Home Blog Page 51

பத்து தல – விமர்சனம்

0

தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் – ஒபிலி கிருஷ்ணா
இசை – ஏஆர் ரகுமான்
நடிப்பு – சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி – 30 மார்ச் 2023
நேரம் – 2 மணி நேரம் 32 நிமிடம்
ரேட்டிங் – 2.75/5

தாதாக்களைப் பற்றிய படம் என்றாலே அதில் அரசியலும் வந்துவிடும். அப்படி ஒரு தாதா செய்யும் அரசியலைப் பற்றிய படம்தான் இந்த ‘பத்து தல’. கன்னடத்தில் ‘முப்டி’ என்ற பெயரில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம், தமிழில் சில மாற்றங்களுடன் ரீமேக் ஆகியுள்ளது.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா. சிம்பு படத்தின் இடைவேளைக்கு முன்பாக மட்டுமே வருவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. ரீமேக் செய்யும் போதாவது அதை மாற்றியிருக்கலாம்.

தமிழகத்தை எந்தக் கட்சி ஆள வேண்டும், யார் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதை ‘எஜிஆர்’ என்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் மற்றும் தாதாவான சிலம்பரசன்தான் தீர்மானிக்கிறார். முதல்வர் சந்தோஷ் பிரதாப் திடீரென காணாமல் போகிறார். அவரைக் கடத்தியது யார் என்ற விசாரணையில் சிபிஐ இறங்குகிறது. இதனிடையே, அடியாளாக இருக்கும் கவுதம் கார்த்திக், சிம்புவிடம் வேலை செய்ய கன்னியாகுமரி செல்கிறார். ஆனால், அவர் ஒரு ‘அன்டர்கவர்’ போலீஸ். சிம்புவைப் பிடிப்பதே அவருக்கு வேலை. காணாமல் போன முதல்வர் கிடைத்தாரா ?, சிம்புவின் பின்னணி யார் ?, சிம்புவை கவுதம் கார்த்திக் பிடித்தாரா ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘பத்து தல’ என டைட்டில் ரோலில் நடித்துள்ள சிம்புவை படம் முழுவதும் வர வைத்து தெறிக்கவிட்டிருக்க வேண்டும். ஆரம்பம் முதல் அவரை தூரத்தில் காட்டுவது, கால்களை மட்டும் காட்டுவது, கைகளை மட்டும் காட்டுவது என அவ்வப்போது மேஜிக் காட்டிவிட்டுச் செல்கிறார்கள். இடைவேளைக்கு முன்பாகத்தான் அதிரடியாக வருகிறார் சிம்பு. இடைவேளைக்குப் பின் மட்டுமே அவருடைய ராஜ்ஜியம் தொடர்கிறது. சிம்பு யார் என்பது படம் பார்ப்பவர்களுக்குத் தெரிய வரும் போது அவர் மீது நமக்கு பெரும் அனுதாபம் வர வேண்டும். அதை அழுத்தமாகப் பதிவு செய்யத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

‘பாண்டியன், போக்கிரி’, ஏன் சமீபத்தில் வந்த ‘விக்ரம்’ படம் வரையில் தொட்டுத் தொடரும் பாரம்பரியமான ‘அன்டர்கவர் போலீஸ்’ கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக். அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.

தாசில்தார் ஆக பிரியா பவானி சங்கர். கவுதம் கார்த்திக்கின் முன்னாள் காதலி. சிம்புவிடம் கவுதம் அடியாளாக இருப்பதாலும், முந்தைய காதல் பிரிவாலும் கவுதம் மீது கோபமாகவே இருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

படத்தில் துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் தான் படத்தின் மெயின் வில்லனாக இருக்க வேண்டும். ஆனால், மெயின் வில்லனாகவும் சிம்புவே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்திலும் துணை வில்லனாகவே தான் கவுதம் மேனனைப் பார்க்க முடிகிறது. வழக்கம் போல சிம்புவின் அடியாட்களாக சிலர், துரோகிகளாக சிலர் வந்து போகிறார்கள்.

ஏஆர் ரஹ்மான் இசையில் சாயிஷா ஆடியுள்ள ‘ராவடி’ பாடல் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. மற்றபடி பாடல்கள் பெரிய அளவில் மனதில் பதியவில்லை. பின்னணி இசையில் காட்சிகளை ஏஆர் ரஹ்மான் தூக்கி நிறுத்துவது போலத் தெரிகிறது. ஆனால், நாம் பார்த்த தியேட்டரில் சவுண்ட் சிஸ்டம் சரியாக இல்லாத காரணத்தால் அதுவும் அதிரடியாக இல்லை.

திரைக்கதை அழுத்தமாகவும், விறுவிறுப்பாகவும் நகராதது ஒரு குறை. கிளைமாக்சில் குதிரை மீது வந்து கத்தியால் சண்டை போடாமல் துப்பாக்கியால் சண்டை போட்டு, பின்னர் கீழிறங்கியதும் கத்தியால் சண்டை போடுகிறார் சிலம்பரசன். சிம்புவைக் கொல்ல துப்பாக்கிகளுடன் நூற்றுக்கணக்கான பேர் வந்தாலும் தனியாளாக நின்று சமாளிக்கிறார். இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி பார்ப்பது ?.

படத்தை முழுவதும் தாங்கிப்பிடிக்க சிம்பு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். ஆனால், அவரை ‘பாதி தல’ ஆக பாதிப் படத்தில் மட்டுமே காட்டுவதை நிச்சயம் மாற்றியிருக்க வேண்டும்.

பத்து தல – சிங்கிள் தல சிம்பு மட்டும்…

போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர்

0

விஜய் டிவியின் ‘சிப்பிக்குள் முத்து’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிக்கும் முன்பே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஒருவர் லாவண்யாவை தன்னிடம் போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி செய்தால் ஆறு மாதத்திற்கு பிறகு அவரது கேரியரையே வேறு லெவலுக்கு எடுத்துச்செல்வேன் என்று கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ந்தாலும், இந்த விவகாரத்தை இப்போது பெரிதாக்கினால் நமது எதிர்காலத்தை முடித்துவிடுவார்கள் என பயந்து அமைதியாகிவிட்டாராம். அதன்பிறகு அந்த இயக்குநரிடமிருந்தும் விலகிவிட்டாராம்.

லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் லாவண்யாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

அரசியல்வாதியை திருமணம் செய்யும் பிரபல நடிகை!

0

நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை மற்றும் நடிகையான ப்ரனிதி சோப்ரா ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவருக்கு 34 வயது ஆகிறது. ப்ரனிதி சோப்ராவும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவும் காதலிப்பதாக ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனாலும் இருவரும் இதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

சமீபத்தில் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒரே காரில் ஏறிச்செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் இருவரும் காதலிப்பதை பிரபல பாடகர் ஹார்டி சாந்து உறுதிப்படுத்தி உள்ளார்.

ப்ரனிதி சோப்ராவுக்கும், ராகவ் சதாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

‘இந்தியன் 2’ தீபாவளிக்கு வெளியிட திட்டம்

0

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தமிழில் ‘இந்தியன் 2’ படத்தையும் தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

‘இந்தியன் 2’ படக்குழுவினர் அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் முடிவடைய இருக்கிறதாம். அதன்பின் இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அதற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், விஎப்எக்ஸ் வேலைகள் முடிவடைய வேண்டும். ‘இந்தியன் 2’ படத்தை முழுவதுமாக முடித்த பிறகுதான் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு ஷங்கர் செல்ல உள்ளாராம். அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்கிறார்கள். இரண்டு படத்துக்குமே பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது, அதனால் தரத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என ஷங்கர் நினைக்கிறாராம்.

நடிகர் அஜித்தின் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பம்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்நிலையில், அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 84.

இவருடைய மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

‘லியோ’ படத்தின் 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். சமீபத்தில் விஜய், காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்ட நிலையில் பட குழுவினர்களும் திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சற்றுமுன் காஷ்மீர் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுமார் 7 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் காஷ்மீரில் கடும் குளிரிலும் தாங்கள் எப்படி பணிபுரிந்தோம் என்பதை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில சமயம் மைனஸ் டிகிரி குளிர் இருக்கும் என்றும் அந்த குளிரிலும் நாங்கள் நடுங்கிக்கொண்டே வேலை பார்ப்போம் என்று கேமரா முதல் சமையல் வரை உள்ள துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் கடுங்குளிர் மட்டுமின்றி இடையிடையே மழையும் பெய்ததாவும் அந்த மழையிலும் கூட நாங்கள் இடைவிடாமல் வேலை செய்து கொண்டு இருந்தோம் என்றும் இந்த குழுவில் பணிபுரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் போது காஷ்மீர் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

 

 

ராதிகாவால் கோபிக்கு வந்த சிக்கல், ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த ஷாக் ‌‌- பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

0

ராதிகாவால் கோபிக்கு அடுத்தடுத்த சிக்கல் உருவாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி ராதிகாவுக்கு சப்போர்ட் செய்து பேச இனியா கோபப்பட்டு வெளியே வர கோபி தடுக்க மொட்டை மாடிக்கு போறேன் என சொல்லி மேலே வருகிறார்.

மேலே தாத்தா ராமமூர்த்தி இனியாவை சமாதானப்படுத்த வர இனியா தாத்தாவை பிடித்துக் கொண்டு கண்கலங்கி அழுகிறார். பிறகு மேலே வரும் கோபி இனியாவிடம் நீ ஏதோ ஒரு பையன் கூட பேசிட்டு இருக்கவே ராதிகா கோபப்பட்டா, அவ உன் மேல இருக்க அக்கறையில் தான் அப்படி நடந்துக்கிட்டா அவளுக்கு அது டியூஷன்ல படிக்கிற பையன்னு தெரியாதுல என சொல்ல தெரியலன்னா யாருன்னு கேட்கணும் நீங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேச வந்துட்டீங்க என இனியா சொல்ல கோபி ஷாக் ஆகிறார்.

மேலும் அன்னைக்கு அம்மா கூட எங்க ரெண்டு பேரையும் ரோட்ல வச்சு பார்த்தாங்க, திட்டுவாங்கன்னு நினைச்சேன் ஆனா அவங்க யாரு என்னன்னு விசாரிச்சு நல்லபடியாத்தான் பேசினாங்க, வீட்டுக்கு கூப்பிட்டு நல்லபடியா சாப்பிட வச்சு அனுப்புனாங்க அம்மாவுக்கு என் மேல நம்பிக்கை இருக்குன்னு சொன்னாங்க. ஆனா நீங்க அப்படி இல்ல இவங்கள கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டீங்க உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை என சொல்லி இனியா கீழே செல்கிறார்.

உடனே ராமமூர்த்தி இந்த வயசுல கல்யாணம் வேண்டாம் பிள்ளைகளோட எதிர்காலத்தைப் பாருன்னு அன்னைக்கு அடிச்சுகிட்டேன், என் பேச்சைக் கேட்டியா? இன்னைக்கு நல்லா அனுபவிக்கிற நீ இன்னும் அனுபவிப்ப அதை நான் பார்க்க தான் போறேன். இந்த வயசான காலத்துல இன்னும் என்னெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ என திட்டி அவரும் அங்கிருந்து நகர்கிறார்.

மறுபக்கம் பாக்யா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது செல்வி சுடிதார் வந்துடுச்சு என எடுத்து வந்து கொடுத்து நான் போட்டு பார்த்தேன் எனக்கு சரியா இருக்கு என சொல்கிறார். பாக்கியா சுடிதார் எப்படி போட்டுட்டு போறது என யோசனையில் இருக்க அமிர்தா மற்றும் ஜெனி உள்ளிட்டோர் பாக்யாவை கூல் செய்கின்றனர். பிறகு எழில் நாளைக்கு நிலா பாப்பா பிறந்தநாள் என சொல்ல இதைக் கேட்டதும் அமிர்தாவுக்கு எதுவும் சொல்ல வேண்டாம் நிலா பாப்பா பிறந்தநாளை பெருசா செலிப்ரேட் பண்ணலாம் என பிளான் போடுகின்றனர்.

அடுத்து ராதிகா இனியாவை சாப்பிட கூப்பிட எனக்கு சாப்பாடு தேவை இல்லை என இனியா கோபமாக சொல்ல கோபியும் சாப்பிட கூப்பிட அப்போதும் இனியா சாப்பாடு வேண்டாம் என சொல்கிறார். நீ சாப்பிடலனா நானும் சாப்பிட மாட்டேன் என சொல்ல நீங்க சாப்பிடாதீங்க டாடி என இனியா ஷாக் கொடுக்கிறார். பிறகு இங்க சாப்பிடாம இருக்கிற அளவுக்கு ஒன்னும் பெரிய பிரச்சனை எதுவும் நடக்கல அவளுக்கு பசிக்கும்போது அவ சாப்பிடுவா, நீங்க வாங்க என ராதிகா கோபியை கூப்பிட ராமமூர்த்தி நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நான் அவளை சாப்பிட வைக்கிறேன் என சொல்லி இனியாவை சாப்பிட வைக்கிறார்.

அடுத்து கோபி இனியா வருத்தத்தில் இருப்பதால் சாப்பிட முடியாமல் எழுந்து வந்து விடுகிறார். மீண்டும் இனியாவிடம் பேச இனியா கோபத்தோடு எழுந்து வெளியே வந்து விடுகிறார். பிள்ளைகளோட எதிர்காலத்தை நினைத்து பார்க்காம உன்னோட சந்தோசம் தான் முக்கியம் என்று கல்யாணம் பண்ணல அனுபவி என ராமமூர்த்தி திட்டி செல்கிறார்.

அடுத்து மறுநாள் செல்வி சுடிதாரில் வர அனைவரும் ஆச்சரியப்பட பாக்யா சுடிதார் அணிந்து அமிர்தாவுக்கு பின்னால் மறைந்து கொண்டு வர பிறகு பாக்யாவை சுடிதாரில் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு பாராட்டுகின்றனர். எழில் நானே போட்டோ எடுத்துக்காட்டுறேன் அவ்வளவு அழகா இருக்கீங்க என சொல்லி பாக்கியாவை போட்டோ எடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 

“இங்கே எவன் ஆளனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்”.. மிரட்டலான ‘பத்து தல’ படத்தின் மாஸ் டிரெய்லர்!

0

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டீஸரில் இடம் பெறாத பல காட்சிகள் டிரெய்லர் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு டிரெய்லர் அமைந்துள்ளது. கௌதம் மேனன் வில்லனாக நடித்து உள்ளார் என டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.

சிம்பு பேசும், “இங்கே எவன் ஆளனும், மாளனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்”. என்ற வசனமும், மானை ஓநாய் கொல்லும், ஓநாய் சிறுத்தை கொல்லும், சிறுத்தையை புலி கொல்லும், புலியை சிங்கம் கொல்லும், ஆனால் அந்த சிங்கத்தை கொல்றதுக்கு இன்னொரு மிருகம் பொறந்து வரலடா” என்ற வசனமும் மாஸாக அமைந்துள்ளது.

 

லியோ படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்

0

மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விமானத்தில் சஞ்சய் இறங்கியது, அவரை படக்குழுவினர் வரவேற்றது, பின்னர் பட செட் அருகே உள்ள ஓட்டலில் விஜய், லோகேஷ் உள்ளிட்டோர் வரவேற்று பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை ரசிகர்கள் வரவேற்று டிரெண்ட் செய்தனர்.

அந்த வீடியோவில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். அவரது தலைமுடி பார்க்கவே வித்தியாசமாக உள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சிம்பு – தேசிங்கு பெரியசாமி : இளைய தலைமுறையுடன் கைகோர்த்த கமல்

0

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார், சிம்பு நடிக்கிறார். துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் புகழ் பெற்றவர் தேசிங்கு பெரியசாமி. பெரிய வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் “என் வாழ்க்கையின் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது மற்றும் அவரின் தயாரிப்பின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கனவு நனவானது; அற்புதங்கள் நிகழ்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “கனவு நனவானது” என பதிவிட்டுள்ளார்.