனைத்துமே ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில், படத்தின் மீது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், மார்க் ஆண்டனி டிரைலர் தான் படத்தின் மீதுள்ள ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் இமாலய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. அத்தகைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை மார்க் ஆண்டனி முழுமையாக பூர்த்தி செய்ததா? விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

பல வருட முயற்சிக்கு பின் 1975ல் Phone மூலம் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்கிறார் சிரஞ்சீவி [செல்வராகவன்]. இந்த டைம் டிராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மாற்றுகிறார்.

அப்படி அவர் செய்யும் முயற்சியில் அவருடைய உயிர் பறிபோகிறது. 20 ஆண்டுகளுக்கு பின் 1995ல் இந்த டைம் டிராவல் Phone மார்க் [ மகன் விஷால்] இடம் கிடைக்க, இதை வைத்து தனது தந்தை ஆண்டனியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

இதன்பின் என்ன நடந்தது? இதில் வில்லன் ஜாக்கி பாண்டியனின் [ எஸ். ஜே. சூர்யா] பங்கு என்ன என்பது தான் படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ விஷால் அப்பா மற்றும் மகன் இரு கதாபாத்திரத்திலும் நன்றாக நடித்துள்ளார். குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லை. வில்லனாக வரும் எஸ்.ஜே. சூர்யா எப்படி தான் இப்படி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மக்கள் ரசிக்கும்படி நடிக்கிறாரோ என்று தெரியவில்லை.

பல படங்களில் வில்லனாக மட்டுமே நடித்து மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா, இப்படத்தில் வில்லத்தனத்தில் நகைச்சுவையையும் கலந்து பட்டையை கிளப்பியுள்ளார். சுனில் ஏற்று நடித்த ஏகாம்பரம் கதாபாத்திரம் பக்கா. அபிநயா, ரிது வர்மா, செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் அனைவரின் நடிப்பும் ஓகே.

தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதற்கு பாராட்டு. இயக்குனராக இதற்கு முன் இவர் இயக்கிய படங்களால் இவர் மீது இருந்த பார்வை, மார்க் ஆண்டனி படத்திற்கு பின் முற்றிலும் மாறக்கூடும். முதல் பாதியின் துவக்கத்தில் ஒரு 30 நிமிடங்கள் தொய்வு இருந்தது.

ஆனால், அதற்குப் பின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார் ஆதிக். குறிப்பாக இடைவேளை காட்சி. அதற்கு பின் இரண்டாம் பாதியில் வரும், சில்க் ஸ்மிதா காட்சி, மகன் எஸ்.ஜே. சூர்யாவிற்கும், தந்தை எஸ்.ஜே. சூர்யாவிற்கும் இடையிலான காட்சி, திரையரங்கை தெறிக்கவிடும் மாஸ் சீன்ஸ் என அடுத்தடுத்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதையை அமைத்துள்ளார் ஆதிக்.

லாஜிக் மீறல்கள் இருந்தாலும், முழுக்க முழுக்க நம்மை சிரிக்க வைத்துவிட்டார். ஒளிப்பதிவில் எந்த ஒரு குறையும் இல்லை, சூப்பர் பக்கா. ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு பலம். எடிட்டிங் படத்தை தாங்கி நிற்கிறது. கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பு நம்மை 1970ஸ் மற்றும் 1990ஸ் காலகட்டத்திற்கு கூட்டி செல்கிறது.

குறிப்பாக ஜி. வி. பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேற லெவல். விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஜி.வியின் பின்னணி இசையும் முக்கிய காரணம். மேலும் பழைய பாடல்களை அருமையாக ரீமிக்ஸ் செய்து திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து விட்டார் ஜி. வி.

பிளஸ் பாயிண்ட்

விஷால் நடிப்பு

வில்லத்தனத்துடன் நகைச்சுவை கலந்து நடித்த எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு

இடைவேளை காட்சி, இரண்டாம் பாதி திரைக்கதை

ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசை

மைனஸ் பாயிண்ட்

முதல் பாதி தொடக்கத்தில் ஏற்பட்ட 30 நிமிடம் தொய்வு

லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் மார்க் ஆண்டனி திரையரங்கை தெறிக்க விட்டது