Home Blog Page 28

“பொட்டேல்” திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.(தெலுங்கு )

0

“பொட்டேல்” திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா டீசரை வெளியிட்டார். சாஹித் மோத்குரி இயக்கிய இந்தப் படத்தில் யுவ சந்திரா கிருஷ்ணா மற்றும் அனன்யா நாகெல்லா ஆகியோர் முக்கிய நாயகிகளாக நடித்துள்ளனர்.

நிசா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நிஷாங்க் ரெட்டி குடிதி மற்றும் பிரக்ஞா சன்னிதி கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ் குமார் சாதிகே தயாரித்த இப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாதி ஏற்றத்தாழ்வு உள்ள ஒரு சிறிய தெலுங்கானா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள யுவ சந்திரா கிருஷ்ணா, தனது மகளுக்கு கல்வியின் மூலம் சிறந்த வாழ்க்கையை வழங்க விரும்பும் பொறுப்புள்ள கணவர் மற்றும் தந்தையாகத் தோன்றுகிறார்.

புனிதமான செம்மறி ஆடு காணாமல் போனதும், உள்ளூர்வாசிகள் அவரைத் தாக்கும்போதும் நிலைமை மோசமாகிறது. சேகர் சந்திரனின் ஸ்கோர் கதையின் அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது.

நட்சத்திரம் பார்க்கும் நாள் குறிச்சாச்சி! ஸ்டார்மோவி

0

நட்சத்திரம் பார்க்கும் நாள் குறிச்சாச்சி! #ஸ்டார்மோவி

ஸ்டார் என்பது வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். இது இளன் எழுதி இயக்கியது, மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

இப்படத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோருடன் டைட்டில் ரோலில் நடித்துள்ளனர். முதலில், ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார், ஆனால் அவருக்கு பதிலாக கவின் நியமிக்கப்பட்டார். இப்படம் ஆகஸ்ட் 2023 இல் கவின்ஸ் நெக்ஸ்ட் என்ற தற்காலிகத் தலைப்பில் அறிவிக்கப்பட்டது, மேலும் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 2023 இல் முதன்மை புகைப்படம் எடுத்தல் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு முக்கியமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எழில் அரசு கே ஒளிப்பதிவு மற்றும் பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

ஜூன் 2019 இல், பியார் பிரேமா காதல் (2018) படத்திற்குப் பிறகு இயக்குனர் இளனுடன் வெற்றிகரமான ஒத்துழைப்பைப் பெற்ற ஹரிஷ் கல்யாண், அவரது அடுத்த இயக்கத்தில் அந்த இயக்குனருடன் ஒத்துழைப்பதாக அறிவிக்கப்பட்டது. அம்மா கிரியேஷன்ஸின் டி. சிவா இந்த முயற்சியை தயாரிப்பதாக கூறப்படுகிறது. டிசம்பர் 5, 2020 அன்று, ஒரு நேர்காணலின் போது, ​​இயக்குனரால் இந்தத் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பியார் பிரேமா காதலுக்குப் பிறகு, இயக்குனருடன் தொடர்ந்து இரண்டாவது படமாக இசையமைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டார்.

இந்த முயற்சியின் தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 12 அன்று ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது. அன்றைய தினம் ஒரு விளம்பர போஸ்டருடன் ஸ்டார் என்ற அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.ஜூலை 2021 இல், எலன் மற்றும் கல்யாண் இடையே ஆக்கப்பூர்வமான வேறுபாடுகள் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 2023 இல், தாதா (2023) மற்றும் இயக்குனரின் நீண்டகால நண்பரான அவரது நடிப்பிற்காகப் பாராட்டப்பட்ட கவின், கல்யாணுக்குப் பதிலாக முக்கியப் பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.ஆகஸ்ட் 27 அன்று, அஸ்வின்ஸ் (2023) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தன.

செப்டம்பர் 10 அன்று, ஆதிதி போஹன்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இருவரும் முதல் முறையாக கவின் ஜோடியாக இருவரும் முன்னணி நடிகையாக நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது.2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் படத்திற்குப் பிறகு அதிதி நடிக்கும் இரண்டாவது தமிழ்ப் படம் இது. கவின் கதாப்பாத்திரமான கலையின் காதலியான ஜிமிக்கியாக அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்று ஸ்டார் படத்தின் புதிய அப்டேடை மாலை 6 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.

https://x.com/elann_t/status/1780862534527897955

 

இதனால் தான் இன்ஸ்டாகிராம் விட்டு சென்றேன்..

0

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “whistle podu” வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதுவரை இப்பாடல் 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இருப்பினும் சிலர் whistle podu பாடலை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்துவந்தனர். இதனால் யுவன் ஷங்கர் ராஜா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீங்கிவிட்டார் என்று தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக பேசிய யுவன், தொழில்நுட்ப கோளாறால் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் சரியாக வேலை செய்யவில்லை. எங்களுடைய குழு மீட்கும் பணியில் இரங்கியுள்ளனர் என்று யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ளார்.

https://x.com/thisisysr/status/1780911181945016453

கொடிகட்டி பறந்த விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமையா.?

0

ஒரு கலைஞனுக்கு இருக்கக்கூடிய அனைத்து தகுதியுமே விஜய் சேதுபதிக்கு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் இவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடிய அளவிற்கு ஹீரோ மற்றும் வில்லனாகவும் நடித்து பெயர் வாங்கக்கூடிய திறமை இருக்கிறது.

அதனால் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று கொடிகட்டி பறந்தார். இடையில் சில படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ வாய்ப்பு கம்மியாக ஆரம்பித்து விட்டது.

இதனால் சரியான நேரத்தில் சுகாரித்துக் கொண்ட விஜய் சேதுபதி இனி முக்கியமான படங்களில் மட்டும் நெகட்டிவ் ரோலில் நடிப்பேன் என்று கூறிவிட்டார். அந்த வகையில் தற்போது ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த மெர்ரி கிறிஸ்மஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் யாவரும் வல்லவரே, விடுதலைப் இரண்டாம் பாகம், மகாராஜா போன்ற படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

இதற்கிடையில் விஜய் சேதுபதியின் 51 வது படமான “சத்தியம் பொய்” வியாபாரம் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்த படம் அந்த ஆண்டு இறுதிக்குள்ளயே படப்பிடிப்பை முடித்து விட்டார்கள். ஆனால் இன்னும் வரை இப்படம் மர்மமான முறையிலேயே கிடப்பில் கிடைக்கிறது.

அதாவது ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ருக்மணி வசந்த் நடிப்பில் ஆக்சன், காமெடி, காதல் போன்று கலவையான ஒரு கமர்சியல் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கும் தயாராக இருக்கிறது. ஆனால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. காரணம் இப்பொழுது வரை இந்த படத்தை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை.

இதனால் ரிலீஸ் பண்ணி நஷ்டத்தை பார்ப்பதற்கு பதிலாக அப்படியே கிடப்பில் கிடக்கட்டும் என்று ஒதுக்கி விட்டார்கள். ஒரு நேரத்தில் விஜய் சேதுபதி படம் என்றால் ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வாங்க தயாராக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது விஜய் சேதுபதியை யாரும் கண்டு கொள்ளாத நிலைமையில் பரிதாபத்தில் இருக்கிறார்.

மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – ஜோதிகா..

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளன. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாகும் திரைப்படம் தான் கங்குவா.

கிட்டத்தட்ட பல மொழிகளில் வெளியாகும் பான் இந்திய படமாக கங்குவா தயாராகி வருகின்றது. இப்படம் கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக சொல்லப்படுகின்றது. கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கங்குவா படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உடல்ரீதியாக அப்படி பேசப்பட்ட நடிகை!!

0

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டி, நான் கருமையாக இருப்பதால் உயரமாக இருந்தபடியே நடிப்பு தொழில் அடிஎடுத்து வைத்தேன். ஆரம்பத்தில் நிறைய பாடிஷாமிங் எதிர்கொண்டேன்.

நான் சினிமாவிற்கு வந்த போது எனக்கு வயது வெறும் 17 தான் அந்த சமயத்தில் நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை. சில திரைப்படங்களுக்குப் பின் என்னுடைய கேரியர் முடிவடையும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் நான் காட்டிய விடாமுயற்சியும், போராடும் குணமும் வெற்றியைத் தந்துள்ளது என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி, பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தைகள் உள்ளனர்.

மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி மதிப்பிலான பங்களா உள்ளிட்ட ஆடம்பர சொத்துக்கள் மற்றும் சொந்தமாக ஜெட் விமானமும் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் வணக்கம் நிகழ்ச்சியில் சிறகடிக்க ஆசை முத்து!

0

புது புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் விஜய் டீவியை அடிக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். குக்வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டிவி முதல் வணக்கம் என்னும் ஒரு நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றது.

சினிமாக்கள் , நாடகத்தொடர்கள் , நிகழ்ச்சிகள் என பல வற்றில் பிரபலமாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் வாழ்க்கை பயணத்தை அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டு பகிர்ந்து கொள்வதே இந்த நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சியில் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஊடாக பிரபலமாகிய முத்து கலந்து கொள்ள உள்ளார். குறித்த சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது.

ஹனு-மேன் பட நாயகனின் புதுப்பட அப்டேட்

0

2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் . பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன். அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் 330 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமான மிராய் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கவுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

 

 

 

 

 

ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்..

0

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது.

வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.

அனைத்து மக்களும் குறிப்பாக இளைஞர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்ததை நான் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதன் முதலாக வாக்கு செலுத்துபவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார்.

ஏஆர் ரகுமானின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://x.com/arrahman/status/1780835408152256841

திடீரென காணாமல் போன யுவன்ஷங்கர் ராஜா

0

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா என்பதும் இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு சிலர் இந்த பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்தனர். 30 மில்லியனுக்கும் மேலாக இந்த பாடல் பார்வையாளர்கள் பெற்ற போதிலும் அனிருத் அளவிற்கு இந்த பாடல் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும் பலரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.