Home Blog Page 24

பிக்பா பாஸ் குறும்படம் பாணியில் எல்.சி.யூ

0

லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் “தலைவர் 171” படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியது

லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர். ஹோலிவுட் ஸ்டைலில் அவருக்கென LCU என சினிமேட்டிக் யூனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார். இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ இந்த எல்.சி.யூ கான்சப்டில் வரும். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ் போன்ற படங்கள் இயக்குவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.Loke

love today,LOk

பிரியதர்ஷி, நபா நடேஷ் ஜோடி “டார்லிங்”

0

மெகா பிளாக்பஸ்டர் ஹனுமான் படத்திற்குப் பிறகு, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே நிரஞ்சன் ரெட்டி தனது அடுத்த தயாரிப்பு முயற்சியை ஸ்ரீமதி சைதன்யா வழங்குவதாக அறிவித்தார். பாலகம், ஓம் பீம் புஷ், சேவ் தி டைகர்ஸ் தொடர்களின் வெற்றியின் மூலம் உயர்ந்து கொண்டிருக்கும் பிரியதர்ஷி கதாநாயகனாக நடிக்க, நபா நடேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

அஸ்வின் ராம் இந்த ரோம்-காம் என்டர்டெய்னரை இயக்குகிறார், தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை அறிவித்தனர்- டார்லிங் ஒரு சுவாரஸ்யமான பார்வையுடன். நபா நடேஷுக்கு பிரியதர்ஷியின் திருமண யோசனையை சித்தரிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்பைப் போலவே மகிழ்ச்சி அளிக்கிறது. தலைப்பு அறிவிப்பு காட்சி முற்றிலும் வேடிக்கையாக உள்ளது.

இது பிரியதர்ஷிக்கும் சலூனில் முடிதிருத்தும் ஒருவருக்கும் நடக்கும் வேடிக்கையான உரையாடலுடன் தொடங்குகிறது. பிரியதர்ஷி ஏன் இருட்டாக இருக்கிறார் என்று முடிதிருத்தும் நபர் கேட்கும்போது, ​​அவர் பெண்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள மனநிலையை அறிவூட்டுகிறார். பெண்கள் தாயாக இருக்கும்போது அன்பாகவும் பாசமாகவும் இருப்பார்கள் என்றும், சகோதரிகளாக இருக்கும்போது ஆதரவாகவும் பாதுகாப்புடனும் இருப்பார்கள் என்கிறார். அதே பெண் காதலியாக இருக்கும்போது, ​​அவள் அழகாகவும், குமிழியாகவும் இருக்கிறாள், அவள் நம்மை மிகவும் புரிந்துகொள்கிறாள். ஆனால், அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தால், நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டால் என்ன செய்வது? பிறகு, நாபா தர்ஷியை வாய்மொழியாக வறுத்தெடுப்பதைப் பார்க்கிறோம்.

இந்த ஒட்டுமொத்த கருத்து ஒரு தனித்துவமான யோசனையாகும், அதே நேரத்தில் தம்பதியினருக்கு இடையிலான சண்டை கதைக்கு ஒரு புதிய மற்றும் நகைச்சுவையான முன்னோக்கைக் கொண்டுவருகிறது. நட்சத்திர ஹீரோக்களின் பிரபலமான பாடல்கள் மூலம் பெண்களின் மனநிலையை சித்தரிக்கும் தலைப்பு பார்வையின் யோசனை இயக்குனர் அஸ்வின் ராமின் படைப்பு பக்கத்தை காட்டுகிறது. பல பிரபல நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் அனன்யா நாகல்லா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விவேக் சாகர் இசையமைக்கிறார். ஹேமந்த் வசனம் எழுத, லவ் டுடேயின் பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

கலக்க போகிறார் காத்தவராயன்..!

0

தனுஷ், ஏஆர் ரகுமான் மற்றும் பிரபுதேவா இணைந்து ஒரு படத்தில் பணி புரிந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடித்த இயக்கி வரும் திரைப்படம் ’ராயன்’ என்பதும், இது அவரது ஐம்பதாவது படம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்தது.  இந்த படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் ஒரு அட்டகாசமான பாடல் உருவாகி இருப்பதாகவும், ’மாரி’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு இணையாக இந்த பாடல் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் கிட்டத்தட்ட 500 நடன கலைஞர்கள் இந்த பாடலில் நடனமாடி உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் ரவுடி பேபி பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிரபுதேவா தான் இந்த பாடலுக்கும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளதாகவும் மேலும் இந்த பாடலை ஏஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடியுள்ளதாகவும் தெரிகிறது.

எனவே தனுஷ், பிரபுதேவா மற்றும் ஏஆர் ரகுமான் இணைந்து உருவாக்கிய இந்த பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ், காத்தவராயன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் அடுத்த படம் ஜாபர் சாதிக் கதையா?

0

கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஜாபர் சாதிக் குறித்த கதை அம்சம் கொண்டது என்று தகவல்கள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும், ‘96’ இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ’சர்தார்’ படத்தின் முதல் பாகத்தில் பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கிறது என்றும் அந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்தும் பிஎஸ் மித்ரன் விரிவாக விளக்கி இருந்தார்.

இந்த நிலையில் ’சர்தார் 2’ படத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் சில பொருட்களால் எந்த அளவுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் துன்பம் அடைகிறார்கள் என்றும் இதில் கோடிக்கணக்கான பணம் புரள்வது குறித்தும் கூற இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக சமீபத்தில் ஜாபர் சாதிக் சட்டவிரோதமான பொருட்களை விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நிலையில் இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜாபர் சாதிக் குறித்த கதையை தான் ’சர்தார் 2’ படத்தில் பிஎஸ் மித்ரன் சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை எடுக்க சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கதையை படமாக்க பிஎஸ் மித்ரன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு?

0

விஜய்யின் பழைய படமோ, புதிய படமோ எதுவாக இருந்தாலும் அந்த ஒரு பெயருக்காக ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும்.அதுவே ஒரு ஹிட் படம் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படி விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தான் ஒரு விஷயம் நடந்துள்ளது.

அதாவது விஜய்யின் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி மாஸ் வெற்றிப்பெற்ற கில்லி திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.பிரான்ஸில் வெளியாக அங்கு ரசிகர்கள் போட்ட கொண்டாட வீடியோவை நாம் நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள கில்லி படத்தின் முன்பதிவு அமோகமாக நடந்துள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட ஓவர்சீஸ்களில் நேற்றே படம் வெளியாகிவிட்டது.கில்லி படத்தின் டிக்கெட் புக்கிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது முதல் நாளில் மட்டுமே படம் உலகம் முழுவதும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது.

இங்க நான் தான் கிங்கு அப்டேட்

0

நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களைப் போலல்லாமல், அவர்கள் முதன்மைக் கதையிலிருந்து தனித்தனியாக நகைச்சுவைத் தடங்களில் தோன்றுவார்கள், சந்தானம் பெரும்பாலும் ஆண் கதாநாயகனின் நண்பனாகவோ அல்லது எதிரியாகவோ நடிக்கிறார், இது கதையின் முக்கிய விடயமாகும். திரைப்படங்களில் தனித்தனி நகைச்சுவைத் தடங்களில் ஒரு பகுதியாக இருப்பதைத் தீவிரமாகத் தவிர்த்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

இவர் முக்கிய கதாபாத்திங்களில் பிற்பட்ட காலங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப் படம்  நான் தான் கிங்கு கதை இங்க நான் தான் கிங்கு ஆனந்த் நாராயணன் இயக்கிய ஒரு நாடக தமிழ் திரைப்படம். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சந்தானம், பிரியாலயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் ஜி என், சுஷ்மிதா அன்புச்செழியன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இது மே மாதம் 10ம் திகதி உலகெங்கும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

https://x.com/iamsanthanam/status/1781558531398992291

சிம்பு படத்தின் மாஸ் தகவல்..!

0

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’எஸ்டிஆர் 48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார் என்றும் அந்த படத்தில் அவர் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிம்புவுக்கு தான் த்ரிஷா ஜோடி என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருவதாகவும் சிம்பு சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை மணிரத்னம் படமாக்கி கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக தான் சிம்பு நேற்று தேர்தலில் வாக்கு போட கூட வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பிய உடன் சிம்பு ’தக்லைஃப்’ படத்தில் இணைந்ததை மணிரத்னம் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிம்பு நடித்த காட்சியின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பாரா? நடிக்க மாட்டாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு கொண்டிருந்த நிலையில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, விரைவில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்ற தகவலால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மீனாவுக்கு என்ன கலர் பிடிக்கும்

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், மீனா பூக்கடையை நினைத்து அழுது கொண்டு இருக்க, முத்து அவரை சமாதானம் செய்து சாப்பிட்ட வைக்கிறார். அவர்கள் அப்படியே மாடியில் தூங்கி விடுகிறார்கள்.

மறுநாள் காலையில் வீட்டு வேலை ஒன்றையும் செய்ய இல்லையே என்று விஜயா மீனாவை தேடுகிறார். மீனா மேலே இருந்து வர ஏன் லேட், வீட்டு வேலை எல்லாம் யாரு பாக்கிற என்று திட்டுகிறார்.

ஒரு நாளைக்கு யாரும் போட மாட்டாங்களா என்று மீனா கேட்க, அப்போ நான் போடணுமா என விஜயா கேட்கிறார். விஜயா மீனாவுக்கு திட்டிக்கொண்டு இருக்க, அங்கு வந்த முத்து ஏன் அவளை திட்டுறீங்க, இந்த பாலரம்மா கோபி போட மாட்டாங்களா என கேட்க, நாங்க வெளிய சாப்பிடுவோம் என கிளம்புகிறார். இதனால் விஜயா மீண்டும் திட்ட, நானே வீட்டு வேலை எல்லாம் பாக்கிறேன் என  அழுது அழுது பாத்திரம் கழுவுகிறார்.

அதன்பின் விஜயா, குருவி உயர உயர பறந்தாலும் பருந்து ஆக முடியாது என கிண்டல் அடிக்கிறார். முத்து நேரா தனது நண்பர்களிடம் சென்று விஷயத்தை கூற, அவர்கள் காசு போட்டு மீனாவுக்கு பைக் வாங்க போகிறார்கள்.

இதை தொடர்ந்து, மீனாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என கேட்டு பைக் வாங்குகிறார். அப்படியே பைக் வாங்கி வந்து, கீழே எல்லாரையும் வருமாறு போன் பண்ணி வர வைக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

தேர்தல் நாளில் விதிமீறிய விஜய்

0

தேர்தல் நாளில் விதிமுறைகளை மீறியதாக நடிகர் விஜய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக ’கோட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்த நிலையில் அவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காகவே சென்னை வந்தார். ஆனால் அவர் துபாயில் கனமழையில் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் காலதாமதமாக வந்தாலும் அவர் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

இந்த நிலையில் விஜய் ஓட்டு போடுவதை படம் பிடிக்கவும் வீடியோ எடுக்கவும் பத்திரிகையாளர்கள், கேமிராமேன்கள் குவிந்ததால் நீலாங்கரை வாக்கு சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் ’தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சாவடிக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் 200க்கும் அதிகமானவர்களுடன் வந்ததால் அவரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தேர்தல் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அந்த மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மனு மீது  காவல்துறையினர் விரைவில் விசாரணை செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில் இந்த மனுவில் உண்மை தன்மை இருந்தால் விஜய் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீக்ரெட் கேமியோ ரோல் இன் தலைவர் 171

0

ரஜினி, லோகேஷ்கூட்டணியின் தலைவர் 171 தான் இப்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஆனால் அதற்கு முன்பாகவே படத்திலிருந்து பல அப்டேட்டுகள் கசிந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகி உள்ளது.

ஆனால் எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அப்டேட் வந்தால் தான் முடிவாகும். அதன்படி தலைவர் படத்தில் சிவகார்த்திகேயன்நடிக்க இருக்கும் தகவல் பெரும் ஆர்வத்தை கிளப்பி இருந்தது.

ஆனால் தற்போது அவர் அதிலிருந்து விலகி அந்த கேரக்டருக்கு ரன்வீர் சிங் தேர்வாகியுள்ளார். தமிழில் முதன்முதலாக களமிறங்கும் இவர் இப்படத்திற்கு பின் இங்கு பிஸியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதை அடுத்து ரஜினியின் சிஷ்யன் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார். அதேபோல் சுருதிஹாசன்சத்யராஜ் ஆகியோரும் இருக்கின்றனர். இதில் சத்யராஜ் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியம்தான்.

ஏனென்றால் தலைவருக்கும் இவருக்கும் இருக்கும் மனஸ்தாபம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் லோகேஷ் சூப்பர் ஸ்டாருக்காக எப்படியோ சத்யராஜை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இப்படியாக தலைவர் 171 படு மிரட்டலாக உருவாக இருக்கிறது. ஆனால் இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு.

தற்போது நட்சத்திரங்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சீக்ரெட் இருக்கிறது. அதன்படி யாரும் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரம் கேமியோ ரோலில் வர இருக்கிறதாம்.

அது ஆண்டவராக கூட இருக்கலாம். மேலும் சூப்பர் ஸ்டாரின் இதனை வருட திரை வாழ்க்கையில் இப்படத்தை அவருக்கான சமர்ப்பணமாக கொடுக்கவும் லோகேஷ் தயாராகி இருக்கிறாராம்.