Home Blog Page 47

Saregamapa Lil Champs நிகழ்ச்சியை தொடர்ந்து ஜீ தமிழில் புதிய ஷோ- யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்

0

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக TRPயில் ரீச் பெற்று வருகின்றன.

அதேபோல் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களும் அதிகம். அண்மையில் பெரியவர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைய இப்போது சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் வந்துள்ளது.

அதாவது ரசிகர்களின் பேவரெட் நிகழ்ச்சியான Dance Jodi Dance Reloaded 2 தொடங்க இருக்கிறதாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமாம்.

அதற்கான அறிவிப்பு வெளியாக நடனத்தில் ஆர்வமுள்ளவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தும் முயற்சியில் உள்ளார்கள்.

ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் விவரம்

0

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்தது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் 400 கோடி, 450 கோடி வசூலை நெருங்கி விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஜெயிலர் பட நிறுவனம், இன்று சமூக வலைதளத்தில் ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதில், கடந்த ஒரு வாரத்தில் ஜெயிலர் படம் 375. 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்போது வரை ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து கொண்டிருப்பதால், கூடிய சீக்கிரமே இப்படம் 500 கோடி வசூலை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

தவறான செய்தி பரப்பாதீர்கள் : கல்யாணி கோபம்

0

அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. சில சீரியகளிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்ட கல்யாணிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு எனக்கு முதுகு தண்டுவடத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த காலகட்டத்தில் நான் மன உளைச்சலுடன் இருந்தேன். கணவர் குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் உடல் உபாதையால் அவதிப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை வைத்து சிலர், நடிகை கல்யாணி மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பது போன்று மார்பிங் செய்த போட்டோக்களை பதிவிட்டு தவறான தகவல்களை பரப்பி வந்தார்கள். இதையடுத்து உடனடியாக இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள நடிகை கல்யாணி, இன்னொருவரின் உடலில் என்னுடைய முகத்தை மார்பிங் செய்து தவறான செய்திகளை பதிவு செய்கிறார்கள். நான் உடல் நலம் இல்லாத போது மனரீதியில் எனது பிரச்சனை குறித்து தான் பேசியிருந்தேன். ஆனால் என்னை பற்றி தவறான வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். தயவு செய்து இது போன்ற செய்திகளை யாரும் சோசியல் மீடியாவில் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை கல்யாணி.

புதிய சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அந்த படம் திரைக்கு வந்தபோது லெக்சஸ் என்ற ஒரு காரை அவருக்கு பரிசாக வழங்கினார் கமல்.

அந்த காரின் மதிப்பு 80 லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார்.

இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். இந்த கார் 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளில் கடந்து விடும். ஸ்மார்ட்போன் வசதியுடன் அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியுமாம். அதோடு இந்த கார் ஒரு லிட்டருக்கு 12 முதல் 13 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‛ஹே ராம்’ முழு படத்தையும் யூ-டியூபில் வெளியிட்ட கமல்

0

கடந்த 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஹே ராம்’. இதில் ஷாரூக்கான், ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மகாத்மா காந்தியை கோட்சே கொன்றது குறித்து இப்படம் உருவானது அந்த காலகட்டத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்கள் மத்தியில் அதிக பேசப்படும் படமாக ஹே ராம் இருந்து வருகிறது. இந்தக்காலக்கட்டத்தில் இந்த படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என பல கூறி வந்தனர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூ-டியூப் சேனலில் இந்த படத்தின் முழு தொகுப்பையும் வெளியிட்டுள்ளனர். படம் வெளியான 22 மணிநேரத்தில் 2.21 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

‛‛இந்திய சினிமா வரலாற்றில் இந்தப் படத்திற்கென்று ஒரு இடம் எப்போதும் இருக்கும். இந்திய சினிமாவின் ஆக சிறந்த படைப்பு ஹேராம்… கமல் 200 வருஷம் வாழ்வான் வாலி சொன்னது. ஹே ராம் படம் 200 வருஷம் அல்ல இன்னும் ஆயிரம் வருடம் கமல் சார் வாழ்வார்” என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா? நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்த ஹின்ட்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மொத்த குடும்பமும் புது வீட்டில் குடியேறுவது போல காட்சிகள் வர இருக்கிறது. தற்போது கிரஹப்ரவேசத்திற்கு ஏற்பாடுகள் நடப்பது போல் தான் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு தனலட்சுமி இல்லம் என மூத்த அண்ணியின் பெயர் தான் வைத்து இருக்கின்றனர் என்பதும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

மொத்த குடும்பமும் விரைவில் புது வீட்டுக்கு செல்ல இருக்கும் நிலையில் அதோடு சீரியல் முடிய வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் இன்ஸ்டாக்ராமில் இது பற்றி பதிவிட்டு இருக்கிறார். “பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா?” என அவர் கேள்விக்குறி மட்டும் வைத்து இருக்கிறார்.

அதனால் சீரியல் முடிவது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடுத்து இரண்டாம் பாகம் தொடங்க்கிடாதீங்க என்றும் ரசிகர்கள் கேட்டு இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்! யார் தெரியுமா?

0

பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த ஷோவில் பங்கேற்கும் போட்டியாளராலும் மிக பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிடுகிறார்கள். அதனாலேயே அந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங்.

தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும், போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது பிக் பாஸ் 7ம் சீசனுக்கு யாரெல்லாம் போட்டியாளராக வர இருக்கின்றனர் என உத்தேச பட்டியல் பரவி வருகிறது.

அதில் முதல் ஆளாக பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தான் வர போகிறார் என கூறப்படுகிறது. ‘பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்தான்..’ என செய்தி வாசித்து பாப்புலர் ஆன ரஞ்சித் பிக் பாஸ் வந்தால் அவருக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஜவான் புரோமோ படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டுள்ள விஜய்சேதுபதி

0

நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ, அதன் பலனாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதிவெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இது குறித்த புரோமோக்கள் தொடர்ந்து வெளியாக இருக்கின்றன. அந்தவகையில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு என தனியாக புரோமோ வீடியோ வெளியாக இருக்கிறது.

இதற்கான படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே ஹிந்தியில் ஒன்றிரண்டு படங்களில் மற்றும் வெப் சீரிஸில் விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் ஷாருக்கானுடன் நடித்துள்ள இந்த ஜவான் படத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு பாலிவுட்டிலும் அவருக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனம் கபூரை விமர்சிக்கவில்லை : வருத்தம் தெரிவித்த ராணா

0

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கோதா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. துல்கர் சல்மான் நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாக இருப்பதால் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுழன்று வருகிறார் துல்கர் சல்மான். அந்தவகையில் சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக துல்கரின் நண்பர்களான ராணா மற்றும் நானி ஆகிய இளம் நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் துல்கர் சல்மானின் பொறுமையையும் அமைதியையும் குறித்து பாராட்டும் விதமாக ராணா பேசும்போது, அவர் தன்னை அறியாமல் போகிற போக்கில் பாலிவுட் நடிகை சோனம் கபூரை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டது. .

அந்த நிகழ்வில் ராணா பேசும்போது, “துல்கர் சல்மானும், நானும் ஒரே நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள். அவர் என்னுடைய ஜூனியர். ஒருமுறை எனது வீட்டின் அருகே துல்கர் சல்மான் நடித்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கே துல்கர் சல்மான் ஒரு ஓரமாக நின்று புரடக்சன் பையனுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை லண்டனில் தனது கணவருடன் ஷாப்பிங் செய்த விஷயத்தை செல்போனில் சத்தமாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அதனால் அப்போது படமாக்கப்பட்ட காட்சிகளில் அவரால் முழு ஈடுபாட்டையும் செலுத்த முடியாததால் ஒரு முழுமையான தரத்துடன் காட்சிகளை படமாக்க முடியவில்லை. ஆனாலும் துல்கர் சல்மான் இந்த சூழலை அமைதியாக எதிர்கொண்டு தனது டென்ஷனையும் குறைத்துக்கொண்டு மிக பொறுமையாக இருந்தார். துல்கர் என்றாலே எங்களுக்கு அவர் அப்படித்தான்” என்று பேசினார்.

ராணாவின் இந்த பேச்சு குறித்த வீடியோக்களும் செய்திகளும் வெளியான உடனே ராணா குறிப்பிட்டு பேசிய நடிகை, துல்கர் சல்மான் இந்தியில் நடித்த சோயா பேக்டர் என்கிற படத்தில் அவருடன் நடித்த சோனம் கபூர் பற்றி தான் என பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட ஆரம்பித்தனர்.

இது பின்னர் ராணாவின் கவனத்திற்கு வந்ததும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தான் சோனம் கபூர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அப்படி சொன்னதாக யாரும் நினைத்தால் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

தெறிக்க ஹரோல்ட் தாஸ் அதிரடி.. லியோ படத்தின் புதிய அப்டேட்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இவருடைய கதாபாத்திரமான ஹரோல்ட் தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.