Home Blog Page 25

கமலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..

0

இன்று தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நிமிடமே கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவருடைய கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் விலகி விட்டதாக அறிக்கை வெளியிட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாணவர் அணி தலைவராக இருந்த ஷங்கர் ரவி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கட்சியில் தனக்கு பல பிரச்சனைகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரை கட்சியில் இருக்க முடிவு செய்தேன் என்றும் தேர்தல் முடிவு அடைந்ததை அடுத்து நான் விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்சியில் நடந்த சில சம்பவங்கள் மற்றும் உள்ளடி வேலைகள் தனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்ததாகவும் அதனால்தான் எனது கட்சிப் பணியை நிறுத்துவது முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு பல ஏமாற்றங்கள் இருந்தாலும் கட்சி தலைமை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன் என்றும் எனக்கு நடந்த பிரச்சனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கட்சி தலைமைக்காக தொடர்ந்து பணியாற்றினேன் என்றும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நான் சலிப்படைந்து விட்டதால் இப்போது விலகல் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு தொல்லை கொடுத்தவர்கள் யார் என்று பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் ஆனாலும் கட்சிக்கு கடைசி நாள் வரை உண்மையாக உழைத்தேன் என்றும் எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் என்னை போன்ற இளைஞர்களையோ அல்லது கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களையோ புறக்கணிக்காது என்று நம்புகிறேன் என்றும் மக்கள் நீதி மய்யம் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே தனது கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர் விலகியதை அடுத்து இப்படி கை விரிச்சிட்டாங்களே என்று கமல்ஹாசன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

https://x.com/ShankarRavi369/status/1781302862380990646

தொகுப்பாளினி ஜாக்குலின் வருத்தம்

0

விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் பல தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி கலக்கப்போவது யாரு, சில விருது விழா நிகழ்ச்சிகளை மிகவும் ஜாலியாக தொகுத்து வழங்கி தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் தான் ஜாக்குலின்.

தொகுப்பாளினி என்பதை தாண்டி விஜய் டிவி ஒளிபரப்பான தேன்மொழி என்ற தொடரிலும் முக்கிய நாயகியாக நடித்தார்.பின் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜாக்குலின் அதன்பிறகு தொலைக்காட்சி பக்கம் அதிகம் வருவது இல்லை.

தொகுப்பாளினி ஜாக்குலின் அண்மையில் தான் சந்திக்கும் மோசமான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர், என்னை ஒரு லெஸ்பியன் என மோசமாக கமெண்ட் அடித்ததை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டேன். இது இல்லாமல் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்னுடன் தொடர்பு படுத்தி பேசுவது எல்லாம் ரொம்பவே மனதை கஷ்டப்படுத்திவிட்டது.

ரக்ஷனுடன் நான் பழகி வந்ததை வைத்து சில மோசமான வீடியோக்கள் எல்லாம் உருவாக்குகிறார்கள். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுடன் எல்லாம் சேர்த்து வைத்து பேசுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும்.

ஆனால் ஒருகட்டத்தில் அப்படி பதிவிடும் நபர்களின் கமெண்ட்டுகளை நான் கண்டுகொள்வது இல்லை, இனி இதுபோல என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என காட்டமாக கூறியுள்ளார்.

 

‘பிரேமலு 2’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

0

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘பிரேமலு’ என்ற திரைப்படம் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது ஆனால் அந்த படம் உலகம் முழுவதும் 136 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாள திரை உலகையே ஆச்சரியப்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடியாக முழுக்க முழுக்க இருக்கும் என்பதும் சென்டிமென்ட் கொஞ்சம் கூட இல்லாமல் ஜாலியாக கதை நகரும் என்பதால் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த படத்தை ரசித்து பார்த்தனர்.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் நாயகன் காதலியை விட்டுவிட்டு லண்டன் செல்வது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் அவன் திரும்பி வரும் வரை காத்திருப்பது போன்று நாயகி தனது கண்களால் சொல்லும் காட்சிகள் அம்சமாக இருக்கும் என்பதும் படம் பார்த்தவர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் லண்டன் சென்ற நாயகனுக்கு என்ன ஆச்சு? நாயகன் நாயகி காதல் தொடருமா? லண்டனில் இருந்து நாயகன் திரும்பி வருவாரா? என்பதை எல்லாம் இரண்டாம் பாகத்தில் எதிர்பார்க்கலாம்.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் படக்குழுவினர் அதை அந்த பொறுப்பை உணர்ந்து நிச்சயமாக இரண்டாம் பாகத்தையும் வெற்றி பாடமாக்கும் வகையில் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

https://x.com/kollycorner/status/1781334109211791439

‘காதல், சிரிப்பு மற்றும் போர் சூரியா44 அப்டேட்

0

முன்னதாக ஜிகதண்டா டபுள் எக்ஸ் என்ற ஹிட் படத்தைத் தயாரித்த கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் மார்ச் மாதம்  வெளியிட்டனர்.

இது கார் விபத்துக்குள்ளானதையும், மரத்தின் வழியாக அம்பு துளைப்பதையும் காட்டுகிறது. “எனது அடுத்த படம் எப்போதும் அருமை சூர்யா சார். இதற்காக உந்தப்பட்டேன்,” என்று கார்த்திக் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்டார்.

இதற்கமைய இப்படத்துக்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று கார்த்திக் சுப்பராஜின் தந்தை சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். 

என்னது ரத்னம் ரிலீஸ் நிகழ்ச்சி கேன்சலா?

0

விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருந்த அதே தேதியில் ‘அரண்மனை 4’ படமும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ’அரண்மனை 4’ படம் மே மூன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி சோலோவாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அந்த படத்திற்கு ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் ‘ரத்னம்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக விஷால் சற்றுமுன் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழகத்தில் தேர்தல் நாள் என்பதால் வாக்கு போட்டு முடித்தவுடன் விஷால் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் அதில் சில மாற்றம் ஏற்பட்டதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த விஷால் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்து இருந்தார் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ‘ரத்னம்’ படம் ஏமாற்றமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://x.com/VishalKOfficial/status/1781292825558294724

ஸ்டார் மெலடி அப்டேட்

0

ஸ்டார் என்பது வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். இது இளன் எழுதி இயக்கியது, மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

இப்படத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோருடன் டைட்டில் ரோலில் நடித்துள்ளனர். முதலில், ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார், ஆனால் அவருக்கு பதிலாக கவின் நியமிக்கப்பட்டார். இப்படம் ஆகஸ்ட் 2023 இல் கவின்ஸ் நெக்ஸ்ட் என்ற தற்காலிகத் தலைப்பில் அறிவிக்கப்பட்டது, மேலும் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 2023 இல் முதன்மை புகைப்படம் எடுத்தல் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு முக்கியமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எழில் அரசு கே ஒளிப்பதிவு மற்றும் பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஸ்டார் படத்தின் முதல் மேலடி பாடல் நாளை  வெளியிடப்பட்டுள்ளது.

https://x.com/proyuvraaj/status/1781315112021987411

கமல்ஹாசனை திடீரென கழட்டிவிட்ட த்ரிஷா.

0

கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில் கமல் ஜோடியாக அவர் நடிப்பதாக தான் இதுவரை செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஏற்கனவே ’மன்மதன் அம்பு’ ’தூங்காவனம்’ ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் த்ரிஷா நடித்திருந்ததால் மீண்டும் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென அவர் ’தக்லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா இல்லை என்றும் அந்த படத்தில் தற்போது புதிதாக இணைந்துள்ள சிம்புவுக்கு தான் ஜோடியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் விலகியதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு பதிலாக தான் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது துல்கர் சல்மான் விலகவில்லை என்றாலும் கூட சிம்புவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் அவரது காட்சியும் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகவில்லை என்றும் அவரும் தனது கேரக்டரை தொடர்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் ’தக்லைஃப்’ படத்தில் புதிதாக இணைந்த சிம்புவுக்கு தான் த்ரிஷா ஜோடியாக நடிக்கிறார் என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு ஆகிய மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சிம்பு ’தக்லைஃப்’ படத்திற்குள் இணைந்ததும் அவருக்கு த்ரிஷா ஜோடி ஆகிவிட்டதை பார்க்கும்போது அப்போ கமல்ஹாசனை அவர் அம்போ என விட்டுவிட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் மணிரத்னத்தை பொருத்தவரை என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்பதால் ’தக்லைஃப்’ படம் வெளி வந்தால் மட்டுமே கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாரா? அல்லது சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாரா என்பது தெரியவரும்.

ஏற்கனவே சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது. 14 வருடங்கள் பந்தம் மீண்டும் ’தக்லைஃப்’ படத்தில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பனிச்சாரலில் ஒரு க்யூட் வீடியோ..!

0

நடிகை ஜோதிகா பனிச்சாரல் உள்ள பகுதியில் எடுக்கப்பட்ட அழகிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும், அவர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஜோதிகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் நேபாள நாட்டிற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இமயமலை அடிவாரத்தில் பனிபடர்ந்த இயற்கை எழில் கொஞ்சம் சூழலில் மகிழ்ச்சியாக அவர் இருக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் கேப்ஷனாக ஜோதிகா பதிவு செய்திருப்பதாவது

சூரிய முதல் குளிர் உறையும் இரவுகள் வரை,
செங்குத்தான மலைகளில் இருந்து வழுக்கும் நீர்வீழ்ச்சி வரை.

சூடான தண்ணீர் குளிர்ந்த தண்ணீர் உள்ள பிளாஸ்க் வரை
சிரிப்பிலிருந்து குழப்பங்கள் வரை,

விளையாட்டுகள் முதல் வெள்ளை பனி புயல் வரை,
இஞ்சி டீ முதல் பூண்டு சூப்கள் வரை,

நாங்கள் வாங்கிய ஓவியங்கள் முதல் அனைத்தையும் ரசித்தோம்.

https://www.instagram.com/reel/C57sHy3sVDS/?utm_source=ig_web_copy_link

மிக அழகிய சூரிய உதயங்கள் முதல் மாயாஜால சூரிய அஸ்தமனம் வரை
அனைத்தும் என் இதயத்தில் எப்போதும் நினைவாக இருக்கும்!

நாங்கள் உண்மையிலேயே ஒரு இமாலய பணியை முறியடித்துள்ளோம்!!!
இனி என் வாழ்க்கையை வாழ்வதில் பெருமை கொள்வேன். இவை அனைத்தையும்

ஏற்பாடு செய்ததற்கு நன்றி,

ஒரு இனிமையான அனுபவத்திற்கு நன்றி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் வெளியானது.

0

தமிழ் சினிமாவில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது இவர் பாலிவுட் திரைபடஙக்ளில் பிஸியாக நடித்து வருகிறார்.

The Wedding Guest என்ற படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்துள்ளார். கடந்த 2018 -ம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் படம் இந்தியாவில் தியேட்டரில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் The Wedding Guest திரைப்படம் இன்று நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் Slumdog Millionaire படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தேவ் படேல் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தேயின் நிர்வாண காட்சி காரணமாக திரையரங்குகளில் வெளியாகாத இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது

குஷ்பு வெளியிட்ட புதிய போஸ்டர்..!

0

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போகலாம் என்றும் இதே தேதியில் விஷாலின் ’ரத்னம்’ படம் மட்டும் ரிலீஸ் ஆகும் என்றும் நேற்று வெளியான செய்தியை பார்த்தோம்.

 

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் ’அரண்மனை 4’ படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை வெளியிட்டு அது குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போஸ்டர் படி ’அரண்மனை 4’ திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

’அரண்மனை 4’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு எந்த காரணத்தையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்றாலும் மே 3 என்பது சரியான ரிலீஸ் தேதி என்றும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஓப்பனிங் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார் என்பதும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் பென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்கள் போலவே வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://x.com/khushsundar/status/1781194177168171088