Home Blog Page 48

லியோ படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்

0

மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விமானத்தில் சஞ்சய் இறங்கியது, அவரை படக்குழுவினர் வரவேற்றது, பின்னர் பட செட் அருகே உள்ள ஓட்டலில் விஜய், லோகேஷ் உள்ளிட்டோர் வரவேற்று பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை ரசிகர்கள் வரவேற்று டிரெண்ட் செய்தனர்.

அந்த வீடியோவில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். அவரது தலைமுடி பார்க்கவே வித்தியாசமாக உள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சிம்பு – தேசிங்கு பெரியசாமி : இளைய தலைமுறையுடன் கைகோர்த்த கமல்

0

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார், சிம்பு நடிக்கிறார். துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் புகழ் பெற்றவர் தேசிங்கு பெரியசாமி. பெரிய வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் “என் வாழ்க்கையின் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது மற்றும் அவரின் தயாரிப்பின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கனவு நனவானது; அற்புதங்கள் நிகழ்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “கனவு நனவானது” என பதிவிட்டுள்ளார்.

 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம்.. போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

0

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சூரி.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேதாளம், அண்ணாத்த, டான், சீமராஜா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது நடிகர் சூரி, கூழாங்கல் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார். கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கபேலா, காப்பா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் தான் அன்னா பென்.

இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு “கொட்டுக்காளி” என பெயரிடப்பட்டுள்ளது. சேவல்கள் அடங்கிய டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

 

பேய் ஜானரில் குதித்த காஜல்; வெளியானது கோஸ்டி ட்ரெய்லர்

0

காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் கோஸ்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

 

பிரிவினைவாதிகள் யார்? அழுத்தமாக சொல்லும் விடுதலை ட்ரெய்லர்

0

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கதையின் நாயகர்களாக நடித்துள்ள விடுதலை படத்தின் பாடல்கள் வெளியாகயுள்ள நிலையில், படத்தின் டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் குமாரேசன் என்ற பெயரில் போலீஸ் கான்ஸ்டபிளாக சூரியும், வாத்தியார் பெருமாள் என்ற போராளியாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளார்கள். பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜிவ் மேனன், சேட்டன், இளவரசு,டாணாக்காரன் இயக்குநர் தமிழ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.

படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

மக்கள் படை தலைவராகவும்,போராளியாகவும் இருந்து வரும் விஜய் சேதுபதியை உயிருடனோ அல்லது பிணமாகவோ போலீஸ் பிடிக்கும் ஆபரேஷனே படத்தின் கதையாக அமைந்துள்ளது. விடுதலை படத்தின் முதல் பாகமான இந்த கதை அமைந்திருக்கும் நிலையில், சுமார் 2.42 நிமிடங்கள் ஓடும் டிரெய்லர் அழுத்தமான காட்சிகளுடன் இடம்பெற்றுள்ளது.

 

புது சீரியலில் கமிட்டாகி கெத்து காட்டும் ரியா விஸ்வநாத்!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரில் ஆல்யா மானசாவுக்கு பின் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்தார். போலீஸ் ஐபிஎஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஹைட் அண்ட் வெயிட்டுடன் இருந்த ரியாவை சில தினங்களுக்கு முன் சீரியலை விட்டு திடீரென நீக்கிவிட்டனர்.

இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பதிவுகளில் ‘இனி நான் சந்தியா இல்லை’ என்று அறிவித்திருந்த ரியா, சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்தும் சில பேட்டிகளில் கூறியிருந்தார்.

இதனால் ரியா விஸ்வநாத் கேரியர் என்னவாகும்? அவர் தொடர்ந்து நடிப்பாரா? என ரசிகர்கள் ஐயமுற்றனர்.இந்நிலையில், ரியா விஸ்வநாத் ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் ‘சண்டைக்கோழி’ தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஒரு சேனல் தன்னை சீரியலை விட்டு நீக்கிய சில நாட்களிலேயே மற்றொரு சேனலின் புது சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி ரியா கெத்து காட்டியுள்ளார். இந்த மகிழ்ச்சியை ரியாவின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு

0

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் பத்து தல.

இப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாகிறது. நடிகர் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர்கள், நடிகைகள், டெக்னீசியன்கள் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

அரியவன் – விமர்சனம்

0

பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பிரச்சினைகளைக் கொண்ட படங்கள் சமீப காலங்களில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. நிஜத்தில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால், அது பற்றிய எச்சரிக்கை உணர்வையும், பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும்படியாகவும் சில படங்கள் வருகின்றன. அந்த விதத்தில் வந்துள்ள படம்தான் இந்த ‘அரியவன்’.

தனுஷ் நடித்த “யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்” மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால், இந்தப் படம் சம்பந்தப்பட்ட எந்த புரமோஷன்களிலும் இயக்குனர் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் இன்று வரை மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கும் படம் என்றே விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இஷான், ஒரு கபடி விளையாட்டு வீரர். அவருக்கு பிரனாலி கோக்ரே என்ற காதலி இருக்கிறார். பிரனாலியின் தோழி ஒருவரை அவரது காதலன் ஆபாச வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார். அது பற்றி தெரிய வந்ததும் அந்த காதலனையும், அவனது கும்பலையும் பற்றி விசாரிக்கிறார் இஷான். அவர்களிடமிருந்து மேலும் பல பெண்களின் வீடியோக்களைக் கைப்பற்றுகிறார். அந்த கும்பலின் பின்னணியில் தலைவனாக இருக்கும் டேனியல் பாலாஜி, இஷான் செய்தது பற்றித் தெரிய வர அவரை மிரட்டுகிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத இஷான், டேனியல் பாலாஜியை எதிர்த்து மற்ற பெண்களையும் காப்பாற்ற நினைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் அறிமுகக் கதாநாயகனாக இஷான் நடித்துள்ளார். ஆக்ஷனில் அசத்துபவர், ஆக்டிங்கிலும் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். எல்லா காட்சிகளிலும் ஒரே விதமான முகபாவத்தையே வெளிப்படுத்துகிறார். அவரது காதலியாக பிரனாலி கோக்ரே. காதலனுக்கு உதவியாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். பெண்களை வைத்து வீடியோ எடுத்து அதன் மூலம் கோடிகளை சம்பாதிக்கும் வில்லனாக டேனியல் பாலாஜி.

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். அதற்குள்ளாகவே படத்தை சுருக்கமாக முடித்துள்ளார்கள். பெரிய அளவில் எந்தவிதமான திருப்புமுனைகளும் படத்தில் இல்லை. எப்படியும் ஹீரோ, பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை இன்னும் பரபரப்பாகச் சொல்லியிருக்கலாம். கிளைமாக்சில் ஹீரோ களத்தில் இறங்காமல், பாதிக்கப்பட்ட பெண்களை வைத்தே படத்தை முடித்திருப்பது மட்டும் சிறப்பு.

படத்தில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்தான். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் ரசிக்கும்படியான படமாக வந்திருக்கலாம். படத்தை யார் இயக்கினாரோ அவர்தான் அதற்கு பொறுப்பு. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

அரியவன் – கொஞ்சம் சிறியவன்…

பல்லு படாம பாத்துக்க – விமர்சனம்

0

”த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து,’ போன்ற இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட, நாலாம்தரமான படங்களின் வரிசையில் இணைந்துள்ள மற்றொரு படம் இது.

இன்றைய இளம் ரசிகர்கள் இப்படிப்பட்ட படங்களையும் ரசிப்பார்கள் என தப்புக்கணக்கு போட்டு தப்புத்தப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இரட்டை அர்த்த வசனங்கள் போதும், கதை எதுவும் தேவையில்லை என காட்டுக்குள் ஜாம்பிகள் என கம்பி கட்டி கதை என்ற ஒன்றை எழுதியிருக்கிறார் இயக்குனர் விஜய் வரதராஜ்.

குஞ்சிதண்ணி காடு என்ற காட்டுப்பகுதி ஒன்றில் ஜாம்பிகள் இருப்பதாகவும், அந்தப் பகுதியில் தற்கொலை அதிகம் நடப்பதாகவும் ஒரு கதை இருக்கிறது. அந்த இடத்திற்குத் தற்கொலை செய்து கொள்ள அட்டகத்தி தினேஷ், லிங்கா, சாய் தீனா, ஜகன் உள்ளிட்ட சிலர் தனித் தனியே செல்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திடீரென நண்பர்களாகிறார்கள்.

அந்தக் காட்டுக்குள் என்ன இருக்கிறது என பார்த்துவிடலாம் எனச் செல்கிறார்கள். ஜாம்பிகளிடம் சிக்கும் அவர்களை சஞ்சிதா ஷெட்டி காப்பாற்றுகிறார். ஆளுக்கு ஒரு பிளாஷ்பேக் சொல்லி நம்மை போரடிக்க, கடைசியாக சஞ்சிதா சொல்லும் பிளாஷ்பேக் மூலம் கதை கிளைமாக்ஸ் நோக்கி நகர்கிறது. அதில் ஹிட்லர் எல்லாம் வந்து நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை யார் வாயைத் திறந்து பேசினாலும், அதில் இரட்டை அர்த்த வசனம் ஒன்றாவது இருக்க வேண்டும் என யோசித்து வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர். கடைசியில் ஹிட்லரையும் ஜாம்பி எனச் சொல்லி அவரையும் கிண்டலடித்து படத்தை முடித்திருக்கிறார்கள். எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றி ஒரு வழியாக முடிகிறது படம்.

ஓடிடியில் பார்க்கச் சொன்னால் கூட பத்து நிமிடத்தில் படத்தை மாற்றிவிடுவார்கள் ரசிகர்கள். அப்படி ஒரு படத்தை இரண்டு மணி நேரம் பொறுத்திருந்து பார்க்க தனி மன தைரியம் வேண்டும். நடித்திருக்கும் அனைவருமே அவரவர் இஷ்டத்திற்கு நடித்திருப்பதாகத்தான் தெரிகிறது. இறுக்கமான ஆடையுடன் மட்டுமே வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. எதையோ சொல்லி ஏமாற்றி அட்டகத்தி தினேஷை நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஜெகன் பேச்சில் மட்டுமல்ல, உடல் மொழியிலும் ‘ஒரு மாதிரி’ நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா ஒரு அடி முன்னேறினால் இது போன்ற படங்கள் வந்து பத்து அடி பின்னுக்கு இழுத்துவிடும். இது போன்ற படங்கள் தமிழ் சினிமா மீது பல்லு படாம பாத்துக்க வேண்டியது ரசிகர்களின் பொறுப்பு.

பல்லு படாம பாத்துக்க – பசங்க கண்ணுல படாம பாத்துக்கணும்…

பஹிரா – விமர்சனம்

0

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்நியன்’ படத்தையும், பாரதிராஜா இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தையும் கலந்து செய்தால் வருவதுதான் ‘பஹிரா’ கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே பெண்களால் காதலில் ஏமாந்து போனதாக சொல்லப்படும் சில யு டியுப் வீடியோக்களைக் காட்டி, காதலில் பெண்கள் மோசமானவர்கள் என பெண்களை மட்டம் தட்டும் விதத்தில் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

போதாக்குறைக்கு படம் முழுவதும் பெண்கள் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதிலேயே இயக்குனர் கவனமாக இருந்திருக்கிறார். “பெண்களுக்கு ஒண்ணுன்னா வேறு எந்த பெண்ணும் வர மாட்டா, ஆனால், ஆண்களுக்கு ஒண்ணுன்னா இந்த பஹிரா” என வருவான் என வசனத்திலும் பெண்கள் மீதான தாக்குதல்தான் அதிகம். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற மட்டரகமான காதல் படத்தைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அதே மாதிரியான ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறார்.

இது போன்ற கதைகளை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் ரொம்பவே பாவம். இந்தப் படமெல்லாம் எப்படி ஓடும் என எதிர்பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம். நேற்று நாம் படத்தைப் பார்த்த போது 200 பேர் அமரக் கூடிய தியேட்டரில் வெறும் 20 பேர் மட்டுமே இருந்தனர். ஏற்கனவே, தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது. இப்படியெல்லாம் படமெடுத்தால் பயந்து போய் தியேட்டர் பக்கம் மக்கள் வரவே மாட்டார்கள்.

பிரபுதேவா விதவிதமான கெட்டப்புகளில், சில பல பெண்களை ‘டெடி பியர்’ பொம்மையை வைத்து கொலை செய்கிறார். அடுத்தடுத்த கொலைகளால் காவல் துறை திண்டாடுகிறது. பிரபுதேவா ஏன் இப்படி கொலைகளை செய்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பிரபுதேவா விதவிதமான தோற்றங்களில் வருகிறார். பள்ளிகளில் நடக்கும் மாறுவேடப் போட்டிகளில் கூட இந்தக் காலத்தில் சிறப்பான மேக்கப் செய்கிறார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு அந்த அளவில் கூட பிரபுதேவாவிற்கு மேக்கப் செய்யவில்லை. ஏதோ கடமைக்கு படம் எடுத்தால் போதும் என இயக்குனர் எடுத்திருப்பார் போலிருக்கிறது. கடைசி சில காட்சிகளில் மட்டும் பிரபுதேவா நடிக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால் என சில பல ஹீரோயின்கள். இவர்களில் அமைராவிற்கு மட்டும் ஐந்து நிமிடத்திற்கும் மேலான காட்சிகள். மற்றவர்களுக்கு அதைவிடக் குறைவான காட்சிகள். நாசர், சாய்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோரும் படத்தில் உண்டு.

80களிலேயே இந்த மாதிரியான ரிவஞ்ச் கதைகளை மூட்டை கட்டி, பரண் மீது தூக்கி போட்டுவிட்டார்கள் இயக்குனர்கள். டிவியில் அடுத்தடுத்து ‘அந்நியன், சிகப்பு ரோஜாக்கள்’ இரண்டு படத்தையும் இயக்குனர் பார்த்ததும் இரண்டையும் கலந்து இப்படி ஒரு படம் எடுக்க யோசனை வந்திருக்கும். இவர் இயக்கத்தில் அடுத்து விஷால், எஸ்ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ என்ற ஒரு படம் வரப் போகிறது. அதை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

பஹிரா – ரசிகர்கள் பாவம்ரா….