Home Blog Page 30

வெங்கட் பிரபு செய்த தரமான சம்பவம்! ரிலீஸ் டேட்..

0

சமீப காலங்களில் பழைய ஹிட் கொடுத்த தமிழ் திரைப்படங்களை ரீரிலீஸ் செய்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறே தமிழ் நாட்டின் தவிர்க்கமுடியாத இரண்டு ஜாம்பவான்களின் ஹிட் படங்கள் ரீரிலீஸ் ஆக உள்ளது.

விஜயின் ஒட்டுமொத்த சினிமா பயணத்திற்கும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கில்லி ஆகும். அன்றளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த நிலையில் இது ரீரிலீஸ் ஆக உள்ளது என படக்குழுவினர் கூறி இருந்தனர்.

இந்த நிலையிலேயே  வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படம் ரீரிலீஷாக உள்ளது. அஜித்தின் 50 ஆவது திரைப்படமான மங்காத்தா வருகின்ற மே மாதம் முதலாம் திகதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கோடிகளை தாண்டும் கில்லி படத்தின் வசூல்..

0

சமீபகாலாமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த கல்ட் திரைப்படங்களை மீண்டும் திரையிடுகின்றனர்.

பாபா, ஆளவந்தான், 3, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது விஜய்யின் கில்லி படமும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழ் சினிமாவின் மாபெரும் கல்ட் கமெர்ஷியல் திரைப்படம் கில்லி. தரணி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், வருகிற 20ஆம் தேதி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இந்த நிலையில், ரீ-ரிலீஸில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் லேட்டஸ்ட் திரைப்படங்கள் தான் வசூல் சாதனைகளை செய்கிறது என்று பார்த்தால், ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படம் கூட மாபெரும் அளவில் சாதனை படைத்து வருகிறது.

பாகிஸ்தானை ரொம்ப ஈஸியா அடிச்சிட்ரோம்

பாகிஸ்தான் உள்ளே சென்று அவர்களை அடித்து நொறுக்கி விட்டு மீண்டும் பத்திரமாக நாம் திரும்பி விடுகிறோம், ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நம்மால் தடுக்க முடியவில்லை என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரி ஆதங்கத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை என்னதான் தீவிரமாக கண்காணித்து வந்தாலும் அப்பாவி பொதுமக்களிடமிருந்து தான் பணத்தை கைப்பற்றுகிறதே தவிர அரசியல்வாதிகளிடம் இருந்து இன்னும் பணம் கைப்பற்றியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் ஆரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’பாகிஸ்தானுக்கு போய் அவர்களுக்கே தெரியாமல் அடித்து வந்து விடக்கூடிய அளவுக்கு நமக்கு திறமை இருக்கிறது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நம்மால் நிறுத்த முடியவில்லை.

நான் இது குறித்து நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ’யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்களோ, அவர்களது வங்கி கணக்கை முடக்கிவிட வேண்டும், தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு செலவு செய்ய அனுமதி அளித்திருக்கிறதோ, அந்த அளவு பணம் மட்டும் எடுக்க அனுமதிக்க வேண்டும், தேர்தல் முடிந்தவுடன் முடக்கிய வங்கிக்கணக்கை ரிலீஸ் செய்து விடலாம் என்று ஐடியா கொடுத்ததாக ஆரி கூறினார்.

இது நகைச்சுவையாக இருந்தாலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் அரசியல்வாதிகள் எங்கு வேண்டுமென்றாலும் எவ்வளவு பணத்தில் வேணாலும் கொண்டு சென்று விடலாம், ஆனால் சாதாரண அப்பாவி மக்கள் சிறிதளவு பணம் எடுத்துச் சென்றால் கூட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆரி கூறிய இந்த ஐடியாவை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://www.instagram.com/reel/C53p9r8yt40/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ராதிகா கர்ப்பம் கன்ஃபார்மா?

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், குழந்தையை பற்றி பேச வேணாம் என்று எழில் சொல்ல, நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரைக்கும் நான் எல்லார்கிட்டயும் சொல்லுவேன் என ஈஸ்வரி சொல்லுகிறார். மேலும் சின்ன வயசுலயே குழந்தை பெற்றுக் கொள்ளனும் சீக்கிரம் எங்க வீட்டுல குழந்தை சத்தம் கேக்கணும் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

அந்த நேரத்தில் உடனே ராதிகா வாந்தி எடுக்க கோபி என்ன ஆச்சு என கேட்கிறார். மேலும் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது ஒத்து வரல போல என சொல்லி யோசிக்கிறார்.

மறுப்பக்கம் செழியன் ரூமுக்கு போகவே பயப்பட, எழில் அவரிடம் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும், ஜெனிக்கு நம்பிக்கை கொடு. எல்லாம் சரியாயிடும் என சொல்லி அனுப்புகிறார்.

இதைத் தொடர்பு ராதிகா இரவெல்லாம் வாந்தி எடுக்க, அவரை மெடிக்கல் ஷாப்புக்கு அழைத்துச் செல்கிறார் கோபி. ஆனாலும் ஹாஸ்பிடல் போகலாமா என்று கோபி கேட்க, முதலில் மெடிக்கல் ஷாப் போகலாம் என்று ராதிகா சொல்லுகிறார். அதன்பின் ஈஸ்வரி இடம் விஷயத்தை சொல்லிவிட்டு மெடிக்கல் ஷாப்புக்கு கிளம்பி போக, அங்கு மெடிக்கல் ஷாப் மூடி இருக்குது என்று கோபியை திட்டுகிறார் ராதிகா.

நாளை எபிசோட் ராதிகா கர்ப்பமாக இருப்பது கன்ஃபார்ம் ஆகிறது. இதனால் கோபி முதலில் சந்தோஷப்படுகிறார் ஆனால் பிறகு அதிர்ச்சி அடைகிறார்.

விவேக் சாருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள்!

0

சினிமாவில் மட்டும் மக்களின் விருப்பத்துக்குரியவராக அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மக்களால் போற்றப்படும் பிரபலங்கள் ஒருசிலரே ஆவர். அவ்வாறு மக்களால் கொண்டாடப்படும் காமெடி நடிகரான விவேக் அவர்களது நினைவு நாள் இன்று ஆகும்.

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் விவேக் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை ரசிகர்கள்  சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அழைத்து வந்தனர்.

இவ்வாறு இருந்த இவர் 2021 ஆம் ஆண்டு மாரடைப்பினால் மரணமடைந்தார். இன்று இவரது நினைவு நாள் என்பதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடிகர் வைபவ் மற்றும் செல் முருகன் ஆகியோர் அவரது போட்டோக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பொது இடங்களில் பல  மரக்கன்றுகளையும் நாட்டி  உள்ளார்.

 

போஸ்டர் வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு

0

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் – 2’ படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் சித்தார்த் பிறந்தநாளை ஒட்டி இன்று அவரது சிறப்பு போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.

https://x.com/LycaProductions/status/1780484138577146193

சிம்புவின் 50 -வது படத்தை இயக்குகிறாரா பிரபல இயக்குனர்!!

0

நடிகர் சிம்பு செகண்ட் இன்னிங்சில் கலக்கி வருகிறார். தற்போது அவருடைய 48 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகுவதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் முக்கியமான ரோலில் சிம்பு நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எந்தவொரு நடிகருக்கும் தனது 50வது திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷல். அதே போல் சிம்பு தன்னுடைய 50 வது படத்தையும் அப்படி ஸ்பெஷலாக்க பிரபல இயக்குனர் சுதா கொங்கராவிடம் பேச்சுவார்த்தை நடித்தி இருக்கிறார்.

சுதா கொங்கரா சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்துவிட்டதாகவும், சூர்யாவின் புறநானுறு படத்தின் பணிகளை முடித்துவிட்டு சிம்பு 50 படத்திற்கான பணிகளை தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது

அஜித் பிறந்தநாளில் ‘விடாமுயற்சி’ அப்டேட்?

0

‘அப்டேட்’ என்ற வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் தற்போது நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படம் பற்றிய அப்டேட் எதுவும் வராமல் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மே 1ம் தேதியன்று அஜித்தின் பிறந்தநாள் வரப் போகிறது. அன்றாவது ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் எதுவும் வருமா என்று அவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

முதல் பார்வை அல்லது முன்னோட்ட வீடியோ என்று ஏதோ ஒன்று வெளிவந்தால் மட்டுமே அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியும். போட்டியாளரான விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தின் முதல் சிங்கிள் கூட வெளிவந்துவிட்டது. ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது ஒன்று வந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் கூட அஜித் ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில் மே 1 அப்டேட் வரவில்லை என்றால் அஜித் ரசிகர்கள் வருத்தப்படுவது உறுதி.

 

கவனம் ஈர்க்கும் மனுசி டிரைலர்

தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் “மனுசி”என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

ரன்பீர் , ரன்வீர், யாஷ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை

1993 – ம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன் திரைப்படம் ‘கல்நாயக்’ . முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார்.

இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்தனர் . இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.இப்படத்தின் ‘சோலி கே பீச்சாய் க்யா ஹை’ என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ‘கல்நாயக் 2’ படத்தை இயக்குனர் சுபாஷ் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான கதையை அவர் தயார் செய்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் ,நடிகைகள் குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.