Home Blog Page 31

பிரசாந்த் நீலின் அடுத்தடுத்த பிரமாண்ட படைப்புகள்

0

2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார்.

இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்.

இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார். கே.ஜி..எஃப் 2 ஒரு பான் இந்திய படமாக அமைந்தது. கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவின் அதீக வசூலித்த படங்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார். சலார் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.


 

 

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நேரம் மாற்றம்..

0

விஜய் டிவியில் இந்த வாரத்தோடு தமிழில் சரஸ்வதியும் சீரியல் நிறைவடைகிறது. அதனால் வரும் திங்கள் முதல் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கின்றனர்.

அதனால் மற்ற சீரியல்களின் நேரத்தை மாற்றி இருக்கிறது விஜய் டிவி. அது பற்றிய முழு விவரங்கள் இதோ.

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் இனி மோதலும் காதலும் மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

புது சீரியல் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் ரெஸ்பான்ஸ் எப்படி கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

 

ரச்சிதா மகாலட்சுமியின் முதல் முயற்சி..

சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி முதல் முறையாக ஒரு முயற்சி செய்து உள்ள வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சின்னத்திரை உலகில் பல சீரியல்களில் ரட்சிதா மகாலட்சுமி நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’பிரிவோம் சந்திப்போம்’ ’சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சீரியல்களிலும் ’உப்புக்கருவாடு’ ‘மெய்நிகரே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு வலிமையான போட்டியாளராக ரச்சிதா மகாலட்சுமி இருந்தார் என்பதும் கடைசி நேரத்தில் தான் அதாவது 91 வது நாளில் தான் அவர் எவிக்சன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக அவருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் அவற்றில் ஒரு திரைப்படம் ’ஃபயர்’/ இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டருக்காக முதல் முதலாக சொந்த குரலில் டப்பிங் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் டப்பிங் செய்த வீடியோவையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதல் முறையாக சொந்த குரலில் டப்பிங் செய்துள்ள ரச்சிதா மகாலட்சுமிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியான் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சஸ்பென்ஸ்..!

0

சியான் விக்ரம் நடிக்க இருக்கும் 62 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டரில் இந்த படம் இரண்டாவது பாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த படத்தின் முதல் பாகம் எங்கே என்ற சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான சித்தார்த் நடித்த ’சித்தா’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் அடுத்ததாக விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் மேலும் வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் என்ற படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் தொடங்கி விரைவில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’வீர தீர சூரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு அந்த டைட்டில் அருகில் ’பார்ட் 2’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த படம் ’வீர தீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முதல் பாகம் எங்கே என்ற கேள்விக்கு படக்குழுவினர் விரைவில் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்க்கும் போது மீண்டும் அவரிடம் ஒரு தரமான படத்தை எதிர்பார்க்கலாம் என்பது தெரிய வருகிறது

ஜெயிலர் 2 வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு- நடிகர் வசந்த் ரவி

0

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி.

‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ‘பொன் ஒன்று கண்டேன்’.

ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள்.

இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நிறைய பேர் என்னிடம் எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்? என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது.

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.

‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது.

‘ஜெயிலர் 2’ வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம்’ “பார்ட்-2க்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மல்லி தொடரில் கம்பேக் கொடுக்கும் நிகிதா!

0

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடர் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனையடுத்து மல்லி என்கிற புதிய தொடரின் புரோமோ அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த தொடரில் ஹீரோயினாக நிகிதா நடிக்கிறார். இவர் ஏற்கனவே அருந்ததி தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான சூரியவம்சம் தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் இந்த தொடரில் ரோஜா தொடரில் வில்லியாக நடித்த வீஜே அக்ஷயா மற்றும் பேரன்பு தொடரில் நடித்த விஜய் வெங்கடேசன் ஆகியோர் முக்கிய ரோலில் கமிட்டாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதன்காரணமாக ரசிகர்களிடத்திலும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் – வித்யா பாலன்

0

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும வித்யாபாலன். தற்போது ‛தோ அவுர் தோ பியார்’ என்ற காதல் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். அவருடன் பிரதீக் காந்தி, இலியானா ஆகியோரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக உள்ள வித்யாபாலன் அளித்த பேட்டி :

* இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தது ஏன்?
படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து ஆக்ஷன் வகைப் படங்களில் நடித்து அலுத்துப் போனதால் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த கதை ரொமான்டிக் காமெடி கலந்தது. இதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

* படத்தில் பிரதீக் காந்தி மற்றும் இலியானா உடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பிரதீக் காந்தி ஒரு அற்புதமான நடிகர், அவருடன் பணிபுரிந்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. நான் அவரது ஸ்கேம் 1992 தொடரைப் பார்த்தேன், அந்தத் தொடரில் அவரது நடிப்பு நன்றாக இருந்தது. இலியானாவுடன் எனக்கு அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் அவருடன் இணைந்து பணியாற்றியது நன்றாக இருந்தது. தற்போது தாயாகி தனது தாய்மையை அனுபவித்து வருகிறார்.

* சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் இமேஜை மாற்றிய பெருமை உங்களுக்கு உண்டு. இதுபற்றி?
மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு நன்றாக உள்ளது. ஆனால் அதற்கான கிரெடிட் எனக்கு மட்டும் தரக்கூடாது. ஏனென்றால் நான் நடித்த படங்களில் யாரோ கதை எழுதி அந்த படங்களையும் யாரோ தயாரித்திருக்கிறார்கள். நான் ‛‛இஷ்கியான், பா, டர்ட்டி பிக்சர், கஹானி மற்றும் நோ ஒன் கில்ட் ஜெசிகா” போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. சரியான நேரத்தில் சரியானதைச் செய்துள்ளேன் என்று தான் சொல்வேன்.

* என்ன மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
காமெடி படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதற்கு முன் பல படங்களில் காமெடி செய்துள்ளேன். கோல்மால் போன்ற நகைச்சுவை படங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை இருக்கும். அதுபோன்று நடிக்க வேண்டும்.

கோட் படத்தில் விஜயகாந்த் : பிரேமலதா தந்த அப்டேட்

0

கடந்த டிசம்பர் இறுதியில் நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் தனது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த சகாப்தம் என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்தார்.

அதன்பிறகு இயக்குனர் விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்கி வந்த மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தில் விஜயகாந்த்தை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போவதாக அறிவித்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக கடைசி வரை அவரால் தான் நினைத்ததை செய்ய முடியாமலேயே போனது. அது குறித்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக மீண்டும் விஜயகாந்த்தை திரையில் கொண்டு வர இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

விஜய்யை வைத்து தற்போது கோட் என்கிற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு ஏற்கனவே அதில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என விஜய்யுடன் ஒரு வித்தியாசமான நட்சத்திர கூட்டணியை இணைத்து உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில் தான் விஜயகாந்த்தையும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்ற வைக்க இருக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பலமுறை எங்களது வீட்டிற்கு வந்து சண்முக பாண்டியனை சந்தித்து விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைப்பது குறித்து பேச வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

பிரச்சாரத்திற்கு இடையே ஒருநாள் சென்னை வந்தபோது அவர் என்னை சந்தித்து முழு விவரங்களையும் சொன்னார். விஜய், வெங்கட் பிரபு இருவரையுமே சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன்.

விஜயகாந்த் இருந்தால் எப்போதுமே விஜய்க்கு நோ சொல்ல மாட்டார். தேர்தல் முடிந்ததும் விஜய்யும் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா… : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால்

0

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலும், முன்னாள் நடிகரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். சமீபத்தில் கூட நடிகர் சங்க கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இந்த நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் எனது படமான ‘மார்க் ஆண்டனி’யை வெளிவரவிடாமல் தடுத்தது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் விஷால்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கும் தமிழ் சினிமா சொந்தம் கிடையாது. சினிமா என் கையில்தான் இருக்கிறது என்று சொன்னவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. வட்டிக்கு வாங்கி, வியர்வை சிந்தி ஒரு படம் எடுத்தால், அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழ் சினிமாவை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று ரெட் ஜெயன்ட்டில் இருக்கும் ஒரு நபரிடம் கேட்டேன்.

காரணம் ‘மார்க் ஆண்டனி’ படத்துக்காக என்னுடைய தயாரிப்பாளர் 65 கோடி செலவு செய்திருக்கிறார். ஒன்றரை மாதமாக படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும்போது அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்லும்போது எனக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் மட்டும்தான் உங்கள் படத்தை ரிலீஸ் செய்து நீங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று ஏதவாது ரூல்ஸ் இருக்கிறதா? நான் அவர்களையும் மீறி குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ததால்தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல வெற்றி கிடைத்தது. நான் அன்று சும்மா இருந்திருந்தால் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.

‘ரத்னம்’ படத்துக்குக் கூட பிரச்சினை வரும். வேண்டுமென்றே வேட்டு வைப்பார்கள். இங்கே யாருக்கும் தைரியம் கிடையாது. நட்புக்கும், வியாபாரத்துக்கும் இடையே நான் ஒரு கோடு வரைந்திருக்கிறேன். வியாபாரம் என்பது என்னுடைய உழைப்பு. யாரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள விடமாட்டேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில் விஷால் அளித்துள்ள இந்த பேட்டி சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

‘மருதநாயகம்’ படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை

0

கமல்ஹாசனின் கனவு படம் ‘மருதநாயகம்’. இந்த படத்தை பிரிட்டிஷ் மகாராணி தொடங்கி வைத்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக 30 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனது. ஆனாலும் மருதநாயகத்தை எப்படியாவது கொண்டு வருவேன் என்று கமல் அடிக்கடி கூறிவந்தார். தற்போது சினிமாவில் மொழி எல்லைகள் விரிந்து ஆயிரம் கோடியை தாண்டிய பட்ஜெட்டில் படங்கள் உருவாக தொடங்கி உள்ளது. இதனால் கமலும் தனது மருதநாயகத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறார்.

படத்தை ஹாலிவுட்டில் தயாரித்தால் உலக அளவிலான மார்கெட்டிங் சாத்தியம் என்பதை உணர்ந்த கமல் இதுகுறித்து தற்போது இந்தியா வந்துள்ள மெக்சிகோ இயக்குனர் அல்போன்சா குயூரனை தனது அலுவலத்திற்கு அழைத்து வந்து இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அல்போன்சா புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர். தனது கிராவிட்டி, ரோமா படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர். இந்த சந்திப்பின் போது மருதநாயகம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், மேக்கிங் வீடியோவை அல்போன்சாவுக்கு காட்டி உள்ளார் கமல். இந்த சந்திப்பின் போது இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சித்தார்த், நடிகை அதிதிராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள கமல், “நாங்கள் சினிமா பற்றி மட்டுமே பல மணி நேரம் பேசினோம். நான் மதிய உணவின் போது மாம்பழங்களை அவருக்கு அளித்தேன். அப்போது சித்தார்த், ‘அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கிடைத்திருக்கிறது’ என்று கிண்டல் செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.