Home Blog Page 23

கல்கி 2898 adல் பாலிவுட்டின் ஹரோ பச்சன்

0

இப்படத்தில் அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் நடிக்கிறார்

பான் இந்தியன் நட்சத்திரமான பிரபாஸ் அடுத்ததாக மெகா பட்ஜெட் அறிவியல் புனைகதை என்டர்டெய்னர் கல்கி 2898 AD இல் நடிக்கிறார். இப்படம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளாசிக் கிளாசிக் மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இதன் இயக்குனர். வாக்குறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் பாலிவுட்டின் ஷாஹேன்ஷா அமிதாப் பச்சன் இடம்பெறும் புதிய காட்சியை அறிமுகப்படுத்தினர். இந்தப் படத்தில் அவர் துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார்.

பார்வையில், ஒரு குழந்தை பிக் பியிடம் அவர் அழியாதவரா என்று கேட்கிறது. தான் அஸ்வத்தம்மா என்றும், துவாபர் யுகத்தில் இருந்து தசாவதாரத்திற்காக காத்திருப்பதாகவும் அமிதாப் கூறுகிறார். பார்வை குறுகியதாக இருந்தாலும், அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது, படத்தை எதிர்நோக்குகிறது. காட்சிகள் பிரமாண்டமாக இருக்க, சந்தோஷ் நாராயணனின் இசை ஆர்வத்தை உருவாக்குகிறது. தீபிகா படுகோன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வனி தத் தயாரிப்பாளர். வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்ப்படவில்லை

 

https://x.com/Chrissuccess/status/1782048367293477113

சிவாஜி மகனால் பெயர் அறிவிக்கப்பட்ட படம்…

0

நடிகர்  எனும லால் ஜூனியரால் இயக்கப்பட்டு சுவின் எஸ். சோமசேகரனால் எழுதப்பட்ட வரவிருக்கும் இந்திய மலையாள மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும்.இது மே 3, 2024 அன்று வெளியிடப்படும்  இப்படத்தை காட்ஸ்பீட் சினிமா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பாவனா ஆகியோர் தலைமையில் ஒரு குழும நடிகர்கள் நடித்துள்ளனர், இந்த படம் கடினமான பாதையில் செல்லும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையையும் அவரது ஹீரோவின் பயணத்தையும் பின்தொடர்கிறது,

டேவிட் படிக்கல் ஒரு நடிகர் ஆவார். இது அவருக்கு டன்னிங்-க்ரூகர் விளைவை ஏற்படுத்துகிறது, மேலும் அவர் ஒரு நடிகராக தனது திறமைகள் மற்றும் திறன்களை மிகைப்படுத்தி மதிப்பிடத் தொடங்குகிறார். புகழில் குடித்துவிட்டு, கடந்த காலத்தால் ஆட்கொள்ளப்பட்ட டேவிட், தனது வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய மோசமான முடிவுகளை எடுக்கிறார். டேவிட்டின் சிக்கலான உளவியலைச் சுற்றியே கதை சுழல்கிறது மற்றும் அது அவரைக் கவனித்துக் கொள்ளும் நபர்களுடனான அவரது உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது, அவரது சுய-கண்டுபிடிப்பு செயல்முறை மற்றும் இறுதியில் அவர் எவ்வாறு சிறந்த மனிதராக மாறுகிறார் எனப்சூத கதையனி மையம ஆகும், 

படத்தின் படப்பிடிப்பு 11 ஜூலை 2023 அன்று தொடங்கியது.கொச்சி, மூணாறு, ஹைதராபாத், துபாய் மற்றும் காஷ்மீரில் 30 இடங்களில் படமாக்கப்பட்டது, இதன் படப்பிடிப்பு 110 நாட்கள் நீடித்தது.முதலில் நடிகர் திலகம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் தலைப்பு, அதே பெயரால் அறியப்பட்ட பழம்பெரும் தமிழ் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகர்களின் வேண்டுகோளின் பேரில் ஜனவரி 2024 இல் அதிகாரப்பூர்வமாக நடிகர் என்று மாற்றப்பட்டது. 23 ஜனவரி 2024 அன்று பெயர் மாற்றத்தை அறிவிப்பதற்காக ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது, அதில் சிவாஜி கணேசனின் மகன் பிரபு கணேசன் கலந்து கொண்டார்.

நடிகர் 2024 மே 3ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது. 

https://x.com/MythriOfficial/status/1781995238418252055

 

 

ராம் சரணின் கேம் சேஞ்சர் பற்றிய ஜூசி அப்டேட்

0

மெகா பவர்ஸ்டார் ராம் சரண், அரசியல் திரில்லரான கேம் சேஞ்சர் படத்திற்காக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஷங்கர் சண்முகத்துடன் இணைந்துள்ளார். கியாரா அத்வானி நாயகியாக நடிக்கும் இந்த பிக்பாஸ், இந்த ஆண்டின் இறுதியில் பெரிய திரைகளில் வரவுள்ளது. ஒரு வாரம் நீடிக்கும் புதிய ஷெட்யூல் நாளை ஹைதராபாத்தில் தொடங்கும் என்பது லேட்டஸ்ட் அப்டேட். ராம் சரண் மற்றும் பிறருடன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நவீன் சந்திரா இந்த காலடியில் இணைவார்கள். அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்.

https://x.com/AlwaysRamCharan/status/1640286670116499457

பொன்னி சீரியல் நடிகை மொடுன் லுக்

0

விஜய் டிவியின் பொன்னி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் வைஷ்ணவி. அவர் இதற்கு முன்பு ராஜா ராணி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

பொன்னி சீரியலில் அப்பாவி பெண்ணாக ஹோம்லி லுக்கில் நடித்து வருகிறார் வைஷ்ணவி.

வைஷ்ணவி சீரியலில் மட்டும் தான் அப்படி, நிஜத்தில் செம ட்ரெண்டியானவர். அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் ஸ்டில்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கும் வைஷ்ணவி, ஷார்ட் உடையில் கிளாமராக வலம் வந்திருக்கும் புகைப்படங்கள் இதோ.

https://www.instagram.com/p/C6BQRyJRVMx/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ஐஸ்வர்யா ராய் பச்சன் குடும்பத்தினருடன் செல்ஃபி

0

ஐஸ்வர்யா ராய் பச்சன் குடும்பத்தினருடன் அழகிய செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.

பிரமிக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்,ஐஸ்வர்யா ராய்  பச்சனாக மாறி 17 வருடங்கள் ஆகிறது. அவர் நடிகர் அபிஷேக் பச்சனுடன் நெருக்கமான திருமண விழாவில் முடிச்சுப் போட்டார், மேலும் இந்த அழகான ஜோடி நேற்று தங்கள் 17 வது திருமண ஆண்டு விழாவை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்கள்.

ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் தனது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யாவுடன் இருக்கும் அழகான படத்தைப் பகிர்ந்துள்ளார். அழகான படம் உடனடியாக நட்சத்திர ஜோடியின் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அபிமானத்தைப் பெற்றது, அழகான செய்திகளுடன் கருத்துகள் பகுதியை நிரப்பியது. பொன்னியின் செல்வன்படத்திற்க்கு பின் அவர் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்.

https://www.instagram.com/p/C5_eIRHo8Uq/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

அஜித்தின் 63வது படத்தில் தெலுங்கு நடிகையா?

0

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை மகிழ்  திருமேனி இயக்குகின்றார்.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்த படத்திற்காக அஜித் குமார் எடுத்த ரிஸ்கை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது.இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கின்றார்.

மேலும் குட் பேட் அக்லி படத்தின் வில்லன் ரோலில் நடிப்பதற்கு பாபி தியோல் நடிக்க கமிட்டான நிலையில் அவர் விலகி இருந்தார். அதன்பின் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் எஸ்.ஜே சூர்யா இதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.அஜித்தின் 63வது படத்தில் ஸ்ரீ லீலா நடித்தால் அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பதும், இவர் மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படத்தில் குத்தாட்டம் போட்டு இருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 44வது கதையின் புதிய அப்டேட்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ள நிலையில், சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீ தேவி பிரசாத் இசை அமைத்தும் உள்ளார்.

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளதோடு, இந்த ஆண்டுக்குள் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த கையோடு சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என கூறப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமும் இதுவாகும்.

சூர்யாவின் 44 வது படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதோடு, இதன் ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சூர்யா நடிக்க உள்ள 44வது படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி  உள்ளன

அதன்படி சூர்யாவின் 44வது படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்றும், இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதுவும் சரித்திர கதை அம்சம் கொண்ட அட்வெஞ்சர் படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சூர்யாவின் 44வது படத்தை நடித்து முடித்த பிறகு சுதா கொங்கார இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் படங்களில் சூர்யா நடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171 இல் உள்ள வரும் 90ஸ் சாக்லேட் ஹீரோ.

0

லோகேஷ்மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில் மல்டி ஸ்டார் படமாக தான் இப்படம் உருவாக இருக்கிறது.

ஏனென்றால் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி
ஷெரீப் என எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருந்தனர். அதேபோல் லோகேஷின் விக்ரம், லியோ போன்ற படங்களும் மல்டி ஸ்டார் படமாக தான் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் சத்யராஜை நடிக்க வைக்க உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் சத்யராஜை லோகேஷ் சந்திக்கவே இல்லையாம். ஏனென்றால் தலைவர் 171 படத்தின் கதையை அவரிடம் சொல்ல வேண்டும்.

அந்தக் கதை, கதாபாத்திரம் பிடித்தால் தான் ஓகே சொல்லுவார். இப்படி நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது. இதனால் தெலுங்கு நடிகரை இப்போது தலைவர் 171ல் புக் செய்துள்ளார் லோகேஷ்.

தமிழ் சினிமாவில் ரஜினி எப்படியோ அவர் தான் தெலுங்கு சினிமாவில் நாகார்ஜுனா. அவர் இப்போதும் சில படங்களில் நடித்த வந்த நிலையில் தலைவர் 171ல் கமிட்டாகி இருக்கிறார்.

இவர் தமிழில் கார்த்திக் உடன் தோழா படத்தில் நடித்திருந்தார். மேலும் 90களில் பல இளம் பெண்களின் கனவு நாயகனாக நாகர்ஜுனா வலம் வந்தார். இப்போது திரும்பவும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்

0

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தின் கதையின் படி மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் பாட்டில் வாட்டர் மற்றும் கேன் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீங்கு, இந்த தண்ணீரின் பின்னணியில் இருக்கும் கோடிக்கணக்கான வணிக அரசியல் ஆகியவை அப்பட்டமாக காட்டப்பட்டு இருந்தது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பல மினரல் வாட்டர் குடிப்பதற்கு தயங்கும் அளவுக்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் தண்ணீர் விவகாரம் குறித்த கதையை ஆழமாக கூறிய பிஎஸ் மித்ரன் இரண்டாம் பாகத்தில் போதை விவகாரம் குறித்த பின்னணியை சொல்ல இருக்கிறாராம். கடந்த சில வாரங்களாகவே போதைப் பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டதும், அவருக்கும் திரையுலகில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பிஎஸ் மித்ரன் தற்போதைய சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய ஊடகத்திற்கு வெங்கட் பிரபு பேட்டி..!

0

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார் என்றும் அவர் வாக்களிப்பதற்காக சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.

விஜய் சென்னை திரும்பினாலும் ‘கோட்’ படத்தின் குழுவினர் மாஸ்கோவில் தான் தற்போது உள்ளனர் என்றும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியளித்த போது சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். ‘இந்த படத்தில் மாஸ்கோ ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது என்றும் இந்தியர்கள் பார்க்காத பல மாஸ்கோவில் உள்ள இடங்களை இந்த படத்தில் நாங்கள் காண்பிக்க விருப்பப்பட்டு உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சில பாலிவுட் படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டு இருந்தாலும் தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் மாஸ்கோவில் படமாக்கப்படவில்லை என்றும் எங்கள் ஆடியன்ஸ்களுக்கு மாஸ்கோவை ஒரு புதிய கோணத்தில் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை இந்த படத்தில் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து ஒரு டாக்குமென்டரி படமே மாஸ்கோவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது என்பதும் பெருமைக்குரிய ஒரு செய்தியாகும்.

https://x.com/RT_com/status/1781744643127890425