Home Blog Page 53

தீபாவளிக்கு பட்டையை கிளப்ப வரும் ஜிகர்தண்டா 2

0

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து, ஜிகர்தண்டா படத்தின் சண்டை காட்சி ஒன்று கொடைக்கானலில் திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் நடைபெற்று வருவதாகவும் இந்த சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் பங்குபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

0

இன்றைய தலைமுறை ஒரு பிரம்மாண்ட சரித்திரப் படத்தைக் காணும் வாய்ப்பை, சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஏற்படுத்தித் தந்த இயக்குனர் மணிரத்னத்திற்கு முதல் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்பு சில ஜாம்பவான்கள் எடுக்க முயன்று இயலாமல் போனதொரு படம். அதை முடித்துக் காட்டியதே பெரும் சாதனைதான். அந்த சாதனையைப் படைக்க படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கோடான கோடி நன்றியைச் சொல்ல வேண்டும்.

ஆதித்த கரிகாலன், நந்தினி ஆகியோரு இளமைக் கால சந்திப்பு, காதல் ஆகியவற்றுடன் படத்தின் டைட்டில் நகர்கிறது. அதன்பின் முதல் பாகத்தில் என்ன சொல்லப்பட்டது என்பது கமல்ஹாசனின் பின்னணிக் குரலுடன் விளக்கவுரையாக அமைந்து நம்மை இரண்டாம் பாகத்திற்குள் இழுத்துச் செல்கிறது.

முதல் பாகத்தில் கடல் சீற்றத்தில் சிக்கி களத்துடன் மூழ்கிய அருண்மொழிவர்மன், வந்தியத் தேவன் ஆகியோர் உயிருடன் திரும்பி வருகிறார்கள். ஆதித்த கரிகாலனைக் கொன்று பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் நந்தினி, தங்களது சோழ சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற குந்தவை எடுக்கும் முயற்சிகள், சிற்றரசர்கள் செய்யும் சதியை அவர்களிருக்கும் கடம்பூருக்கே சென்று ஏளனம் செய்யும் ஆதித்த கரிகாலன், தனது முன்னாள் காதலனான சோழச் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றும் மந்தாகினி என இந்த இரண்டாம் பாகம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

இரண்டாம் பாகத்தில் அனைத்து நடிகர்களுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த சில காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் அமைத்திருந்தாலும், நந்தினியும், ஆதித்த கரிகாலனும் மற்றவர்களை விட தங்களது தேர்ந்த நடிப்பால் நம்மை ஆட்கொள்கிறார்கள். ‘நாகப்பாம்பு’ என நந்தினி பற்றி ஆதித்த கரிகாலன் சொல்வது போலவே படம் முழுவதும் தனது பழி வாங்கும் வெறியை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அப்படிப்பட்ட பழி வாங்கும் பெண்ணுக்குள் அவரது தாயைப் பற்றித் தெரிந்ததும் அவருக்குள்ளும் பாசம் இருக்கிறது என்பதைக் கண்ணீர் மூலம் புரிய வைக்கிறார்.

ஆவேசம் நிறைந்த இளவரசர் ஆதித்த கரிகாலனாக படம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் விக்ரம். தன் முன்னாள் காதலி நந்தினியை அவர் சந்தித்துப் பேசும் அந்த கடம்பூர் மாளிகைக் காட்சி ஒன்று போதும் விக்ரமின் நடிப்பைப் பற்றிப் பாராட்டிப் பேச. நாவலைப் போலவே படத்திலும் அவரைக் கொன்றது யார் என்ற கேள்விக்கு விடை சொல்லாமல் விட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் படம் முழுவதையும் ஆட்கொண்டிருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தனது முத்திரையையும் பதித்துள்ளார் வந்தியத் தேவன் கார்த்தி. உண்மையான நண்பன், வீரன் எப்படி இருப்பார் என்பது கார்த்தியின் நடிப்பில் வெளிப்படுவது சிறப்பு. வந்தியத்தேவன், குந்தவை இருவரும் சந்திக்கும் அந்தக் காட்சியில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும், வசனமும் நம்மையும் அவர்களது காதல் வலைக்குள் விழ வைத்துவிடுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ என்று படத்திற்கு தலைப்பை வைத்து அவருக்கான முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லையே என்ற ஒரு குறை வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் பெருந்தன்மையான குணம் படைத்த அருண்மொழி வர்மனின் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி அக்கதாபாத்திரத்தின் மதிப்பு குறையாமல் நடித்திருக்கிறார். 14 வருடங்கள் கழித்தே அருண்மொழி வர்மன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக முடிசூடிக் கொண்டார் என்பது எவ்வளவு பெருந்தன்மையான குணம். அந்தக் குணம் ஜெயம் ரவியின் நடிப்பில் இயல்பாய் வருவது பாராட்டுக்குரியது.

அழகிலும், அரசியலிலும் சிறந்து விளங்கும் இளவரசியாக த்ரிஷா. குந்தவை என்ற பேரழகி இப்படித்தான் இருந்திருப்பாரோ என தன் நடிப்பின் மூலம் காட்சிக்குக் காட்சி வியக்க வைக்கிறார்.

சுந்தர சோழர், பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், மதுராந்தகத் தேவர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளார், ஆழ்வார்க்கடியான், ரவிதாசன், பூங்குழலி, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோரது காட்சிகள் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர்களுக்குரிய முக்கியத்தவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு முதல் பாகத்தைவிடவும், இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பாக இருக்கிறது. ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களை மட்டும் கொஞ்சமே கொஞ்சம் இடம் பெறச் செய்தது பெரும் வருத்தம். கிளைமாக்சில் மட்டுமே போர்க்களக் காட்சிகள் வருகிறது. இடையில் அவ்வப்போது சில சண்டைகள் வந்து போகிறது.

முதல் பாகத்தையும், இந்த இரண்டாம் பாகத்தையும் பார்த்த பிறகு இளைய தலைமுறையின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் புத்தகங்களை வாங்கிப் படிக்காமல் போனால் அதற்கு மணிரத்னம் மட்டுமே காரணமாக இருப்பார். அந்த அளவிற்கு ஐந்து மணி நேரத்திற்குள்ளாக ‘பொன்னியின் செல்வன்’ சரித்திரத்தை ரசிக்க வைத்துவிட்டார்.

விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் சில பிரம்மாண்ட சரித்திரப் படங்களை மற்ற மொரிகளில் எடுத்து ஆயிரம் கோடி வசூலித்திருந்தாலும், ஆயிரம் ஆண்டு புகழ் வாய்ந்த இந்த ராஜராஜ சோழனின் சரித்திரத்தை எந்த மிகைப்படுத்தலும், செயற்கைத்தனங்களும் இல்லாமல் செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் மணி ரத்னம்.

நாவலில் இல்லாத சில கதாபாத்திரங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறாமல் போனதும் நாவல் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமாக இருந்திருக்கும். கல்கி எழுதிய நாவலில் இடம் பெறாத கிளைமாக்ஸ் காட்சியை படத்திற்காக சேர்த்தது ஏன் என்று தெரியவில்லை…???

இனி, வரப்போகும் பல சரித்திரப் படங்களுக்கு ஒரு சரியான துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இந்த இரண்டு பாகங்களுடன் நிற்காமல், ‘சோழர்களின் சரித்திரப் பயணத்தை’ அடுத்தடுத்து தர வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைப்பார்கள்.

பொன்னியின் செல்வன் 2 – வெற்றிவேல்… வீரவேல்…

லியோ படத்தின் சென்னை படப்பிடிப்பு… வைரலாகும் நியூ அப்டேட் இதோ.!

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் உருவாக்கி இருக்கும் இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு மே 1 முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு ஒரு மாத காலம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோரின் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிவாங்கியை திட்டிய நடுவர்! CWC இந்த வார எலிமினேஷன் இவரா?

0

குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் எலிமிநேஷன் போட்டி நடைபெற இருப்பதால் வெளியேறப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த வாரம் போட்டியாளர்கள் அசைவம் தான் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒரு சக்கரத்தை சுற்றி அவர்களுங்கான டிஷ் என்ன என்பதை தேர்வு செய்தனர். அப்போது சிவாங்கிக்கு squid வந்தது.

இதுவரை சிவாங்கி ஒரு முட்டையை கூட சமைத்தது இல்லை, ஆனால் இந்த முறை அசைவம் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் வந்துவிட்டது.

எலிமிநேஷன் லிஸ்டில் இறுதியாக சிவாங்கி, ஷெரின் மற்றும் ஸ்ருஷ்டி ஆகியோர் இருக்கின்றனர். அந்த நேரத்தில் நடுவர் தாமு சிவாங்கியை திட்டி பேசி இருக்கிறார். “நான் வெஜிட்டேரியன், அதனால் Nonveg செய்ய மாட்டேன் என சொல்ல முடியாது. இது தான் ஷோ format” என தாமு கூறியிருக்கிறார்.

அதனால் இந்த வாரம் சிவாங்கி தான் எலிமினேஷனா என கேள்வி எழுந்திருக்கிறது.

 

மே 5க்கு ‛குலசாமி’ தள்ளிவைப்பு

0

சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛குலசாமி’. முன்னாள் டிஜிபி ஜாங்கிட் போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி உள்ளது. விஜய் சேதுபதி வசனம் எழுதி உள்ளார். இந்தப்படம் இன்று(ஏப்., 21) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இதனால் மே 5க்கு பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.

இதுபற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கை : ‛‛ஏப்ரல் 21 ஆம் தேதி குலசாமி படம் வெளியிட திட்டமிடப்பட்டது. உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு 21.04.23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் 05.05.23 அன்று மாற்றப்பட்டுள்ளது”.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விமல் நடித்துள்ள மற்றொரு படமான தெய்வ மச்சான் படம் இன்று வெளியானது.

‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு தொடங்கியது

0

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இதனை சர்தார், காரி, ரன் பேபி ரன் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர்.

மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து பணியாற்றிய முதல் படமான ‘கனா’வும் கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி நடித்த வெப்சீரிஸ் குறும்படமாக வெளியாகிறது

0

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது மிமிக்ரி திறமையாலும், நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’ என்கிற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்தார். அசோகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் எபிசோட் முடிந்த நிலையில் மயில்சாமி மறைந்து விட்டதால் எடுத்த வரை உள்ள காட்சிகளை கொண்டு அதனை குறும்படமாக வெளியிடுகிறார்கள்.

இதுகுறித்து இயக்குனர் ஏ.ராகுல் கூறியதாவது: இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இந்த முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார். இதைத்தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே சில நாட்கள் இருந்தோம். எடுத்தவரை இதை மட்டுமே ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்கள் முன் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்.

அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இதை குறும்படமாக மாற்றினோம். மயில்சாமி சாரிடம் இந்த கதையை கூறியபோது அவர் என்னிடம், எல்லோரும் எனக்கு பெரும்பாலும் ஒரே விதமான கதாபாத்திரங்களையே கொடுத்து நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய பண்ண வேண்டும். நிச்சயமாக நாம் இருவரும் இணைந்து ஜெயிப்போம் என்று சொன்னார். அவர் சொன்னது போல ஜெயித்து விட்டோம். என்றார்.

இன்ஸ்டாகிராமில் நுழைந்த விஜய்!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தனக்கு இன்ஸ்டாகிராமில் புது கணக்கு தொடங்கியுள்ளார்.

மேலும் தனது புகைப்படத்துடன் “ஹலோ நண்பா, நண்பி” என முதல் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே டிவிட்டர்,முகநூல் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றார். இப்போது இன்ஸ்டாகிராமிலும் நுழைந்துள்ளார்.

விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 60 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

படுக்கை அறையில் காதலனுடன் எடுத்த அந்தரங்க போட்டோவை பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதிஹாசன்

0

படுக்கையறையில் காதலனை கட்டிப்பிடித்தபடி எடுத்த அந்தரங்க போட்டோவை பதிவிட்டு நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன், அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து அவர் விஜய்க்கு ஜோடியாக புலி, அஜித்துடன் வேதாளம் என முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தாலும், இவரால் கோலிவுட்டில் பெரியளவில் சோபிக்க முடிவில்லை.
தமிழில் ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த படம் லாபம். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதி. இப்படத்திற்கு பின் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் சுத்தமாக கிடைக்கவில்லை. இதனால் டோலிவுட் பக்கம் ஒதுங்கிய ஸ்ருதிஹாசனுக்கு அங்கு பிரபாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கே.ஜி,எப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தான் சலார் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், ஷாந்தனு என்கிற டூடுல் கலைஞரையும் காதலித்து வருகிறார்.

தற்போது ஷாந்தனுவும், ஸ்ருதியும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளனர். மும்பையில் இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருகின்றனர். தனது காதலுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஸ்ருதி, அண்மையில் ஷாந்தனு உடன் படுக்கையறையில் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த போட்டோவில் ஸ்ருதிஹாசனை ஷாந்தனு இருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர். ஸ்ருதிஹாசன் பதிவிட்ட இந்த அந்தரங்க புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சில இரவுகளில்… என் விரல்கள் தொடைகள் வழியாக பயணிக்கிறது! நிர்வாண வரைபடத்துடன்.. பிரபல நடிகை சர்ச்சை பதிவு..!

0

பிரபல மலையாள நடிகையான நிமிஷா சஜயன், ’தொண்டி முதலும் திருசாட்சியும்’ என்கிற படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானவர். மலையாள திரையுலகில் மிகவும் போல்டன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், சில விருதுகளையும் வாங்கியுள்ளார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இவர் நடித்து மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான… ’கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தான் தமிழில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

மேலும் தமிழில், முதல் முறையாக தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிமிஷா, நிர்வாண புகைப்படத்துக்கு பதிவு ஒன்றை போட்டு, மிகவும் சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டுள்ளனர்.

அந்த பதிவில், ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ பதிவிட்டுள்ளார். இவர் போட்ட இந்த பதிவு கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் சுயநினைவோடு தான் இந்த பதிவைநிமிஷா போட்டாரா? அல்லது யாரேனும் இவரின் இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்தார்களா? என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.