Home Blog Page 19

பரதநாஷின் ஃபர்ஸ்ட் லுக் கண்ணைக் கவருகிறது

0

இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தில்லு ஸ்கொயர் படத்தின் வெற்றியின் உச்சத்தில் சவாரி செய்கிறார். அவர் அடுத்து பரதா என்ற சமூக நாடகத்தில் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர்கள் இன்று முதல் பார்வை மற்றும் கருத்து வீடியோவை வெளியிட்டனர். சினிமா பாண்டி புகழ் பிரவீன் கந்த்ரேகுலா இயக்குகிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அனுபமா பரமேஸ்வரன் ஒரு பரதனாஷினாக சித்தரிக்கப்பட்டார், மேலும் படம் உடனடியாக கண் இமைகளை இழுத்தது. பரதனாஷின் என்பது வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட பெண்களைக் குறிக்கிறது. இந்த பரதா நடைமுறை பழங்காலத்தில் பெண்கள் பூரணமாக ஒதுங்குவதைக் கடைப்பிடித்தது.

அனுபமா பரமேஸ்வரன் நடித்த இந்தப் படம், கடந்த காலங்களில் பல பெண்கள் சந்தித்த இந்தப் பிரச்சினையை கையாளும். பரதா பான் இந்தியன் வெளியீட்டைக் கொண்டிருக்கும், மேலும் இதில் தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசுலு பி, விஜய் தொங்கடா, ஸ்ரீதர் மக்குவா ஆகியோர் தயாரிப்பாளர்கள். கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

 

https://x.com/anupamahere/status/1783826710993248268 

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர்?

0

கோலிவுட் நட்சத்திர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஓரிரு படங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளது. தற்காலிகமாக எஸ்கே 23 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் மீண்டும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து வரும் வதந்திகளை நம்பினால், அய்யப்பனும் கோஷியும் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்ற மாலிவுட் நடிகர் பிஜு மேனன் SK 23 இன் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் சார்பில் என்வி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்தில் சாண்டல்வுட் நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்திருப்பதால், அடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் முன்னேற்றங்களுக்கு காத்திருங்கள்.

தளபதி 69 படத்தின் இயக்குநராக இருந்தால்,,,,,

0

தளபதி விஜய் தற்போது தனது திரையுலக வாழ்க்கைக்கும் அரசியல் ஆசைகளுக்கும் இடையே சமநிலையில் இருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடிக்கிறார். மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடிக்கும் இந்தப் படம் செப்டம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தளபதி 69 க்கு பல இயக்குனர்களின் பெயர்கள் புழக்கத்தில் உள்ளன, இது அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதற்கு முன்பு விஜய்யின் இறுதிப் படமாக கூறப்படுகிறது. தளபதி 69 படத்தின் இயக்குனர்கள் என எச் வினோத், வெற்றிமாறன், நெல்சன் திலீப்குமார், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் த்ரிவிக்ரமின் பெயர்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

இருப்பினும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவின் போது, ​​பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், “தளபதி 69 படத்தின் இயக்குநராக இருந்தால், விஜய்யுடன் மகேஷ் பாபு, ஷாருக்கான், மம்முட்டி ஆகியோரை நடிக்க வைப்பேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் ஒரு வெறித்தனத்தைத் தூண்டியது, விஜய் தனது 69 வது திரைப்படத்திற்கு நெல்சனை இயக்குநராக உறுதிப்படுத்துமாறு ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கக்கூடிய ஒரு மல்டி-ஸ்டாரர் படம் எதிர்பார்க்கப்படுகிறது. The GOAT படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்று தனக்கு தெரியும் என்று சமீபத்தில் சூசகமாக கூறினார், இது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறது.

நடிகையின் அசத்தல் போட்டோஷூட்..!

0

’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு வரும் கமெண்ட்ஸ்கள் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் விஜய் ஆண்டனி நடித்த ’எமன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’காளி’ என்ற படத்தில் நடித்தாலும் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் தாரா என்ற கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஷில்பா மஞ்சுநாத்.

இதனை அடுத்து ’பேரழகி’ என்ற படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் சமீபத்தில் வெளியான ’சிங்கப்பெண்ணே’ என்ற படத்தில் கூட ஷாலினி என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஒரு தெலுங்கு மற்றும் கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர் அதிரடியாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் அவரை தனது அடுத்த படத்தில் நடிக்க அணுகி உள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்லிம்மாகி உள்ள ஷில்பா மஞ்சுநாத்தின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இதய ராணிக்கு இப்படி ஒரு இடுப்பா? இஸ்பேட் ராஜாவுக்கு யோகம் தான் என்பது போன்ற கமெண்ட் பதிவாகி வருகிறது என்பதும் இந்த கமெண்ட்களை ஷில்பா மஞ்சுநாத் லைக் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C6MB85uosXq/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==  

https://www.instagram.com/p/C6MBFUVxSrM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

https://www.instagram.com/p/C6MAv0zRamu/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

 

 

வெளியாகிய பேமிலி ஸ்டார் பாடல்!

0

ஒரு சில வேற்றுமொழிபடங்களையும் , பாடல்களையும் தமிழில் மொழி பெயர்க்கும் போது ரசிகர்களை திருப்திபடுத்தாது ட்ரோல் மெட்டீரியலாகி வருகின்றது. அவ்வாறே பேமிலி ஸ்டார் படம் தோல்வியாக இருந்தாலும் அதில்  ஹிட் ஆகிய பாடல் ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளனர்.

 

கீதா கோவிந்தம் என்ற ஹிட் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர் கொண்டா மற்றும் முருநல் தாகூர்  இணைந்து நடித்த திரைப்படமே பேமிலி ஸ்டார் ஆகும். தெலுங்கு , தமிழ் இரண்டிலும் வெளியாகி இருந்தாலும் இது தோல்விப்டமாகவே அமைந்துள்ளது.

 

 

 

 

 

குறித்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் இதன் கல்யாணி வச்சா வச்சா என்ற பாடல் பெரியளவில் ட்ரென்ட் ஆகியுள்ளது. இந்த நிலையிலேயே இதன் தமிழ் வேர்சனை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள்  இதன் வசனங்கள் எதுவும் சரி இல்லை என்றும் தமிழ் மொழி பெயர்ப்பு பிழையாக உள்ளது எனவும். ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். கல்யாண சத்தம் சத்தம் என்று தொடங்கும் இந்த பாடல் தமிழில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும்.

‘சரிகமப’ மேடையை கதிகலங்க வைத்த ஈழத்து இளைஞன்.

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் சரிகமப. இறுதியாக இடம்பெற்ற சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி வாகை சூடி இருந்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதைத்தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தற்போது முடிவடைந்த நிலையில், மீண்டும் சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்காக போட்டியிட்ட நிலையில், அவர்களில் 50 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இலங்கையின் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜித் என்ற இலங்கை இளைஞருக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே சரிகமப சீசன் 3 யில் கில்மிசா மற்றும் அசானி கலந்து கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், தற்போது மலையகத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு இளைஞன் சரிகமப மேடைக்கு ஏறுவது பலராலும் வியக்கப்பட்டு வருகிறது.

இவர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் தீவிர ரசிகராக இருக்கும் நிலையில், சரிகமப மேடையில் அவருடைய பாடலை பாடி நடுவர்களை கண்கலங்க வைத்துள்ளார்.

மேலும், எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில்  மிகவும் கடுமையான பாடல்களை பாடியதோடு, எஸ்.பி பாலசுப்ரமணியம் இறந்ததும் தான் ஒரு கிழமையாக சாப்பிடவில்லை எனவும் மேடையில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மேடையில் எஸ்பியின் புகைப்படம் போடப்பட்டதும் அங்கிருந்த நடுவர்கள் அழுத காட்சிகளும் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. தற்போது பலரும் அவரை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/C6LOMtXLiJZ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் வைரல் வீடியோ!

0

பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் சரியான வரவேற்புகள் இன்றி பின்பு டிவி நிகழ்ச்சிகள் மூலம் வைரலாகுபவர்கள் உள்ளனர். அவ்வாறு ட்ரெண்ட் ஆகிய ரம்யா பாண்டியனின் இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகின்றது.

 

2015ஆம் ஆண்டு வெளியாகிய ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் ரம்யா பாண்டியன் ஆவார். சமுத்திர கணினியுடன் ஆண்தேவதை படத்திலும் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் , குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதன் மூலமே பெரிய அளவில் பிரபலமானார்.

 

இவ்வாறு இருக்கும் இவரே சமீபத்தில் அழகான ஆடையுடன் அசத்தல் லுக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அழகிய கவிதை மற்றும் பாட்டு இணைந்து காணப்படும். குறித்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் “மெல்லிய சிமிட்டல்கள் போதும்…சிறுசிறு அசைவுகள் போதும்…இமை மூடி திறந்தால் போதும்கண்பாவையின் விழி மொழியில் ஆடிப்பாவை அசந்தே போகும்” என்ற டாக்லைனுடன் பதிவு செய்துள்ளார்

https://www.instagram.com/reel/C6NiwpvRnLy/?utm_source=ig_web_copy_link

நடிப்பு அரக்கனை வாங்கிய மலையாள சினிமா?

0

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ்.ஜே சூர்யா, சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த இயக்குனராகவும் காணப்படுகிறார்.

இவர் இயக்கத்தில் வெளியான வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அன்பே ஆருயிரே, மகாநடிகன், கள்வனின் காதலி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனாலும் குறித்த படங்கள் பெருமளவில் வெற்றி பெறவில்லை.

இதன் காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்தார்.அதன்படி விஜய் நடித்த மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா  தற்போது மலையாள திரையுலகிலும் நுழைந்திருக்கிறார். அதன்படி, மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஃபகத் பாசிலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பலராலும் பாராட்டப்பட்ட எஸ்.ஜே.சூர்யா, மலையாளத்தில் எப்படி வரவேற்பை பெறுகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் காதலனை கழட்டி விட்ட சுருதிகாசன்!

0

நடிகை ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து அதன் பின் பிரேக்கப் ஆன நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சாந்தனுவை சமூக வலைதளத்தில் ஸ்ருதிஹாசன் அன்ஃபாலோ செய்துவிட்டதால் இருவரும் பிரேக் அப் ஆகி பிரிந்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமின்றி பாடகி, இசையமைப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார் என்பதும் சமீப காலமாக அவர் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக உள்ளார் என்பது தெரிந்தது

இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ’இனிமேல்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பதும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் பாடல் வரிகளில் உருவான இந்த ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் பின்னர் இருவரும் பிரேக்கப் ஆகி பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ருதிஹாசன் மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென ஸ்ருதிஹாசன், சாந்தனு சம்பந்தப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவரை அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலரை பிரேக்கப் செய்துவிட்டாரா என்று கூறப்படும் நிலையில் இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://www.instagram.com/shrutzhaasan?utm_source=ig_web_button_share_sheet&igsh=ZDNlZDc0MzIxNw==

ரத்னம் திரை விமர்சனம்

இயக்குனர் ஹரி கமர்ஷியல் படங்களின் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் இருக்கும், அந்த வகையில் விஷாலுடன் தாமிரபரணி, பூஜை தொடர்ந்து ஹாட்ரிக் அடித்தார ரத்னம் மூலம், பார்ப்போம்.

ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் மிகப்பெரும் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது, அதை தொடர்ந்து வேலூரில் விஷால் எம் எல் ஏ சமுத்திரக்கனி அடியாளாக போலிஸ் தட்டிகேட்க வேண்டிய அநியாயங்களை தனி ஆளாக தட்டி கேட்கிறார்.

அப்போது ஒரு நாள் வேலூரில் ப்ரியா பவானி ஷங்கரை பார்க்க, அவர் இங்கு நீட் எக்ஸாக் எழுத வருகிறார். ஆனால், வந்த இடத்தில் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது.

இதை அறிந்த விஷால் அவருக்கு பாதுக்காப்பு கொடுக்க, பிறகு தான் தெரிகிறது, ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தேடி வர, இந்த பிரச்சனை விஷால் கைக்கு வருகிறது, பிறகு என்ன விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

ஹரி படத்திற்கு என்றே அளவு எடுத்த செஞ்ச பீஸ் போல் இருக்கிறார் விஷால். ஆறடி உயரம், 50 பேரை தூக்கி போட்டு அடித்தால் கூட நம்பும் லாஜிக் என படம் முழுவதும் ஆக்‌ஷன் அதகளம் செய்துள்ளார்.

ஆனால், மார்க் ஆண்டனி பாதிப்பு இன்னமுமே உள்ளது, இரண்டிலுமே அம்மாவை நினைத்து ஏங்கும் கதாபாத்திரம் விஷாலுக்கு , என்ன அதில் காமெடி, இதில் சீரிஸ், அது ஒரு கட்டத்தில் விஷால் சீரிஸாக பேசினாலும் மார்க் ஆண்டனி போல தெரிகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் விஷால் அம்மா போலவே உள்ளதாள் அவரை காப்பாற்ற போராடும் கதை என்றாலும் அதில் பல பேஸ் ஸ்டோரிகளை வைத்து ஹரி தனக்கே உரிய ஸ்டைலில் விறுவிறுவென எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.

வெறும் ஹீரோயின் ஆக மட்டும் கத்தி எடுக்காமல் விஷாலுக்கு என்று வைத்த பேக் ஸ்டோரி, விஷாலுக்கும் வில்லனுக்கும் என்ன சம்மந்தம் என ஒவ்வொன்றாக காட்டிய விதம், ஹரி இன்றும் கமர்ஷியலில் புதிதாக செய்ய முயற்சிக்கிறார் என்பதை காட்டுகிறது.

இடைவேளை சேஸிங் காட்சி பரபரப்பையும், டெக்னிக்கலாக சூப்பராகவும் உள்ளது. மற்றப்படி வில்லனை ஊர் விட்டு ஊர் போய் கொல்லும் ஹரியின் டெம்ப்ளேட் காட்சிகள் அவர் படத்திலே பார்த்த நியாபகத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே ஊரில் தான் விஷால் அம்மா குடும்பம் உள்ளது ப்ரியா பவானி குடும்பமும் உள்ளது, அவர்களுக்கு தெரியாத உருவ ஒற்றுமை விஷாலுக்கு மட்டுமே தெரிந்தது கொஞ்சம் லாஜிக் பார்த்துயிருக்கலாம் ஹரி சார்.

ஹரி படம் என்ன விறுவிறுப்பாக சென்றாலும், தொய்வு ஏற்படும் போது காமெடி பாடல்கள் துணை நிற்கும், இதில் ஹெவி மிஸ்ஸிங், வேலூர் என்பதால் வெயில் கொஞ்சம் ஓவர் தான், ஆனால், எதோ பாலைவானம் போல் காட்டியது ஏன் சார்.