Home Blog Page 29

கொடிகட்டி பறந்த விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமையா.?

0

ஒரு கலைஞனுக்கு இருக்கக்கூடிய அனைத்து தகுதியுமே விஜய் சேதுபதிக்கு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் இவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடிய அளவிற்கு ஹீரோ மற்றும் வில்லனாகவும் நடித்து பெயர் வாங்கக்கூடிய திறமை இருக்கிறது.

அதனால் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று கொடிகட்டி பறந்தார். இடையில் சில படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ வாய்ப்பு கம்மியாக ஆரம்பித்து விட்டது.

இதனால் சரியான நேரத்தில் சுகாரித்துக் கொண்ட விஜய் சேதுபதி இனி முக்கியமான படங்களில் மட்டும் நெகட்டிவ் ரோலில் நடிப்பேன் என்று கூறிவிட்டார். அந்த வகையில் தற்போது ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த மெர்ரி கிறிஸ்மஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் யாவரும் வல்லவரே, விடுதலைப் இரண்டாம் பாகம், மகாராஜா போன்ற படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

இதற்கிடையில் விஜய் சேதுபதியின் 51 வது படமான “சத்தியம் பொய்” வியாபாரம் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்த படம் அந்த ஆண்டு இறுதிக்குள்ளயே படப்பிடிப்பை முடித்து விட்டார்கள். ஆனால் இன்னும் வரை இப்படம் மர்மமான முறையிலேயே கிடப்பில் கிடைக்கிறது.

அதாவது ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ருக்மணி வசந்த் நடிப்பில் ஆக்சன், காமெடி, காதல் போன்று கலவையான ஒரு கமர்சியல் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கும் தயாராக இருக்கிறது. ஆனால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. காரணம் இப்பொழுது வரை இந்த படத்தை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை.

இதனால் ரிலீஸ் பண்ணி நஷ்டத்தை பார்ப்பதற்கு பதிலாக அப்படியே கிடப்பில் கிடக்கட்டும் என்று ஒதுக்கி விட்டார்கள். ஒரு நேரத்தில் விஜய் சேதுபதி படம் என்றால் ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வாங்க தயாராக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது விஜய் சேதுபதியை யாரும் கண்டு கொள்ளாத நிலைமையில் பரிதாபத்தில் இருக்கிறார்.

மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – ஜோதிகா..

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளன. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாகும் திரைப்படம் தான் கங்குவா.

கிட்டத்தட்ட பல மொழிகளில் வெளியாகும் பான் இந்திய படமாக கங்குவா தயாராகி வருகின்றது. இப்படம் கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக சொல்லப்படுகின்றது. கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கங்குவா படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உடல்ரீதியாக அப்படி பேசப்பட்ட நடிகை!!

0

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டி, நான் கருமையாக இருப்பதால் உயரமாக இருந்தபடியே நடிப்பு தொழில் அடிஎடுத்து வைத்தேன். ஆரம்பத்தில் நிறைய பாடிஷாமிங் எதிர்கொண்டேன்.

நான் சினிமாவிற்கு வந்த போது எனக்கு வயது வெறும் 17 தான் அந்த சமயத்தில் நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை. சில திரைப்படங்களுக்குப் பின் என்னுடைய கேரியர் முடிவடையும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் நான் காட்டிய விடாமுயற்சியும், போராடும் குணமும் வெற்றியைத் தந்துள்ளது என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி, பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தைகள் உள்ளனர்.

மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி மதிப்பிலான பங்களா உள்ளிட்ட ஆடம்பர சொத்துக்கள் மற்றும் சொந்தமாக ஜெட் விமானமும் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் வணக்கம் நிகழ்ச்சியில் சிறகடிக்க ஆசை முத்து!

0

புது புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் விஜய் டீவியை அடிக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். குக்வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டிவி முதல் வணக்கம் என்னும் ஒரு நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றது.

சினிமாக்கள் , நாடகத்தொடர்கள் , நிகழ்ச்சிகள் என பல வற்றில் பிரபலமாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் வாழ்க்கை பயணத்தை அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டு பகிர்ந்து கொள்வதே இந்த நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சியில் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஊடாக பிரபலமாகிய முத்து கலந்து கொள்ள உள்ளார். குறித்த சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது.

ஹனு-மேன் பட நாயகனின் புதுப்பட அப்டேட்

0

2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் . பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன். அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் 330 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமான மிராய் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கவுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

 

 

 

 

 

ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்..

0

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது.

வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.

அனைத்து மக்களும் குறிப்பாக இளைஞர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்ததை நான் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதன் முதலாக வாக்கு செலுத்துபவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார்.

ஏஆர் ரகுமானின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://x.com/arrahman/status/1780835408152256841

திடீரென காணாமல் போன யுவன்ஷங்கர் ராஜா

0

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா என்பதும் இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு சிலர் இந்த பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்தனர். 30 மில்லியனுக்கும் மேலாக இந்த பாடல் பார்வையாளர்கள் பெற்ற போதிலும் அனிருத் அளவிற்கு இந்த பாடல் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும் பலரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இப்படடி காட்சிகளில் நடிக்கிறாரா நடிகை தீபிகா படுகோன்

0

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் கடைசியாக பைட்டர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் சிங்கம் அகைன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

போலீஸ் உடையில் இருக்கும் நடிகை தீபிகா படுகோன், ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், என்னது தீபிகா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாரா என ஷாக்காகியுள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிங்கம் அகைன் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.

ஆனால் ரசிகர்களோ, இதுபோன்ற ஆக்ஷன் காட்சிகளில் கர்ப்பமாக இருக்கும்போது நடிக்கிறாரா என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

அன்பே வா: வருணிற்கு நடந்த திடீர் கல்யாணம்!

0

இது வரை பல நாடகத்தொடர்கள்  வந்திருந்தாலும் பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடும் நாடகங்கள் ஒருசிலதே ஆகும். சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘அன்பே வா’. இந்தத் தொடரின் நாயகன் வருணிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த சீரியல் 2020 ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்றுவரை வெற்றிகரமாக பரபரப்பாக செல்லும் இந்த நாடகத்தில் வருண் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விராட் ஆவார். இந்த சீரியலில் நடித்ததால் விராட்டிற்கெனத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம்.

இந்த நிலையிலேயே இவர் நவீனா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இன்னய தினம் மகாவலி புறத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். மற்றும் குறித்த திருமணத்தில் வருணின் குடும்பத்தினர் பரபரப்பாக வேலை செய்து அனைவரையும் நன்கு கவனித்திருந்தனர். இவரது மனைவியான  நவீனா ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்சூர் அலிகான் ICU வில் கவலைக்கிடம்!

0

கடந்த கால சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வரை பிரபலமாக இருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் ஆவார். இவர் சமீபத்தில் பிரசாரத்தின் இடையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

நடிப்பில் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் ஜதார்த்தமாக செயற்படும் மன்சூர் அலிகான் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வேட்பாளர் ஆவார். பலாப்பழ சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்காண காரணத்தை அவரே கூறி உள்ளார்.

அவர் கூறுகையில் ” தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பிய போது வழியில் சிலர் பழசாறு மற்றும் மோர் வழங்கினர்.கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சிலமணி நேரங்களிலேயே மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்றப்பட்டது” என நடிகர் மன்சூர் அலிகான் கூறி உள்ளார்.